Pages

Monday, October 31, 2011

பகுத்தறிவிற்கு சவால்(8)

ஏழு,எட்டு வருஷங்களுக்கு முன் சென்னையில் நான்பணி

புரிந்து கொண்டிருந்த நாட்களில் ஒரு ஞாயிறன்று மாலை

வீட்டில் அமர்ந்து நான் பி.பி.ஸி. தொலைக்காட்சி நிகழ்ச்சி

ஒன்றைப் பார்த்தேன். ஒரு விபத்தில் மூளை பழுதாகிப்

போன நிலையில் உலகத்துடன் தொடர்பு கொள்ள முடியாத

நிலையில் டெர்மினல் பேஷண்ட்ஸ்’’ சிகிச்சை பெறும்

ஆஸ்பத்திரியில் இருக்கும் ஒரு பெண்ணைப் பற்றின

குறும்படம் அது. ஆறுமாதங்கள் முன்வரை மிக கெட்டிக்காரி

யாக ,ஒரு நிருவனத்தை திறமையுடன் நடத்திவந்த அந்த

35 வயது பெண்மணி,. விபத்திற்கு ஓர் ஆண்டுக்கு முன்

அவராக ஒரு’’அட்வான்ஸ் டைரக்டிவ்’’ என்ற ஒரு சட்ட

ரீதியான வேண்டுகோளைத் தயார் செய்து வைத்திருந்தார்.

எந்தக் காரணத்திலாவது தனக்கு மூளைச்சேதம்ஏற்பட்டதென்றால், தனக்கு

சிகிச்சை அளிக்கப்படாமல் கௌரவமாகச் சாக விடவேண்டும்

என்று.. விபரீதமாக விபத்தில் அவரது மூளை சேதப்பட்டு,

சதைப் பிண்டமாக வாழ நேர்ந்தபோது ,மருத்துவர்கள் அவரது

வேண்டுகோளை ஏற்க மறுத்தார்கள். அது மருத்துவ தர்மத்துக்கு

விரோதம் என்றார்கள். அவருடைய சினேகிதிகள் அவள் விருப்பபஃபடி கௌரவமாக சாக விட வேண்டும் என்று

வாதிட்டார்கள். அவளை நான் எப்படி சாக விடுவேன் என்று

கணவர் அழுதார்.

இந்த நிகழ்ச்சி என்னை விநோதமாகப் பாதித்தது.

அப்போது என் தாய் மும்பையில் ஆரோக்கியமாக இருந்தார்.

ஏதோ ஓர் உந்துதலில் சிக்கியவள்போல் என் தாயை அப்படிப்

பட்ட மூளை செயலிழந்த ஒரு நோயாளியாகச் சித்தரித்து

ஒரு சிறுகதை இது ஒரு ஆணை’’ என்று தலைப்பிட்டு

இந்தியா டுடே’’ வுக்கு எழுதினேன். எழுதியபோது எனக்கு

அல்ஜைமர் என்ற வியாதியைப் பற்றித் தெரியாது. அதனால்

பாதிக்கப் பட்டவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்றும் தெரியாது. இரண்டு ஆண்டுகள் கழித்து என் தாய் என்னுடன்

வசிக்க சென்னைக்கு வந்தார். அம்மா சற்று உடல் நலிந்து

காணப் பட்டார். நான் அலுவலகத்துக்குச் செல்லும்போது

அவர் வீட்டில் தனியாக இருப்பாரே என்று வீட்டோடு ஒரு

பணிப்பெண்ணை அவரைப் பார்த்துக் கொள்வதற்காகவே

அமர்த்தினேன். படிப்படியாக என் தாயின் உடல்நிலையில்

மாற்றம் ஏற்பட்டது. டாக்டர் அல்ஜைமர் வியாதி என்றார்.

எனக்கு அதிர்ச்சி அளித்த்து அதுமட்டுமல்ல.

Sunday, October 30, 2011

பகுத்தறிவிற்கு சவால்(7)

அவருடைய பெற்றோருக்கு அவர் ஒரே மகள். மரபுகளில்

நம்புக்கை உள்ள தந்தை கொள்ளிவைப்பதற்காக ஒரு

ஆணைத் தத்து எடுப்பார் என்கிற கவலை அவரை

அலைக்கழிப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

பெண் கருக்கலைப்பைக் கருவாக வைத்து நான் எழுத

ஆரம்பித்த ‘’கடைசிவரை’’என்ற நாவலின் கதாநாயகி

(அவரது அநுமதியுடன்) ஆனார். அந்த டாக்டர். அந்தக்

கதை அவரைப் பற்றியது என்ற செய்தி ராசிபுரம்,சேலம்

ஆகிய இடங்களில் பரவலாகத் தெரிந்திருந்த்து. ராசிபுரம்

மக்கள் ஆவலுடன் படித்தார்கள். என்னுடைய கதையின்படி

கதாநாயகியின் தந்தை கடைசி அத்தியாயங்களில் இறக்க

வேண்டும். அதை எப்படி எழுதுவது என்று எனக்கு யோச

னையாக இருந்து. நிஜ மனிதரை ராசிபுரத்தில் நான்

சந்தித்திருக்கிறேன். ஆஜானுபாகுவாக மிக ஆரோக்கியமான

மனிதர். அந்த அத்தியாயத்தை எழுதி முடிக்க வேண்டிய

காலக்கெடு நெருங்கிவிட்டது.விடுப்பு எடுத்து எழுத

உட்கார்ந்தேன். தொலைபேசி ஒலித்தது. சேலத்திலிருந்து

ஒரு நண்பர் சொன்னார்,’’ஒரு துயரச் செய்தி, வாசந்தி,

மனோன்மணியுடைய தந்தை இன்று காலை இறந்து

விட்டார்.’’

நான் அப்போது உண்மையில் வெலவெலத்துப்

போனேன். என்னுடைய எண்ணங்களின் தீவிரமே அவரைக்

கொன்றதாகத் தோன்றிற்று.

கதையை முழுவதும் படித்த அந்த டாக்டர் சினேகிதி

என் கற்பனையில் உருவான இரண்டொரு கதைச்சம்பவங்கள்

உண்மையில் நடந்தவை என்று சொன்னார்.

லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் (Isabel allende)இசபெல்

ஜசயண்டேயின் paula மற்றும் the house of spirits படித்ததும்

அவருக்கும் நான் அநுபவித்ததைப் போன்ற அநுபவங்கள்

இருந்த்தை அறிந்து சற்று சமாதானம் ஏற்பட்டது. ஆனால்

அறிவியல் ரீதியான விளக்கம் கிடைக்கவில்லை.

