Pages

Tuesday, December 20, 2011

தேவன்-கும்பகோணம் கல்லூரி

ஒரு விஷயம் மிக உயர்ந்ததாக இருக்கிறதென்று உபமானத்துடன்
வெளியிட விரும்பும் ,ஆங்கிலம் படித்த புத்திசாலி, அதை உடனே தான்
கண்டிராத ஒரு மேலநாட்டு விஷயத்துடன் ஒப்பிட்டுச்சொலவது
வழக்கம். இப்படித்தான் நம் ஊரிலநடக்கும் சங்கரஜயந்தி உபன்யாசங்களக்
கேட்டுப் பரவசமடைந்த ஒருவர் அவைகளை ‘’ஆகஸபோர்ட் லெகசர்களுக்கு
ஒப்பிட்டுக் பேசினார். ஒப்பிட்டவர் ஆக்ஸ்போர்ட் லெகசர்க ளைக் கேட்டிருப்பவர் என்று சொல்ல முடியாது. முகம் சந்திரபிம்பம் போல்
இருந்தது என்று நாம் கூறும்போது,சந்திரபிம்பம் முகத்தைவிட அழகுதான்.
அது நமக்குத் தெரியும். ஆகையால்தான் அதை உபமானப் பொருளாக
எடுத்துக் கொண்டோம் ‘’எனபதும் தெரிந்த விஷயந்தான். அப்படி இருக்க,
பகதியிலும், மேதையிலும் வாக்கு வனமையிலும், பாஷையை அடக்கி
யாளும் திறமையிலும் விறபன்னர்களான நம் கலைவாணர்களின் உபன்யா
சங்களை வேறு எதறகாவது உபமான பாத்திரங்களாக்கஃ கொள்ளலாமே
ஒழிய, அவை வேறொன்றுக்கு ஒப்பாக இருப்பதாகச் சிலாகித்துச்சொலவதெனபது சரியாகாது..

அப்படித்தான் யாரோ அவசரப்பட்டுக கொண்டு கும்பகோணம் கல்லூரிக்குக்
கூட ‘’தென்னிந்தியாவின் கேம்ப்ரிட்ஜ்’’ என்றதொரு பட்டம் வழங்கியிருக்க
வேண்டும்.!

இருகரை புரண்டோடும் காவிரியாற்றினகரையிலே, பல விருக்ஷங்களின்
குளிர்ந்த நிழலிலே, சிவப்புக்காவி பூசிய பிரம்மாண்டமான சுவரகளுடன்
நீண்டு படுத்திருக்கிறது கல்லூரிக்கட்டடம்.கரையோரம் கிடக்கும் நீல நிறப்பெயிண்டஃ அடித்த பெஞ்சுகளிலசாயந்து, சுழியிட்டுஓடும் ந்தியைப்பார்த்தவாறு சிந்தனைக்குதிரையைத் தட்டி விடலாம். ஆற்றிலே
மிதக்கும் வெள்ளை வர்ணம் பூசிய படகுகளில் ஏறி பிரவாகத்தை எதிர்க்கலாம். காற்று வாங்கியபடி அலுக்காது சலிக்காது தாழ்வாரங்களில் உலாவி வரலாம். அல்லது பெரிய பெரிய ஹாலகளில் நடக்கும் லெக்சர்களைக் கவனிக்கலாம். அல்லது தூங்கிவழியலாம். ஹாலகளுக்கு
வெளியே சகாக்களுடன் நின்று அரட்டை அடிக்கலாம். அல்லது டென்னிஸ்
விளையாடலாம். இத்தனை சலுகைகளும் , சம்பளமகட்டிக்கொண்டு அங்கே
வித்யார்த்தியாகச்சேரும் ஒவ்வொரு மாணவருக்கும் உண்டு.

திறமை மிகுந்த ஆசிரியர்களும் , கட்டுப்பாட்டுக்கு மரியாதை செய்யும் மாணவர்களும் இந்தக் கல்லுரியின் பெருமதிப்புக்குக் காரணமாகி,கேம்ப்ரிட்ஜின்
பெயரை உபமானமாகச் சொல்ல வைத்தார்கள்.!


