Pages

Monday, November 28, 2011

வயதானோர் அதிகரிக்கும் அபாயம்-3

யாரு?என்ன?பத்மாவா?ஜய்ய்ய்யோ, எப்போ? என்ன மாப்பிள்ளை இது

பெரிய இடியாப் போடரேள்?’’

அடி வயிற்றில் திக்கென்றது. நாகுப்பாட்டி பீதியுடன் பார்வதியை நிமிர்ந்து

பார்த்து அலங்க மங்க விழித்தாள்.

பார்வதி சரேலென்று அறையை விட்டு கூடத்திற்கு விரைந்தாள் ‘

என்னடி ? என்ன சமாச்சாம்?’’

காமு’’’’ வென்று ஓலமிட்டது கேட்டது.

நாகுப்பாட்டிக்கு கையும் காலும் வெலவெலத்துப் போயிற்று.

யாரு இப்ப?

’’’பத்மா இன்னிக்குக் காலமே ஷாக் அடிச்சு செத்துப் போயிட்டாளாம்மா!

ஜய்யயஃயோ! அடிப்பாவி!’’

அது என்ன அலறல்! அது என்ன ஓலம், லோகத்து துக்கமெல்லாம்

பிரளயமாப் பொங்கினாப்பலே!

நாகுப்பாட்டிக்கு துக்கத்திற்கு மேல் பீதியேற்பட்டது. இலையின் முன்

சோற்றைப் பிசையும் குத்துக் கல்லாயத் தான் உடகார்ந்திருப்பது ஏதோ

குற்றம் செய்தாற்போல் உடம்பு நடுங்கிக் கூசிற்று. மூளை மரத்து செயலிழந்து

நின்றது, வரப் போகிற தாக்குதலை எதிர்பார்த்து—

பத்திரகாளி ஸ்வரூபமாய் ஆவேசத்துடன் பார்வதி உள்ளே நுழைந்தாள்.

நாகுப்பாட்டிக்கு நெஞ்சு உறைந்து போயிற்று. சுப்புணி செத்தும், ரமேஷ்

செத்தும் ஞாபகத்துக்கு வந்த்து.

என்னை விட்டுட்றி---- என்னை----‘

பார்வதி கிடுகிடுவென்று அடுப்படிக்குச் சென்று வெண்கலப்பானையை

எடுத்து,

’’இந்தாங்கோ, கொட்டிக்கோங்கோ! என்று கர்ஜித்தபடி தலைகீழாய் நாகுப்

பாட்டியின் இலையில் பானையைக் கவிழ்த்தாள். சூடான அன்னப் பருக்கைகள்

பாட்டியின் புறங்கையில் சுறீர் என்று தெரித்தன. பாட்டி விடுக்கென்று பின்னுக்கு நகர்ந்தாள்.

விக்கித்துப் போய் பயந்த நிலையில் நா உலர்ந்து. அந்த வெண்கலப் பானையையும் ஆவி க்கஃகும் மலை போல இருந்த அன்னக் குவியலையும் மார்த்து விழித்தாள்.

எல்லாரையும் வாரி வாரி அனுப்பத்தானே இப்படி ஆணி அறைஞ்சாப்பலே

உட்கார்ந்திருக்கே.!. இன்னும் எத்தனை நாள் உனக்குக் கொட்டிக்கணும்.? உன்னை அந்த சண்டாளப்பாவி எமன் தூக்கிண்டு போக மாட்டேங்கறானே.

பிஞ்சையும் ,மொட்டையும் பறிச்சிண்டு போறானே1’’

பார்வதியின் வார்த்தைகள் எதுவும் நாகுப்பாட்டியின் செவியில் விழவில்லை.

அந்த ரௌத்திரமும் வெறுப்பும், கொலைவேறியும் மொத்த உருக்கொண்டு

விசுவரூபமாய் பயமுறுத்திற்று.

பேத்தி செத்த துக்கத்தைவிட இவளுக்கு எம்மேல் இருக்கிற வெறுப்புத்தான்

ஜாஸ்தி. அடுத்தாப்பலே அந்த அரிவாமணையை எடுத்து என் மண்டையிலே

போட்டாலும் போட்டுடுவே., போட்டுட்றீ, அப்படியாவது நான் ஒழிஞ்சு போறேன்.

வாசற்கதவை யாரோ பலமாகத் தட்டினார்கள் பார்வதி க்ரோத்தஃதுடன்

பாட்டியைப் பார்த்துவிட்டு ,

‘’பத்மா போயிட்டாளாம்! தளதளன்னு இருந்த இருபத்தினாலு வயசுக் குழந்தை’’ என்றாள் அடிக்குரலில்.

‘’மனசு குளிர்ந்த்தோ இல்லையோ? எல்லாத்தையும் கொட்டிக்கோ, ஒரு பருக்கை விடாமே!’’ என்று தொடர்ந்து உறுமிவிட்டு வெளியேறினாள்

திகைப்புடன் நாகுப்பாட்டி இலையைப் பார்த்தாள். நன்றாகச் சாப்பிடக் கூடியவர்கள் மூன்று பேர்கள் சாப்பிடலாம். இன்னும் ஆவி பொங்கிக் கொண்டி

ருந்த்து. இலையில் ஓரமெல்லாம் சூட்டில் பழுப்பாகப் போயிருந்தது. அதைப்

பார்க்கப் பார்க்க இனம் புரியாத அதிர் வலைகள் உடல் முழுவதும் பரவி நடுங்கின.

‘’என்னடி பண்ணுவேன் இதை? எச்சக்கலையிலே இத்தனை அன்னத்தைக்

கொட்டியிருக்கிறே.... உங்க மாமனார் இருந்தார்னா இத்தனை தைரியம்

வந்திருக்குமா உனக்கு?