கடைசியாக ஏற்பட்ட அநுபவம் என் ஆயுசுக்கும்

மறக்க முடியாதது. அதைப் பற்றி நினைக்கும் போதெல்லாம்

என்னை நிலைகுலய வைப்பது. என் சொந்த வாழ்வுடன்

அதற்கு இருந்த நெருக்கத்தின் காரணமாக இருக்கலாம்..

பகுத்தறிவிற்கு சவால்(6)

வியப்புடன் பிரித்தபோது ,’’உங்கள் மாது எழுதுகிறேன்.’’

என்று கடிதம் ஆரம்பித்தது. ‘’உங்கள் எழுத்தில் சத்தியம்

இருப்பதாக நான் சொன்னது சரியாகிவிட்டது.

. நான் அஸ்ஸாமில் இருப்பது

உங்களுக்கு எப்படித் தெரிந்த்து? இரண்டு வருஷங்களாக

இங்கிருக்கிறேன். ஆனால் உங்களுக்குத் தெரிவிக்கவில்லை.’’

சற்று நேரத்துக்கு அவன் வாதத்தில் எனக்கு

நம்பிக்கை எற்பட்டுவிடும்போல் மயக்கமேற்பட்டது. அவன்

அஸ்ஸாமில் தின்சுக்கியா என்ற இடத்தில் இருந்தான். சுய

பிரக்ஞை வந்ததும் கவலை கொண்டேன். அந்த நாவலின்

முடிவு அதிர்ச்சி தரக் கூடியது. நான் எழுதுவதெல்லாம்

சத்தியம் என்று அவன் நம்பினால் அவனுக்கு மிகப் பெரிய

பாதிப்பு ஏற்படும். அவiனுக்கு உடனடியாக பதில் எழுதினேன்.

‘’நான் எழுதியிருப்பது போல் நீ அஸ்ஸாமில்

இருப்பது யதேச்சையானது. நான் எழுதுவது ஒரு கற்பனைக்

கதை. உண்மை என்ற பிரமை உனக்கு ஏற்படக் கூடாது.

இல்லாவிட்டால் முடிவு உனக்குப் பெரும் அரிர்ச்சியை

ஏற்படுத்தும். என் கற்பனை போன போக்கில் கதைக்கு ஏற்றபடி

வந்த முடிவு அது. அதை நிஜமென்று நம்பிவிடாதே.’’

கதை முடிந்தபிறகு அவனிடமிருந்து கடிதம்

வந்த்து.

‘’நீங்கள் கொடுத்திருக்கும் காரணமே உண்மையாக

இருக்கலாம்..’’ என்ற அவனது வாக்கியத்தில் சோர்வோ துக்கமோ

இருந்த்து. எனக்கு அவனை நினைத்து வெகு நாட்களுக்கு வருத்தமாக இருந்த்து.

கதை அத்துடன் முடியவில்லை. நான்கு மாதங்கள் கழித்து அவனிடமிருந்து கடிதம் வந்த்து. ‘’உங்களுக்கு

நான் சொல்வது மகிழ்ச்சி அளிக்கும். எனக்குத் திருமணம் ஆகி

விட்டது என் தங்கையின் பிரச்சினை தீர்ந்துவிட்டது. உங்கள் கதையின் விளைவு இது என்று நான் நம்புகிறேன்’’

(கதையின் முடிவில் அதிர்ச்சியின் உச்சகட்டமாக அவனுடைய

தங்கை உதிரப் போக்கில் நிற்பாள்.)

மகாதேவன் விஷயத்தில் நடந்தவை எல்லாம்

யதேச்சையானவை என்று நான் நம்பப் பழகிக் கொண்டேன்.

அடுத்த நாவல் எழுதும்போதும் இதே போன்ற குழ.ப்பும் தருணம்

ஒன்றைச் சந்திக்க நேர்ந்த்து. சேலத்தில் பெண் கருக்கலைப்பு

அதிகமாகிப் போன விவரம் சேகரிக்க ராசிபுரம் போனபோது

மனோன்மணி என்ற ஒரு லேடி டாக்டரைச் சந்திக்க நேர்ந்தது.

பெண் கருக்கலைப்பைக் கண்சொடுக்காமல் செய்து வந்த அவர்

பெற்றோர்களுக்குக் கொள்ளிவைக்கும் உரிமை பெண் மக்களுக்கு

வேண்டும் என்று விசித்திரமான போராட்டம் நடத்தி வந்தார்.

பகுத்தறிவிற்கு சவால்(5)

‘’இதப்பார், எனக்கு ஜோஸ்யம் தெரியாது. அதில் நம்பிக்கை

கூட எனக்கு இல்லே. மனோத்த்துவமும் எனக்கு வராது.

நீ அநாவசியமான கற்பனையில் இருக்க்க் கூடாது.’’என்றேன்.

‘’உங்களுக்கு எப்பவாவது கடிதம் போடுகிறேன்

மேடம்’’ என்றுவிட்டு அவன் கிளம்பிச் சென்றான். ஆனால்

அதற்குப் பிறகு அவனிடமிருந்து ஒரு தகவலும் இல்லை.

அவன் என் வாழ்விலிருந்து மறைந்து போனான். அவன்

கதை மட்டும் ஆழப் புதைந்து போயிற்று. அடுத்த பத்து

ஆண்டுகளில் பல முறை அதைக் கருவாக வைத்து ஒரு

நாவல் எழுத வேண்டும் என்ற அரிப்பைக் கட்டுப் படுத்திக்

கொண்டேன்,. அவனிடமிருந்து அநுமதிவாங்க முடியாமையால்.

நான் ‘’இந்தியா டுடே’’ தமிழ்ப் பதிப்பிற்கு ஆசிரியையாகப்

பணியாற்ற சென்னை வந்த பிறகு, தில்லி தலைமைஆசிரியர்

என்னை ஒரு தொடர் நாவல் எழுதும்படி சொன்னார். என்

மனதில் மகாதேவன் கதை மட்டுமே பிடிவாதமாக அமர்ந்திருந்த்து. அவன் எங்கே இருக்கிறான் என்று தெரியவில்லை என்றாலும் நான் அதை எழுதவேண்டும் என்ற

எண்ணத்தினால்தான் அந்தக் கதையை அவன் சொல்லியிருக்க வேண்டும் என்ற சமாதானத்துடன் அதற்கு இரண்டு டிராஃப்ட்

எழுதித் திருத்தியபிறகு ‘’குற்றவாளி’’என்ற தலைப்பிட்ட நாவல்

வாராவாரம் வர ஆரம்பித்த்து. அதில் மகாதேவன், மாதவன்-மாது

என்ற முக்கிய பாத்திரமானான். அவன் அஸ்ஸாமில் கௌஹாத்

தியில் இருப்பதாக நான் எழுதியது எந்தப் பிரத்யேகக் காரணத்திற்கும் அல்ல. நான் அந்தப் பகுதிகளில் வசித்திருந்த

தால், பிரம்ம்புத்திரா ந்தியைப் பற்றியும் அஸ்ஸாம் பின்புலத்தை

யும் சேர்ப்பது வசீகரமாக இருக்கும் என்று நினைத்தேன். அவன்

மூன்றாவது அத்தியாயத்தில் வருவான். ஜந்தாம் அத்தியாயம்

வெளியாகியிருந்த்து. அலுவலக விலாசத்திற்கு எனக்கு ஒரு

இன்லாண்டு கடிதம் வந்த்து. பின்னால் மகாதேவன்,அஸ்ஸாம்

என்று விலாசம் இருந்த்து.

