Pages

Sunday, January 15, 2012

மழலையர் உலகம் மகத்தானது

மழலையர் உலகம் மகத்தானது என்ற தலைப்பில் தொடர் பதிவு எழுத
மதிப்பிறகுரிய லக்ஷ்மி அம்மா அன்பழைப்பு விடுத்துள்ளார்கள். அவர்கள் அநுமதியுடன் கொஞ்சம் அவகாசம் எடுத்துக் கொண்டேன். இனியும்
காலம் தாழ்த்தல் தகாது என்பதால் சற்று முயன்று இப் பதிவினை
இடுகின்றேன். அழைப்புக்கு அம்மாவுக்கு நன்றி.


‘’படைப்பு பல படைத்துப் பலரோடு உண்ணும்
உடைப் பெருஞ் செல்வர் ஆயினும்
இடைப்படக்

குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி,
இட்டும் தொட்டும், கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்,
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத்தாம் வாழும் நாளே’’
--பழந் தமிழ்ப் பாடல்—

குழந்தைகள் பற்றி சிறுகதை மன்னர் அமரர் கு. அழகிரிசாமி குறிப்பிடும் போது

‘’ அதுகள்(குழந்தைகள்) ஒவ்வொன்றும் ஒரு பொக்கிஷம் ‘’என்றும்
குழந்தையின் அழகிலும் அதன் விளையாட்டுகளிலும் பேதைமையிலும் ஈடுபட்டு மெய் மறக்காத கலைஞர்கள் கிடையாது.’’ என்றும்கூறுவது ஒரு
தேர்ந்த முடிவாகவே கொள்ளலாம். அவர் கூறுவது போல் உலகில் எந்தக் கலைஞனும், கவிஞனும் குழந்தைகளைப் புறக் கணித்ததில்லை’’குழல் இனிது
‘யாழ் இனிது’’ போன்ற வள்ளுவ வரிகள் குழந்தை பற்றிய தமிழ்ச் சிந்தையின் வெளிப்பாடு மட்டுமல்ல, தமிழ் மொழியைக் கனியவும் நெகிழவும் வைத்த வரிகளாகும். தாகூரின் காபூலிவாலா, ‘’Home- coming, the baby, my lord””
போன்ற சிறுகதைகள் மட்டுமல்ல,The crecent moon
என்ற கவிதை நூலும் குழந்தைகளைப் பற்றியதுதான்.


உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல—குழந்தைகள் உங்கள் மூலமாக வருகிறார்கள் . ஆனால் உங்களிடமிருந்து அல்ல—நீங்கள் அவர்களைப் போல் இருக்கலாம் அவர்களை உங்களைப் போல் உருவாக்க
முயலாநீர்கள்.’’ என்பது கலீல் கிப்ரானின் புகழ்பெற்ற வாசகங்களாகும்.


எந்த ஒரு சிருஷ்டியின் ஆரம்பமும் சிலிர்ப்பை உண்டாக்கக்கூடியதே . இந்த
ஆரம்பத்தின் உருவகமாக குழந்தைகள் இருப்பதால் உலகெங்கும் இவை இலக்கிய கர்தாக்களைக் கவர்கின்றன.
குழந்தைகளைப் பற்றிய கதை என்றாலே பெரும்பாலும் தாயோடு சம்பந்தப் பட்டதாகவே இருக்கும். உலகப் புகழ் பெற்ற கதைகள் கூட இதற்குப் பெரிதும் விதிவிலக்காக இருப்பதில்லை. முல்க் ராஜ் ஆனந்தின் ‘’ The lost child
என்ற கதை உலகச் சிறு கதைகளில் ஒன்றாக்கஃ கருதப் படுகிறது. அதுவும் குழந்தை-தாய் பந்த உணர்ச்சிகளையே கவித்வ கம்பீரத்தோடு சொல்லுகிறது-.


சந்தைக்குக் குழந்தையை அழத்துச் சென்றார்கள் தாயும் தகப்பனும்.

பொம்மைக் கடையைப் பார்த்து குழந்தை நின்றது.

‘எனக்கு பொம்மை வேணும்’’

தந்தை மறுத்து விட்டார். தாய் சமாதானம் செய்தாள்.

இனிப்புப் பலகாரங்களைக் கூவிக் கொண்டு ஒருவன் சென்றான்.

‘குலோப்ஜான்,பர்பி, ஜிலோபி—‘’

குழந்தை முணுமுணுத்தது.

‘’எனக்கு பர்பி வேணும்’’

‘’பூக்காரன் கூவினான்.

‘’குல்மாஹர் பூ மாலை—குல்மாஹர் பூ மாலை—‘’’

‘’எனக்கு அந்த பூமாலை வேணும்.’’

வானவில் நிறத்தில் பலூன்கள் விற்பதைக் குழந்தை கண்டது.

தன் பெற்றோர்கள் வாங்கித்தரமாட்டார்கள் என்று தெரிந்தும் குழந்தை நினைத்தது.

‘’எனக்கு பலூன் வேணும்.’’

வழியில் ஒரு பாம்பாட்டி மகுடி ஊதிக் கொண்டிருந்தான்.

‘அந்த மகுடி எனக்கு வேணும்’’

குழந்தை கூட்டத்தில் புகுந்து மேலே சென்றது.

குடை ராட்டினம் சுழன்று கொண்டிருந்தது.

‘’குடை ராட்டிணத்தில் நான் சுற்றணும்—அம்மா—அப்பா—‘’’

குழந்தை முன்னால் பார்த்தது.சுற்றிலும் பார்த்தது தன் பெற்றோர்களைக் காணவில்லை.

பயபீதியுடன் வறண்ட தொண்டை கிழியப் பெருங்குரல் எடுத்து குழந்தை கத்தியது. கூட்டத்தில் புகுந்து இங்குமங்குமாய் ஓடியது.

இரக்கப் பட்ட வழிப்போக்கன் குழந்தையைத் தூக்கிக் கொண்டு’’ எப்படி நீ இங்கே வந்தே? யாரோட பாப்பா நீ?’’

குழந்தை முன்னிலும் அதிகமாக அழுது கொண்டு கூறியது.

‘’எனக்கு அம்மா வேணும், அப்பா வேணும்’’.

குடைராட்டிணத்தின் அருகில் குழந்தையைத் தூக்கிச் சென்று அதனிடம் கேட்டான்.

‘’அந்தக் குதிரையில் ஏறி சுற்றி வற்றையா?’’

குழந்தை மறுத்துவிட்டுக் கத்தியது.

‘’எனக்கு அம்மா வேணும், எனக்கு அப்பா வேணும்.’

பாம்பாட்டியிடம் அவன் குழந்தையைக் கூட்டிச் சென்றான்.

‘’இந்த மகுடி இசை எவ்வளவு இனிமையாக இருக்கு. கேளு குழந்தே ‘’

குழந்தை காதுகளைப் பொத்திக் கொண்டு கத்தியது.

‘’’எனக்கு அம்மா வேணும், எனக்கு அப்பா வேணும்.’’

பலூன்களைக் காட்டி அவன் கேட்டான்.

‘’பாப்பாவுக்கு பலூன் வேணுமா?’’

குழந்தை முகம் திரும்பிக் கத்தியது.

‘’எனக்கு அம்மா வேணும், எனக்கு அப்பா வேணும்’’

பூக்காரனிடம் தூக்கிப் போய் அவன் கேட்டான்.’’

ஒனக்குப் பூமாலை வேணுமா’’?

குழந்தை அதைக் கேடக விருப்பமில்லாமல் அலரியது.

‘’எனக்கு அம்மா வேணும் ,அப்பா வேணும்’’.

அவன் மேலே நடந்தான்.

இனிப்புப் பதார்த்தங்களைக் காட்டி அவன் குழந்தையிடம் கேட்டான்.

‘ஒனக்கு பர்பி வேணுமா’’?

குழந்தை வெறியுடன் தலையை ஆட்டி மறுத்தது.

‘’எனக்கு அம்மா வேணும் , அப்பா வேணும்—‘’.

கதை இங்கே முடிந்து போகிறது. தாய் தந்தையைக்காட்டிலும் குழந்தைக்கு முக்கியமானது வேறெதுவும் இல்லை என்பதை வெகு அற்புதமாகச்
சொல்லும் கதை இது.

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று கூறுவார்கள். அவர்கள்
உலகமும் மகத்தானதுதானே!

Tuesday, January 10, 2012

தேவன்- மனிதரில் பலவிதம்-15

இரண்டு கழுகுகள் வந்து சாப்பிடுமாமே, அந்த க்ஷேத்திரமா?’’

‘’ஆமா ஜயா, ஆமா! அது இன்னொரு சமயம் என்று சொல்லிவிட்டால் அப்படியே விட்டு விடவேண்டும். திருப்பித திருப்பி பேசக் கூடாது! நாம்
போகிறது மஹாபலிபுரம்! அங்கே இருக்கிற ஆட்களைக் கேட்டீரானால்
(சிரித்து)மகாபலி சக்கரவர்த்தி ஆண்ட தேசம், அதனால் அந்தப் பேர் வந்துவிட்டது என்பார்கள்’’

‘’’மாமல்லபுரம் என்று நான் படித்திருக்கிறேன்! சார்’.

‘’ரைட்! நரசிம்மவர்மன் என்கிற பல்லவ ராஜா காலத்து வேலை இதெல்லாம்.
ஆயிரத்து முன்னூறு வருஷத்துக்கு முந்தி எப்படி இருந்திருக்கும் என்று
ஊகித்துக் கொண்டு பார்க்க வேண்டியது, மிஸ்டர்1 இந்தச் சிலைக்கு மூக்கு
உடைந்திருக்கே, அதற்குக் கை இல்லை.யே!’’’என்று குறையைக் கண்டு
பிடித்தால் அர்த்தம் இல்லை’’.

‘’இந்தநாளைக் கட்டடம் நூற்றிருபது வருஷத்துக்கு அப்புறம் இருக்குமா என்று
சொல்கிறதற்கில்லை! அந்தக் காலத்தில் இதெல்லாம் செயதார்கள் என்றால் எத்தனை ஆச்சரியம்! கல்லைக் குடைந்திருக்கிறார்கள் ஜயா, வெணெய் மாதிரி!’’

‘’ஆச்சரியம் சார்!’’

‘’நீர் மஹாபலிபுரத்தை ஒரு சிற்பக் கலாசாலை என்கிற மாதிரி பாவித்துப் பார்க்க வேண்டும் அங்கே எத்தனை எத்தனையோ இளைஞர்கள் சிற்பம் கற்றுக் கொண்டார்கள் என்று நான் சொல்கிறேன் ‘பகீரதன் தபஸ்’ என்று இரண்டு இடத்தில் இருக்கிறது. ஒன்றில் வேலை அரையே அரைக்கால் பாகம் செதுக்கினவுடன் நின்றுவிட்டது.. அதறகு என்ன அர்த்தம்? கல் சுகம் இல்லை என்று வேறு இடத்தில் தொடங்கியிருக்கிறார்கள் அல்லது இரண்டு ‘பாட்சு’கள்
ஏக காலத்தில் வேலை செய்திருக்கின்றன.--. எத்தனை எத்தனையோ இடங்களில் இந்த மாதிரி வேலை தொடங்கி நின்றிருக்கிறது நான் காணபிக்கிறேன்.’’

‘’அது உங்கள் ஹேஷ்யந்தானே?’’ என்று கேட்டார் மைத்துனர்.

சுவாமி உடனே சீறினார்.’’ எல்லாருமே ஹேஷ்யம்தானே செய்கிறார்கள்?

ஹிஸ்டரி பூராவும் ஹேஷ்யம்தானே? நீங்களே கண்ணால் பாருங்களேன்.
அர்ஜூனஃன் தபஸ் என்கிறார்களே, அதைநான் ‘பகீரதன் கங்கை கொண்டு வந்தது’ என்று சொல்கிறேன். நடுவில் கங்கை வருகிற மாதிரி ஒரு பள்ளம்.

