Pages

Sunday, November 13, 2011

உண்மை(யாகிப் போன) கதை-4

டி.வி ஓசை நின்றிருந்த்தில் என்னுடைய குரல்

பலக்க ஒலித்த்து. நான் சட்டென்று சுயநினைவுக்கு

வந்தேன். வள்ளி ஓசைப்படாமல் வந்து நின்றிருந்நாள்

என்னுடைய பிரலாபங்களைக் கேட்டிருப்பாளோ என்று

எனக்குத் துணுக்குற்றது.

‘’ஆயாவைப்பற்றி கவலைப்பட்டு அழறீங்களா?’’

என்றாள்.

என்னைப் பத்திக் கவலைப்படுகிறேன் என்று

சொல்ல வெட்கமாக இருந்த்து. மிக கேவலமான

உணர்வுகளில் கரைந்து போனேன் என்று சொல்லக்

கூச்சமாக இருந்த்து.

‘’எப்படி இருந்தவங்க எப்படி ஆயிட்டாங்க!’’

என்று தலையைக் குனிந்து கொண்டு முணுமுணுத்தேன்.

‘’அதுக்கேன்ன செய்யறது?’’என்றாள் வள்ளி

சாதாரணமாக.’’ஒவ்வொத்தருக்கு ஒரு வியாதி வருது.

இவங்களைப் பாத்துக்க நீங்களாவது இருக்கீங்க. பாத்துக்க

நாதியில்லாம எத்தனை ஜனம் இருக்கு!’’

நான் எழுந்தேன். தலை அசாத்யமாக வலித்த்து.

‘’நா குளிச்சிட்டு வரேன். அப்புறம் அம்மாவுக்கு

சாப்பாடு போடலாம்.’’ என்று அம்மாவின் பக்கம் திரும்பாமல்

நடந்தேன். அலமாரி,மேஜை,ஸ்டூல் எல்லா இடங்களிலும்

மருந்துக் குப்பிகள். மாத்திரைப் பட்டைகள். ஒவ்வொரு

செக்கப்பின்போதும் புதிய மருந்துகள். பழசைவிட வீர்யமான

மாத்திரைகள். அமெரிக்காவிலிருந்து,இங்கிலாந்திலிருந்து

வரவழைக்கப்பட்ட மருந்துகள்.

‘’எதுக்கு டாக்டர் இத்தனை மருந்துகள்?’’

‘’மருத்துவ ரீதியா செய்ய முடிஞ்சதையெல்லாம்

செய்து பாத்துடணும்.. அதுதான் மருத்துவ தர்ம்மஃ’’

அவள் வயிற்றில் பிறந்த காரணத்தால் உன்

தர்ம்மஃ கூட என்று சொல்வதுபோல. மானுட தர்மம். இந்த

தர்மங்களையெல்லாம் ஒதுக்கிவிட்டு என் அம்மாவை கௌரவமாக என்று சொல்லத் தயக்கமாக இருந்த்து.

மருத்துவர்களிடமும் மருந்துகளிடமும் அம்மா படுக்கையில்

கழிக்கும் மலத்திடமும் வகையாக மாட்டிக் கொண்டதுபோல

நான் தடுமாறிப் போனேன். அதனால்தான் சூட்சுண அனிவு செத்துப்போன அம்மாவிடம் தயக்கமில்லாமல், தடுமாறாமல்

‘’நீ போயிடு’’ என்கிறேன். செத்துப் போயிடு.

அம்மாவின் குத்திட்ட பார்வை என்னைத் தொடர

நான் குளியலரைக்குச் சென்றேன். ஷவருக்கடியில் நின்ற

போது காலையில் அலுவலகத்தில் மாட்டியிருந்த கம்பீரக்

கவசம் பொலபொலவென்று உதிர்ந்த்து.ஆண்களும் பெண்களும்

கொறாமைப் படும் எக்சிகியூடிவ் வேலை.மேடம் மேடம் என்று

எட்டி நின்று மரியாதையுடன் கேசவைக்கும் பதவி.

கிராமத்துப் படிப்பறிவில்லாத பெண்கள் மார்பிலும்

வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுவதைப்போல அழத் தோன்றிற்று. அப்படித்தான் மனதிலிருக்கும் பாரமெல்லாம்

போக முடியும். சடசடவென்று குளிர்ந்த நீர் தலையிலிருந்து

பாதம்வரை வழிந்து மனத்தின் சூட்டையும் கண்ணின் நீரையும்

தணிக்கையில் தலையை உசுப்பிக்கொண்டு பெரிய குரலில்

பாடினேன்.

2 comments:

  1. பெண்கள் எவ்வளவு பெரியபதவியில் இருந்தாலும் வீட்டுக்கவலைகள் அவர்களை ஒரு வழி பண்ணீடும்தான். அதுவும் யாரானும் நோய்வாய்ப்பட்டிருந்தாலோ கேக்கவே வாண்டாம்.

    ReplyDelete
  2. சரியாகச் சொன்னீர்கள்.எந்தப்பதவி வகித்தாலும்
    குடும்பத்தைக் கட்டிக் காத்து நடத்திச் செல்வது
    பெண்கள்தான்.இந்த வழிவழியாக வரும் இந்தியப்
    பண்பாடு தொடரவேண்டும் என்பதே நம் பிரார்த்தனை.
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்மா.

    ReplyDelete