Pages

Thursday, December 29, 2011

தேவன்- மனிதரில் பலவிதம்--5

a‘’ஒப்புக் கொண்டுவிட்டாயா?’’ என்று அவசரமாககஃ கேட்டான் வேதாந்தம்
‘’’ஆஹா! நமக்கு இது போன்ற ஒரு சான்ஸ் கிடைத்தால் எத்தனை சௌக்யம்!
என்று அவன் மனம் எண்ணி மிக ஏங்கியது.

சீதாராமன் ஓர் அசட்டுச் சிரிப்பு சிரித்தான் ‘’எல்லாம் சரியாக இருந்தது. என்
துரதிருஷ்டம் ஒன்று கூடக்கூட இருக்கிறதே. எங்கே போனாலும் விடாமல்
அதுவும் தொடர்ந்தல்லவா வருகிறது. டியூஷன் சொல்லித் தருகிறவன் ஸ்ரீவைஷ்ணவனாக இருக்கவேண்டும் என்று சொல்லிவிட்டார் சந்தானம் அய்யங்கார்! பேசாமல் ஓடி வந்துவிட்டேன்.!’’

‘’ரொம்ப வைதீகம் போல்இருக்கிறது’’
‘’ஏன் கேடகிறே! நான் போகிறபோதெல்லாம் வேதபுத்தகம் கையிலே. என்னையே புருஷசூகதம் சொல்லச்சொல்லி பரீடசை செயது விடுவாரோ
என்று பயமாக்கஃ கூட இருந்தது.’’

வேதாந்தம் சிரித்தான். இப்போது அவன் சிரிப்பிலும் ஒரு மலர்ச்சி’ இருந்தது.
அந்த மலர்ச்சியில் நம்பிக்கையின் நாதம் தொனித்தது. செல்லம் அனவரதமும்
வேண்டிக் கொண்ட அந்த மாருதிதான் இந்தச் சீதாராமனை அவன் வழி துரத்தி
வைத்து இத்தனை சமாச்சாரங்களையும் சொல்லும்படி செயதிருப்பாரோ? இல்லாவிட்டால் அவனுக்கு எக்ஸ்டெனில் சந்தானம் அய்யங்காரைப் பற்றி த்
தெரிந்திருக்க சந்தர்ப்பம் ஏது? நீ போய் முயறசி செயது பார்!’’’ எனபதுதான்
பெருமாளின் ஆக்ஞையோ! மெய்மறந்து நின்றான் வேதாந்தம்.
இப்படி வாழ்க்கையில் எத்தனை சந்தர்பங்கள் நாம் அறியாமல் ஏறபட்டுவிடுகின்றன.. அறபமாகத் தோன்றும் காரியங்கள் பெரிய பலனகளுக்கு
அஸ்திவாரமாக அல்லவோ அமைந்தவிடுகின்றன.?

சீதாராமன் அவன் முதுகில் தட்டினான். ‘’உனக்கென்னடா, ஒரு கவலை இல்லை.! யாரானும் அழகு ராணியை நினைத்துக் கொண்டிருப்பாய் நம் மாதிரி
வயிற்றுப் பாட்டுக் கவலை கிடையாதே! எங்க அப்பா படிக்க வைத்துவிட்டார்.
இனிமேலே அவருக்குச் சாப்பாடு போடவேடிய பொறுப்பு நம்முடையது. நான்
வரேண்டா! போய் தேவை விளம்பரங்களைப் புரட்டினாலும் புண்ணியம் உண்டு.’’

போய்விட்டான் சீதாராமன். ஏ பைத்தியக்கார மனிதனே1 நீ பிற்ரைப்பற்றி
எவ்வளவு தவறாக நினைக்கிறாய்? நீ ஒருவன்தான் கவலையுள்ளவன் போலவும்,பொறுப்பு உள்ளவன் போலவும் எண்ணி, பிறர் நிச்சிந்தையாக இருப்பதாக முடிவு செய்கிறாய்.! என்ன ஏமாற்றம் அது.! சிலசமயம் நான்ஒருவனே மேதாவி என்று இருமாப்புக் கொள்கிறாய்1 என்ன முட்டாள்தனம்.1 ஒரு சமயம்
நம் சகதியே சக்தி என்று மெச்சிக் கொள்கிறாய்! என்ன அசட்டுத் தனம்!’
வேதாந்தம் நடந்துகொண்டேயிருந்தான் எக்ஸ்டென்ஷனை நோக்கி.

(அமரர் தேவன்—மிஸ்டர் வேதாந்தம்)

4 comments:

 1. என்னது இது டியூஷன் சொல்லிக்கொடுப்பவரும் வைஷ்னவனாக இருக்கனும்னெல்லாம் கண்டிஷனா. கேக்கவே வேடிக்கையா இருக்கு. ஆனா அந்தகாலகட்டத்தியும் மனசில் நினைச்சு பார்க்கனுமே.

  ReplyDelete
 2. பொதுவாக முன்பெல்லாம் அய்யங்கார்கள் மிகவும்
  பழமைவாதிகளாக(ஆசாரக்காரர்ககளாக) இருப்பார்கள்
  கிணற்று நீரில்தான் சமைப்பார்கள்.இன்ன பிற.
  அப்படி இருக்கும்போது வெளி ஆட்களை வீட்டினுள்
  சேர்ப்பார்களா?ஏனெனில் வீட்டோடு தன் கணகாணிப்பில் டியூஷன் வாத்தியார்.சந்தானம்
  அய்யங்கார் லேசுப்பட்டவர் அல்ல.
  நன்றி அம்மா.

  ReplyDelete
 3. எனக்கும் ஐயங்கார் ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க அவங்க வீட்டுப்பரியவங்க என்வீட்டில் தண்ணி கூட குடிக்கமாட்டாங்க.அவங்கவங்க பழக்கம் ஏன் மாத்திக்கனும் இல்லியா.வடக்கே எல்லாம் ஐயங்கார் என்றாலே அம்மங்கார் அத்தங்கார் மாதிரி கேலிக்குறிய ஒரு பெயராகவே பார்க்கிரார்கள். பிராமின்சிலும் இத்தனை வகைகளான்னு கேலி பேசுராங்க.ஐயங்காரை விட்டுடலா ஐயரிலேயே எத்தனை பிரிவுகள் இருக்கு இல்லியா. கோத்திரங்களே எத்தனை விதம். நிஅனைக்கும்போதே தலை சுத்தும்

  ReplyDelete
 4. தங்கள் பதிவினை ஆரம்பத்தில் இருந்து தொடர்ந்து
  படித்தால் மட்டுமே உணர்வுபூர்வமாக இருக்கும் என்பதால்
  ஆரம்பத்தில் இருந்து படித்துக் கொண்டு வருகிறேன்
  பகிர்வுக்கு நன்றி
  அமரர் தேவனும் தி.ஜா அவர்களும்
  எனது ஆதர்ஷ் எழுத்தாளர்கள் எனச் சொல்லிக் கொள்வதில்
  பெருமிதம் கொள்கிறேன்

  ReplyDelete