Pages

Wednesday, October 12, 2011

அம்மா வந்தாள்(7)

அன்றே காலை பத்தரைமணிக்குப்பின் அனுப்புங்கள்

என்றேன் நனறியுடன்.

இரவு தூங்காத சோர்வுடன்நான்

விமான நிலையத்திற்குச் சென்று அம்மாவையும் தம்பி

யையும் வீட்டிற்கு அழைத்து வந்தேன்.அவர்கள் வீட்டிற்கு

வந்த சற்று நேரத்திற்கெல்லாம் மீரா அந்தப்பெண்ணை,

ஷீலாவை,அழைத்து வந்தார்.இளம்பெண்,அநாதை,மலை

யாளி கிறித்தவமதம் என்ற விவரங்கள் எனக்குத் தேவைப்

படவில்லை.ஷீலாவைப்பார்த்த்துமே எனக்குப் பிடித்து

விட்டது.அம்மாவைப்பார்த்துக்கொள்ளமட்டுமே அவள்,

வேறு எந்த வேலைக்ககு அல்ல என்று சொல்லி நன்றியுடன்

ஏற்றுக்கொண்டேன்.

பெற்றோர்களைக் கவனித்துக்கொள்

ளும் பொறுப்பில் மகளுக்கும் மகன்களுக்கும் வித்தியாசமில்

லை என்று நான் நினைக்கிறேன். என் அம்மாவைக் கவனிக்க

வேண்டிய பொருப்பு எனக்கும் இருந்தது..உண்மையில் என் அம்மாவின் மனரீதியான,உடல்ரீதியான பிரச்சினைகளை

அவர்களைவிட என்னால் அதிக துல்லியமாகப் புரிந்துகொள்ள

முடிந்தது. அண்ணா முன்கோபி. மும்பையில் அம்மா ஏதோ

ஒரு பயத்தில் இருந்ததை நான் கவனித்தேன்.அந்த பயம் பல

வித்தில் பரிணமித்த்து.துவாலைத்துண்டுகள்,புடவைத்தலைப்பு

எல்லாவற்றின் இழைகளைப் பிரித்து கிழித்துக்கொண்

டிருப்பாள்.

(இன்னும் வரும்)

2 comments:

  1. ஒரு அம்மவின் தவிப்பை ஆண்மகனை விட பெண்ணால் சுலபமாக புரிந்துகொள்ள முடியும் என்பது உண்மையிலும் உண்மைதான்.

    ReplyDelete
  2. நீங்கள் கூறுவது சரிதான்.இதனால்தான் ஒரு
    பெண்ணாவது வேண்டும் என்று ஏங்குகிறார்கள்
    போலும்.அந்த பாக்யம் எனக்கும் ,என் இரண்டாவது
    அக்காவுக்கும் இல்லை இரண்டு பேருக்கும் மூன்று பையன்கள் மட்டுமே.வருகைக்கு நன்றி அம்மா.

    ReplyDelete