Pages

Tuesday, October 18, 2011

தாய்-2

வேதாந்தம் தனக்குத் தாய் இல்லையே என்று பல

சமயங்களில் எண்ணிக்கொண்டிருக்கிறான்.முக்கியமாக

பரீட்சையில் பாஸ் செய்யாமல் ஊருக்குப் போனால்

தகப்பனும் தாயும் எப்படி எப்படி ஒரு மாணவனை

வரவேற்பார்கள் என்பதையும் அவன் பல தடவைகளில்

தன்னுள் ஊகித்துப் பார்த்திருக்கிறான்.

‘’ ஏண்டா, பரீட்சையில்’’ பிளாங்கி’’யாமேடா~

என்று கேட்பார் அப்பா.11

‘’பேப்பரில் அப்படித்தான்போட்டிருக்கு-----‘’

‘’பேப்பர் ஆபீஸிலே யாராவது உனக்கு

விரோதி இருக்கிறானோ, உன் நம்பரை மாத்திரம் போடாமல்

விட்டு விடறத்துக்கு! உம்,....வருஷம் பூராவும் படிக்காமல்

இருந்துவிட்டு...உம்!

வருஷம் பூராவும் நான் ஒண்ணும் படிக்காமல்

இல்லை,அப்பா!’’

ஏன்,எனக்குத் தெரியாதாடா?கடைசி பதினைஞ்சுநாள் படித்தே, உனக்கு விளையாடறத்துக்குத்தானே

காலையுயிலேயும்,மாலையிலேயும்’’ டைம்’’ சரியா இருந்த்து?

காலேஜுக்குக் கிட்டத்தானே உன் ஹாஸ்டல்?

‘’ஆமாம்,உங்களுக்குத் தெரியாதா?’’

‘’டயப் பிரகாரம் சாப்பாடு,டிபன் எல்லாம்

அங்கே நடந்த்தோ,இல்லையோ?’’

‘’ஒரு புகார் கிடையாது.’’

‘’சாப்பாட்டுக்கும் டிபனுக்கும் நடுவிலே,

இருந்த போதில் உன் ரூமிலே உட்கார்ந்து படித்திருந்தால் இந்தக்

கதி வந்திருக்குமாடா,கேட்கிறேன்!.’’

‘’நான் படித்தேன்,.அப்பா! என் ரூமிலே

முடிந்த போதெல்லாம் படித்துக் கொண்டுதான் இருந்தேன்!’’’’

‘’முடியாத படி யார் உன் குறுக்கே

நின்றார்கள்?’’

‘’பக்கத்து ரூம் பசங்கள் வர்ரதும், போரதும்....’’

இனிமேல் ஒரு பசங்கள் வரமாட்டான்கள்;, அவாளெல்லாம் பாஸ் பண்ணிவிட்டு,உத்தியோகம் பார்க்கப் போய் விட்டார்கள் நீ தலை

யில் துணியைப் போட்டுக் கொண்டு நில்; நானும் உன் கூட

நிற்கிறேன். எனக்கு பிள்ளை பிறந்தயே.,என் பாபம்,பாபம்! ....உங்கம்மா டிபன் வைத்திருக்கிறாள். நன்றாகச் சாப்பிடு!ஹாஸ்

டலில் சேர்ந்த்தற்கு அது ஒன்றாவது கற்றுக்கொண்டிருக்கிறாயே!’’

தாயார் டிபனைக் கொடுக்கிறாள். ‘’ஏண்டா குழந்தை?

உன் நம்பர் வரவில்லையாமே?’’என்று கேட்டாள்.

‘’‘’ஆமாம் அம்மா! நான் நன்னாத்தான் எழுதினேன்.’’

எந்தக் .க*****போறவனோ,அரைத்தூக்கத்திலே திருத்தியிருக்கான், உன் பேப்பரை! இதற்கு கேள்வி முறை என்

பதே கிடையாதா?’’

யாரைக் கேட்கிறது,அம்மா! விதியைத்தான் நொந்து

கொள்ளணும்.அத்தனை பையன்களும் நான் பாஸ் செய்து விடுவேன் என்னு நிச்சயமாகச் சொன்னார்கள்,அம்மா!’’

‘’பாரேன்?எல்லோருக்கும் இப்போ எத்தனை ஏமாற்றமாயிருக்கும்!’’

‘’அப்பாதான் ரொம்பக் கடுமையாகப் பேசறார்...’’

‘’உங்கப்பாவுக்கு ஒண்ணுமே தெரியாது.நீ காதிலே

போட்டுக்கொள்ளாதே.!’’

‘’நான் பாசாகல்லை என்று எனக்கு மனசிலே

கஷ்டம் இல்லையா?நான் கிடந்து வாடறேன்,அம்மா உள்ளூற...’’

‘’நீ அதையும் நினக்காதே! பிழைச்சுக் கிடந்தா அடுத்த வருஷம் நீ’’ முதலா ‘’ பாஸ் பண்ணப்போறே. உனக்கு ஏதோ

போறாத வேளை இந்த வருஷம்.!உங்கப்பாவுக்கே அது தெரியும்!’’.

‘’அவர் எதுவும் தெரிந்தவராகப் பேசவில்லை!நன்னா சாப்பிட்டாயா

என்று என்னைக் கேட்கிறார்.’’

ஏன்,நன்னா சாப்பிட்டு,உடம்புந்தான் தேறணும்!ஒரு வருஷம் ‘’பெயில்’’ ஆகிட்டா என்ன, நீ கிழவனாகி

விடறயா? எங்கே அதுக்குள்ளே எழுந்துட்டே! தோசை ஓரொரு

கரண்டி மாவுதான், இன்னும் ஒண்ணாவது போட்டுக்கொள்,இரு ஒரு பொட்டு நெய் விடறேன்.’’

2 comments:

  1. அம்மாவுக்கு பிள்ளைகளின் பசிமட்டும்தான் தெரியும்.குறையை பெரிதுபடுத்தவே மாட்டார்கள்.

    ReplyDelete
  2. இது முந்தய தலைமுறைகளைச் சேர்ந்த தாய்மார்களின் இயல்பு.எதிலுமே தன் மக்கள்
    முன்னால் இருக்க வேண்டுமென்று அவர்களை
    விளையாடக்கூட விடாமல் வெறியுடன் பலவற்றையும் புகட்டத்துடிக்கும் இன்றைய தாய்மார்களின் இயல்பே வேறு.உங்கள் அபிப்ராயம்
    என்ன? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.அம்மா.

    ReplyDelete