கீழே கங்கை ஓடுவது போல் ஓர் அகழ்.. மழை பெய்யும் போது இதைக் கற்பனை செய்து பார்த்தால் நன்றாக விளங்கும்.. அர்ஜூனனஃ தபஸில் இதெல்லாம் எங்கேயிருந்து வந்தது? நான் சொல்கிறேன்—‘’

‘’உங்களுக்குப் பயந்துகொண்டு நான் ஒப்புக் கொள்கிறேன்’’! என்றார் மைத்துனர் தமாஷாக.

‘’அவசியம் இல்லை நீர் ஒப்புக் கொள்ளாவிட்டால் ஒன்றும் குடி முழுகி விடாது.!’’

‘’ஒரு வேளை ஒரு ஆடசி முடிந்து, மற்றோர் ஆடசி ஆரம்பித்து, பின்னால் வந்தவனுக்கு சிற்பத்தில் அக்கறை இல்லாமல் இருந்து__’’

‘’அப்போ ஏன் ஜயா ஒரேமாதிரி இரண்டு இருக்கிறது என்றால்?’’

இதற்குள் மஹாபலிபுரம் வந்துவிட்டது..’’ நான், நீ’’ என்று போட்டி போட்டுக் கொண்டு வந்த கைடுகளை விரட்டிக் கொண்டு, சுவாமி ஒவ்வொரு இடமாககஃ காண்பித்தார். பெரியதொரு கற்பாறையின் மேல் வரிசையில் சூரிய , சந்திர இந்திராதி தேவர்களையும், அடுத்த வரிசையில் வனங்கள், யானைகள், மான்கள், மிருகங்களையும், இடையே நீர்பரப்பில் நாகங்களையும் காட்டியிருந்தது வேதாந்தத்தை பிரமிக்கச் செய்தது.


ஒரு முனீந்திரர் பூஜை செயதல், ஒரு சாதகன் குடத்தில் ஜலம் கொண்டு செல்லுதல், ஒருவன் வஸ்திரத்தைப் பிழிதல், மான் பின் கால் குளம்பினால்
கண் இமையை சொறிந்து கொள்ளுதல் இவையெல்லாம் ததஃரூபமாக இருந்தன. ஹாஸ்ய ரசத்திற்கும் இடம் கொடுத்து, பூனை ஜபம் செய்வதைச் செதுக்கி இருந்தார்கள் உண்மைப் பக்தன் ஒருவன் இருந்தால், போலிப் பக்தனும் தானாகவே அங்கே முளைத்துவிடுகிறான் என்பதை விளக்குவதற்காகவே இது இருக்க வேண்டும்.


‘’நான் சொன்னதை ஒப்புக் கொள்கிறீரா, வேதாந்தம், இல்லையா? அவர்களைப் பார்க்க வேண்டாம். உம்முடைய பகுத்தறிவு என்ன சொல்கிறது.? பாறை இடையிலே பள்ளம், கீழே அகழ்—கங்கை என்று அர்த்தமா இல்லையா?’’


‘’ஆமாம் என்று நினைக்கிறேன்!’’ என்றான் வேதாந்தம்.

‘’சும்மா என்னைப்க் காக்காய்பிடிக்க வேண்டாம்! அதனால் ஒன்றும் பிரயோசனம் ஏற்படப் போவதில்லை.’’ என்றார் சுவாமி.

வேதாந்தத்திற்கு தலை சுற்றும் படி அங்கும் இங்கும் எங்கும் அழைத்துக் கொண்டு போனார் சுவாமி.. மகிஷாசுரமர்த்தனியின் சிலாரூபமும் சேஷசாயியின் சிற்பமும் எதிர் எதிராக இருந்த குகையில் வெகு நேரம் தாமதித்தார்கள். படங்களில் பலதடவை சிம்மவாகனத்தில் மகிஷாசுரமர்த்தனிய்யும் ,கதையைத் தடவியபடி மகிஷாசுரனையும் வேதாந்தம் பார்த்திருக்கிறான். ஆனால் நேரில் காணும் போது அதில் கண்ட காம்பீர்யமும் பராசக்தியின் முகத்தில் இருந்த புன் சிரிப்பும் அவனை ஆட்கொண்டன. ‘’என்னதான் புகைப் படங்களில் பார்த்தாலும் நேரில் காணகிற சுகம் இல்லை.’’ என்றான்.

‘’ஜயா! நேரில் கண்டால்கூடப் போதாது! ஆயிரத்து முந்நூறு வருஷங்களுக்கு முன் மனசைத் தள்ளிக் கொண்டு போக வேண்டும் என்று சொல்லிக் கொண்டு வருகிறேனே! கல்லைக் குடைந்திருக்கிறார்களே, ஒரு இடத்தில் உளி அதிகம் விழுந்துவிட்டால் அத்தனையும் பிரயோசனம் இல்லை. குப்பை ஆகிவிடும்.! சித்திரம் எழுதினால் அழித்து மறுபடி எழுதலாம்.. சிற்பத்தில் பிசகு பண்ணிவிட்டால், அதன் மேல் முட்டிக் கொண்டு மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டியதுதான்!’’

‘’அதெப்படி சார் முடிந்தது?’’

‘’அந்தப் பல்லவ ராஜா சிற்பியிடம் , நீர் உம்ம குடும்பத்தைப் பற்றிக் கவலைப் படாதீர்.நான் அந்தக் கவலை பூராவையும் பட்டுக் கொள்கிறேன்.நீர் உமது இருதயம் பூராவும் இதில் வைத்து விடும்’ என்றான் அப்படியே நடந்தது. இப்போ மாதிரி ஒன்பதரை மணிக்கு வந்து ஜந்து அடிக்கப் பத்து நிமிஷம் இருக்கிற போது மேஜையை மூடிக் கொண்டு போகிறபடி வேலை செய்திருந்தால் நடந்திருக்குமா?’என்று கேட்டார்.


‘’இப்போது யாருக்குச் சிற்பம் வேண்டும்?! பிளாஸ்டிக்கில் திறமையை ஏற்றிக் கொண்டு போகிறார்களே! பழைய சிற்பங்களைப் பார்த்து ஜாக்கிரதை செய்து காப்பாற்றிக் கொண்டு வந்தாலே போதும்.!’’ என்றார் மைத்துனர்.


ஓர் இடத்தில் தனிமையில் ஜமக்காளத்தை விரிக்க, அதில் அவர்கள் உடகார்ந்து இட்லி பலகாரம் செய்தார்கள். நெய்யையும் எண்ணெயையும் தாராளமாக ஊற்றி, சாப்பிடுங்கள், சாப்பிடுங்கள்’ வன்று வேதாந்தத்தை வற்புறுத்தினார் சுவாமி.


வேதாந்தம் சங்கோசப் பட்ட போது, இனிமேல் ஒன்பது மணிக்குத்தான் சாப்பாட்டைப் பார்க்கலாம். அதுவும் அவர்கள் போடுவார்களோ என்னவோ! இங்கே வேண்டிய அலைச்சல் பாக்கியிருக்கிறது. சீக்கிரம் ஆகட்டும்!’’ என்றார்.


மறுபடி சிற்பங்களைப் பார்த்தார்கள், ஏழு ரதங்கள் , நிறகும் பெரிய யானை, படுத்திருக்கும் மாடு இவைகளை ஒரு சுற்றுச் சுற்றிக் கொண்டு, கடற் கோயிலுக்கு வந்தார்கள். அது ஒரு சொப்பன உலகம் மாதிரியே இருந்தது., வேதாந்தத்துக்கு. பெரிய பெரிய அலைகள் மோத, விற்விற்றென்று உப்பங்காற்றுவீச,கோயில் வாசற்படியின் மீது தன்னை மறந்து நின்றுவிட்டான்.


‘’ஒரு விஷயம் கவனித்தீரா? சோமாஸ்கந்தன்தான் இங்கே அதிகம். பரமசிவன், பார்வதி, குழந்தை ஸ்கந்தன்—அந்த ராஜாவின் குல தெய்வம்!’’


‘’ஏன் வராகர் கூட இருப்பாரே?’

‘’இருக்கத்தான் இருப்பார் சைவம், வைணவம் இரண்டும் இங்கே உண்டு!’’

‘’ஆமாம். கிருஷண்ன் கோவர்த்தனகிரியைத் தூக்குகிற அறபுத சிற்பம் பார்த்தீரே, கோகுலத்தில் ஒரு காடசி என்னமாககஃ காட்டியிருக்கிறார்கள்.! ஒவ்வொருத்தர் ஒவ்வொரு பாவத்தில் இல்லை.? என்ன ‘ஆப்ஸர்வேஷன்’ ! என்ன திறமை! மனசால் நினைக்கலாம். வெளியில் அது வர வேண்டாமா?’’

‘வராகர் கோயில் இன்றைக்கு உண்டா?’’ என்று கேட்டாள் ஸ்ரீமதி சுவாமி.

‘’ஓ, மெழுகுவர்த்தி, தீக்குச்சி சகிதம் வந்துவிட்டேனே1 மிஸ்டர் வேதாந்தம் பார்க்க வேண்டாமா? அவர் பெரிய எழுத்தாளர். நாளைக்கு எல்லாம் எழுதுவாஃர்என்னைப் பற்றிக்கூட ஏதானும் இரண்டு வார்த்தை எழுதுவார்—மிஸ்டர், என்னை அதில் கண்டபடி திட்டிவிடப் போகிறீர்!’


இருள் கவிந்து கிடந்த வராகர் கோயிலில் மெழுகுவர்த்தி உதவியுடன் பிரவேசித்தார்கள். வெளியே உள்ள சிற்பங்களில் உப்பங்காற்று தாக்கி, ஓரளவு பாதித்திருந்தது. இங்குள்ளவை புத்தம் புதியனவாககஃ காணப் பட்டன. கஜலட்சுமி,கங்காதரர், மகாவிஷ்ணு, மகிஷாசுரமர்த்தனி இவர்களுடன் பல்லவ அரசன் இரு மனைவியருடன் வரும் காடசி ஒன்றும் இருந்தது.


‘’ஒரு காலத்தில் வேதாந்தம்—இந்தக் கடற்கரையில் லைட்ஹவுஸ் இருந்தது.
அதோ பழைய ‘லைட் ஐவுஸ்’. பார்த்துக் கொள்ளுங்கள்.!’’

‘’ஓ’’! என்றான் வேதாந்தம்

‘’ இதெல்லாம் ஒரு தடவை பார்த்தால் போதவே போதாது, இருபது தடவை பார்க்க வேண்டும். நான் நினைத்தால் இங்கே வந்து விடுவேன். எனக்குப்
பார்க்க ஆச்சரியம் அதிகமாகிக் கொண்டு வருகிறது. அடிக்கடி பார்த்தால்தான்,
அந்த நாளில் என்ன ஜடியாவுடன் செய்தார்கள் என்கிறது விளங்கும். அமெரிக்காவில் மூன்று நாள் இருந்துவிட்டு, அந்த ஊர் கலாச்சாரம் பூராவும் எனக்குத் தெரியும் ‘’ என்று இப்போ சிலபேர் சொல்கிற மாதிரி, மகாபலிபுரத்தை ஒருதரம் பார்த்துவிட்டு, ‘பேஷாயிருக்கிறது!’’ என்றால் போதாது’’


‘உங்கள் மாதிரி அவரையும் அடிக்கடி வரச் சொல்லுகிறீர்களா?’ என்று கேட்டார் மைத்துனர்.

‘’அட,, உமக்குத் தெரியாது, யோசனை பண்ணும் என்கிறேன். வெறுமனே பார்த்துவிட்டு, ‘ஆஹா , அற்புதம் என்று சொல்லிவிட்டு, மறந்து போனால்
பிரயோசனம் இல்லை. நல்ல பௌர்ணமி சந்திரிகையில், பால் மாதிரி நிலாவிலே, சமுத்திரக் கரை. அலை அடிக்கிறது. சுற்றிலும் சிற்பங்கள் இருக்கின்றன. இங்கே வந்து உலாவினால் எப்படி இருக்கும்1 பல்லவ ராஜா.- சிற்பம் என்றால் ஒரே பயித்தியம் அவன் இந்தக் காடசியை எப்படி அநுபவித்
திருப்பான்.—அட1 யோசித்துப் பாரும் ஜயா, சும்மா நிற்கிறீரே?’’ என்று அதட்டினார் சுவாமி..


