Pages

Saturday, December 17, 2011

தேவன்

அக்கரைக்கு இக்கரை பச்சை என்பது மிகப் பழைய பழமொழிதான்
அதிகமும் வழக்கில் இருந்து வருவதுதான். என்றாலும் அதன் சாரத்தை,
உட்கருத்தை யாரும் நன்றாக உணர்ந்து கொண்டிருப்பதாகச் சொல்ல
முடியாது. இன்றைக்குப் பட்டணத்தில் இருப்பவர் கிராம வாசத்தைப்
போல கிடையாது என்கிறார். கிராமவாசி பட்டண வாழ்க்கையைக்
கண்டு மயங்குகிறார். அந்த மாற்றம் அவர்களுக்குக் கிடைத்துச் சிறிது
அநுபவமும் ஏற்பட்டு விட்டால், திரும்பவும் பழைய இடங்களையே விரும்புகிறார்கள்.

‘’காலையில் எழுந்தால் பசும் வயல்களும், செழித்த மரங்களும் கண்ணில்
படாவிட்டால் வாழ்க்கையே ரசிக்காதே.! காலைவீசி, திறந்த வெளியில் நடப்பதற்கு உங்கள் பட்டணத்தில் எங்கே இடம் இருக்கிறது?’’ என்று
கேட்கிறார் கிராமவாசி.

‘அதெல்லாம் சும்மா, நாடக பாணியில் பேசுகிற பேச்சு ’’என்கிறார் பட்டணப்
பேர்வழி.
‘’அவசரப் பட்டுச் சொல்லி விடாதீர்கள். முழுக்ககஃ கேளுங்கள். நான் விரும்பினால் பட்டணத்திலேயே இருந்திருப்பேன். மெட்ராஸூக்கு ஆறாவது
மைலில் நான் ஏழு வருஷம் இருந்தேன்’’
‘’பட்டணம் பிடிக்கவில்லை என்று முதலில் சொன்னது பொய்தானே?’’

‘’நான் பொய் பேசவில்லை ஆசைப் பட்டுக் கொண்டுதான் போனேன். ஏழு வருஷம் அதையும் பார்த்து விட்டேன். இனிமேலே அந்தப் பக்கம் தலை
வைத்துக்கூட படுக்க மாட்டேன்.. நாடகம், நாட்டியம், சங்கீதம் தினமும்
ஏதாவது ஒரு விசேஷத்தில் தவறாமல் இருப்பேன். ‘கிளப்’பிலிருந்து
நடுநிசிக்கு முன் திரும்பியதில்லை.—‘’

‘’சரிதான்’சரிதான்! அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம்!’
‘’தப்பு! பிடித்த விஷயமானால் அளவு மிஞ்சித்தான் செய்வார்கள். நான்
சொல்ல வந்தது, பட்டணத்தில் சுவைகிடையாது, தெரிந்து விட்டது.—‘’

‘’உங்கள் கிராமத்தைவிட ஒரு நாளும் மோசமாக இராது’’
‘’ஏன் ஜயா?’’
‘’நானும் இருந்து பார்த்துவிட்டுத்தான் சொல்கிறேன். பேச ஆள் கிடைக்க மாட்டான். படிக்க பத்திரிக்கை இராது. தலைவலி வந்தால் மருந்து கிடைக்காது.’’
‘’பேச ஆள் தேவையில்லை. மனம் போன படி சுற்றலாம். உங்கள் மாதிரி
தினசரி நாலு பத்திரிகையை மேலோடு மேய மாட்டோம். வாரம் ஒன்றானாலும் ஆழ்ந்து படிப்போம். அங்கே தலைவலி ஏன் ஜயா வரது?
அருமையான இளம் கறிகாய் பறித்த உடனே சாப்பிடலாம்.’’

‘’அது மட்டும் சொல்ல வேணாம். அதைவிட இளம் கறிகாய் அங்கிருந்தே முதலில் பட்டணத்திற்கு வருகிறது—‘’.
ஆமா! நினைத்துக கொண்டிரும். எங்களுக்கு வைத்துக்கொள்ளாமல் முன்னாடி
பட்டணத்துக்குப் பறித்துக்கொடுத்து விடுவோம்’’

உங்க கிராமத்தில் நூறு ரூபாய் புரளாதே ஜயா,ஒரு அவசர வேளைக்கு!’’