பகுத்தறிவிற்கு சவால்(4)

அந்த அதிர்ச்சியிலிருந்து அவர்களால் மீண்டு வர

முடியவில்லை. அம்மாவின் தற்கொலைக்கு, மூத்த

பிள்ளை இறந்ததுக்கத்தைப், பெற்றவளால் தாங்க

முடியவில்லை. என்ற கிராமத்தாரின் விளக்கத்தை

அவர்களால் ஏற்கமுடியவில்லை. தங்களைக் கவனிக்க

வேண்டிய பொறுப்பு இருக்கும்போது அம்மா எப்படி,ஏன்

சாகத் துணிந்தாள் என்கிற அவர்களது கேள்விக்கு பதில்

சொல்ல யாருக்கும் தெரியவில்லை. இது உடல் ரீதி

யாகவும் அவர்களைப் பாதித்த்து. அவனுடைய தங்கைக்கு

25 வயதாகியும் பூப்பெய்தவில்லை. பல மருத்துவர்களைப்

பார்த்தாகிவிட்டது. கோளாறு ஏதுமில்லை என்கிறார்கள்.

அவனுக்குத் திருமணம் செய்துகொள்வதற்குப் பயமாக

இருக்கிறது. தன்னால் தாம்பத்திய வாழ்வு வாழமுடியுமா

என்கிற கவலை வாட்டுகிறது.

கதையை முடித்துவிட்டு மகாதேவன் என்னைக்

கேட்டான். ‘’என்னுடைய அம்மா ஏன் தூக்குப் போட்டுண்

டான்னு நீங்க சொல்லமுடியுமா?’’

எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.அவனது கதையும்

அதை அவன் சொன்ன விதமும் என்னை மிக ஆழமாகப்

பாதித்தlது. ஆனால் அவனுடைய கேள்வி அபத்தமாகப்

பட்டது.

‘’நான் எப்படிச் சொல்லமுடியும்’’என்றேன்.

‘’ உன்னையே. இப்பத்தான் ஒரு மணி நேரமா பழக்கம்.

எனக்குத் தெரியாத ,நான் பார்த்துப் பழகாத உன் அம்மா

இருபது வருஷத்துக்கு முன் தற்கொலை செய்துண்டது

ஏன்னு எப்படிச் சொல்லுவேன்?’’

‘’உங்க புத்திக்குப் புலப்படும்னு நா நம்பறேன்

மேடம்’’ என்றான் அவன்.

அவன் ஒரு கிறுக்கன் என்று எனக்கு ஆயாசம்

ஏற்பட்டது.

Friday, October 28, 2011

பகுத்தறிவிற்கு சவால்(3)

அவனது நம்பிக்கை அசட்டுத்தனமாக இருந்தாலும் நான்

கதை கேட்கச் சித்தமானேன்.

அவன் சொல்ல ஆரம்பித்த உடனேயே அவனது

சொற்களில் அவன் என்னைக் கட்டிப் போட்டதாக

உணர்ந்தேன்.அவனுடன் அவன் கிராமத்துக்குப் பயண

மானேன்.

அவன் ஒரு ஆசாரமான அந்தணர் குடும்பத்தில்

பிறந்தவன்.தந்தை புரோகிதர்.வேத பாடசாலை நடத்துபவர்.

அவனுக்கு ஒரு அண்ணன். ஒரு தங்கை. தாய் அசாதாரண

அழகு.(அதைத் திரும்பத் திரும்பச் சொன்னான்.) கதை

நடந்த போது அவனுக்கு8வயது. தங்கைக்கு 6. அண்ணனுக்கு

14. அண்ணன் ஒரு அரைகுறை. தீனிச் சபலம். படிப்பு வர

வில்லை. எப்பவும் அம்மாவின் தலைப்பைப் பிடித்தபடி

அலைவான். அம்மாவுக்கு உதவியாகச் சமயலறையில்

வேலை செய்வான். அம்மாவை அவன் ஏதாவது சதா வம்புக்கு

இழுப்பது போல் மகாதேவனுக்கு அப்போது தோன்றும். எரிச்சல்

வரும். ஒரு பிள்ளையார் சதுர்த்தி பண்டிகையின் போது,

அண்ணன் அம்மாவுடன் உட்கார்ந்து நிறைய கொழுக்கட்டைகள்

செய்தான். பிறகு தின்னவும் செய்தான். ஆனால் அன்று மதியத்

திலிருந்து பயங்கர வாந்திபேதி வந்து இரவு இறந்து போனான்.

காலரா நோயாக இருக்கும் என்று எல்லாரும் சொன்னார்கள்.

அரைகுறை அண்ணன் இறந்தது யாருக்கும் பெரிய துக்கமாகத்

தெரியவில்லை.வாழ்க்கை சகஜ நிலைக்கு விரைவில் வந்தது.

மகாதேவனும் தங்கையும் பள்ளிக்குச் சென்றார்கள். அண்ணன்

செத்து 15நாள்தான் இருக்கும். அவர்கள் பள்ளியிலிருந்து மதியம்

திரும்பி அம்மாவை அழைத்தபடி வீடு திரும்பிய போது அம்மா

கூரையில் தூக்குப் போட்டுத் தொங்கிக் கொண்டிருந்தாள். அழகிய

முகம் விகாரமாய் நாக்கு நீண்டு தொங்கியது.

அந்த்தஃ தருணம் அவன் வாழ்விலும் அவனது தங்கையின் வாழ்விலும் உறைந்து போனது.

பகுத்தறிவிற்கு சவால்(2)

என் மகன் ரவியைவிட இரண்டு மூன்று வயதே மூத்தவனாக

இருப்பான் என்று பட்டது.

அவன் சற்று நேரம் எனது எழுத்தில் அவனுக்கு இருந்த

ஈடுபாட்டைப் பற்றிச் சொல்லிக்கொண்டு போனான். எந்த

ஊரில் இருந்தாலும் நீங்கள் எந்தப் பத்திரிகையில் எழுதினாலும்

படிக்கத் தவர மாட்டேன் என்றான். முகஸ்துதிக்குப் பழக்கமில்லாத எனக்குச் சற்று கூச்சமாககஃ கூட இருந்த்து.