‘’சிவசிவா, அவர் போயிட்டதே நல்லது. இதையெல்லாம் தாங்கிக்க நா ஒருத்தி

இருக்கறது போறாதா?’’

‘’இப்ப இதை என்ன பண்றது?’’ கூடத்திலிருந்து காமுவின் ஒப்பாரி கேட்டது.

வெண்கலப்பானை இன்னும் சுட்டது அதை சிரம்பஃ பட்டு பாட்டி நிமிர்த்தினாள்.

கொஞ்சம் கொஞ்சமாய் சோற்றுப் பருக்கைகளை அதில் போட்டாள். கை

அசந்து போயிற்று.’’ எத்தனை பேருக்கு சாப்பாடு போட்டிருப்பேன்.! ஏண்டி, இப்படி அன்னத்தை வீணாக்குவது அடுக்குமா’’ என்று முணுமணுத்துக் கொண்டாள். ஒரு வழியாக அதை நிரப்பியதும் பாட்டி எழுந்திருந்தாள். கம்பை

பிடித்துக் கொண்டு நடக்கையில் மிகவும் தள்ளாமையாக இருந்த்து.. உடம்பு கனத்து பெரிய பாரத்தை இழுப்பது போல் இருந்த்து. கொல்லைக் குழாயில் கை கழுவி, வாயைக் கொப்பளித்துவிட்டு கூடத்துப் பக்கம் செல்ல பாட்டி தயங்கி நின்றாள். அந்தக் குழந்தை காமுவை சமாதானப் படுத்த வேண்டாமோ

பாட்டி வேறு யோசனையில்லாமல் கூடத்துக்குள் காலடி வைத்தாள். கூடம்

நிரம்பிப் போயிருந்த்து. அதுக்குள் தெருப் பொம்மனாட்டிகள்ளாம் வந்துட்டாளா என்ன?’’

பாட்டியின் பார்வையில் யாரும் படவில்லை. புடவைத் தலைப்பால் முகத்தை மூடிக் கொண்டு மற்ற பெண்களின் பிடிக்கு அடங்காமல் புலம்பி

அழுதுகொண்டிருந்த காமுவை நோக்கி மெல்ல நடந்து அவளெதிரில் லேசாககஃ குனிந்து மெல்லிய நடுங்கும் குரலில் ‘’அம்மா, காமு, என்னடி

குழந்தே, இது அநியாயம்?’’ என்றாள்.

காமு , முகத்திலிருந்த கையை விலக்கி சுரீரென்று பாட்டியைப் பார்த்தாள்.

துக்கத்தோட க்ரோதமும்னா தெரியறது பார்வையிலே! இவ பார்வதியா, காமுவா??

ரத்த அணுக்கள் எல்லாம் உறைந்து போயிற்று நாகுப்பாட்டிக்கு.

குபீரென்று காமு பாய்ந்து எழுந்தாள். ‘’அம்மா சொல்ரது சரிதான். நம்மளைப்

பாவியாக்குறவ இந்தக் கிழவி! இவ ஒரு சூனியக்காரி.! வீட்டிலே இருக்கிற அத்தனை பேரையும் அனுப்பிச்சுட்டுத்தான் இவ நகரப் போறா இங்கேந்து!’’

காமுவா? காமுவா இப்படிப் பேசறா? நாகுப்பாட்டிக்குக் குலை நடுங்கிற்று.

சுற்றிலும் இருந்தவர்கள் எல்லார் பார்வையும் குற்றம் சாட்டுகிறார் போல்

இருந்த்து.

என்னடி பண்ண்டஃடும்?’’ என்றாள் பலவீனமாக,’’என்னைக் கொண்டு போக

மாட்டேங்கறானே?’’

எப்படிப் போவான்?’’ என்று பார்வதி சீறினாள்.’’ இரும்புன்னா உன் மனசு, ராஜா

மாதிரி இருந்த பிள்ளை போயி, மாப்பிள்ளை போயி , பின்னாலே பொண்ணு,பேரன்,-பேத்தி இப்பக் பொள்ளுப் பேத்தி எல்லோரும் கிளம்பிப்

போறதை ஜெரிச்சிண்டு நீ உட்கார்ந்திருக்கியே, நீ மனுஷிதானா?’’

அவள் சொல்வதையெல்லாம் அங்கீகரிப்பதைப் போல ஒரு மௌனம் அங்கே

பரவியிருந்த்து.

‘’நா என்னடி பண்ண்டஃடும்?’’ என்று பார்வதி பழித்துக் காட்டினாள்.

‘’போ, குளத்திலேயோ குட்டையிலேயோ விழு.’’

‘’என்ன மாமி நீங்க! இது கண்றாவி துக்கம் தான், ஆனா கிழவி என்ன பண்ணுவா, பாவம்?’’

உனக்குத் தெரியாது சரோஜா, என் வயிறு எரியறது! என்று பார்வதி அழுகையுடன் வெடித்தாள். ‘’பொசுக்கு பொசுக்குன்னு ஒவ்வொருத்தரா போறதும், பழி வாங்கற மாதிரி இந்தக் கிழம் உட்கார்ந்திருக்கிறதும்’’.

பக பகவென்று பார்வதியிடமிருந்து அழுகை வெடித்த்து.

‘’பாட்டி, நீங்க உள்ளே போங்கோ!’’ என்றாள் எவளோ ஒருத்தி சமயாசிதமாக.