விடுமுறை முடிந்து காலேஜ் திறந்த தினங்களில் அதிகமாகவே கலகலவென்றிருக்கும் காலேஜ் கட்டடம் நோட்டீஸ் போர்டைச் சுற்றி நிறகும் பிள்ளைகளின் கூட்டம்! ‘’ புரோபஸர்ஸ் காமன்’’ என்னும் மத்தியமான
ஹாலிலிருந்து எழும் சிரிப்பொலி. ‘’டக்டக்’’ கென்று பூடஸ் ஓசையுடன்
இரண்டொரு புத்தகங்களை ஏந்தித் தாழவாரங்களில் விரைந்து நடக்கும்
புரபஸர்கள், அவர்களை வளையவரும் அபிமான மாணவர்கள், ஜம்பது நிமி
ஷத்துக்கொருமுறை ஒலிக்கும் மணியோசை, அதைத் தொடர்ந்து வகுப்புக்கலைந்து கூட்டமாக வெளியேறும் பையனகள், எல்லாவற்றையும்
மேறபார்வை செய்யும் பிரினஸிபால்., பிரினஸிபாலைவிட மதிப்பாக நடந்து
கொள்ளும் குமாஸ்தாக்கள், குமாஸ்தாக்களைக்காட்டிலும் மேலாக அதிகாரம்
செய்யும் சேவகர்கள், தகப்பனார் செலவாக்கினால் அட்டகாசமாக நடைபோடும் பிள்ளைகள்;;மூளைச்சிறப்பினால் புருவத்தை நெறித்து அலடசியமாக நோக்கும் படிப்பாளிகள், விளையாட்டுமுகமாக அலையும்
காளைகள், பிழைப்பைத்தேடிக்கொள்ள காலேஜ்படிப்பைச் சாதனமாக எண்ணி
நாட்களைத்தள்ளும்பிள்ளைகள்’, அடங்கினவர்கள், அடங்காதவர்கள், காலேஜ்
சம்பளத்தை ஒரு பெரும் சுமையாக்கஃ கருதி அதைக்கட்டும் தேதியைக்கண்டு
நடுங்குபவர்கள், அதையே ஒரு துச்சமாக்கருதி மொத்தமாக்கஃ கட்டிவிட்டு
விச்ராந்தியாக உடகார்ந்திருப்பவர்கள், பெற்றோர் நிர்பந்தத்துக்காக காலேஜை
நாடியவர்கள், நிலத்தைவிற்று பணத்தைப்படிப்பில் போட்டவர்கள் எனபதாகப் பலவகைப்பட்டதொரு சமூகம் அந்தக் காலேஜில் அன்றாடம் காலையில் கூடியது. மாலையில் பிரிந்தது.


பலவேறு விதமான மாணவர்களையும், புரொபஸர்கள் குழாம் பல வேளைகளில் சமாளித்தது. வருஷக் கடைசியிலே ஆவென்று வாய் திறந்து
நிறகும் பரீடசை பூத்தினுள் பிரவேசித்து, அதன் பல் படாமல், வயிற்றில்
சிக்காமல் வெளியே வர அறிவைப் புகட்டப் பாடுபட்டார்கள். நாடகங்களிலேவரும் கதாபாத்திரங்களைப்போல, மணிக்கொருவராகத்தோன்றி
வெவ்வேறு பாடங்களை ‘’லெக்சர்களாகப் பொழிந்தார்கள்.


ஒரேபாடத்திறகு மூன்று நான்குபேர் வந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும்
ஒவ்வொருவித்தில் பெயர் போனவர்கள்.
(அமரர் , தேவன் --, மிஸ்டர் வேதாந்தம்)

4 comments:

  1. இந்தப்பதிவு காலேஜ் சூழ் நிலையை கண்முன்னே கொண்டு வருவதுபோல இருக்கு.

    ReplyDelete
  2. 60 வருடங்களுக்கு முன் இருந்த சூழ்நிலை இது.
    இப்போது எப்படி இருக்கிறதோ?அரசு கல்லூரி வேறு.
    நன்றி அம்மா

    ReplyDelete
  3. காவிரி ஆற்றைக் குறிப்பீட்ட தூரத்துக்குள் நீச்சலிட்டுக் கடந்தால்,கல்லூரி படகுக் குழுவில் உறுப்பினர் ஆகலாம்.நீந்தினேன், கடந்தேன்.அப்போதெல்லாம் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளுகிற சமாசாரம்.அந்த சிறிய பாலத்தில் சிறகடித்து வரும் பட்டுப் பூச்சிகள்.'விக்டோரியா ஜுபிலி' தங்கும் விடுதி.உயரமாய் எட்டு பட்டை தீட்டிய வகுப்பறைகள் .மணிக் கூண்டின் கிழே இருக்கும் நிலவரை (Record Room ).என் பால்ய சிநேகிதர், அதற்குள் அமாவசை இருட்டில் ஒளிந்து, பயமுறுத்திய இடம். இளம் நிலவொளியில் பிரும்மாண்டமாய் மனதை பிரமிக்க வாய்த்த கட்டிட வளாகம்.பெரிய விளையாட்டு மைதானம்.. நெஞ்செல்லாம் நிறைந்த என் விடலை பருவ நினைவுகள்.. நன்றிங்க ..

    ReplyDelete
  4. @காளிதாஸ் முருகையா,
    அடேயப்பா, உங்கள் அநுபவம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கிறதே.உங்கள் பதிவுகளில்
    அதிகமாக எழுதியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
    படித்துக் கொள்கிறேன்

    ReplyDelete