அவன் நிறைய வாசிப்பு அநுபவம் கொண்டவனாக இருந்தான்.

மற்ற எழுத்தாளர்களின் எழுத்தைப்பற்றி விலாவாரியாக அலசினான்.

‘’உங்கள் எழுத்தில் சத்தியம் இருக்கிறது’’ என்றான் திடீரென்று அழுத்தமாக. நான் சிரித்தேன். விடலைச் சிறுவன்

போல அவன் பேசுவதாகத் தோன்றிற்று. யௌவன பருவத்தில்

எனது ஆதர்ச எழுத்தாளர்கள் மீது நான் கொண்டிருந்த காதல்

நினைவுக்கு வந்த்து.

‘’உங்களை வீணாகப் புகழ்வதாக நீங்கள் நினைக்க்கஃ

கூடாது.’’ என்றான் மகாதேவன். ‘’உங்கள் எழுத்தில் ஒரு தீர்கப்

பார்வை இருக்கிறது. பாமரனுக்குப் புலப்படாத்து உங்களுக்குப்

புலப்படும்னு நா நினைக்கிறேன் அதனாலதான் உங்களை அவசி

யமா பார்த்து என் கதையைச் சொல்லணும்னு வந்தேன்.’’

நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன். கதை என்றதும்

தேநீர் சிற்றுண்டி கொடுத்து உபசரித்தேன்.

‘’என் கதை வித்திரமானது. நிறைய கேள்விகளும்

முடிச்சுகளும் கொண்டது. ஏன் அப்படியெல்லாம் நடந்ததுன்னு

எனக்குப் புரியல்லே. உங்களுக்குப் புலப்படும்னு நா நிச்சயமா

நம்பறேன்’’ என்றான் அந்த இளஞன் தீவிரத்துடன்***********

Wednesday, October 26, 2011

தமிழ்நாட்டில் சுபீட்சம்

இன்று தீபாவளிக்கு முதல் நாள். நாளைவிடிந்தால்

தீபாவளி. வரிசையாக வரும் பொது ஊழியர்கள்,

யாசகர்கள், ஆகியோருக்கு தீபாவளிப் பணம் வழங்

கிவிட்டு அமர்ந்தேன். வாசலில் திடீரென உறுமி

மேளத்தின் அபாரமான சத்தம். தாங்க முடியாமல்

வெளியே வந்து பார்த்தேன்.கையில் கிண்ணத்துடன்

மூன்று வயது பெண் குழந்தை. தலையில் ஒரு மூட்டை,

கையில் உறுமி மேளத்துடன் ஒரு பெண். மேளத்தைக்

காதைச் செவிடாக்கும் அளவு அடித்துத் துவைத்துக் கொண்டிருந்தாள். அண்மை வீடுகளில் யாரும் வெளியே

வந்து இவளைக் கவனிப்பதாகக் காணோம். எனக்குள் ஒரு யோசனை பளிச்சிட்டது. இவளுக்கு வயிறாற உணவு சமைத்

துக் கொள்ளும் அளவு அரிசி கொடுத்தால் என்ன? என்ற

அரிய தர்ம சிந்தனை உருவாயிற்று.

தலை வலிக்குமளவு சத்தத்தை உண்டாக்கிக் கொண்

டிருந்த அந்தப் பெண்ணிடம் ,அம்மா, அரிசி வாங்கிக் கொள்கி

றாயா என்று கேட்டேன். உடனே மூட்டையைப் பிரித்து அரிசி

வாங்கிக் கொள்ளச் சித்தமாக, பையை நீட்டுவாள் என்று

எதிர் பார்த்தேன். ஆனால் என்ன அதிர்ச்சி! அந்தப் பெண்

அழகிய புன்முறுவலுடன் , அரிசி நிறைய இருக்கு சாமி என்று

கூறிவிட்டாள். ஆகா, என் தர்ம சிந்தனை வீணாகிவிட்டதே

என்று நினைத்துக் கொண்டே உள்ளே சென்று சில்லறை

டப்பாவைத் துழாவி இரண்டு ரூபாய் நாணயம் ஒன்றை

எடுத்துவந்து,குழந்தை கையில் இருந்த கிண்ணத்தில்

போட்டேன். அவள் அன்புடன் அதைப் பெற்றுக் கொண்டு

புன்சிரிப்போடு,மீண்டும் மேளத்தை அடித்துத் துவைத்தவாறே

இடத்தைவிட்டு நகர்ந்தாள்.

அட்டா,யாசகர்கள், உணவுக்கு முக்கிய ஆதாரமான

அரிசியை வேண்டாம் என்று கூறுமளவிற்கு நாட்டில் சுபீட்சம்

பெருகி விட்டதே என்று பெரு மகிழ்ச்சியடைந்தேன். இனி தனி

ஒருவனுக்கு உணவில்லாமல் யாரும் ஜெகத்தினை அழிக்க

முனைய மாட்டார்கள் என்பது உறுதி. பல கதைகளில்

குழந்தைகள் பசி தாங்காமல் பழைய கஞ்சிப் பானைக்குள்

கையைவிட்டு சோற்றுப் பருக்கைகளுக்காக அளைந்து பார்த்து

இல்லாமல்,வருத்தத்தோடு,வெறும் கஞ்சித் தண்ணியைப் பருகும்

அவல நிலையைப் பார்த்து கலங்கிய எனக்கு,அதே தமிழ்நாட்டில்

இப்படிக் கிடைக்கும் அரிசியை வேண்டாமென்று கூறும் அளவிற்கு வளம் பெருகிவிட்டதே என்று மகிழ்ச்சி பெருக்

கெடுத்தது. என்னே தமிழ்நாட்டின் பொற்காலம்!

Friday, October 21, 2011

பகுத்தறிவுக்கு சவால்

பகுத்தறிவு என்பது எதையும் தீர்க்கமாக ஆராய்ந்து

ஒருச்சார்புக்கு இடங்கொடாது, விஷயங்களைப் பகுத்து

ஆய்ந்து,முடிவு செய்யும் தன்மை ஆகும்.. ஆனால்

வாழ்க்கையில் அவ்வப்போது நடக்கும் சில நிகழ்வுகள்

எந்த ஆய்வுக்கும் கட்டுப்படாது,’’,பகுத்தறிவு’’ என்பதற்குப்

புறம்பாக,நேர் எதிரிடையாக நடைபெற்றால் அதை எவ்வாறு

எடுத்துக்கொள்வது?’’நம்பினால் நம்புங்கள்’’ (believe it or not)

என்பது போல் நடக்கும் நிகழ்ச்சிகள் சிலர் வாழ்வில்

தொடர்ந்து நடை மெறுகின்றன. இது பற்றி தன் சொந்த

அநுபவங்களை எனது அபிமான எழுத்தாளர் வாசந்தி

விவரிக்கிறார்.(நன்றி**நினைவில் படிந்த சுவடுகள்காலச்

சுவடு பதிப்பகம்)

தில்லியில் நான் வசித்த நாட்களில் ஒரு மதியம் தொலை

பேசியில் எனக்கு ஓர் அழைப்பு வந்த்து..’’என் பெயர் மஹாதேவன்’’

என்றது குரல். ஓர் இளைஞனின் குரல்.’’நான் தமிழ் நாட்டிலிருந்து

ஒரு அலுவல் நிமித்தம் தில்லி வந்திருக்கிறேன். நான் உங்கள் வாசகன்

உங்களைச் சந்திக்க ஆவலாயிருக்கிறேன். வரலாமா?’’