இப்படியே மேலும் ஒரு மணி நேரம் அங்கே சுற்றிவந்தார்கள். ஒவ்வொன்றிற்கும் சுவாமி தமது பிரத்யேகமான அபிப்ராயத்தைத் தெளிவுடன் கூறினார். ‘’நான் சொல்கிறேன் என்று ஒப்புக் கொள்ள வேண்டியதில்லை. யோசித்துப் பாருங்கள்.!-வந்துவிட்டதா பெருமூச்சு1(சிரித்து) இத்தனை நாழி இல்லையே என்று பார்த்தேன்1 அப்படியே இங்கேயே விட்டுவிட்டுப் போய் விடுவேன்—ஆமாம்1’’ என்றார்


திரும்பும் போது சந்திரன் உதயமாகிவிட்டான். வழியில் ‘வெண்ணெய்க் கல்’லைக் காட்டினார். ‘’எத்தனை சிறிய இடத்தின் மீது எத்தனை பெரிய கல்
ஆயிரம் வருஷத்துக்கு மேலாக நிற்கிறது. அப்படித்தான் நம்ம உலகமும் அந்தரத்தில் நிற்கிறது. வாரும்! அடியில் உடகார்ந்து பார்க்கிறீரா?’’

இன்னொரு சமயம் ஆகட்டும் ‘’ கன்றான் வேதாந்தம்

திருப் போரூர் மார்க்கமாக வண்டியை விட்டார் சுவாமி.சரியாக ஏழேமுக்கால்
மணிக்குத் திருப்போரூர் முருகன் முன்னிலையில் நின்றார்கள். ‘’சந்நிதியைப் பார்க்கலாம் அல்லவா?’’என்று கேட்டார்.

‘’எனக்கு முருகன் என்றால் ரொம்பப்பிடிக்கும், சார்!’ என்றான் வேதாந்தம்.

‘’அப்படியானால் முருகன் என்னைக் காப்பாற்றிவிட்டார்.சீக்கிரம் ஆகட்டும்
சார். இன்னும் இருபத்தெட்டு மைல் இருக்கிறது. உமக்குப் பையன்கள் காத்துக் கொண்டு இருப்பார்கள். பாடப் புத்தகத்தை திறந்து வைத்துக் கொண்டு—போகாவிட்டால் உத்தியோகம் போய்விடும். நான் திட்டு வாங்க வேண்டும்.1’’


இப்போதுதான் வேதாந்தம் இந்த உலகத்துக்கே வந்தான் என்று சொல்ல வேண்டும்.!.ஏதோ ஒரு பல்லவ ராஜாவாகவோ அல்லது வாழ்க்கையில் தேவைஎதுவும்இல்லாத பிரபுவாகவோ இதுவரை எண்ணி, கற்பனாலோகத்தில் சஞ்சரித்துத் தன்னை மறந்திருந்தான். சந்தானம் அய்யங்கார்வீடு, சீனி, ராகவன் பேச்சு, வைதேகியின் கொடும் பார்வை, அடிமைப் பிழைப்பு-எல்லாம் ஞாபகம் வந்து , முகம் வாட்டம் கண்டது.

(அமரர் தேவன்—மிஸ்டர் வேதாந்தம்).

Monday, January 9, 2012

தேவன்- மனிதரில் பலவிதம்-14

நல்ல நடுமத்தியான வேளையாதலால், ஜன நடமாட்டமே இல்லை
ஒரு பெடரோல் பங்கில் மஞ்சள் நிறக்கார் ஒன்று பெடரால் போட்ட வண்ணம் நின்றது. வேதாந்தம் அதை அணுகி அங்கிருந்த ஆளிடம் ,’’போஸ்டாபீஸ் எந்தப் பக்கத்தில் இருக்கிறது?’’ என்று விசாரித்தான்.

மறு கணம் திடுக்கிட்டான்.
காரில் இருந்தவர் மிஸ்டர் ஸ்வாமி! வழக்கமாக ஓட்டிவரும் கறுப்புக் காரை விடுத்து, இந்த மஞ்சள் காரைக் கொண்டு வந்திருந்தார். அவருடைய இடது புறத்தில் அவருடைய மனைவியாரும், பின் ஸீட்டில் ஓர் இளைஞரும்
உடகார்ந்திருந்தார்கள்.

‘’வாருங்கள் சார், பின்னால் உடகாருங்கள்!’ என்று உற்சாகமாக அழைத்தார்
சுவாமி.
‘’நான்—வந்து—‘’ என்று ஏதோ சொல்ல வாயெடுத்தான் வேதாந்தம்.

‘’என்னையா யோசனை பலமாக? சந்தானம் டெல்லியில் இருக்கிறார். ஒருநாளைக்குத்தான் அந்தப் பசங்கள் விஸ்ராந்தியாக இருக்கட்டுமே! என்று
காரை ஓட்டினார் சுவாமி.

‘மஹாபலிபுரத்துக்கா போகிறோம்?’’ என்று மெல்லக் கேட்டான் வேதாந்தம்..

‘’காரில் நீர் உடகார்ந்தாகிவிட்டது! நான் கொண்டு போகிற இடத்துக்குப் பேசாமல் வரவேண்டியது!’’ என்றார் சுவாமி முடிவாக.

தாம்பரத்தை நோக்கி வழுவழுப்பான தார் ரஸ்தாவில் ரம்யமானதொரு சுருதியுடன் கார் ஓடியது. பேசிக்கொண்டே கார் ஓட்டிய சுவாமி அடிக்கொருதரம் திரும்பி வேதாந்தத்தைப் பார்த்தார்.

‘சந்தானத்திற்குத் தெரிந்தால், உடனே சீட்டைக் கிழித்து விடுவார் டோய்1’’
என்று பரிகாசம் செய்தார் .
வேதாந்தம் சற்றே தைரியமாக, ‘’சார், சந்தானத்தை உங்களுக்கு முன்னாடியே தெரியுமா?’’ என்று கேட்டான்.
ஹூ! சந்தானத்தையும் தெரியும்.! அவர் அப்பாவையும் பார்த்திருக்கிறேன்..தாத்தா
வையும் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். அவர் அப்பா மூணு வேதம் படித்தவர். அசாத்திய வைதீகம்.மூணு ஏக்கரா நிலம் மட்டும் உண்டு.. பிள்ளைக்கிப் பள்ளிக்கூடப் படிப்பையும் சொல்லி வைத்தார். கூடவே வேதாத்தியானமும் பண்ணி வைத்தார். நாளைக்கும் சந்தானம் அய்யங்கார்
ஸ்வரம் தப்பாமல் பஞ்சபதி சொல்லுவாரே.! எந்த இடத்தில் வேண்டுமானாலும் பரீடசை பண்ணலாம்.’’.

‘’ஆமாம். தெரியும்.!’’

‘உம்மை அங்கு சேர்த்துக் கொண்டதுகூட அதனால்தான். அவர் கல்யாணமே ஒரு கதை திருச்சினாப் பள்ளியிலே ஒரு கல்யாணத்திற்குப் போயிருந்தார் பெரியவர். பிள்ளைக்கி சோமன், ஜோடு, பூரி தட்சிணைகள் கிடைக்கும் என்று ஆசை. கல்யாணத்தன்னிக்கு சப்தபதி ஆகவில்லை. ஒரு சம்பந்தித் தகராறு வந்துவிட்டது. பிள்ளைவீட்டுக காரன் திடீர்னு ஆகாயத்தில் எழும்பிக் குதித்தான். ‘’இது காபியா? கழுநீரா? என்றான். ‘இது இட்லியா? உங்களுக்கு வெட்கமாயில்லை? என்று கேட்டான். இன்னொரு பயல். கல்யாணம் ‘கான்சல்ட்’ ஊருக்குக் கிளம்பிவிட்டார்கள் சம்பந்திகள்!’’

நிஜமாகவா?’’ என்று கேட்டார் மைத்துனர்.

‘நான் கதை எழுதுகிறவனா? மிஸ்டர் வேதாந்ததிதுக்கு வேணுமானால் கற்பனை ஓடும். பெண்வீட்டுக்காரன் நல்ல பெரிய மனுஷன். பசையுள்ள
பேர்வழி.’.சரிதான்’ என்றான். முகூர்த்ததை தவற விடாமல்’நடத்திப் பிடறது’.
என்று தேடினான். சந்தானம் உக்கிராண உள்ளிலே இட்டிலிப் பானைக்குப்
பக்கத்திலே அப்போதுதான் இலையைப் போட்டிருக்கிறார். நாலு பேராகப் போனார்கள். கரகரன்னு இழுத்துக் கொண்டு வந்தார்கள்.தாலியைக் கட்டச் சொன்னார்கள். இருத்திரண்டரை ஏக்கர் நஞ்சை, பதினாலு ஏக்கர் புஞ்சை.
அகண்ட காவேரிப் பாய்ச்சல், மாயனூர் கிராம்மஃ. அப்சரஸ் மாதிரிப் பெண்ணு--. கசக்கிறதோ, வலிக்கிறதோ கேடகிறேன்.! அதிர்ஷ்டம் அப்படி வந்து குதித்துவிட்டது ஓய்.!’’

வேதாந்தம் சிரித்தான்.

‘’ஏன், கௌசல்யா இப்போ அழகாக இல்லை என்று சிரிக்கிறீரா? ஏழு பெணகள்,
நாலு பெண்ணைப் பெற்று, நாற்பத்திநாலு வருஷம் குடித்தனம் பண்ணினவள்
இதறகு மேல் ரதி மாதிரி இருந்து விடுவாளோ? ஏன் ஜயா!’’

‘’சந்தானத்திறகு இன்னும் அந்த சொத்து இருக்கிறதல்லவா?’’

‘’இருக்கிறதாவா? பெருக்கிப்பிட்டார் ஜயா! பையன்களைக் காலேஜூக்கு அனுப்பி , பெண்களைப் புக்ககத்திறகு அனுப்பி, மெட்ராஸிலும், கும்பகோணத்திலும் வீடு கட்டிக் குடித்தனம் நடத்துகிறதென்றால் சாமர்த்தியம்
எத்தனை வேண்டும்?’’

‘எல்லாம் அந்த அம்மாள் கொண்டு வந்த சொத்து என்று சொல்லுங்கள்1’’என்று
கேட்டார் மைத்துனர்.
‘’கொண்டு வந்தால் என்ன? எத்தனை பேர் இதைவிடப் பெரிய எஸ்டேட்டுகளை அழிக்கவில்லை? இவர் சாக்ஷாத் பரமேஸ்வரன். மடியில் பார்வதியை வைத்துக் கொண்டு இருக்கிறவர் மாதிரி கௌசல்யாவை வைத்துக் கொண்டிருக்கிறார். மனுஷன் காலணா செலவழித்துவிட மாட்டார்.
வேதாந்தம் ஏழுபேருக்கு ட்யூஷனைக் கொடுக்கிறார். முப்பது ரூபாய்தான் கொடுக்கிறார் அப்படி இப்படித் திரும்பினால் வேலையைப் பிடுங்கிவிடுவேன் என்கிறார். என்ன வேதாந்தம்1 நான் சொல்கிறது சரிதானே?’’

‘’உங்களுக்கு எப்படித் தெரியும்?’’

‘’எனக்கு ஒரு மனுஷனைப் பார்த்தால் என்ன செய்வான் என்று தெரியாதா?

நீர்கூட இப்போ, , கண்ராவியே! நம்மைக் கட்டி இழுக்கிறானே’ என்றுதான்
எண்ணிக் கொண்டு வருகிறீர்!’’