நாகுப்பாட்டி தலையைக் குனிந்தபடி நகர்ந்தாள். தன் அறை வந்த்தும் மௌனமாக நார்மடி விரிப்பு விரித்திருந்த தன் இடத்தில் அமர்ந்தாள்.

காமுவின் எப்பவும் குளிர்ந்த முகம் விகாரமாகிப்போன விந்தையும் வார்த்தை

களும் நினைவில் நின்று குழப்பின.

நீயும், வேண்டாண்டி, விட்டுட்றீ’’---

நாகுப்பாட்டி மெல்ல எழுந்தாள். பின் பக்கமாக ஓசைப் படாமல் சுவரைப் பிடித்தபடி நடந்து சமயல் அறையை அடந்தாள். இன்னும் அவளுடைய

எச்சில் இலையும், வெண்கலப் பானையும் அப்படியே இருந்தன. பாட்டி

நிதானமாக அமர்ந்து அன்னத்தை வாயில் திணிக்க ஆரம்பித்தாள்.---

கொல்லைப்பக்கம் வந்த சரோஜா அரக்கப் பரக்க கூடத்திற்கு ஓடினாள்.

‘’ஜய்ய்யஃயோ மாமி, அந்தக் கிழவிக்கு மூளை கலங்கித்தான் போச்சு.!

இழவு வீடுன்னு தெரியும். வெங்கலப் பானையோடு எடுத்து இலையிலே

வெச்சுண்டு சோத்தை அள்ளி அள்ளிப் போட்டுக்கறா, சமயற்கட்டிலே

உட்கார்ந்திண்டு---!’’

‘’இது என்ன கண்றாவி?’’

சாதாரண மனுஷி இல்லைடி அவ!

நூறு வயசுக்கிழவி எப்படி வெண்கலப் பானையைத் தூக்கினா?’’

அதான் பாரேன் அதிசயத்தை!’’

பார்வதி விருக்கென்று ஆங்காரத்துடன் எழுந்தாள்.

‘’இன்னிக்கு விடப்போரதில்லே! என் பிராணனை எடுக்கத்தான் இருக்கு கிழம்-

அவளைத் தொடர்ந்து மற்ற கெண்டளும் வேடிக்கை பார்க்கச் சென்றார்கள்

வெண்கலப்பானை உருண்ட நிலையில் கிடந்தது.இன்னம் பாதிக்குமேல் அன்னம் இருந்த்து நாகுப் பாட்டியின் வாயிலும் தொண்டையிலும் திணிக்கப்பட்ட மீதிப்பாதி அவள் மூச்சை அடைத்திருந்த்து.

சுவரில் சாய்ந்திருந்த பாட்டியின் உடலை மெல்லத் தரையில் கிடத்திய சரோஜா

‘’இது மூளைக் கலக்கம்தான் வேற ஒண்ணும் இல்லை’’ என்றாள்

**********000****************

‘’

’’

Sunday, November 27, 2011

வயதானோர் அதிகரிக்கும் அபாயம்

‘’’இன்னும் நீங்க குளிக்கப் போகல்லியா?’’ அறை வாசற்படியிலிருந்து அதட்டலான குரல் வந்த்து.

அறையில் சுவர் ஓரமாகப் பழைய நார்மடிப் புடவை

ஒன்றை விரித்து சுருண்டு படுத்திருந்த நாகுப்பாட்டி

குரல் வந்த திசையைப் பார்த்தாள். பார்வதியின்

ஸ்தூல சரீரம் நிழற் படமாகத் தெரிந்த்து. எழுந்திருக்

காமலேயே ‘’இதோ போகிறேன்’’ என்றாள். ‘’கிணத்தடி

ஒழிஞ்சிருக்கா?’’

‘’எல்லாம் ஒழிஞ்சிருக்கு.நீங்க எழந்திருங்கோ’’ என்றாள்

பார்வதி சிடுசிடுப்புடன்.

‘’ அப்ப சரி’’என்று நாகுப்பாட்டி எழுந்தாள். தலைமாட்டிற்கு

வைத்திருந்த துண்டை எடுத்துக் கொண்டு சுவரோரமாய் இருந்த கைத்

தடியுடன் நடந்தாள்.

‘’என்ன மணி ஆறது’’

‘’ஒன்பதரை’’

‘’ஒன்பதரைதானே?’’

‘’ என்ன தானே? நீங்க ஒண்ணரை நாழி குளிச்சி,

அதுக்கப்புறம் ஜபதபம்ன்னு சொன்னதையே சொல்லிண்டு சுத்திச்

சுத்தி சாப்பிட வரதுக்குள்ளாற பன்னண்டு மணியாயிடறது. ஒரு

நாளைப்போல. இன்னிக்கு எனக்கும், காமுக்கும் கடைக்குப் போகணும்

சாப்பாட்டுக் கடை ஆனவுடனே!’’

‘’சரிதான்,. என்ன வாங்கணும்?’’

‘’இந்தக் கிழத்திற்கு எல்லாம் சொல்லியாகணும்’’

‘’என்னவோ வாங்கணும். பெண்ணைப் பார்க்க நாளைக்கு அவ பம்பாய்க்குக்

கிளம்பறா; எவ்வளவோ இருக்கும் வாங்க.. நீங்க தினம் போல நேரமாக்கி

னேள்னா...’’

‘’ இல்லேடி இல்லே. இதோ போறேன்.. நேரமாக்க மாட்டேன்.’’

நாகுப்பாட்டி மெல்ல கூடத்தைத் தாண்டி நடையைக் கடந்து கொல்லைப் புரத்துக்கு வந்தாள்.

கிணற்றடியில் பட்டம்மா துணிகளை அலசிக் கொண்டிருந்தாள்.