‘’ஓ,வரலாமே !’’ என்றேன் நான். ஆர்வத்துடன். நான் உங்கள் வாசகன்,உங்கள் வாசகி என்று யார் வந்து சொன்னாலும் அதை விட

மகிழ்ச்சியளிக்கும் வாசகம் ஓர் எழுத்தாளருக்கு இருக்க முடியாது என்றே

நினைக்கிறேன்.எழுத்து என்பது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதற்கே.

எழுத்தாளர் சொல்ல நினைப்பது படிப்பவரால் சரியாககஃ கிரகித்துக் கொள்

ளப் படுகிறதா என்பது வேறு விஷயம்.பேசுவதைக் கேட்க ஆள் இல்லாமல்

போனால் பேசுவதில் அர்த்தமில்லாதது போல், எழுதுவதை யாரும் படிப்ப

தற்கு இல்லை என்று ஆகிப்போனால் அதைவிட மனச்சோர்வைத் தரும்

விஷயம் எழுத்தாளருக்கு இருக்க முடியாது. தமிழ்நாட்டிற்கு வெளியில்

வாழ்ந்தபடி எழுதிவந்த நிலையில்,எனக்குத் தமிழோசையைக் கேட்டாலே

சிலிர்த்துப் போகும். எனது வாசகன் அல்லது வாசகி என்று சொல்லிக்கொண்டு

என்னைத் தேடி வருபவத்களைச் சந்திக்க ஆவலுடன் இருப்பேன்.

அந்த இளைஞன்,மஹாதேவன் குறித்த நேரத்திற்கு வந்தான்.

கதவைத் திறந்த்தும் ஒரு பிரம்மாண்ட மயிலிறகுவிசிறியை என்னிடம்

நீட்டினான். தில்லி செங்கோட்டையில் வாங்கியிருப்பான் என்று புரிந்த்து.

‘’நான் உங்களுக்கு என்ன கொடுத்தால் பொருத்தமாக இருக்கும் என்று

தெரியவில்லை மேடம் !’’ என்று தயக்கத்துடன் சொன்னான். எனக்குச்

சிரிப்பு வந்த்து.அவனது அன்பு நெகிழ்ச்சியை அளித்த்து. (இன்னும் வரும்)

Tuesday, October 18, 2011

தாய்-2

வேதாந்தம் தனக்குத் தாய் இல்லையே என்று பல

சமயங்களில் எண்ணிக்கொண்டிருக்கிறான்.முக்கியமாக

பரீட்சையில் பாஸ் செய்யாமல் ஊருக்குப் போனால்

தகப்பனும் தாயும் எப்படி எப்படி ஒரு மாணவனை

வரவேற்பார்கள் என்பதையும் அவன் பல தடவைகளில்

தன்னுள் ஊகித்துப் பார்த்திருக்கிறான்.

‘’ ஏண்டா, பரீட்சையில்’’ பிளாங்கி’’யாமேடா~

என்று கேட்பார் அப்பா.11

‘’பேப்பரில் அப்படித்தான்போட்டிருக்கு-----‘’

‘’பேப்பர் ஆபீஸிலே யாராவது உனக்கு

விரோதி இருக்கிறானோ, உன் நம்பரை மாத்திரம் போடாமல்

விட்டு விடறத்துக்கு! உம்,....வருஷம் பூராவும் படிக்காமல்

இருந்துவிட்டு...உம்!

வருஷம் பூராவும் நான் ஒண்ணும் படிக்காமல்

இல்லை,அப்பா!’’

ஏன்,எனக்குத் தெரியாதாடா?கடைசி பதினைஞ்சுநாள் படித்தே, உனக்கு விளையாடறத்துக்குத்தானே

காலையுயிலேயும்,மாலையிலேயும்’’ டைம்’’ சரியா இருந்த்து?

காலேஜுக்குக் கிட்டத்தானே உன் ஹாஸ்டல்?

‘’ஆமாம்,உங்களுக்குத் தெரியாதா?’’

‘’டயப் பிரகாரம் சாப்பாடு,டிபன் எல்லாம்

அங்கே நடந்த்தோ,இல்லையோ?’’

‘’ஒரு புகார் கிடையாது.’’

‘’சாப்பாட்டுக்கும் டிபனுக்கும் நடுவிலே,

இருந்த போதில் உன் ரூமிலே உட்கார்ந்து படித்திருந்தால் இந்தக்

கதி வந்திருக்குமாடா,கேட்கிறேன்!.’’

‘’நான் படித்தேன்,.அப்பா! என் ரூமிலே

முடிந்த போதெல்லாம் படித்துக் கொண்டுதான் இருந்தேன்!’’’’

‘’முடியாத படி யார் உன் குறுக்கே

நின்றார்கள்?’’

‘’பக்கத்து ரூம் பசங்கள் வர்ரதும், போரதும்....’’

இனிமேல் ஒரு பசங்கள் வரமாட்டான்கள்;, அவாளெல்லாம் பாஸ் பண்ணிவிட்டு,உத்தியோகம் பார்க்கப் போய் விட்டார்கள் நீ தலை

யில் துணியைப் போட்டுக் கொண்டு நில்; நானும் உன் கூட

நிற்கிறேன். எனக்கு பிள்ளை பிறந்தயே.,என் பாபம்,பாபம்! ....உங்கம்மா டிபன் வைத்திருக்கிறாள். நன்றாகச் சாப்பிடு!ஹாஸ்

டலில் சேர்ந்த்தற்கு அது ஒன்றாவது கற்றுக்கொண்டிருக்கிறாயே!’’

தாயார் டிபனைக் கொடுக்கிறாள். ‘’ஏண்டா குழந்தை?

உன் நம்பர் வரவில்லையாமே?’’என்று கேட்டாள்.

‘’‘’ஆமாம் அம்மா! நான் நன்னாத்தான் எழுதினேன்.’’

