Pages

Sunday, October 9, 2011

தாயாரைப்பேணுவதில் பெண்மக்கள்பங்கு பற்றி இருவேறு

கருத்துகளுக்கு இடமில்லை அதாவது பெண்கள் திருமண

மாகி கணவன்வீட்டிற்குச்சென்று விடுவதால் அந்தவீட்டுப்

பொருப்பு மட்டுமே அவளுக்கு உண்டு..புகுந்தவீட்டிற்கு

பிடுங்கிநடப்பட்ட நாற்றான அவள் தன் பெற்றோருக்கு

பொருப்பேற்கத்தேவையில்லை.என்பதுதான் வழக்கத்தில்

உள்ளது.இந்தக் கருத்திற்கு சவால்விட்டுபதிலைக்காரியத்தில்

காட்டிய எனதுபெரு அபிமானத்திற்குரிய எழுத்தாளர், சகோதரி

வாசந்தி அவர்களின் செயற்கரியசெயலின் அனபவத்தை

அவரே விள்க்குகிறார் பாருங்கள்.(நன்றி-நினைவில்பதிந்த

சுவடுகள்-வெளியீடு-காலச்சுவடு பதிப்பகம்.)

அம்மா வந்தாள்

தென்மாவட்ட ஐஆதிக்கலவரங்களைப் பார்த்த துயரத்துடன்

நான் சென்னை திரும்பியதும் வேறு சொந்த விஷயங்கள்

என் கவனத்தை ஆக்கிரமிக்கத்துவங்கின.என் தாய் என்

மூத்த அண்ணனுடன் மும்பையில் இருந்தார்.நான் வாரம்

ஒரு முறை அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு

நலம் விசாரிப்பேன்..எப்படிம்மா இருக்கே? என்றால் குழந்தை

போல நன்னா இருக்கேன் என்பார்.ஆனால் என்அண்ணன்

அம்மாவைப்பற்றி நிறைய அலுத்துக்கொள்வான்.சொல்வதைக்

கேட்பதில்லை.இரவில் வீடு பூர அலைகிறாள்,கீழே விழுந்து அடிபட்டுக்கொள்கிறாள்,பார்த்துக்கொள்வதே சிரமமாக இருக்

கிறது. என்பான்.எனக்குச் சொல்லத்தெரியாமல் ஒவ்வொரு

முறையும் போனைக்கீழே வைத்ததும்மிகச் சங்கடமாக இருக்கும்..

(இன்னும் வரும்)

2 comments:

  1. இந்தப்பதிவு இப்பதான் பாத்தேன். தொடருங்க.

    ReplyDelete
  2. வருகைக்கு ந்ன்றி அம்மா

    ReplyDelete