நாலாயிரம் புரண்டும் ஆகிறதென்ன பட்டணத்தில்! மனசுக்கு சாந்தி இல்லையே! எல்லாம் டாக்ஸி வேகம்,ஏரோப்ளேன் வேகம்’’

நல்லவேளை, கட்டைவண்டி வேகம் இல்லையே.! ஒரு சமயம் கட்டை வண்டியில் ஏறிவிட்டு முதுகு வலி எடுத்து விட்டது---‘’

மோட்டாரில் ஆகஸிடெண்டஃ ஆகி, மூக்கு முகரை உடைந்த பேர் எத்தனையோ! இயற்கயழகு,இயறகையில் கிடைக்கும் ஆரோகயம் எல்லாம் பட்டணம் தார் ரோடிலும் ஆஸ்பத்திரிகளிலும் கிடைக்குமா ஜயா! வரீரா, நம்ம கிராமத்துக்கு—‘’
மன்னிக்கணும் , இந்த ஜனமத்தில் மறுபடி அந்த அநுபவம் வேண்டாம்!’’
நான் வருகிறேன்—ஜயோ பாவம்!’’
‘’ஜயோ பாவம்! உம்மை நினைத்தால் எனக்குப் பரிதாபமாய் இருக்கிறது’’

இப்படி எல்லாம் நகரவாசிகளும் கிராம வாசிகளும் பேசிக் கொள்ளலாம்
பெருகிக் கொண்டு வரும் பட்டணத்திலே,ஜீவனத்தை முன்னிட்டு வரும் ஏராளமான பேர்களுக்கு, கிராமம்,நகரம் என்ற பாகுபாடுகளைப் பற்றிச் சிந்தனை செய்யவும் நேரமில்லை,அதைப் பரீடசித்துப் பார்க்க வசதியுமில்லை. சிறு குடும்பங்கள் ஏறபடுத்திக் கொண்டும்,அறைகள் எடுத்துக் கொண்டும், எத்தனையோ இளைஞர்கள் பல் வேறு அலுவலகங்களில் அவர்கள் அதிர்ஷடத்தின் மீது பாரத்தைப் போட்டு விட்டு மாதம் முப்பது நாளும் உழைத்து காலம் தள்ளுகிறாரகள்
(அமர்ரஃ தேவன்-லக்ஷ்மிகடாக்ஷம்)

4 comments:

  1. தேவன் சார் நாவல் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது துப்பறியும் சாம்பு கேரக்டர்தான் . அப்படி ஒரு நகைச்சுவை ததும்ப எழுதி இருப்பார்.கிராம வாசி பார்வையிலும் நகரவாசி பார்வையிலும் எவ்வளவு யதர்த்தமா உண்மைகளை சொல்லி இருக்கார்.

    ReplyDelete
  2. அந்தக்கால கட்டத்தில் தேவன் மிகவும் பாப்புலராக
    இருந்தார்நீண்டகாலம் கல்கிக்குப்பின் விகடன் ஆசிரியராகர்ப் பணியாற்றி விகடனை உயர்த்தினார்
    நன்றி அம்மா

    ReplyDelete
  3. வெயிலும் நிழலும் அனுபவித்தால் தான் தெரியும்.என் கிராமத்து நினைவுகளை."நான் பொறந்த மண்ணு "பற்றி எழுதி இருக்கிறேன்.அவகாசம் கிடைக்கும் பொழுது படித்து கருத்துக் கூறவும்.அன்புடன்

    ReplyDelete
  4. @காளிதாஸ் முருகையா,
    மன்னிக்கவும்.தங்கள் மறுமொழியினை இப்போதுதான் பார்த்தேன்.
    கிராம்மஃ என்றாலே எனக்கு மிகவும் பிடிக்கும்.உங்கள் தஞ்சை மண்ணைப் படிக்கக் கசக்குமா?மிக்க நன்றி சார்

    ReplyDelete