வேதாந்தம் திடுக்கிட்டான். ‘’அப்படியெல்லாம் இல்லைசார்! எனக்கு மஹாபலி
புரம் பார்க்கவேண்டும் என்ற ஆசை உண்டு.’’

‘’ மஹாபலிபுரத்தைச் சும்மா வெயில் சுடுகிறதே, கால் கடுக்கிறதே என்று நினைத்துப் பார்த்தால் பிரயோசனம் இல்லை. சரித்திரக் கண் கொண்டு பார்க்க வேண்டும். அதோ, தெரிகிறதே.திருக் கழுகுன்றம். அதற்கு நாம் இன்னொரு சமயம் வரலாம்.’’

(அமரர் தேவன்- மிஸ்டர் வேதாந்தம்)

Sunday, January 8, 2012

தேவன்- மனிதரில் பலவிதம்--13

a









கூடத்தின் நடுவே, வாசலை நோக்கியவாறு பெரிய பிரம்பு தைத்த ஈஸிசேரில்
சந்தானம் அய்யங்கார் உட்கார்ந்து, சாய்ந்து, கால்களை நனகு நீட்டித் தூக்கிப்
போட்டுக் கொண்டார், இந்த இடம் வீட்டிற்கே ஒரு கேந்திரஸ்தானம். வாசலில்
வருபவர், மாடிக்குப் போகிறவர், உள்ளே செல்பவர்,உள்ளிருந்து வெளியேறுபவர் அவ்வளவு பேரையும் படுத்தபடியே கண்காணிக்கலாம். சீனிக்கும், ராகவனுக்கும் சங்கடமானதொரு ஸ்தலம் இது.. இப்போது இருவரும் மெல்ல மாடி ஏற முயன்றபோது, ‘’டேய்’’ என்ற அதிகாரக் குரல்
கேட்டு நின்றார்கள்.

(இந்த இடத்தில் நான் ஒன்று கூறவேண்டியுள்ளது.சின்ன வயதில் எங்கள் நிலை இதுபோல்தான் இருக்கும். மிகக் கண்டிப்புக் காரரான என் தந்தை,,,,
வீட்டில் இம்மாதிரி ஒரு கேந்திரஸ்தானத்தில்தான் அமர்ந்து புத்தகத்தைக்
கையில் வைத்திருப்பார். அவர் அறியாமல் அணுவும் அசைய முடியாது.
அந்தக் காலத்தில் எல்லார்ரும் இப்படித்தான் இருப்பார்கள் போலிருக்கிறது
அப்போதுதான் குடும்பத்தில் ஒரு டிசிப்ளின் இருக்கும் என்று நினைத்திருப்பார்கள் போலிருக்கிறது..)


‘’மாடியில் என்னடா உங்களுக்கு?’’

‘’’சும்மாதான் போகிறோம்’’ என்றான் ராகவன்.

‘’சும்மா ஒருத்தன் மாடி ஏறுவானா? உம்—வாத்தியார் வந்திருக்கிறார் அல்லவா? நீங்கள் சும்மா சும்மா மாடி ஏறி இறங்கிக் கொண்டிருக்கவா
அவர் வந்திருக்கிறார்? உங்கள் பாடங்களைச் சொல்கிறதற்கென்ன? ஹூம்’’—


‘’அவர் இன்னும் எங்களைக் கேட்கவில்லை’’ என்று முனகினான் ராகவன்.

‘’அசத்து! அவர் கேடகமாட்டார். நீங்கள்தான் அவருக்குச் சொல்லணும். அவர்
சொல்லித்தர இல்லை. நீங்கள்தான் கற்றுக் கொள்ள இருக்கிறீர்கள். அதுதான்
விஷயம். நீங்கள் கேடகாவிட்டால் , அவர் பாட்டுக்கு இருந்துவிட்டுப் போகிறார்.!’’

சந்தானம் தன்னையும் சேர்த்துத்தான் குறிப்பிடுகிறாரோ என்று வேதாந்தம்
உள்ளூறக் கவலைப் பட்டான். ஆனால் ஆசாமியைப் புரிந்து கொள்ளுமுன், வாயைத் திறக்கக்கூடாதென்று பேசாமல் பின்னாலேயே நின்றான்.

சாரங்கன் குறுக்கே , ‘’வாத்தியாரும் பொறுப்பாக நடந்து கொண்டு,’’ இன்றைக்கு இது ஆயிற்று’ என்று இருக்க வேண்டாமா? நமக்கென்ன, மாசமானால் சம்பளம்’ என்று நினைக்கப் படாதே! என்றான்.


‘’அதுவும் சரி! அவர் அப்படி இருந்தால் நஷ்டம் யாருக்கு? நம்ம பயல்கள்தான் நெரியாததைக் கேட்டுக் கொண்டும், அப்பப்போ வாசித்துக் கொண்டும் வரணும்.!’’ என்றார் சந்தானம். பிறகு அவருக்கு ஏதோ நினைவுக்கு வந்தவ் போல சடாரென்று நிமிர்ந்து உடகார்ந்தார்.


‘இந்த ராஜகோபாலன் (சீனியின் அடுத்த அண்ணா) கோவேறு கழுதை1 காலேஜில் படித்தானே! என்ன திமிர்! என்ன நடை! ஜமீந்தார் பிள்ளை என்று நினைத்துக் கொள்கிறது, ஜமா சேத்துக்கறது, ஊர் சுத்தறது! அட1 நமக்குப் பணம் இருந்தது. நஷ்டப் பட்டோம்1 இல்லையென்றால் என்ன கதியாகிறது? ஹூம்! அப்பப்போ பாடங்களை வாசி என்று முட்டிக் கொண்டேனே. காதில் போட்டுக் கொண்டானா? கோயில் மாடாட்டமா அலையறது1 கடைசியிலே என்ன? கடைசியிலே என்ன ஆச்சு? எதிர் பார்த்தது நடந்து விட்டது.’’ என்று
இரைச்சலில் ஆரம்பித்தார்.


‘நம்ம ராஜகோபாலன் பரீட்சை எழுதின வருஷம் ஒரே ‘ஸ்லாட்டர்’ மாமா!—அதை—‘ என்று சாரங்கன் பேசினதை அவர் கேட்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை.


‘’ யாருக்கு ஸ்லாட்டர்’’? கையாலாகாதவன் பேசற பேச்சுன்னா அது! இவனை யார் ஜயா முப்பது மார்க்குக்குத் தயார் பண்ணிக்கச் சொன்னது? புத்தகத்திலே இல்லாத்தைப் பரீடசையில் கேட்டுவிடவில்லையே, ஜயா? நான் சொல்றேனே! படிப்பை என்னமோ விளையாட்டு மாதிரின்னா நடத்தினான். முதல் வருஷத்திலே அடுத்த வருஷம் படித்து விடலாம் என்கிறது. அடுத்த வருஷத்திலே, பின் ஆறு மாசத்திலே படிக்கலாம் என்று ஒத்திப் போடுகிறது. அப்புறம் கடைசி’ டெர்ம்’லே படிக்கலாம் என்கிறது அப்புறம் கேள்விப் பேப்பர் லீக் ஆகாதான்னு திரியறது! எப்படி ஜயா பாஸ் ஆகும் எனகிறேன்! சீச் சீச் சீச்சீ! இந்தக் காலேஜ் படிப்பிலே பசங்கள் தலைவிரிச்சு ஆடினதிலே எத்தனை குடும்பம் வீணாகப்போயிடுத்து ஜயா! பெற்றவன் கடன் வாங்கி, உடன் வாங்கி மானத்தை விற்று, தலையை அடகு வைத்துக் காலேஜில் சேர்த்தால், இவன் ‘பிக்னிக்’ பண்ணிக் கொண்டு அலைகிறான் முடிவு என்ன ஆகும்? நான் சொல்றேன், மூணு பார்ட்டும் போடுகிறது நாமம்’’ மூச்சு வாங்கியது அவருக்கு.

சாரங்கன் இரண்டு முறை ஏதோ பதில் சொல்ல வாயைத் திறந்தான் மாமனார்
குரல் ஓங்கியிருக்கவே ஒன்றும் உபயோகம் இல்லையென்று அடங்கினான்.
இரைச்சலைக் கேட்டு வைதேகி ஏதேனும் சண்டைதான் மூண்டு விட்டதோ என்று விரைந்து வரவே, ‘’ ஒன்றுமில்லை1 எல்லாம் தமாஷ்!’’ என்று சொல்லிச் சாரங்கன் அவளை அனுப்பினான் உள்ளே.


சந்தானம் உறுமினார். ‘’வாத்தியார் எனகிற பக்தி போயிடுத்து. வாட் ஈஸ் தி ரிஸல்ட்? நாசம், நாசம் தான்!’’


சாரங்கனுக்கு ‘ஆமாம், ஆமாம்’ என்று தலையை ஆட்டுவது தவிர வேறு வழியில்லை. வாயடைத்துச் சிலை போல ஸதம்பித்து உட்கார்ந்து விட்டான்.

(அமரர் தேவன்—மிஸ்டர் வேதாந்தம்)

--

Saturday, January 7, 2012

தேவன்- மனிதரில் பலவிதம்--12

a





.
‘’ஸாருக்கு எந்த ஊர்?’’ என்று சாரங்கன் அப்போது விசாரித்தான்.

‘’எனக்கு தூத்துக்குடி கிராமம் கும்பகோணம் காலேஜில் படித்தேன்’’.

‘’கும்ப கோணத்தில் ஜாகையோ?’’

‘’இல்லை. ஹாஸ்டலில் இருந்தேன்!’’

இந்த வேலைக்கு வருகிறவன் ஹாஸ்டலில் எப்படி இருந்தான் என்பதை
சம்சயிக்கிற மாதிரி அவனைப் பார்த்து சாரங்கன் விழித்தான். பிறகு தானே ஒரு மாதிரி சமாதானம் செய்து கொண்டது போல் பல முறை தலையை
ஆட்டினான். இங்கே நடப்பதில் சிரத்தையே இல்லாதவனாக வெங்கடாச்சாரி முற்றும் மௌனமாக இருந்தான்.


இதற்குள் குப்புசாமி அன்னத்தை முதலில் இலைகளில் பறிமாறவும்,ஸ்தி ரிகளும் தொடர்ந்து முனைந்தார்கள். வெள்ளரிக்காய்ப் பச்சடியை மைதிலி பரிமாறியபோது, வேதாந்தத்தின் இலையில் இரண்டு கரண்டிகளாக வார்த்தாள்.
‘ஆகா! இங்கே என்னிடம் அநுதாபம் கொள்ளும் ஆத்மா ஒன்றும் இருக்கிறதா?’’ என்று நிமிர்ந்து அவளைப் பார்த்தான். மைதிலி அநுதாபத்தின் மீது அவ்வாறு செய்தாளா, அகஸ்மாத்தாக அவ்வாறு செய்தாளா என்பதை அவளுடைய நிஷ்களங்கமான முகத்திலிருந்து அவனால் ஊகிக்க முடியவில்லை.


வைதேகி நெய்ப்பாத்திரத்துடன் பிரசன்னமானாள். சாரங்கன் இலையில் முழுசாக இரண்டு கரண்டி வார்த்துவிட்டு, ‘’கையையும் காட்டுங்கள் சொல்கிறேன்!’’ என்று அதட்டி உத்தரவு போட்டாள். சாரங்கன் கீழ்படிந்தான். கரகரத்த குரலில், ‘’அப்பா1 உங்கள் மாப்பிள்ளைக்கு அசாத்திய உஷ்ணம்.
ஓரொரு நாள் இருமல் பிடித்துக் கொண்டால், ராத்தூக்கம் கிடையாது. எப்பப்
பார்த்தாலும் ஆபீஸ் வேலை, இல்லாவிட்டால் ஸ்நேகிதாளோடு பேச்சு, அலைச்சல்! சொன்னால் கேட்கிறதில்லை.!’’ என்றாள் புகாராக.


சந்தானம் பெருமை கலந்த புன்னகையுடன் மாப்பிள்ளையைப் பார்த்தார்.