எந்தக் .க*****போறவனோ,அரைத்தூக்கத்திலே திருத்தியிருக்கான், உன் பேப்பரை! இதற்கு கேள்வி முறை என்

பதே கிடையாதா?’’

யாரைக் கேட்கிறது,அம்மா! விதியைத்தான் நொந்து

கொள்ளணும்.அத்தனை பையன்களும் நான் பாஸ் செய்து விடுவேன் என்னு நிச்சயமாகச் சொன்னார்கள்,அம்மா!’’

‘’பாரேன்?எல்லோருக்கும் இப்போ எத்தனை ஏமாற்றமாயிருக்கும்!’’

‘’அப்பாதான் ரொம்பக் கடுமையாகப் பேசறார்...’’

‘’உங்கப்பாவுக்கு ஒண்ணுமே தெரியாது.நீ காதிலே

போட்டுக்கொள்ளாதே.!’’

‘’நான் பாசாகல்லை என்று எனக்கு மனசிலே

கஷ்டம் இல்லையா?நான் கிடந்து வாடறேன்,அம்மா உள்ளூற...’’

‘’நீ அதையும் நினக்காதே! பிழைச்சுக் கிடந்தா அடுத்த வருஷம் நீ’’ முதலா ‘’ பாஸ் பண்ணப்போறே. உனக்கு ஏதோ

போறாத வேளை இந்த வருஷம்.!உங்கப்பாவுக்கே அது தெரியும்!’’.

‘’அவர் எதுவும் தெரிந்தவராகப் பேசவில்லை!நன்னா சாப்பிட்டாயா

என்று என்னைக் கேட்கிறார்.’’

ஏன்,நன்னா சாப்பிட்டு,உடம்புந்தான் தேறணும்!ஒரு வருஷம் ‘’பெயில்’’ ஆகிட்டா என்ன, நீ கிழவனாகி

விடறயா? எங்கே அதுக்குள்ளே எழுந்துட்டே! தோசை ஓரொரு

கரண்டி மாவுதான், இன்னும் ஒண்ணாவது போட்டுக்கொள்,இரு ஒரு பொட்டு நெய் விடறேன்.’’

Monday, October 17, 2011

தாய்

தாயின் மாண்பு குறித்து சொல்லப் புகுந்தால் அதற்கு

எல்லை ஏதேனும் உண்டா?முற்றும்துறந்த முனிவர்கள்

கூட தாயன்புக்கு அடிபணிந்தவர்கள்தான்.ஜகத்குரு ஆதி

சங்கர பகவத்பாதர்தாயிடம்அளித்த வாக்கிற்காக அவர்

இறுதித் தருணத்தில் அருகில் இருப்பதற்காக எங்கேயோ

தொலைவிலிருந்து ஓடிவரவில்லையா? தாயின் கைமாறு

கருதா அன்பைக் குறிப்பிடுகயில் என் அபிமான எழுத்தாளர்

அமரர் ‘’தேவன்’’ என்கிற மகாதேவன்(ஆனந்தவிகடன் இத

ழின் ஆசிரியராகப் பல வருடங்கள் இருந்து கல்கிக்குப்பின்

அதை வளர்த்தவர்) , ‘’மிஸ்டர் வேதாந்தம்’’ என்ற நாவலில்

(தொடராக விகடனில் வந்தது) கூறுகிறார்.

‘’தாய்-இந்த சுகத்தை வேதாந்தம் அறிந்ததில்லை. ஆனால் தாய் என்றால் என்னவென்று கேள்விப்பட்டிருக்கிறான்.அநுபவம்

மிகுந்த ஒரு வைத்தியர் ஒரு சமயம் அவனிடம் ‘’தாய்’’என்றால்

என்னவென்று வர்ணித்தார். குறிப்பிட்ட ஒரு தாயின் உதாரணத்தையும் சொன்னார்.

அந்த தாய் கேவலம் கூலிவேலை செயது அன்றாடம்

எட்டணா (இப்போதைய 50 ரூபாய்)சம்பாதிப்பவள்தான்.நிறை

கர்பிணியாக,கடும் ஜுரத்துடன்,ஆஸ்பத்திரியில் கொண்டுவிடப்

பட்டாள்.வைத்தியர் சிகிச்சை செய்கிறார்பொறுக்க முடியாத

பிரசவ வேதனையில் அவள் துடிக்கிறாள்.வேதனை அதிகமாகிக் கொண்டே வருகிறது. பக்கத்தில் நிற்கும் வைத்தியரின் கையை

இறுகப் பற்றி, ‘’சாமீ’’ என்று அலறுகிறாள்.அவளுடைய சிரமத்தின் கடுமையை அந்தப் பிடியின் மூலம் அவர் தெரிந்து

கொள்கிறார்.’’ சாமி,என்னாலே இனிமே தாங்க முடியாது,சாமீ,

மயக்க மருந்துனாச்சியும் கொடுத்துடேன்,.ஆயுதமாச்சியும் போட்டு விடேன்.’’ என்று கெஞ்சுகிறாள்.

வைத்தியருக்குத் தெரியும். ‘’ஆகட்டும் அம்மா, எங்க

ளுக்குத் தெரியும். இன்னும் கொஞ்சம் பொறு,’’ என்று தைரியம் கூறி வருகிறார், தைரியத்தையெல்லாம் அவள் காதும் மனமும்

ஏற்றுக்கொள்ள வில்லை.பல்லைக் கடித்து,’’தயவு செய்யுங்க ஜயா ‘’ என்கிறாள். உடல் எல்லாம் பதற மன்றாடுகிறாள்.

குழந்தை பிறந்துவிடுகிறது.குவா,குவா என்றும்

கத்திவிட்டது.தாயின் பக்கம் சென்று வைத்தியர்,’’உனக்கு பிள்ளை பொறந்திருக்கிறது..அவன் அப்பன் மாதிரி அவனும் போக்கிரிப்பயல்.அதனால்தான் உன்னைப் பாடாப் படுத்திவிட்டான்’’

என்கிறார்.

அவள் முகம் மலர்ந்திருக்கிறது. மயக்க மருந்து,ஆயுதம் என்கிற பேச்செல்லாம் இப்போ அவள் வாயில் இல்லை. ‘’எங்கனாச்சியும் மூச்சோடு கிடக்கட்டும்.,சாமி,மணியைப் பார்த்தீங்களா, ஜயா?

அவள் தாய். தன் சங்கடமெல்லாம்

க்ஷண காலத்தில் மறந்துவிட்டாள். தன் மூச்சேபோவ. தற்கிருந்ததுஎன்பதும் அவள் மனதில் இல்லை. அந்தப்பிள்ளை

‘’எங்கேனாச்சியும் மூச்சோடு கிடந்தால்’’ போதுமாம்.., அது கூடப் போதாது;;;இந்தப் பிள்ளைக்கி ஜாதகம் கணிக்க வேறு ஆசைப்படுகிறாள். அது தாய்மை...