‘’ஏண்டி பட்டம்மா, இன்னும் வேலை முடியல்லே?கிணத்தடி ஒழிஞ்சிருக்குன்னாளே பார்வதி?’’

‘’ ஏய் பட்டு, சீக்கிரம் அங்கே இடத்தை காலி பண்ணு! சொன்னதும் இன்னிக்கு எழுந்துடுத்து கிழம். நல்ல வேளையா குளிக்கட்டும். எனக்கு வெளியிலே போற வேலையிருக்கு’’

‘’இதோ ஆச்சும்மா! ஒரு நிமிஷம் கழுவி விட்டுடறேன். சோப்புத் தண்ணி

இருக்கில்லே? எங்கேயாவது வழுக்கி விழுந்து மண்டையைப் போட்டாங்கன்னா’’ ;

‘’போட்டா ஒண்ணும் மோசமில்லே. வேற தினுசா அது போகும்னு

தோணல்லே.’’பட்டம்மாள் சட்டென்று நிமிர்ந்து நாகுப்பாட்டியைப் பார்த்தாள்.

பார்வதியின் பேச்சு காதிலேயே விழாதது போல் பாட்டி நின்றிருந்தாள்.

‘’ஆச்சா பட்டம்மா?’’ என்றாள் இயல்பாக..

தென்னந் துடைப்பத்தால் பரபரவென்று நீரைத் தள்ளிவிட்டு, ‘’ஆச்சு! என்று நிமிர்ந்து பாட்டிக்காக ஒதுங்கி நின்றாள் பட்டு..

பாட்டி சர்வ ஜாக்கிரதையாக நடந்து கிணற்றடியை அடைந்தாள்.

‘’அவளுடைய அலுப்பு அவளுக்கு!’’ என்று மெல்ல முணுமணுத்தாள்.

‘’நானும் முப்பது வருஷமாக காத்திருக்கேண்டி பட்டம்மா. எடுத்துண்டு போக

மாட்டேங்கறானே எமன்?’’

‘’அவன் லிஸ்டிலே உங்க பேர் விட்டுப் போயிருக்கும்’’

புடவையை இளக்கிக் கொண்டு நிமிர்ந்தபோது பேத்தி காமு நின்றிருந்தாள்.

பார்வதியின் கடுகடுப்பு இவளிடம் இல்லை.

‘’உட்காருங்கோ தண்ணி ஊத்தறேன்!’’

பாட்டியின் முகத்தில் மெலிதான பிரசன்னம் படர்ந்த்து. கீழே குந்தியபடி ‘’ஊத்து’’ என்றாள்.

கிணற்றிலிலிருந்து நீரை இழுத்துத் தலையில் காமு ஊற்றுகையில் ‘’பெண்ணைப் பார்க்க போயிண்டிருக்கியா?’’ என்றாள் பாட்டி இதமாக.

ஆமாம் பாட்டி. நாளைக்குக் கிளம்பறேன். இடைச்சன் பிரசவத்திற்கு

எங்கிட்டே வந்துடுன்னு சொன்னேன். வர சௌகரியப்படாதுன்னு பம்பாயிலேயே தங்கிட்டாளே. குழந்தை பிறந்து மூணு மாசமாறது.,என்னாலேயும் போக முடியல்லே.!’’

‘’ நீ எப்படிப் போவே? அப்பத்தான் உன் ஆம்படையான் காலை ஒடிச்சிண்டு

படுத்திருந்தானே!’’

‘’பாட்டியம்மாவுக்கு எல்லாம் எப்படி நினைவிருக்கு. பாத்தீங்களா?’’

‘’காமு, கிழத்துக்கிட்ட பேச்சுக் கொடுத்திண்டு நின்னியானா நாம்ப இன்னிக்கு

கடைக்குப் போனாப்பலேதான்!’’

‘’போறுமா, பாட்டி?’’ என்றாள் காமு.

‘’ போறும்டியம்மா. மடிப்புடவையை கொண்டு வந்து வச்சிருக்கியா?’’

‘’வெச்சிருக்கேன்’’

கம்பில் அவள் நீட்டிய நார்மடிப்புடவையை உருவிக் கொண்டு பாட்டி நிதானமாகப் புடவையை ஜாதிக்கட்டாக உடுத்துகையில் தொலைவிலிருந்து

பட்டம்மாள் சொன்னாள்.

‘’நாளைக்கி அம்பட்டனைக் கூட்டியாரவாம்மா?’’

ஆமாண்டி, நானே சொல்லணும்னு நினைச்சேன். படுத்தா முள் முள்ளா குத்தறது அரிச்சுப் பிடுங்கறது. நாள், கிழமை, அமாவாசைன்னு ஒத்திப் போட்டாச்சு’’.

பாட்டி, உங்க ஜபத்தை முடியுங்கோ, வாங்கோ!’’

‘’இதோ வரேண்டி’’ என்று முணுமுணுத்தபடி பாட்டி நகர்ந்தாள். கொல்லை

முற்றத்து வெயிலிலிருந்து உள் நடைக்கு வந்த்தும் இருட்டாக இருந்த்து.

தட்டுத்தடுமாறி சுவரில் இருந்த மின்விளக்கு சுவிட்சைத் தட்டி பூஜை

அறைக்கு பாட்டி சென்றாள்.

இந்தப் பட்டணத்து குச்சுவீடு இன்னும் பழக்கமாகவில்லே. இவர்

இருக்கிற வரைக்கும் கிராமத்து நாலுகட்டு வீட்டிலே கால் வீசி நடந்த பழக்கம்தான் நினைவிலே இருக்கு பெரிய மிராசு அரண்மணைன்னே பேரு.