‘’நான் என்ன பண்ணுவேன்! ஆபீஸிலே ஏதேனும் சந்தேகம்னா,நம்ம கிட்ட ஓடி
வந்துடறான்., அவ்வளவு பேரும், மூணு அஸிஸ்டெண்ட் செகரிட்டரிகள் ஞாயிற்றுக் கிழமை நம் வீட்டில் பழி கிடக்கிறார்கள். முந்தாநாள் பாருங்கள், சித்தே படுக்கலாம்னு வந்தேன். லெப்டினண்ட் கர்னல் நடேசன் டின்னருக்குக் கூப்பிட்டுட்டார். மாட்டேன்னு சொல்ல முடியவில்லை.!’’


‘’சினேகிதாள்! என்ன பண்றது! பெரிய பதவி என்றால் இதெல்லாம் தவிர்க்க முடியாது—சமாளிக்கறதிலேதான் சாமர்த்தியம் இருக்கிறது! ஒருத்தரையும் பார்க்க முடியாதுன்னு சமையால் கட்டிலே இருந்துவிட்டால் அப்புறம் என்ன1’’
என்றார் பெரியவர்.


மாதுஸ்ரீ கௌசல்யா பொரித்த அப்பளங்களுடன் வெளியே வந்தாள். மாப்பிள்ளையிடம் வரும் போது கை தவறி மூன்று அப்பளங்கள் விழுந்துவிட்டன.! ‘’மாப்பிள்ளை, இத்தனை செல்வாக்கில் கொஞ்சம் உபயோகப் படுத்தி, நம்ம வெங்கடாச்சாரியை ஒரு நல்ல வேலையில் உட்கார்த்தட்டும்!’’ என்றாள்.

‘’மைதிலியின் பெரியப்பாதான் டிஸ்டிரிக்ட் ஜட்ஜாயிருக்கிறார். ‘வா’ என்றுகூட எழுதியிருந்தார்.வெங்கடாச்சாரிக்குப் போக இஷ்டம் இல்லை.!’’ என்று பெரியவர் கூறினார்.

‘’பார்க்கிறேன், பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்!’ என்றான் சாரங்கன்
அமுத்தலாக.

‘’ஏண்டா, பறக்காவெட்டி! அதுக்குள்ளே அப்பளத்தைத் தின்னு தொலைச்சிட்டியா?’’ என்று பொதுவில் கௌசல்யா சொல்லவும், வேதாந்தம்
தன்னைத்தான் சொல்கிறாளோ என்று திடுக்கிட்டுப் போனான். நல்ல வேளையாக வாண்டுப் பயல் சுந்துவைச் சொன்ன வார்த்தை அது.!

‘முதுகில் நாலு வையேன் சுடச்சுட!’’ என்று வைதேகி பல்லைக் கடித்து சிபாரிசு செய்தாள்.

‘வாத்தியார் சாமர்த்தியத்தை அதில்தான் பார்க்கப் போகிறேன்! சுந்துவை மட்டும் வழிக்குக் கொண்டு வந்துவிட்டால் அவர் கெட்டிக்கார்ரஃதான்.!’’ என்று சந்தானம் சொல்லவும் , ‘’ சுந்துவுக்கு ‘ட்யூஷன் வாத்தியார் வேறயா?’’ என்று
அவர் மனைவி கேட்டாள்.

இப்போது பேச்சு வேதாந்த்தஃதின் பக்கம் திரும்பியது.’’என்னென்ன சொல்லித்தர வேண்டியதென்று வாத்தியார் கேட்டுக் கொண்டுவிட்டார் அல்லவா? என்று சாரங்கன் விசாரித்தான். இந்தக் கேள்வி வேதாந்தத்தைப் பார்த்துக் கேட்கப் பட்டது
‘’இன்னும் இல்லை. மத்தியானம் கேட்டுக் கொள்கிறேன்’’ என்று பதில் கூறினான் வேதாந்தம்.

ஊறுகாய் ஜாடியுடன் வந்த வைதேகி, ‘’ அப்பா! நீங்கள் யாரிடம் ட்யூஷனுக்கு ஆள் அழைத்துவருவதாகச் சொன்னேள்! இங்கே இவரானால் ‘பஸ்ட் கிளாஸ்
பிள்ளையாகப் பொறுக்கி வைத்துக் கொண்டிருக்கிறார். அவனைக்கூட இங்கு வரச் சொல்லி இருக்கிறார். பாருங்கள்! காலம்பற சமையல் காரி வந்து சொன்னப்புறந்தான், நீங்கள் கூட்டிக் கொண்டு வந்த சமாச்சாரமே தெரியும்!’’
என்றாள்.


கரகரவென்ற தொண்டையிலிருந்து வந்த இந்தக் கரகரப்பான விஷயம், வேதாந்தத்தின் நெஞ்சை அரித்தது. இந்த அற்ப வேலையில் கூடப் போட்டியா? அட என் கடவுளே.!


‘’வரட்டும், வரட்டும்! இவன் ஏதோ வந்து கேட்டான். சட்டென்று நான் தீர்மானம் பண்ணிவிட்டேன்!’’ என்றார் சந்தானம்.

‘, ‘’அதிர்ஷ்டம் யாருக்கு இருக்கிறதோ, அவர்களுக்குக் கிடைக்கிறது! நான் இவரிடம் உடனேயே சொல்லிவிட்டேன். வாத்தியார் நடந்து கொள்ளுகிற முறையிலேயும் இருக்கிறதே எல்லாம்! இல்லையா?’’


ஒரே நிமிஷத்தில் வேதாந்தத்தின் மனம் புழுவெனத் துடித்தது அனேகமாகத் தன்னை அவமானப் படுத்தும் முறையிலேயே பேசும் இந்தக் குடும்பத்திறகு வந்தோமே என்று வெதும்பினான். அவனிடம் பணம் இல்லை. ஆனால் உள்ளம் இருந்தது. தலையைக் கவிழ்த்துக் கொண்ட வேதாந்தம் அகஸ்மாத்தாக சமையற்கட்டின் பக்கம் பார்வையைச் செலுத்தினான். இரக்கம் தோய்ந்த முகத்துடன் மைதிலி அங்கே அவனையே பார்த்த வண்ணம் நின்று
கொண்டிருந்தாள். சற்று ஆறுதல்தான். ஆனால் இந்தத்தெய்வம் அவளுடைய நாத்தனாரை அடக்கும் சக்தி; பெற்றிருக்கவில்லையே! ஒரு பெரு மூச்சு விட்டான் வேதாந்தம்


சாப்பாடு முடிந்து எல்லாரும் எழுந்தார்கள் இப்படியாகத் தினமும் சாப்பாட்டு வேளையில் பேச்சு நடக்கிறதென்றால், இதைவிட நரகம் வேறு இராதே என்று
வேதாந்தம் பயந்தான். ஆனால்,தனது அச்சத்தை வெளியில் காட்டிக் கொள்ளாமலே மெல்லக் கூடத்துக்கு வந்தான்.

(அமரர் தேவன்—மிஸ்டர் வேதாந்தம்)

Friday, January 6, 2012

தேவன்- மனிதரில் பலவிதம்--11

a





.

‘சந்தானம் அய்யங்கார் குடும்பத்தில் ஒவ்வொருவர் ஒவ்வொருமாதிரி இருக்கி
றார்களே? இவர்களில் யாரைத்திருப்தி செயதால் சிறிது காலமாவது இங்கே
தங்க முடியும்?. யாரை விரோதித்துக் கொண்டால் உடனே வேலை போகும்?
சந்தானம் அய்யங்கார் எப்படிப பட்டவர். குடும்பத்தை ஆட்டி வைப்பவர்
என்று தோன்றுகிறதே1இதே போல் அவனையும் ஆட்டி வைப்பாரா? இத்தனை
எஜமானர்களைச் சமாளிப்பது எப்படி? லகு என்று நினைத்து வந்த விஷயம்
சிக்கலாக அல்லவா இருக்கும் போலிருக்கிறது!


வேதாந்தத்தின் மனதை கவலை வந்து கப்பிக் கொண்டது. தலையை நிமிர்ந்த
போது, வாசற்படியண்டை நின்ற ஓர் ஆசாமியைக் கண்டான்.தோளில் அழுக்குச
சவுக்கம், இடையில் தூக்கிக் கட்டிய வேஷ்டி. எவ்வளவு நேரமாக நிறகிறானோ?


‘’மிஸ்டர்! நீர்தான் இவ்கே ட்யூஷனுக்கு வந்திருக்கிறதோ? என்று அலடசியமாக்கஃ கேட்டான்.

‘’ஆமாம்! நீங்கள் யார்?’’

‘’நான் இந்த வீட்டில் குக்—சமையல் டிபார்ட்மெண்டஃ-கீழே எல்லாருக்கும் இலை போடுகிற டைம் ஆகிவிட்டது.! சாப்பிட வருகிறதானால், சீக்கிரம் வந்து சேரும்! இந்த வீட்டு எஜமானருக்கு எப்போ எதறகுக் கோபம் வரும் என்று
சொல்வதறகில்லை.—‘’ என்றான்


வருமுன் எஊமானரின் கோபத்தைத் தூண்ட விரும்பாதவனாக, அப்படியே கடிதத்தை வைத்துப் பெட்டியை மூடிவிட்டு, ஸ்நானத்திறகு ஓடினான். திரும்பி மேலே வந்தபோது அவன் நெஞ்சம் பற்றி எறியச் செய்யும் காரியம் அங்கே
நடந்து கொண்டிருந்தது.


ராகவன் எனகிற பையன் அவன் கடித்ததை எடுத்து வைத்துக் கொண்டு, இரைந்து அபிநயங்களுடன் வார்த்தை வார்த்தையாகப் படித்துக் காணபிக்க,
சீனி, சம்பகா, ஜானகி பாபு, கண்ணன் ஆகியோர் குபீர் என்று சிரித்து ஆரவாரம்
செய்து கொண்டிருந்தார்கள்.!


சிறிது நேரம் வரையில் அறைக்கு வெளியே நெஞ்சம் துடிக்க, கை கால்கள்
பதற நிறபதை ராகவன் கவனிக்கவே இல்லை. இந்தக் காரியம் செயத்தற்கு
நியாயமாகத் தலா இரண்டு அடியாவது பளீர் பளீர் என்று கொடுத்தாக வேண்டும். அப்படிக் கொடுக்கும் நிலையில் அவன் இருந்தானா? அன்றுதான்
அங்கே வந்திருக்கிறான். சிஷ்யப் பிள்ளைகளுக்குப் பாடம் என்று இன்னும் ஒரு வார்த்தைகூடச் சொல்லித்தரவில்லை.அதறகுள் ‘சிக்ஷையில் இறங்குவதா? தவிர அவன் விதி, அந்த வீட்டிலேயே இருந்தாக வேண்டுமே!
சந்தானம் அய்யங்காரிடம் இதைப் புகாராகச் சொல்லலாமா? பலன் இருக்குமா?


வேதாந்தம் இப்படியெல்லாம் மனதைப் போட்டு உளைத்துக் கொண்டிதுந்த சமயம், ராகவனும் வேதாந்தத்தை மனக்கண்ணால் எடை போட்டுக் கொண்டுதானிருந்தான். இவன் என்ன செயது விடுகிறான் பார்த்துவிடுவது! என்று காத்திருந்தான். பாட்டனாரிடம் ராகவனுக்கு திகில் உண்டு. ஆனால்
பாட்டனார்வரை இந்த ஆசாமி போவானா? அத்தனை தெம்பு இருக்கிறதா?


‘’கொடேண்டா அவர் கடுதாசியை!’’ என்றான் சீனி. அவனுடைய எண்ணம் இந்த நிலை அதிகம் நீடித்தால், அவர்களுடைய கடசி பலவீனம் ஆகி விடும் என்பதே. தவிர, பிசகு ஒன்றும் செய்து.விடவில்லை என்பது மாதிரி ஒரு துணிச்சலாக நடித்தால் ஒரு வேளை தப்பித்துக் கொள்வதும் சாத்தியமாகலாம்
அல்லவா?


