Pages

Monday, October 17, 2011

தாய்

தாயின் மாண்பு குறித்து சொல்லப் புகுந்தால் அதற்கு

எல்லை ஏதேனும் உண்டா?முற்றும்துறந்த முனிவர்கள்

கூட தாயன்புக்கு அடிபணிந்தவர்கள்தான்.ஜகத்குரு ஆதி

சங்கர பகவத்பாதர்தாயிடம்அளித்த வாக்கிற்காக அவர்

இறுதித் தருணத்தில் அருகில் இருப்பதற்காக எங்கேயோ

தொலைவிலிருந்து ஓடிவரவில்லையா? தாயின் கைமாறு

கருதா அன்பைக் குறிப்பிடுகயில் என் அபிமான எழுத்தாளர்

அமரர் ‘’தேவன்’’ என்கிற மகாதேவன்(ஆனந்தவிகடன் இத

ழின் ஆசிரியராகப் பல வருடங்கள் இருந்து கல்கிக்குப்பின்

அதை வளர்த்தவர்) , ‘’மிஸ்டர் வேதாந்தம்’’ என்ற நாவலில்

(தொடராக விகடனில் வந்தது) கூறுகிறார்.

‘’தாய்-இந்த சுகத்தை வேதாந்தம் அறிந்ததில்லை. ஆனால் தாய் என்றால் என்னவென்று கேள்விப்பட்டிருக்கிறான்.அநுபவம்

மிகுந்த ஒரு வைத்தியர் ஒரு சமயம் அவனிடம் ‘’தாய்’’என்றால்

என்னவென்று வர்ணித்தார். குறிப்பிட்ட ஒரு தாயின் உதாரணத்தையும் சொன்னார்.

அந்த தாய் கேவலம் கூலிவேலை செயது அன்றாடம்

எட்டணா (இப்போதைய 50 ரூபாய்)சம்பாதிப்பவள்தான்.நிறை

கர்பிணியாக,கடும் ஜுரத்துடன்,ஆஸ்பத்திரியில் கொண்டுவிடப்

பட்டாள்.வைத்தியர் சிகிச்சை செய்கிறார்பொறுக்க முடியாத

பிரசவ வேதனையில் அவள் துடிக்கிறாள்.வேதனை அதிகமாகிக் கொண்டே வருகிறது. பக்கத்தில் நிற்கும் வைத்தியரின் கையை

இறுகப் பற்றி, ‘’சாமீ’’ என்று அலறுகிறாள்.அவளுடைய சிரமத்தின் கடுமையை அந்தப் பிடியின் மூலம் அவர் தெரிந்து

கொள்கிறார்.’’ சாமி,என்னாலே இனிமே தாங்க முடியாது,சாமீ,

மயக்க மருந்துனாச்சியும் கொடுத்துடேன்,.ஆயுதமாச்சியும் போட்டு விடேன்.’’ என்று கெஞ்சுகிறாள்.

வைத்தியருக்குத் தெரியும். ‘’ஆகட்டும் அம்மா, எங்க

ளுக்குத் தெரியும். இன்னும் கொஞ்சம் பொறு,’’ என்று தைரியம் கூறி வருகிறார், தைரியத்தையெல்லாம் அவள் காதும் மனமும்

ஏற்றுக்கொள்ள வில்லை.பல்லைக் கடித்து,’’தயவு செய்யுங்க ஜயா ‘’ என்கிறாள். உடல் எல்லாம் பதற மன்றாடுகிறாள்.

குழந்தை பிறந்துவிடுகிறது.குவா,குவா என்றும்

கத்திவிட்டது.தாயின் பக்கம் சென்று வைத்தியர்,’’உனக்கு பிள்ளை பொறந்திருக்கிறது..அவன் அப்பன் மாதிரி அவனும் போக்கிரிப்பயல்.அதனால்தான் உன்னைப் பாடாப் படுத்திவிட்டான்’’

என்கிறார்.

அவள் முகம் மலர்ந்திருக்கிறது. மயக்க மருந்து,ஆயுதம் என்கிற பேச்செல்லாம் இப்போ அவள் வாயில் இல்லை. ‘’எங்கனாச்சியும் மூச்சோடு கிடக்கட்டும்.,சாமி,மணியைப் பார்த்தீங்களா, ஜயா?

அவள் தாய். தன் சங்கடமெல்லாம்

க்ஷண காலத்தில் மறந்துவிட்டாள். தன் மூச்சேபோவ. தற்கிருந்ததுஎன்பதும் அவள் மனதில் இல்லை. அந்தப்பிள்ளை

‘’எங்கேனாச்சியும் மூச்சோடு கிடந்தால்’’ போதுமாம்.., அது கூடப் போதாது;;;இந்தப் பிள்ளைக்கி ஜாதகம் கணிக்க வேறு ஆசைப்படுகிறாள். அது தாய்மை...

வாழ்கையில் மகன் முன்னே றினால் இந்த தாய் கூடநின்று ஆசிர்வாதம் செய்கிறாள்.பெருமைப் படுகிறாள் வாழ்க்கையில் அவன் வழுக்கி விழுந்தால்,மற்ற உலகத்தினருடன் சேர்ந்து கைதட்டிச் சிரிப்பதில்லை. அநுதாப

படுகிறாள் .கண்ணீர் விடுகிறாள்.’’பயப்படாதே’’ என்று தட்டிக்

கொடுக்கிளாள்.

2 comments:

  1. தாயை, தாய்மையை உயர்வாக இதைவிட அழகாக சொல்லிவிடமுடியாது.

    ReplyDelete
  2. இந்தப் பகுதி என் சிறு வயதிலிருந்ஃது, என் மனதை
    பாதித்த ஒன்று.இதற்கேற்றாற் போல் என் தந்தை
    மிககஃ கண்டிப்பானவராகவும்,தாய் மிக அன்பானவராகவும் ,அமைந்த்தால் இது என்னை
    மிகவும் கவர்ந்த்து. நன்றி அம்மா.

    ReplyDelete