எல்லா கட்டிலேயும் வெளிச்சத்துக்குப் பஞ்சமில்லே. இப்படிப் பகல் வேளையிலே கூட விளக்கைப் போடும்படி இருக்காது. அப்பல்லாம் வேற

காலம்.ராணி மாதிரி வளைய வந்த காலம்.இந்தப் பார்வதி எதிர நிக்கவே

பயப்படுவாளே! இவர் மகாராஜனா முன்னாடி கிளம்பிப் போயிட்டார். மரியாதையைக் காப்பாத்திண்டு....................

பூஜை அறைக்குள் சென்று மேடைமேல் இருந்த சம்படத்திலிருந்து

சுருங்கிய மெல்லிய விரல்களால் விபூதியை எடுத்து நெற்றியில் பூசிக் கொள்ளும்போது-

‘’

‘’எனக்கின்னும் வேளை வரல்லியே!.!’’என்றாள்.

மணையில் அமர்ந்து சுக்லாம் பரதரம் குட்டிக் கொண்டதும் மேற்கொண்டு

எந்த அட்சரமும் நினைவுக்கு வரவில்லை.

‘’அவன் லிஸ்டிலே உங்க பெயர் விட்டுப் போயிருக்கும்.’’

அப்படித்தான் இருக்கணும். எமன் வாசலுக்கு வராம இல்லே. காஞ்ச சருகா நா வாசல்லேயே அவனுக்காக உட்கார்ந்திருக்கிறது அவன் கண்ணுக்குப் படல்லே. கனியாத பழத்தையும் , பூவையும், பிஞ்சையும் உள்ளேர்ந்து வாரிண்டு போயிண்டிருக்கான். என் வயித்தெரிச்சலைக் கொட்ட எத்தனை பேர்? சுப்பிணியிலிருந்து ஆரம்பிச்சது.

எப்படி இருப்பான் சுப்பிணி. வீட்டுக்குத் தலைப்பிள்ளையா லட்சணமா, ராஜா மாதிரி வளைய வருவானே. வக்கீலா ரெண்டு கையாலேயும்

வாரிக் கொட்டினானே.! புருஷனைப் பார்த்துப் பார்த்து பார்வதியே மயங்கி நிப்பா. அத்தனை பெருமையும் கோர்ட்டுக் கச்சேரியிலே வாதாடிண்டிருக்கச்சையே பொசுக்குனு மாரடைப்பிலே அவிஞ்சு போச்சு..

அந்த அதிர்ச்சியிலே இவரும் போய்ச் சேர்ந்தார். நான்தான் இடிச்ச புளியாட்டம்

நகராம உட்கார்ந்திருக்கேன். வரிசையா பாலா,மீனு,வெங்கிட்டு,எச்சு ரமேஷ்-

எல்லாருமே நன்னாயிருக்கிற உடம்போடு எச்சரிக்கையேஇல்லாம ஏமாத்திட்டுக் கிளம்பிப் போறதைப் பார்த்திண்டு,மூலையிலே,வாசத்திண்ணையிலே பாவியா உட்கார்ந்திருக்கேன்.

ஒவ்வோரு தடவையும் பாடையைத் தூக்கிண்டு கிளம்பறதைப் பார்க்கும் போது மனசு பதறிப் போறது. ஜயோ, நான்னா அதிலே இருக்கணும்னு துடிச்

சுப் போறது.

பார்த்திண்டு உட்காரறதைத் தவிற ஒண்ணும் செய்ய முடியல்லே.

கண் பார்வை இன்னும் நன்னாயிருக்கு. காது நன்னா கேட்கறது எல்லாத்தையும் பாரு, எல்லார் பேச்சையும் கேளுன்னு யாரோ சபிச்சாப்பலே. மனசுதான் சுரணையத்துப் போச்சு. இல்லேன்னா சுப்பிணி செத்த அன்னிக்கோ

அவன் பிள்ளை ரமேஷ் செத்த அன்னிக்கோ உசிரு விர்ருண்ணு கிளம்பியிருக்கணுமே. பார்வதி பேசின பேச்சுக்கு----

‘’பாட்டி, ஜபத்தை முடிச்சாச்சா?’’

‘’ யாருக்காக கிழம் ஜபத்தைப் பண்றதோ தெரியல்லே. அதோட

வயசுதான் நீண்டுண்டு போரதே தவிர, குடும்பத்துக்கு எந்தப் பலனையும் காணல்லே.’’

‘’சும்மா இரும்மா, பாவம் . தொண்ணூத்தெட்டு வயசுலே யாரையும் தொந்தரவு செய்யாம இந்த மட்டும் கெட்டி முட்டியா இருக்காளே

பாட்டி’’

‘’அதாலே யாருக்கு என்னடி பிரயோசனம்? இத்தனை வயசு

பூமிக்கு பாரமா உட்கார்ந்து என்ன லாபம்? கட்டக் கடுங்காளை வயசுலே நா

பிள்ளையை வாரிக் கொடுத்த வயத்தெரிச்சலை எங்கே கொட்டடஃடும்?

இது போயிருக்கலாமோல்லியோ?’’

‘’அதுக்கென்னம்மா செய்ய முடியும்?’’

அப்படிச் சொல்லாதே! பாபாத்மா இது! இது உசிரோட இருக்

கிறவரை எல்லாரும் வயத்திலே நெருப்பைக் கட்டிண்டு உட்கார்ந்திருக்கணும்’’

‘’ போம்மா, இதையெல்லாம் நம்ப மாட்டேன்.’’