‘’என் பெட்டியைத் திறந்து எடுத்து இப்படி என் கடுதாசியை வாசிக்கலாமா?’’ என்று கேட்டான் வேதாந்தம்.

‘சார் நீங்கள் இரண்டு பிசகு செய்கிறீர்கள்!’’ என்றான் ராகவன்.

‘’நானா இப்போது பிசகு செய்துவிட்டேன்?’ என்று ஆச்சரியத்துடன் வினவினான் வேதாந்தம்.

‘’ஆமாம் சார்! முதலாவது உங்கள் பெட்டியை நான் திறக்கவில்லை. பிறத்தியார் பெட்டியை நான் ஏன் திறக்கணும்?? இந்தக் கடுதாசி கீழே கிடந்தது. அப்புறம் இதை ‘என் கடுதாசி’ என்கிறீர்கள். இதுவரை இது உங்கள் கடுதாசி என்று எனக்குத் தெரியாது. ஏதோ ஒரு கதை மாதிரி இருந்தது, படித்தேன்.!’’

‘’நான்கூடக் கதை என்றுதான் இதுவரை நினைத்தேன். உங்களைப் பார்த்தபிறகுதான், உங்களுடையதென்று தெரிகிறது!’’ என்று ஒத்துப் பாடினான் சீனி, போக்கிரிப் பையன்!


‘’நான் ஞாபகமாகப் பெட்டிக்குள்தானே வைத்துவிட்டுப் போனேன்!’’

எனக்கு அது சமாச்சாரம் தெரியாது, சார்! நான் இங்கே வந்தபோது அது கீழேதான் கிடந்தது—‘’

‘’ஏன் சார் வீண் வம்பு? உங்களுக்குச் சந்தேகமானால், இனிமேல் இது மாதிரிக் கடிதங்களைப் பூட்டியே வைத்துவிடுங்கள்! அவ்வளவுதானே?’’ என்றான் சீனி, இருவருக்கும் சமாதானமாக.

‘’இன்னொன்றும் சொல்லுவேன்நான்! இது மாதிரி லெட்டர்களை வீட்டில் எழுதாமல்கூட இருக்கலாம்! தாத்தாவுக்குத் தெரிந்தால் ஆபத்து’’ என்றான் ராகவன்.

‘’லெட்டரைக் கொடுத்துவிட்டுச் சாப்பிட வா! அதறகு இப்போ அப்பாவிடம் வசவு வாங்க வேண்டாம்!’’ என்று அழைத்தான் சீனி.

இரண்டு பேரும் கீழே போனார்கள். வேதாந்தம் தன் கடித்ததை எடுத்து மறுபடி
பெட்டிக்குள் வைத்து ஒரு நீண்ட பெருமூச்சுவிட்டான். இதற்கெல்லாம் அழுவதா சிரிப்பதா என்று அவனுக்குத் தெரியவில்லை. அவனை வாயடி அடிக்கும் இந்தப்பிள்ளைகள் எப்படி அவனிடம் பாடம் கேடகப் போகிறார்கள்? சந்தானம் அய்யங்காரை அவன் எப்படி திருப்தி செய்து வைக்கப் போகிறான்?


சமையல்காரக் குப்புசாமிவந்து, இலை போட்டாயிற்று என்றும், பெரியவர் காத்திருக்கிறார் என்றும் அழைத்தான். வேதாந்தம் சென்றபோது ‘டைனிங்’ ஹாலில் மாப்பிள்ளை சாரங்கன் உட்பட எல்லாரும் சாப்பாட்டிறகுத் தயாராக
உட்கார்ந்திருந்தார்கள். சீனியும் ராகவனும் கூட அடுத்தடுத்து, பரம சாதுக்கள் போல் இருந்தார்கள். பாபு, கண்ணன் இருவரில், கண்ணன் மட்டும் வேதாந்தம் வந்தவுடனே ‘களுக்’ கென்று சிரித்துத் தலையைக் கவிழ்த்துக் கொண்டான்.


‘ஏண்டா, இந்தப் பயலுக்குப் பள்ளிக் கூடத்தில் இப்படி யாராவது சிரிக்கச் சொல்லித் தருகிறானோடா?! கொஞ்சம் கூட நன்னாவே இல்லையே!நான்
நாலைந்து தடவை கவனித்துவிட்டேன்.!’’ என்றார் சந்தானம். கண்ணன்
தலையை நிமிரவே இல்லை.’’நிமிர் தலையை’’; என்று சாரங்கன் அதட்டவே கண்ணன் ஒருமுறை தலையைத் தூக்கிக் காட்டிவிட்டு,மறுபடியும் கவிழ்த்துக் கொண்டான்.

‘’ இந்தக் கெட்ட பழக்கமெல்லாம் வாத்யார்தான் பார்த்து விரட்டணும்.
என்ன வேதாந்தம்! வாத்யாருக்கே இது ஒரு பரிட்சை! என்றார் சந்தானம்.

(அமரர் தேவன்—மிஸ்டர் வேதாந்தம்)

Thursday, January 5, 2012

தேவன்- மனிதரில் பலவிதம்-10

a





.



அத்தை அடிக்கடி ‘’பெருமாள் இருக்கிறார், பெருமாள் பார்த்துக் கொள்வார்’’ என்று சொல்லுவாளே!அவர்தான் இங்கே இந்த உருவத்தில் வந்து அவனை
இப்போது காப்பாற்றினாரா? பட்டணத்தில் கோயில் கொண்டிருக்கும் பார்த்த
சாரதியே இவரை அனுப்பி,’’வேதாந்தம் வந்து கொண்டிருக்கிறான், பட்டணத்திறகு அவன் புதிசு , பரம சாது, தாய் தகப்பன் இல்லாத பிள்ளை, நீ கவனித்துக் கொள்’’ என்று உத்தரவு போட்டிருக்கிறாரா?


‘’பார்த்தசாரதி’’ என்றதும் , அத்தையுடனும் செல்லத்துடனும் ஒரு நாள் ராமாயணப் பிரவசனம் கேடகப் போயிருந்தபோது தெரிந்து கொண்ட ஒரு
அறபுதமான’ உபகதை’ மனதில் முன்னே எழுந்தது.


ராமாயணம் சொல்பவர் ஒரு மகான். அனுபவித்துச் சொன்னார். அவர் உள்ளத்தில் இருந்த ஒளியை நாற்புறமும் வீசினார் .சம்ஸ்கிருத ஸ்லோகங்களை தேன் மழையாகப் பொழிந்தார் அவ்வப்போது வேதததிலிருந்து வாக்கியங்களையும் திருஷ்டாந்தமாககஃ காட்டினார். பரவசம்
கொள்ளும்படி உபகதைகளை எடுத்துச் சொன்னார்.


அன்று அவர் சொன்ன கதை ஆதிசங்கரர்,மாத்ருகர்மா செய்தது பற்றியது.
சனயாசம் பெற்றுக் கொண்டு செல்லும்போது போது அவர் மாதாவிடம்’’ அம்மா! நான் எங்கே இருந்தாலும் உன் வியோக காலத்திலே என்னை நினைத்துக் கொள். உன் பக்கத்திலே ஓடி வந்து விடுகிறேன்.’’ என்று கூறி
விடை பெற்றுக் கொண்டார். பல வருஷங்களுக்குப் பிற்பாடு, சிஷ்யர்களுக்கு மத்தியில் பாடம் சொல்லிக் கொண்டிருக்கும் போது, சங்கர்ருடைய கணகளில் நீர் சுரந்தது. அருகாமையில் இருந்த சீடர் , இதைக் கவனித்து காரணம் என்னவென்று கேடகவும் , பகவத்பாதர், ‘’என் தாயாரிடம் வருவதாகச் சொல்லியிருந்தேன் . இப்போது என்னை நினைத்துக் கொள்கிறாள்கிறாள்.!’’ என்று கூறிவிட்டு கிருஷ்ணனை மனதில் தியானம் செயது எட்டு ஸ்லோகங்களைச் சொன்னார். உடனே பார்த்தசாரதி, ருக்மணி சமேதராக, சங்கர்ருடைய மாதாவின் பக்கத்திற்குப் போய்விட்டார்.


ஏன் ஆச்சாரியர்கள் தாமே முதலில் போகவில்லையென்றால்,தன் பிள்ளை கிருஹஸ்தனாக, மனைவி மக்களுடன் இருக்கவேணும் என்பது மாதாவின் ஆசை. அவளுடைய மரண சமயத்தில் காஷாயதாரியாகத் தம்மைப் பார்த்தால்
ஆயாசம் பொள்ளுவாளோ என்றே கிருஷ்ணனை வேண்டினாராம்.




‘’அம்மா!’’ என்றார் பார்த்த சாரதி.

‘’ சங்கரா!’’ என்று கண்ணைத்திறந்த தாயாருக்கு, கிருஷ்ணபரமாத்மா தரிசனம்
தந்தார்.. புளகாங்கிதம் அடைந்துவிட்டாள் அவள். ‘’என் குல தெய்வமான நீயா என் பக்கத்திறகு வந்துவிட்டாய்?’’ என்று கேட்டாள்.


‘’ஆம். உன் பிள்ளை உத்தரவு போட்டுவிட்டான். ஓடிவந்துவிட்டேன்.’’ என்றார் பார்த்தசாரதி.

என் பிள்ளையா? சங்கரனா? அவனா, உனக்கா உத்தரவு போட்டான்?’’

‘’ஆமாம்! சங்கரன் என்றால் யார் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்?,அம்மா! கைலாசபதியான சங்கரனே அல்லவா அவன்!’’’

இந்தக் கதை ஞாபகம் வந்தது வேதாந்தத்திறகு இரு கணகளிலும் ஜலம் சுரந்து வழிந்தது. பக்த பராதீன்னான பிரபு, அத்தை சொல்லிக்கூடக் கேட்டுவிட்டாரா?
இது அவருடைய ஊரல்லவா என்று நினைத்துக் கொண்டான் வேதாந்தம்.
குருக்ஷேத்திரத்திலே தன் பிரதிக்ஞை போனாலும் போகட்டும், பகதனுடைய பிரதிக்ஞை வீணாக்கஃ கூடாதென்று பீஷ்மாசாரியாருக்காக ரதஃததிலிருந்து குதித்து ஓடி
வந்த மங்களமூர்த்தி ஆயிற்றே? கண்ணீர் வழிந்து கொண்டேயிருந்தது வேதாந்தத்திறகு அவன் முகத்தையே உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தார்
எதிரில் இருந்தவர்.


ஏன் சார்1 இட்லியில் மிளகாய்ப்பொடி ரொம்பக் காரமாகிவிட்டதோ?’’ என்று குறும்பாககஃ கேட்டார்.

பதில் சொல்ல முயன்றான் வேதாந்தம். அவனால் முடியவில்லை. மிகுந்த பிரயாசையுடன், நீங்கள் செயத உபகாரம் என்னால் மறக்க முடியாதது,சார்!
நான்—நான்—‘’ என்றான்.

‘’எனக்கு அந்த நான்சென்ஸெல்லாம் கேட்டுக் கொண்டிருக்க அவகாசம் இல்லை. நீர் சீக்கிரம் சாப்பிட்டுவிட்டு என்னுடன் வரப்போகிறீரா? இல்லை, நான்போய்விடட்டுமா?’’ என்று வெடுக்கென்று கேட்டார். அவருக்காக ஓட்டல்
வெளியே கார் நின்றது. ஸ்டேஷனில் அவரை எதிர்பார்த்து அது வந்திருக்கிறது. இப்போது டிரைவர் தன் ஸதானத்தைவிட்டு வண்டியின் பின்னால் ஒதுப்புறமாகப் போய் உடகார்ந்து கொண்டிருந்தான். ‘’உமக்கு எங்கே ஜயா போகணும்?’’ என்று வேதாந்தத்தைக் கேட்டார் அவர்.


