Pages

Monday, October 10, 2011

அம்மா வந்தாள்(4)

நான் இரண்டு இரவுகள் தூங்கவில்லை.கடைசியில்

அம்மாவைசென்னைக்கு வரவழைத்துக்கொள்வது

என்ற முடிவைஎடுத்து அண்ணனிடம் சொன்னேன்.

என்னுடைய முடிவு அவர்களுக்குப் பெரும் நிம்மதி

அளித்த்தாகத்தோன்றிற்று..அதை இருவரும் எதிர்பார்

த்துக் காத்திருந்த்து புரிந்த்து.நீ தனியாக எப்படிப்பார்த்துக்கொள்வாய் என்கிற கேள்விகூட

இருவரும் கேட்காதது எனக்கு வியப்பாக இருந்த்து.

அந்த அளவுக்கு அவர்களுக்கு களைப்பு ஏற்பட்டிருந்த

தற்கு அவரகளது தனிப்பட்ட புத்திர சோகமே காரணம்

என்பது புரிந்த்து.ஆனால் அம்மாவைப்பார்த்துக்கொள்ள,

வீட்டோடுஇருக்க ஒரு பணிப்பெண்ணை அமர்த்திய

பிறகுதான் அம்மாவை அழைத்துக்கொள்ள முடியும்

என்று சொல்லிவிட்டு துபாய்க்கு கிளம்பினேன்..

அடுத்த பதினைந்துநாட்களில் சேகர் மும்பைக்கு வருவதா

கவும் அம்மாவை விமானத்தில் சென்னைக்கு அழைத்துவருவதாகவும் சொன்னான்.

நான் சென்னைக்குத்திரும்பியதும் பலபேரிடம்

பணிப்பெண் தேவையைப்பற்றி ச் சொல்லிவந்தேன்.

இதற்கிடையில் தில்லியில் என் கணவர் சுந்தரத்துக்கு

உதவிக்காக வீட்டுவேலை மற்றும் சமையல் வேலைக்கு

அமர்த்தியிருந்த தமிழ்ப்பெண் வேலையைவிட்டுப்போய்

விட்டாள்.சுந்தரம் காய்ச்சலில் படுத்து தேநீர்தயாரித்துத்தரக்கூட

ஆள் இல்லாமல் திண்டாடுகிறார் என்று தகவல் வந்தது..

(இன்னும் வரும்). .

2 comments:

  1. அழகாக உங்க அனுபவம் பகிர்ந்து கொள்ரீங்க. படிக்கவே நல்லா இருக்கு.

    ReplyDelete
  2. சகோதரி,
    என் அனுபவம் இல்லை அம்மா,நன்றாகப்பாருங்கள்
    என்பேரபிமானத்திற்குரிய பிரபல எழுத்தாளர்

    வாசந்தி அவர்களின் அனுபவம்.அவரே எழுதியுள்ளார்.என்வாழ்க்கையின் முக்கியமான
    தருணத்தில்கோஇன்ஸிடன்ஸ் போல அவர் ஒரு
    இதழில் எழுதியது எனக்கு அருமருந்தாகப் பயன்
    பட்டது.ஆறுதல் தந்த்து.அவருடைய வேறு ஒரு
    கதையில் தன்சொந்த அனுபவத்தை விரிவாக
    கூறியுள்ளார்.வருகைக்கு நன்றி அம்மா

    ReplyDelete