நாகுப் பாட்டி எழுந்திருந்தாள். நடையின் விளக்கை யாரோ அணைத்திருந்தார்கள். இருட்டுக்குப் பழக்கப் பட்டுப் போன பார்வையுடன் பாட்டி மெல்ல நடந்து சமையலரையை எட்டிப் பார்த்தாள். காமு ஏதோ வேலையாய் இருந்தாள்.

‘’ வாங்கோ, உங்களுக்கு இலை போடறேன்’’ என்றாள்

‘’ நீ சாப்பிடல்லையா?’’

‘’ நானும் அம்மாவும் சேர்ந்து சாப்பிடரோம்’’

‘’ பார்வதி எங்கே காணும்?’’

‘’ வாசல்லே கறிகாய்க் காரன் வந்திருக்கான்’’

‘’ சரிதான்’’

இலையில் விழுந்த பதார்த்தங்களைப் பாட்டி நிதானமாக, நாசூக்காகச் சாப்பிட ஆரம்பித்தாள்.

‘’ வாழைத்தண்டு மோர்க்கூட்டா? நீயா

சமைச்சே, காமு?

‘’’ஆமாம் பாட்டி,எப்படியிருக்கு?’’

அமிர்தமாயிருக்கு’’

சாப்பிடறதெல்லாம் அமிர்தமாத்தான் போயிண்டிருக்கணும் உங்களுக்கு’’ என்றபடி பார்வதி உள்ளே நுழைந்து கறிகாய்க் கூடையை மூலையில் வைத்தாள். அம்மாவும் பெண்ணும் ஒருவரை

யொருவர் பாஃத்து நமட்டுச் சிரிப்புச் சிரித்தார்கள்.

நாகுப் பாட்டி அதைக் கவனிக்காமல் வாழைத்தண்டுக் கறியை விரல் நுனியால் நசுக்கி சாதஃதுடன் கலந்து வாயில் போட்டுக் கொண்டாள். வெளிய

றையில் இருந்த டெலிபோன் ஒலிக்கிறார் போல் இருந்த்து.

காமு அலுப்புடன் எழுந்தாள்.’’ இதோட மூணு தடவை அடிச்சு அடிச்சு எடுக்கறதுக்குள்ளே நின்னு போறது!’’

‘’பம்பாயிலிருந்து பத்மா பண்றாளோ என்னவோ! வெளியூர்லேர்ந்து வரதெல்லாம் லேசிலே கிடைக்காது’’

பேசியபடியே வட்டிலில் சாதஃதை எடுத்து வந்த பார்வதியிடம்

‘’கழக்கோடி அளவு போட்டு மோர் விடு’’ என்றாள் பாட்டி.

பறிமாரியபடி பார்வதி கூடத்துப் பக்கம் குரல் கொடுத்தாள்.

பத்மாவாயிருந்தா, இங்கேர்ந்து என்ன சாமான் வேணும்னு ஞாபகமாக் கேளு.!’’

மோரைவிட்டுப் பிசைகையில் காமுவின் உயர்ந்த குரல் கூடத்திலிருந்து

வெடித்த்து.

.

Saturday, November 26, 2011

வயதானோர் அதிகரிக்கும் அபாயம்

உலக ம்க்கள் தொகை அக்டோபர் 31ம்தேதி700 கோடியை எட்டியுள்ளது. இது ஒரு பிரச்சினை என்று மக்கள் நினைத்துக்

கொண்டிருக்க ,இன்னொருபுரம் வயதானோரின் எண்ணிக்கை

அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உலக அளவில் குழந்தை பிறப்பு விகிதம் குறையும்

அதே நேரத்தில், மக்களின் ஆயுட்காலம் அதிகரிப்பதால்

மக்கள் தொகை மேலும் அதிகரிக்கிறது..நவீன மருத்துவம்,

உணவு முறையில் முன்னேற்றம், உணவுக் கட்டுப்பாடு,

பொருளாதார உயர்வு ஆகியவை காரணமாக மனிதனின்

வாழ்க்கைத்தரம் உயர்ந்து ஆயுட்காலம் அதிகரிக்கிறது. கறுவு

றுதல் விகிதம் குறைவதால் பெண்களுக்கு ,கல்வி மற்றும்

வேலை வாய்ப்பில் சாதிக்க முடிகிறது. இதனால் உலகம் வளம்

பெறுகிறது.

அமெரிக்காவின் ‘’சோஷியல் செக்யூரிட்டி’’யின் கடந்த

சில சென்சஸ் விவரங்களின்படி ,60முதல்64வயதுள்ள மக்களின்

எண்ணிக்கை, 1 கோடியே 10 லட்சத்திலிருந்து 1கோடியே 70 லட்

சமாக அதிகரித்துள்ளது. 1935ல் அமெரிக்கர்களின் ஆயுட்காலம்

62 ஆக இருந்த்து.இது தற்போது 78 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கறுவுறுதல் விகிதம் 2..68 ஆக இருக்கிறது. இது

உலகசராசரியைவிட(2.. 1) அதிகம். அதே நேரம் ,இந்தியாவில் 1960ல் சராசரி ஆயுட்காலம் 42 ஆக இருந்த்து. இப்போது இது 64.1 ஆக அதிகரித்துள்ளது. இது போன்ற காரணங்களால் எதிர் காலத்தில் வயதானோர் எண்ணிக்கை அதிகாரித்து, இளைஞர்களின் எண்ணிக்கை குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

(தினமலர்-6-11-11)

மேற்கண்ட செய்தியைப் படித்தவுடன் ஏதோ அபாய

அறிவிப்பைக் கண்டதுபோல்தான் இருக்கும். ஆனால் பல நூற்றாண்டு காலமாக மிகுந்த நாகரீகத்தோடு வாழ்ந்துவரும் நம்

இந்தியத்திருநாட்டிற்கு இது பெரிய அபாயமா? நம் முன்னோர்கள்

இந்த விவரம் அறியாதவர்களா? ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும் பொழுது இரண்டு கைகளுடன்தான் பிறக்கின்றன. அவற்றிற்குத் தேவையான வாழ்க்கை ஆதாரங்களை அவை ஏற்படுத்திக் கொள்ளும். அதற்குத் தேவையான சூழலை நாம்

உருவாக்கிக் கொடுத்தால் போதும். .அல்லது உள்ள சூழலைக்

கெடுக்காமல் இருந்தால் போதும்.