‘’நான் ஆராவமுது கார்டன்ஸ் போகிறவன். மிக வந்தனம் நான் வரட்டுமா? என்று பதில் சொன்னான் வேதாந்தம்.

‘’உடகார் ஜயா, பக்கத்திலே! ஆராவமுது கார்டன்ஸிலே யார் வீடு?’’

கும்பகோணம் சந்தானம் அய்யங்கார். உங்களுக்குத் தெரியுமோ அவரை?’’

கார் போய்க் கொண்டிருந்தது.. ‘’எனக்கு இந்த ஊரில் யாரையுமே தெரியாது.

கும்பகோணம் எக்ஸ்டென்ஷனிலே இருக்கிறாரே, அவர்தானே’’?’’

‘’ஆமாம், அவர்தான்’’.

‘’அவர் வந்துவிட்டாரா? அவர் மாதிரி இருந்ததே! ஓஹோ! அவருக்கென்ன, நீர் மாப்பிள்ளையா? மாப்பிள்ளையாக இருந்தால் உம்மையும் கூடவே காரில் அழைத்துக் கொண்டு போயிருப்பாரே? அவர் வீட்டில் உமக்கென்ன காரியம்?’’

வேதாந்தம் சுருக்கமாக தான் ஒப்புக் கொண்டு வந்திருக்கும் வேலையைச் சொன்னான்.தன் ஊரைச் சொன்னானே ஒழிய தன் குடும்பத்தைப் பற்றிச் சொல்லவில்லை.

‘’எத்தனை பசங்களுக்கு டியூஷன்?’’

‘தெரியாது, ஜந்தாறு பேர் இருக்கலாம் என்று நினைக்கிறேன்.!’’

ஹஹ்ஹஹஃஹா!’ என்று சிரித்தார் அவர். நினைக்கிறீரா? எத்தனைபேருக்கு டியூஷன் என்று கேட்டுக் கொள்ளாமல் சம்பளம் பேசினீரோ?’’ என்று கேட்டார்.

‘’இப்போது சென்னைக்கி யாராவது அழைத்துவந்தால் போதும் என்ற நிலையில்
இருக்கிறேன்’’

‘’ அப்போ வேறு வேலை கிடைத்தால் உடனே இதை விட்டு விடுவீரோ?’’

‘’அப்படி இல்லை.சந்தானம் அய்யங்காரிடம் சொல்லாமல் நான் எதையும் செய்ய மாட்டேன்,’’

‘’அவர் போக்கஃ கூடாது என்றுதான் சொல்லுவார் ஹஹ்ஹா!—ஏழு பசங்க
ளுக்கு முப்பது ரூபாய்க்கு டியூஷன் சொல்லித்தர வேறு ஆள் கிடைப்பானா அவருக்கு!’’

(அமரர் தேவன்—மிஸ்டர் வேதாந்தம்)

Wednesday, January 4, 2012

தேவன்- மனிதரில் பலவிதம்-9

a





.





சுற்றும் முற்றும் பார்த்தான். அவனுக்கு அருகில் யாரும் இல்லை.இருந்த
இரண்டொருவரும் அவர்கள் காரியமாகவே இருந்தார்கள் எங்கே போய்விட்டது? எப்படிப் போய்விட்டது? யாரைப் போய்க் கேட்க முடியும்?


திணறிக் கொண்டு நிறகும் போதே, இருபது கஜத்திறகு அப்பால் ஒரு மோட்டாரின் கதவு தடார் என்று ஆவேசத்துடன் சாத்தப் படும் சத்தம்
கேட்டது. அதிலிருந்து இறங்கியவரை வேதாந்தத்திறகு நன்றாக ஞாபகம்இருந்தது.
கும்பகோணம் ஸ்டேஷனில் அவனைப் பார்த்துப் பேசியவரே அவர்.
வரும்போதே அவர் தொந்தியும் மார்பும் குலுங்கின. பல்லைக் கடித்துக் கொண்டு அவனை அடித்துவிடுபவர் போல் ஆவேசமாக வந்தார்.


பை நிறையப் பணம் இருந்தால் இருதயம் இருக்கத் தேவை இல்லை என்ற கொள்கையைக் கடைபிடிப்பவர்களின் கூட்டத்திறகுத் தலைமை
தாங்குபவர்கள், ஜேப்படிக்கார்ரஃகள். இவர்களிடம் சிக்கி அவஸ்தைக்குள்ளாகிறவர் அநேகமாகச் சூதுவாதறியாத அப்பாவி அயலூர்காரர்கள்,,கையில் இருக்கும் அத்தனை பணத்தையும் கோட்டைவிட்டுவிட்டு,டிராம் சத்ததிறகுக் கூட மார்க்கமின்றி,சுற்றிலும் ஒரு
தெரிந்த முகமேனும் இல்லாமல் திண்டாடும் இவர்களைப் பரிதாபமாககஃ கூட
நின்று பாராமல் ஜேப்படிக்காரன் ஓடி ஒளிந்து கொள்கிறான். ‘’ஜயோ பாவம்!
அத்தனை பணத்தையும் அடித்துக் கொண்டு போகிறோமே! ஊருக்குத் திரும்ப டிக்கட் வாங்கவோ, அல்லது ஒரு வேளை சாப்பிடவோ, சில்லரையை விட்டு வைப்போமே’’ என்ற எண்ணம் இவனுக்கு ஒரு போதும் ஏறபட்டதே இல்லை!



தன் சட்டைப் பையைத் தடவிப் பார்த்த வேதாந்தத்திறகு,அது
காலி என்றவுடன் உலகெங்குமே காலியாகிவிட்டது போன்றதொரு பிரமிப்பு ஏறபட்டது. எப்படிக் கொண்டு போனான்? நான் எவ்வளவோ ஜாக்கிரதையாக
வைத்துக் கொண்டிருந்தேனே!’’ என்று எண்ணி வியந்தான்.



‘’பட்டணம் போக்கிரி ஊர். ஜாக்கிரதை!’’என்று அத்திம்பேர்
சொன்னதாக அத்தை சொன்னாளே. ‘அது தெரிந்து இப்போது என்ன பிரயோசனம்?’’ என்று மனம் வருந்தினான். இந்த சமயத்தில்தான் காரிலிருந்து
அந்த புதிய, பெரிய மனிதர் இறங்கி, மார்பும் வயிரும் குலுங்க பல்லைக் கடித்துக் கொண்டு அவனை நோக்கி வந்து கொண்டிருந்தார். முட்டாள் பையா1
மகாபுத்திசாலி என்று நினைத்துக் கொண்டு பட்டணம் வந்ததும் வராத்துமாககஃ
கைக் காசைத்தொலைத்துவிட்டு விழிக்கிறாயே! அதைக் காபந்து செய்யத் தெரி
யாதவன் நீ! நீ என்ன சம்பாரித்துப் புறட்டிவிடப் போகிறாய்!’’ என்று கன்னத்தில் நாலு அறை வைக்கவே அவர் வருகிறார் என்று வேதாந்தம் எண்ணினான்.


அவருடைய வேகத்தைக்கண்டு வேதாந்தம் ஏமாந்து
போனான். அவர் அவனை நோக்கி வரவே இல்லை.! அவன் மீது கனமாக உராயந்து கொண்டு அவர் அவனையும் தாண்டி ஸ்டேஷன் படிக்கட்டுகள் மீது
துடியாக ஏறினார். அவன் சற்றும் எதிர்பாராத விதமாக, ஒரு தூண் அருகே சடக்கென்று நின்று, அங்கே பரம சாதுவாககஃ காணப்பட்ட ஓர் ஆசாமியின்
கழுத்தை முரட்டுத் தனமாகப் பற்றி இழுத்து, அவனை அப்படியே ஒரு வளை வளைத்தார் அதை அடுத்து, ‘’தொம்’’ ‘’ தொம்’’ என்று அவன் முதுகில் நாலைந்து குத்துகள் விழுந்தன. அதே சமயம் அவருடைய பூட்ஸ் கால்களும்
சுழன்று சுழன்று அவனுடைய பிருஷ்ட பாகவ்களையும் துடைகளையும் செம்மையாகத் தாக்கின. சுமார் பதினைந்து இடங்களிலாவது அடியும் உதையும் கொடுத்த பிறகே அவர் நிறுத்தினார். அவருடைய ஸ்தூல தேகத்திறகு இந்தப் பயிறசி ஏற்றதல்ல என்பதுபோல் மேல் மூச்சு வாங்கியது.
அவர் திணறினார். அடிபட்ட ஆள் முகத்தை நிமிர்த்தினான் அவனுக்கேகூட இது ஓர் அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்க வேண்டும். இல்லையெனில் இவ்வளவு வகையாகத் தன் கன்னத்தை அவருக்குக் காட்டியிருக்க மாட்டான்.!
பளார் பளார் என்று இரண்டு கன்னங்களிலும் அறைகள் விழுந்துவிட்டன. நிதானிக்கவும் அவகாசம் கொடுக்காமல் அவன் வயிற்றுக்கடியில் கை கொடுத்து அந்தப் புதிய மனிதர் ஒரு பணப் பையை வெளியே இழுத்துவிட்டார்.!.



‘ஏஞ்சாமி அவனைப் போட்டுக் கொல்ரீங்க?’’என்று கேட்டுக் கொண்டே வந்தான் யாரோ ஒருவன். இதற்குள் ஒரு சிறு கூட்டம் கூடிவிட்டது. ஏனா? இதறகுத்தான்! தெரிந்து கொள்!( பல்லைக் கடித்து) யாரிடம் இந்த வேலை காட்டுகிறான்.! பட்டணத்திறகு புதிதாக ஒரு ஆள் வந்து இறங்கினால், உடனே ஜேபியை அடிக்க வேண்டியதுதானா? நான்தான் காரில்
உடகார்ந்து, இருமாதிரி நடக்குமென்று எதிர்பார்த்து இங்கேயே கவனித்துக் கொண்டிருக்கிறேனே!’’



வேதாந்தம் திடுக்கிட்டான். அவன் பறிகொடுத்துவிட்டுப்
பரிதவித்துக் கொண்டிதுந்த பணப் பைதான் அவரிடம் இருந்தது. ‘’சார்!—என்னுடையது சார், அது!’’ என்றான்.


‘’உம்முடையதா? உம்ம பையில் இருந்தால்தான் உம்முடையது! நான் இதை வெளியே எடுக்காமல் இருந்தால் இவனுடையதுதான்!’’ ‘இவனுடையதுதான்’ என்னும் போதே, அந்த ஆசாமி மண்டையில்’ டக்’
கென்று ஒரு தட்டுத்தட்டி,
அவனை அடையாளமும் காட்டினார்


உம்ம பணம் பூராவும் இருக்கிறதா பாரும். அதறகுள் ஏதானும் குட்டி வேலை
செயதிருக்கப் போகிறான். என்றார் பெரிய மனிதர் வேதாந்தம் க்ஷணகாலத்தில் சொல்லிவிட்டான்.’’’ இருக்கிறது சார்.! இருக்கிறது’’’
இந்த சந்தர்பத்தில் அடி வாங்கினவன்மீது கைப் பிடியை அவர் தளர்த்தியிருக்க வேண்டும்.. கண் இமைக்கும் நேரத்தில் அவன் கையை உதறிக் கொண்டு, அங்கிருந்து நாவி, ஓட்டமாக ஓடி மறைந்துவிட்டான். ‘’பிடி, பிடி!’’ என்று நாலைந்து பேர் அவனைத் துரத்துவது போல் ஓடினார்கள்.


பெரியவர் சிரித்தார். ‘’ஓடுகிறவர்கள் எல்லாரும் அவனைச் சேர்ந்தவர்கள் துரத்துவது பாசாங்கு! வாரும், இப்போது எங்கே கிளம்பினீர்?’’ என்று கேட்டார் வேதாந்தத்தைப் பார்த்து.. ‘’ ஹோட்டலில் இரண்டு இட்டிலி சாப்பிடலாம் என்று எண்ணித்தான் பையில் கை வைத்தேன்’’
‘’இப்போ அந்த ஆளுக்கு முன்னாடி’ டிபன்’ பண்ணி வைத்தீர் வாரும் இங்கேயே நின்று கொண்டிதுந்தால்? கையை அலம்பிக் கொண்டு நானும் உம்மோடு இரண்டு இட்டிலி சாப்பிடுகிறேன். நீர் வாங்கித் தருகிறீரா?’’


