Pages

Tuesday, December 13, 2011

தி. ஜானகி ராமன்

பட்டணத்தில் வேலை பார்த்துக்கொண்டு, வாழ்க்கையைப் பல நெருக்கடி

களுக்கிடையே நடத்திக் கொண்டிருக்கும் நடுத்தர மக்களுக்கு ஒரு

மாறுதலாக பூர்வீககஃ கிராம வாழ்க்கை கிடைத்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக

இருக்கும். அப்படியே துள்ளிக் குதிப்பார்களோ? விடுதலை, விடுதலை என்று

இப்படித்தான் கூத்தாடுவார்களோ? தி. ஜானகிராமனின் விஸ்தாரமான

விவரிப்பால் நமக்கும் அந்த ஆசை தொற்றிக் கொள்கிறதே! !

‘’ ஒரு மாதமாக எல்லாமே என் இஷ்டப்படிதான் நடக்கின்றன!

இஷ்டப் பட்டபோது குளிக்கிறேன். இஷ்டப் பட்ட போது சாப்பிடுகிறேன்.

நினைத்தபோது தூங்குகிறேன்அதுவும் பகலில்!கால் மணி அரை மணி

இல்லை!நேற்று உச்சிவேளைக்குச் சாப்பிட்டுப் படுத்தவன் இந்நச் சூரியன்

மறைந்தால் ஒழியக் கண்டளைத் திறப்பதில்லை என்று சபதம் செய்து

கொண்டாற்போல, அந்தி மயங்கிக் கறுக்கிற வேளைவரை தூங்கியிருக்கிறேன்

அப்புறம் இரவு மூன்று மணிக்குத்தான் படுத்தேன். அது வரையில் கோணல்

கிச்சானோடு வாசலில் கட்டிலைப் போட்டுக் கொண்டு அரட்டையடித்தேன்!

என்னை யார் கேட்கிறது!’’

2 comments:

  1. அப்படி தூக்கம் வருவது வரம் தான்.

    ReplyDelete
  2. நிம்மதியாகத் தூங்க முடிகிறது என்பதை எவ்வளவு
    அழகாககஃ கூறுகிறார் பாருங்கள் இது கிடைக்க மிகவும் கொடுத்து வைக்க வேண்டும் நகரவாழ்க்கையிலிருந்து மூன்று மாதம் விடுபட்டு
    விட்டாராம் என்ன உற்சாகம் தெறிக்கிறது பாருங்கள்
    நன்றி அம்மா.

    ReplyDelete