வேலைசெய்ய இயலாத வயதானோர் எண்ணிக்கை

அதிகரிக்கின்றதாம். அவர்கள் தமக்குரிய கடமைகள முடித்து

விட்டுத்தானே முதியோர்களாக ஆகியிருக்கிறார்கள்.. அவர்களைப்

பராமரிப்பது இளையோரின் கடமை இல்லையா?(அல்லது மேல்

நாடுகளில் இருப்பது போல் அரசின் கடமை இல்லையா?) அதறகான திட்டங்களைத் தீட்டி நிறைவேற்றுவதைவிட்டு,

அபாயமணி அடிப்பது முறையா?

நம் பாரதநாட்டின் பண்பாட்டின்படி, தனிநபர்களின்

முதன்மையான ;’’ஆயுள்காப்பீடு’’ என்பது அவர்களின் குழந்தைகள்தான். பெற்றோர் உ.ழைத்துப் பாடுபட்டு தம் மக்களைப் பராமரித்து, உலக வாழ்வியலைக் கற்பித்து (அதாவது

படிக்கவைத்து,சம்பாதிக்க வைத்து)ஆளாக்குவது பின்னால் அந்தக் குழந்தைகள் பெற்றோரைப் பார்த்துக் கொள்வார்கள்(எளிய மக்கள்

கூற்றுப்படி கஞ்சி ஊற்றுவார்கள்) என்ற நம்பிக்கையோடுதான்..

இந்த வாழ்க்கைமுறை எந்தமேல்நாடுகளிலும் இல்லாமல் நம்

பாரதநாட்டில்’’ தர்ம்ம்’’ என்ற பெயரில் இயங்கி வருகின்றது.

எனவே இளைஞர்களை ,தறிகெட்டுப் போகாமல் வழிப் படுத்தி, நமது அறநெறிகளைத் தீவிரமாக்கஃ கற்பித்து, இதற்குத் தோதான சட்டங்களை உருவாக்கினால்,அந்தந்தக் குடும்ப இளையோரே

முதியோரைக் கவனித்துக் கொள்ளும்படி செய்ய வேண்டும்..

தம் பெற்றொர்களும், முதியநிலையில்,’’’’ தம் குழந்தைகளே’’

என்று அவர்களை உணரச் செய்ய வேண்டும்.

ஆனால் பாரம்பரியமாக நல்ல வழக்கங்களைக்

கடைபிடித்து வரும் நமது குடும்பங்களே வயதானவர்களை எப்படி

அவமரியாதை செய்கிறார்கள் என்று நடப்பைக் கூறும் குடும்பக் கதைகள் சில எழுத்தாளர்கள் மூலம் நமக்குக் கிடைக்கின்றன..

பிரபல எழுத்தாளர் சகோதரி வாசந்தி அவர்களின் இந்தக்கதை

என் மனதை மிகவும் பாதித்து அதிர்ச்சியளித்த்து.. எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு இந்தக் கதையில் வரும் மாந்தர்களே எடுத்துக் காட்டு..

இனி ‘’பயணம்’’ என்ற அந்தக் கதையைப் பார்ப்போமா? (நன்றி-வாசந்தி சிறுகதைகள்-வானதி

பதிப்பகம்)

Monday, November 14, 2011

உண்மை(யாகிப் போன) கதை-5

புனரபி ஜன்னம்

புனரபி மரணம்

புனரபி ஜன்னீ

ஜடரே சயனம்

இதிசம்சாரே பஹு துஸ்தாரே

க்ருபையா பாரே பாகிமுராரே

க்ருபையா பாரே என்னும்போது மீண்டும் கண்ணில்

நீர் நிறைந்தது. இதை இனிமேல் பாடக்கூடாது என்று

நினைத்துக் கொண்டேன்.ஆதிசங்கரருக்கு ஜனனம்,

மரணம்,இரண்டைப் பற்றிதான் தெரியும். உயிர் இருந்தும்

நிகழும் மரணங்களைப் பற்றித் தெரியாது.அது ஏற்படுத்தும்

குழப்பங்களைப் பற்றி தெரியாது. குழப்பங்கள் ஏற்படுத்தும்

பீதிகளைப் பற்றித் தெரியாது.

புடவைக்குத் தகுந்த ரவிக்கை அணிவது அம்மா

வுக்கு முக்கியமாக இருந்த்து. பார்ப்பதற்கு அம்சமாக

இருப்பது கௌரவப் பிரச்சனையாக இருந்த்து.வீட்டில் ஒரு

சாமான் இல்லை என்று சொல்வது அகௌரவம் என்று

நினைத்தவள் , மண்டையே காலியாகி வள்ளியின் தயவில்

உயிர் வாழ்வது எப்படி இருக்கும் என்று இரண்டுவருஷம்

முன்பு வரை நாட்டு அரசியலைப் புட்டுப் புட்டு வைத்த

அம்மா நினைத்திருக்க மாட்டாள். நினைத்திருந்தால் என்ன

செய்திருப்பாள் என்று இப்போது யோசனை செய்வது முட்

டாள்தனம் என்று நான் நினைத்துக் கொண்டேன். இவையெல்லாம் தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட விஷயங்கள்

என்று சோர்வேற்பட்டது. நான் மீண்டும் அம்மாவிடம்

சென்ற போது வள்ளி சாப்பாடு கொடுக்கும் ஆயத்ததஃதில்

இருந்தாள்.