வாழ்கையில் மகன் முன்னே றினால் இந்த தாய் கூடநின்று ஆசிர்வாதம் செய்கிறாள்.பெருமைப் படுகிறாள் வாழ்க்கையில் அவன் வழுக்கி விழுந்தால்,மற்ற உலகத்தினருடன் சேர்ந்து கைதட்டிச் சிரிப்பதில்லை. அநுதாப

படுகிறாள் .கண்ணீர் விடுகிறாள்.’’பயப்படாதே’’ என்று தட்டிக்

கொடுக்கிளாள்.

Saturday, October 15, 2011

அம்மா வந்தாள்(10)

ஒரு நாள் நான் அலுவலகத்திலிருந்து திரும்பியபோது ஒரு இளம் பெண்ணும் அவளுடைய கணவனும் என்னைப்பார்க்க வந்திருந்தார்கள்.

என் பெரியப்பாவின் (என்தந்தையின் அண்ணன்)பேத்தி என்று சொன்னாள்.அதற்கு முன் அவளை நான் பார்த்த்தில்லை.நான்

வடக்கேயே இருந்ததால் தெற்கிலிருந்த உறவினர்களுடன் அதிகத்தொடர்பு இருக்கவில்லை. ஆனால் அம்மாவுக்கு எல்லோரிடமும் நல்ல தொடர்பு இருந்த்து. எனக்கு அதில் அதிக ஆர்வமில்லை என்று எப்பவும் குறைபடுவாள். அந்த பெரியப்பாவுக்கு ஆறு பெண்கள்.பெரியப்பா வசதிஉள்ளவர் ஆனால் பழமைவாதி.யாரையும் அதிகம் படிக்க வைக்கவில்லை.தனக்குப் பிறந்த்து எல்லாம் பெண்கள் என்று பெரியம்மாவுக்கு பெரிய குறையாக இருந்தது என்பது எனக்குத் தெரியும். கடைசி பெண்ணின் பெயர் பாப்பா.

பெயருக்குத்தகுந்தாற்போல் எதும் அறியாப் பேதையாக இருப்பாள்.படிப்பும் ஏறவில்லை. பிறக்கும் போது பாத்த்தில் குறை.

(club foot). மிகச்செல்லமாக வளர்த்தார்கள்.அவளுக்குப் பதினாறு வயதான சமயத்தில் பெரியப்பாவுக்குப் புற்று நோய் வந்த்து.அதனால்

பயந்து அவசரமாக நிறைய செலவழித்து பாப்பாவுக்குத் திருமணம் செய்து வைத்து விட்டார்.சாதுவான பாப்பா, கணவன் மாமியாரிடம்

பட்ட கஷ்டத்தைப்பற்றி அம்மா என்னிடம் நிறைய சொல்லியிருக்கிறாள். என் எதிரில் உட்கார்ந்திருந்த அழகிய,சூட்டிகையான பெண்தான் பாப்பாவின் மூத்த மகள் என்றாள்

தன் தங்கையின் திருமணத்திற்கு என்னை அழைக்க வந்திருப்பதாகச்

சொன்னாள். ‘’பாப்பா எப்படி இருக்கா?’’ என்றேன் நான் தயக்கத்துடன்

‘’ரொம்ப நன்னாயிருக்கா’’ என்றாள் அவள் உற்சாகத்துடன். ‘’நீங்க

கண்டிப்பா வீட்டுக்கு வரணும். ரெண்டு வருஷம் முந்தி 22 லட்சத்துப்க்கு(10வருஷங்களுக்குமுன்) அடையாரிலே flat வாங்கி அப்பாவும்,அம்மாவும் அங்க இருக்கா’’ என்று விலாசம் கொடுத்தாள்.

எனக்கு வியப்பாக இருந்த்து.திருவல்லிக்கேணியில் ஒரு சின்ன ஒண்டுக் குடுத்தனத்தில் பாப்பாவைப் பார்த்த நினைவு எனக்கு. ‘’எல்லாத்துக்கும் மாதங்கிதான்(இரண்டாவது மகள்)காரணம்’’.என்றாள்

அந்தப்பெண் மாதங்கி பொறியியல் பட்டம் பெற்று சென்னையில் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை பார்த்தபோது நிறுவனம் அவளை அமரிக்

காவுக்கு அனுப்பியது. அங்கு பயிற்சி முடிந்ததும் அமெரிக்க நிறுவனம் ஒன்று அவளுடைய திறமையைக்கண்டு அவளுக்குப் பெரிய வேலை கொடுத்து அமர்த்திக்கொண்டது. தனது சம்பளப்பணத்தின் பெரும் பகுதிதியைப் பெற்றோருக்கு அனுப்பி வந்த்தில் வீடு,நகைநட்டும்

வாங்க முடிந்தது. இப்போது அமெரிக்காவில் அவளுடன் வேலை

பார்த்த ஒரு தமிழ் இளஞனை இங்கு சென்னையில் திருமணம்

செய்து கொள்கிறாள். அவள் சொல்லச் சொல்ல ஏதோ சினிமா கதை

போல இருந்த்து..

மறு நாள் திருமண வரவேற்புக்குச் சென்ற போது கேட்ட செய்தி

ஊர்ஜிதமானது.பாப்பா இன்னும் வெகுளியாகத்தான் இருந்தாள்.ஆனால்

பொன்னும் பட்டாடையுமாகப் புதிய பொலிவுடன் தென்பட்டாள்.பாப்பாவின் கணவர் கம்பீரமாக வளைய வந்தார். அழகும்

புத்திசாலித்தனமும் கொண்ட மாதங்கி அமெரிக்க உச்சரிப்பில் ஆங்கிலம் பேசி என்னைத் தன் கணவனுக்கு அறிமுகப்படுத்தினாள்.

பாப்பாவின் வாழ்வில் ஏற்றட்டுவிட்ட மாற்றத்தை நினைத்து நான்

உணர்ச்சிவசப்பட்டுப் போனேன்.பெரியம்மா பாப்பா பெண்ணாகப் பிறந்து

தொலைத்தாளே என்று அலுத்துக்கொண்டது நினைவுக்கு வந்தது.

