Pages

Wednesday, October 12, 2011

அம்மா வந்தாள்(8)

தனது துணிமணிகளை சதா தேடிக்கொண்டிருப்பாள்

சென்னைக்கு வந்த்தும் மனநிலை தளர்ந்ததன்அடை

யாளமாக அதெல்லாம் நின்றது. சென்னையில்

வீட்டு டெர்ரஸ்ஸில் பிரம்மாண்டமான தோட்டம்

போட்டிருந்தேன்.அம்மாவுக்கு தோட்டம் மிகவும் பிடிக்

கும்.ஷீலாவைக் காலையும் மாலையும் அம்மாவுக்கு

நடை பழக வேண்டும் என்று சொல்லியிருந்நேன்.

செடிகளைப்பார்த்த்துமே அம்மாவின் முகத்தில்

மலர்ச்சி ஏற்படும்.

அம்மாவுக்கு அல்ஜைமர்நோய்என்று

சில மாதங்கள்கழித்துத்தான் கண்டுபிடித்தேன்.அம்மாவின்

ஞாபகம் நழுவுவது கண்டு ஞாபகங்களை உசுப்ப

மலர்களின் பெயரைச் சொல்லச்சொல்வேன்.அம்மா

கன்னட மீடியமில் படித்தவர். பலமலர்களின் கன்னடப்பெ

ய,ர்கள்தான்அவளுக்கு நினைவு இருந்த்து. அம்மாவுக்கு

சங்கீதம் பிடிக்கும். இசை டேப்பைப் போட்டு ராகம் கண்டு

பிடிக்கச்சொல்வேன். சில சமயங்களில் அவள் சரியாகச்சொல்லிவிட்டால் எனக்கு அக மகிழ்ந்து போகும்

அம்மாவுக்கு நேர்த்தியாக உடை உடுத்தப்பிடிக்கும்.தினமும்

ஷீலா இஸ்திரிபோட்டு மடித்த புடவை,பொருத்தமான

ரவிக்கை அணிவித்து தலைவாரி கொண்டை போட்டு விடு

வாள்.. அம்மா பொம்மை மாதிரி அழகாகச் சிரிப்பாள்.ஆங்கில

தினசரி தினமும் படிக்கும் வழக்கம். அம்மாவுக்கு இருந்தது.

இப்போது அவளால் இயலவில்லை. இருந்தும் அது ஒரு

கடமையைப்போல ஹிண்டுவையும் தினமணியையும்

படிக்கச் சொல்வேன்.

(இன்னும் வரும்)

2 comments:

  1. ஷீலாபொன்ற ஒரு பெண் கிடைத்தது அவங்க லக் தான். நல்லாவே கவனிச்சுக்கராங்க.

    ReplyDelete
  2. அம்மா,
    நீங்கள் சொல்வது மிகச் சரி.என் அம்மாவைக்கவனிக்க மூன்று மாதங்களுக்கு ஒரு
    முறை கோட்டயத்திலிருந்து அழைத்து வரப்பட்ட
    ஆறு நர்ஸுகளில்நான்கு பேர்கள் பரவாயில்லை.ஆறாவதாக வந்த பெண் மிகவும்
    மோசமான ,திமிரான 30 வயது பெண்.ஒரு சின்ன
    காரியத்திற்கு மிகவும் ஆர்பாட்டம் செய்வாள்நாம்
    எதாவதுசற்றுக் கண்டிப்புடன் சொன்னால் அந்தக்
    கோபத்தை அம்மாவிடம் காண்பிப்பாள்.இதைக்கூட
    அவள் போனபின்தான் அம்மா எங்களிடம்
    கூறினார். என்னால் என்ன செய்ய முடியும்.
    மிகவும் சோதனையான நாட்கள்.பின் பொருக்க முடியாமல் அவளை கடும் புகார் கூறி திருப்பியனுப்பி வேறு நர்ஸைக்கேட்டோம்.ஆனால்
    கோட்டயம் செஞ்சிலுவைசங்கத்திலிருந்து
    முறையான பதில் இல்லை.அதன் பின் என்மனைவியே பார்த்துக் கொண்டாள்.பிரரைஓரளவுதான் நம்ப முடிகிறது

    ReplyDelete