‘’ஆயா சாப்பிட மாட்டேங்குது’’ என்றாள்.

‘’சாப்பாட்டிலே உப்பு போட்டிருக்கமாட்டே’’

‘’ இல்லம்மா. போட்டிருக்கிறேன் சாப்பிட்டுப்

பாருங்க’’

நான் ஒரு ஸ்பூன் சாப்பிட்டுப் பார்த்தேன். சரியாகத்தான்

இருந்த்து.அதாவது உப்பிருந்த்து. ருசியில்லாத பத்தியச்

சாப்பாடு. நான் கொடுத்துப் பார்த்தேன். அம்மா துப்பினாள்.

சரி,இனிக்கு ஏதோ பிடிக்கல்லே போலிருக்கு.,விடு’’

என்றேன். அம்மா என்னைப் பார்த்த பார்வை என்னை

என்னவோ செய்தது. மருந்தையும் துப்பினாள்.

‘’ என்ன வள்ளி இது’’ என்றேன் குழப்பத்துடன்..

‘’ சில நாளைக்கு அப்படித்தான் துப்புது நாளைக்கு

சரியாகும். கவலைப்படாதீங்க. நீங்க சாப்பிட்டுப் படுங்க’’

என்றாள் வள்ளி.

மறுநாள் சரியாகவில்லை. அம்மா தொடர்ந்து

சாப்பாட்டையும் மறுத்தாள். மாலையில் நான் அம்மாவின்

எதிரில் நிற்கும்போது அம்மா என் பார்வையைத் தவிர்த்தாள்

வள்ளி அருகில் இல்லாதபோது அம்மாவின் கைகளைப் பிடித்து

நான் சுய இரக்கத்தில் கரைந்தேன்.

என்னை மன்னிச்சுக்கோ அம்மா. என்னைப் புரிஞ்சுக்கோ.

ஸாரிம்மா ஸாரி;’’

அம்மா திரும்பவே இல்லை.

.’’ டாக்டரைக்.கூப்பிடல்லியாம்மா? என்றாள் வள்ளி.

இதுக்கெல்லாம் ஒன்றும் செய்ய முடியாதுங்கராங்க

டாக்டர்.’’ என்று புளுகினேன். அதற்கு பிராயச்சித்தமாக அம்மாவின் கைகளைப் பிடித்தபடி ‘’ஸாரி’’ என்றேன்.

அம்மாவை சக்கர நாற்காலியில் உட்கார்த்த முடியாத அளவுக்கு

சோர்ந்து போனாள். நான் அலுவலகத்திற்கு லீவு போட்டேன்.

இரவும் பகலும் கண்அயராமல் அம்மாவின் அருகிலேயே

இருந்தேன். ஒரு ஸ்பூன் நீரையும் விழுங்க மறுத்தாள் அம்மா.

‘’ஆயா ரொம்ப புண்ணியம் பண்ணித்தான் உங்களைப்

பெத்திருக்கணும்.’’ என்றாள் வள்ளி.

அம்மாவின் மூச்சு மெல்ல அடங்குவதை சலனமில்லாமல் பார்த்தேன். அம்மா சாக வேண்டிய நேரம்

வந்தது. அதனாலேயே இறந்தாள் என்று நான் வேதாந்தம்

பேசினேன். அன்று நான் பேசியதை அம்மா நிச்சயம் கிரகித்துக்

கொண்டிருக்க மாட்டாள் என்று திரும்பத்திரும்ப,தினமும் தூக்கம்

வராத இரவு நேரத்தில் சமாதானப்படுத்திக் கொள்கிறேன்.

இப்பொழுதெல்லாம் ஏதாவது ஒரு உபாதைக்காக

டாக்டரிடம் செல்ல வேண்டியிருக்கிறது. கையில் ஒரு ஆவணத்தை எப்பவும் வைத்திருக்கிறேன். டாக்டரின் பார்வைக்கு, இது ஒரு ஆணை. ‘’தீரமுடியாத வியாதி எனக்கு

வந்துவிட்டால்,மூளை செயலிழந்துவிட்டால் எனக்கு எந்த சிகிச்

சையும் டாக்டர்கள் அளிக்க்கஃ கூடாது’’. டாக்டர்கள் அதைப்பார்த்து சிரிக்கிறார்கள். மீண்டும் மருத்துவ தர்மத்தைப் பற்றி கேசுகிறார்கள். ‘’இது என் ஆணை’’ என்ற கத்தலுக்கு

‘’சரிசரி’’ என்று அவசரமாக சமாதானப் படுத்துகிறார்கள்.

இன்றும் அப்படிக் கத்தினேன், ஒரு இதய அறுவை

சிகிச்சைக்காக அழைத்துச் செல்கிறார்கள். அம்மாவின் நினைவு வருகிறது. அம்மா அப்படித்தான் தியேட்டருக்குள் போனாள்.

வெளியில் வந்த போது காணாமல் போயிருந்தாள்.

டாக்டர், என்னை சாக விடுங்கள். எனக்கு சக்கர நாற்காலி

வேண்டாம்.-வள்ளி வேண்டாம்-மாக்ஸி வேண்டாம் வேண்டாம்

வேண் -------

******************************************************-.