பாப்பாவுக்கு அவள் வயிற்றில் பிறந்த மகளால் ஜென்ம சாபல்யம்

கிடைக்கும் என்று பெரியம்மா நிச்சயம் நினைத்திருக்க மாட்டாள். மாதங்கியின் சாதனையை அம்மா அறிந்தால் எத்தனை சந்தோஷப்

படுவாள் என்று நினைத்து எனக்கு துக்கமாக இருந்த்து.வீடு திரும்பியதும் என் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளக்கூட இயலாமல்

வெற்றுப் பார்வை பார்த்தபடி. படுத்திருந்த அம்மாவின் கைகளைப்

பிடித்துக்கொண்டு கண்ணீர் வடித்தேன். தன் வாழ்நாளிலேயை நடந்திருந்த ஓர் அற்புத மாற்றத்தை உணர்ந்து கொள்ளாமல் என்

அம்மாவின் ஆயுள் முடிந்துபோனது ஒரு சோகம்....

Friday, October 14, 2011

அம்மா வந்மாள்(9)

ஷீலாவுக்குப் படித்துக்காண்பிக்கிறேன் என்று தினமணியை உரத்துப் படிப்பாள். பிறகுதான் கவனித்தேன் அவளாக இட்டுக்கட்டி செய்தி சொல்கிறாள் என்பதை. அலுவலகத்திலிருந்து

ஷீலாவுக்கு

இடையிடையில் போன் செய்து விசாரிப்பேன். வியாதி என்னவென்று சொன்ன டாக்டர் அதற்கு மருந்தேஇல்லை

என்றும் மிகப்பிரியமாக,பொறுமையாகப் பார்த்துக் கொள்வது

ஒன்றே ஔஷதம் என்றும்சொன்னார். நல்ல வேளையாக எனக்குப் பொறுமை இருந்த்து. அம்மா என்னுடைய கைக்குழந்தை போலத்

தோன்றினாள். கனிவு மிகுந்த பிரியம் சுரந்த்து. சென்னைக்கு வந்ததில் அம்மா மகிழ்ச்சியாக இருப்பதாகத்தான் தோன்றியது.

ஆனால் அம்மாவைப்பார்த்துக்கொள்வது சுலபமாக இருக்க வில்லை. நிலைகொள்ளாத ஒரு தவிப்பு அவளிடம் தென்பட்டது.

விருக்கென்று எழுந்து நடப்பாள்.வேகவேகமாக எங்கோ ஓடுவாள்.

தடுமாறி விழுவாள்.படுக்கையை நனைப்பதும் ஆரம்பித்த்து.

ஞாபகசக்தி வெகுவாக்க்குறைந்து வந்த்து...என்னைக்கண்டதும்

பளீரென்று புன்னகைப்பவள் முகத்தில் புன்னகைகூட மெதுவாக

மறைய ஆரம்பித்த்து.என் கண்ணெதிரிலேயே அவளுடைய நிலை

நாளுக்குநாள் சீரழிவதை ,மூளைஇயக்கம் குன்றிவருவதைத்

தடுக்க இயலாமல் நான் பரிதவிப்புடன் கவனித்து வத்தேன்.

நான் முன்பு எழுதியஒரு கதையேநிஜ வாழ்வில் அரங்கேறி வருவது பீதியையும் துயரத்தையும் அளித்த்து.

ஷீலா மிக நல்ல பெண்ணாக அம்மாவிடம்

மிகுந்த பிரியத்துடன் நடந்து பொறுப்புடன் கவனித்துக்கொண்டது,

அம்மாவும் நானும் செய்த அதிர்ஷ்டமாகத் தோன்றியது.

அம்மா அப்படி இருந்தபோது வேலை நிமித்தமாக எனக்கு டூரும்

போக வேண்டியிருந்த்து.எழுத்து வேலைக்கும் ஓய்வு இல்லை.

இலக்கிய மலர்கள் தயாரிக்கப்பட்டன. நேர்காணல்கள்,அரசியல்

கட்டுரைகள்ஃ வாரந்தோரும் சிந்திக்க ஒரு நொடிபத்தி,அத்துடன்

அலுவலகத்தை ஒழுங்காக நடத்திச்செல்ல வேண்டிய பொருப்பு

எல்லாவற்றையும் குறைவில்லாமல் எப்படிச் செய்ய முடிந்தது

என்று இப்போது நினைத்தால் மலைப்பாக இருக்கிறது.அம்மாவின்

பேச்சு நின்றது.என்னையே அடையாளம் தெரியாமல் போனது.படுத்த படுக்கையாகிப் போனாள்.அம்மாவுடன் பேச மடிய

வில்லே என்பது எனக்கு பெரிய இழப்பாகத்தோன்றியது.

(இன்னும் வரும்)

Wednesday, October 12, 2011

அம்மா வந்தாள்(8)

தனது துணிமணிகளை சதா தேடிக்கொண்டிருப்பாள்

சென்னைக்கு வந்த்தும் மனநிலை தளர்ந்ததன்அடை

யாளமாக அதெல்லாம் நின்றது. சென்னையில்

வீட்டு டெர்ரஸ்ஸில் பிரம்மாண்டமான தோட்டம்

போட்டிருந்தேன்.அம்மாவுக்கு தோட்டம் மிகவும் பிடிக்

கும்.ஷீலாவைக் காலையும் மாலையும் அம்மாவுக்கு

நடை பழக வேண்டும் என்று சொல்லியிருந்நேன்.

செடிகளைப்பார்த்த்துமே அம்மாவின் முகத்தில்

மலர்ச்சி ஏற்படும்.

அம்மாவுக்கு அல்ஜைமர்நோய்என்று

சில மாதங்கள்கழித்துத்தான் கண்டுபிடித்தேன்.அம்மாவின்

ஞாபகம் நழுவுவது கண்டு ஞாபகங்களை உசுப்ப

மலர்களின் பெயரைச் சொல்லச்சொல்வேன்.அம்மா

கன்னட மீடியமில் படித்தவர். பலமலர்களின் கன்னடப்பெ

ய,ர்கள்தான்அவளுக்கு நினைவு இருந்த்து. அம்மாவுக்கு

சங்கீதம் பிடிக்கும். இசை டேப்பைப் போட்டு ராகம் கண்டு

பிடிக்கச்சொல்வேன். சில சமயங்களில் அவள் சரியாகச்சொல்லிவிட்டால் எனக்கு அக மகிழ்ந்து போகும்

அம்மாவுக்கு நேர்த்தியாக உடை உடுத்தப்பிடிக்கும்.தினமும்

ஷீலா இஸ்திரிபோட்டு மடித்த புடவை,பொருத்தமான

ரவிக்கை அணிவித்து தலைவாரி கொண்டை போட்டு விடு

வாள்.. அம்மா பொம்மை மாதிரி அழகாகச் சிரிப்பாள்.ஆங்கில

தினசரி தினமும் படிக்கும் வழக்கம். அம்மாவுக்கு இருந்தது.

இப்போது அவளால் இயலவில்லை. இருந்தும் அது ஒரு

கடமையைப்போல ஹிண்டுவையும் தினமணியையும்

படிக்கச் சொல்வேன்.

(இன்னும் வரும்)