இரண்டு பேரும் எழும்பூர் ஹோட்டலில் ஆகாரம் செயதார்கள். ‘’உங்களுக்கு எப்படி சார் தெரிந்தது? ஆச்சரியமாயிருக்கிறதே!’’ என்று கேட்டான் வேதாந்தம் அவன் கண்ணிலே நன்றி பெருக் கெடுத்து ஓடியது அப்போது அவர் ஒரு தெய்வமாகவே அவன் முன்னால் தென்பட்டார்.

(அமரர் தேவன்—மிஸ்டர் வேதாந்தம்)

Tuesday, January 3, 2012

தேவன்- மனிதரில் பலவிதம்-8

a





.



அடுத்தது ஒரு இண்டர் கிளாஸ் பெட்டி.அதற்க்கடுத்தது’ செகண்ட்’’ . போகும்போதே அதன் உள்ளே அசுவாரசியமாக எட்டிப் பார்த்தான்.
அதில் ஜன்னலோரம் படுத்திருந்த ஆஜானுபாகுவான ஒருவர் எழுந்து
உடகார்ந்து,’’ மிஸ்டர்’’! என்று அவனை அழைத்தார்.

‘’என்னையா கூப்பிட்டீர்கள்?’’ ’

‘’உம்மைத்தான்! இது கும்பகோணந்தானே?’’

‘’ஆமாம்—‘’

‘சற்று நில்லும். அந்த புக்ஸ்டாலில் எனக்கு ஒரு பத்திரிகை வாங்கித் தந்து

விட்டுப் போம்!’’

முன்பின் தெரியாத ஒரு மனிதர்இப்படித் தன்னை அதிகாரமாக ஏவுவதைக் கண்டு வேதாந்தத்துக்கு ஆச்சரியமே. ஆனாலும் அந்த மனிதருடைய முகத்திலிருந்த விலாசமும், தொனியிலிருந்த திடமும் அவனைக் கீழ்படியச் செயதன.

என்ன பத்திரிகை சார் உங்களுக்கு வேண்டும்?’’
எது வேணா!’ எனிதிங்’உமக்கு படிக்க என்ன வாங்குவீரோ அதை வாங்கிக்
கொண்டு வாருமேன்!’’
இதேதடா வேடிக்கை! என்று எண்ணி, ‘’இங்கிலீஷா, தமிழா? என்று மறுபடி கேட்டான்.
ஓயாமல் கேள்வி கேடகிறீரே,! நீர் இங்கிலீஷ்தான் படிப்பீரா? போய்ப் பாருங்க சார் அங்கே!’’ என்றார்.

ரயில் கிளம்ப அரைநிமிஷமே இருந்ததாகையால்,வீண் தர்க்கம் செய்ய வேண்டாமென்று ஒரு தமிழ்ப் பத்திரிகையை வாங்கிக் கொண்டு வந்து அவரிடம் கொடுத்தான். ‘’சரிதானே, சார்?’’

‘’ரொம்ப சரி! நீர் ரொம்ப புத்திசாலி! உமக்கு ரொம்ப தாங்ஸ்! போயட்டு வாரும்!’’ என்றார் அவர்.

வேதாந்தம் தயங்கினான். ‘’போய்ட்டு வாரும் என்று சொன்னப்புறமும் அங்கே நிற்கப்படாது!’ என்று அந்தப் புதிய மனிதர் கண்டிப்புடன் சொல்லிவிட்டு,
பத்திரிகையை வாசிக்கத் தொடங்கிவிட்டார்.

தன் வாழ்க்கையில் இந்த மனிதர் எத்தனை தூரம் உபயோகமாக இருக்கப்
போகிறார் எனபதை அறியாமலே வேதாந்தம் அடுத்ததாக இருந்த மூன்றாவது வகுப்புப் பெட்டியில் போய் ஏறிக் கொண்டான். சென்னைக்கு காலை 7-25க்கு
போட் மெயில் வருகிறது. மோட்டார்களும், டாக்ஸிகளும் , கோச்சுகளும், ஜட்காக்களும், ரிக்ஷாக்களும் பிரயாணிகளை வீடு கொண்டு சேர்க்கஃ காத்திருக்கும் நேரம் அது.

ஸ்டேஷனுக்கு வெளியே வரவேண்டிய பிரமேயமேயில்லாமல் பிளாட்பாரத்திலேயே சந்தானம் அய்யங்காருடைய குடும்பத்திறகாக ஒரு கார்
காத்திருந்தது. ஹைகோர்ட்டில் வேலையாக இருக்கும் அவருடைய மாப்பிள்ளை கார் அது..
எனபதை பிற்பாடு வேதாந்தம் தெரிந்து கொண்டான்.. ரயிலிலிருந்து இறங்கியதும் அவர்களைப் பின் பற்றிய வேதாந்தத்துக்கு ஒரு சிறு அதிர்ச்சி முதல் முதல் ஏறபட்டது. இவனைத்தவிர எல்லாரும் காரில் ஏறி உடகார்ந்துகொண்டுவிட்டார்கள்.கதவும் சார்த்தப் பட்டது.புறப்படவும் தொடங்கி
விட்டது.

‘’சார்!’’ என்று கூப்பிட்டான் வேதாந்தம்

‘’நீ ரிக்ஷாவில் வாயேன். காரில் இடம் இல்லை!’’ என்றார் சந்தானம்

‘வீட்டு விலாசம் சொல்லவில்லையே!’’ என்று கேட்டான் அவன்.

‘’விலாசமா! அதை முன்னாடியே கேட்டுக்கிறதற்கு என்ன?’’என்று சந்தானம்
அய்யங்கார் கூறிவிட்டு, பிள்ளையிடம் , ‘’சொல்லேன் அவனுக்கு1’’ என்று கர்ஜித்தார்.

மைதிலியின் கணவன் யார்காதிலும் விழாமல் முணுமுணுத்துக் கொண்டு, ‘’நீ இதறகு முன் மெடராஸ் வந்திருக்கிறாயா?’’ என்று கேட்டான்.

‘’இல்லை’’
நாசமாய்ப் போச்சு! ஹம்! ஏதானும் ஒரு ரிக்ஷாவில்ஏறிக்கொள். ‘எழும்பூர்-ஆராவமுது கார்டன்ஸ்’’னு சொல்லு பெரிய பாலம் ஏறி இறங்குவான்.
வந்து சேர்! ‘’ஆராவமுது கார்டன்ஸ்’’’’ஞாபகம் இருக்குமா?’’

கார் டிரைவர் நல்ல அநுபவஸ்தன். வேதாந்தம் பதில் சொல்லும்வரை நிற்காமல் , காரை ஓட்டிக் கொண்டு போய்விட்டான்.

டிக்கட்டைக் கொடுத்துவிட்டு வெளியே வந்தான் வேதாந்தம். எழும்பூர் ஸ்டேஷன் அவனுக்குத் திகைப்பாக இருந்தது. ‘’உர்ர்—உர்ர்’’ என்று ஓடும்
எலக்ட்ரிக் ரயில்கள் அவன் பிரமிப்பை அதிகரித்தன. வெளியே விரைந்து செல்லும் கார்களும் பஸ்களும் அவன் மதியைக் கலக்கின. அங்கிருப்பவர்கள்
எல்லாரும் அவன் குடுமியையே பார்ப்பதாக அவனுக்குத் தோன்றியது.


ஸ்டேஷனுக்கு எதிரே தென்பட்ட ஹோட்டலில் காபிசாப்பிட்டு பிறகு போகலாம் என்று எண்ணி ஸ்டேஷன் படிக்கட்டுகளிலிருந்து கீழே இறங்கி
நடந்தான். இறங்கும்போதே சட்டைப் பையில் கையை வைத்தான்.. வயிற்றில்
‘பகீர்’’ என்றது சற்றுமுன் வரை இருந்த மணி பர்ஸைக் காணோம்! இருபது வினாடிகள்முன் அது இருந்தது இப்போது இல்லை. இருநூறு ரூபாய்க்கு மேல் இருந்த பர்ஸ்!.

(அமரர் தேவன்—மி!ஸ்டர் வேதாந்தம்)

Monday, January 2, 2012

தேவன்- மனிதரில் பலவிதம்-7

a





.



.

போட் மெயில் வருவதறகு சிறிது நேரத்திறகு முன்பே கும்பகோணம்
ஸ்டேஷனில்ஜனக்கூட்டம் சேர்ந்துவிட்டது. பிளாட்பாரத்தின் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைக்கு நடை போட்டுக் கொண்டு சிலர்
பொழுது போக்கினர். மூட்டைகளை வாகனமாக பாவித்து ஆரோகணித்தபேர் பலர். ஸ்டேஷனில் கிடந்த பெரிய பெரிய மரப்பெட்டிகளை சிம்மாசனமாகப்
பாவித்தனர்., ஸ்டேஷனில் செலவாக்கு பெற்ற ஒரு சிலர்.




நேரம் நெருங்க, ஜனங்கள் வந்து கொண்டேயிருந்தனர். ‘’ஏது, இன்று மெயிலில் இடமே கிடைக்காது போல் இருக்கிறதே!’’ என்று வேதாந்தம்
கவலை கொள்ளும் அளவுக்கு ஜனங்கள் கூடிய பிறகுதான் சந்தானம் அய்யங்காரும் அவர் பந்து ஜனங்களும் அங்கே பிரவேசம் செயதார்கள்.



சந்தானம் அய்யங்கார் வெகு விறைப்பாக, ஸ்டேஈனையே விலைக்கு வாங்கி
விட்டவர் போலும், இதுபோன்று அனேகம் ஸடேஷன்களை விலைபேசச் சட்டைப் பையில் தயாராகப் பணம் வைத்திருப்பவர் போலும் காணப் பட்டார்.
அவரைப் பின் தொடர்ந்து அவருடைய கடைசிபிள்ளை சீனிவாசன் என்ற சீனியும் , மூத்த பேரன் ராகவனும் வந்தார்கள்.அப்புறம் இரண்டு பெண்கள், ஒரு வாண்டுப் பயலும்,.



வேதாந்தத்தைக் கும்பகோணத்தில் எதிர்பார்க்காதபடியால் சந்தானம் அய்யங்கார் அந்தப பக்கம் திரும்பவேயில்லை. வேதாந்தம் அவர் திருஷடியில்
படச் செய்த முயறசிகளும் பலன் அளிக்காமல் போயின. இந்தச் சமயம் ஜிகுஜிகுவென்று போட்மெயில் ஸ்டேஷனுக்குள் கம்பீரமாக நுழைந்துவிட்டது.


சந்தானம் அய்யங்காரும் மற்றவர்களும், தங்கள் எதிரே நின்ற இரண்டாம் வகுப்பு வண்டியில் ஏறிக் கொண்டார்கள். இரண்டு நிமிஷத்தில் எல்லா சாமான்களும் ஏற்றப் பட்டுப் பல இடங்களிலும் பங்கீடு செய்யப் பட்டு விட்டன. சந்தானம் அய்யங்கார் உடகார்ந்து சாயந்து கொண்டபின்பு வேதாந்தம்
எதிர்ப் பட்டு, ‘’’’சார்!’’ என்றான்
‘’நீ யார்?’’ என்று கேட்டார் அவர்.

மாயவரத்தில் என்னை வந்து சந்திக்கச் சொல்லி எழுதியிருந்தீர்களே?’’

‘’அப்படியென்றால் இங்கே ஏன் வருகிறாய்?’’ இது மாயவரமா?’’

‘’இல்லை, நான் இங்கேயே ஏறிக் கொள்கிறேன் என்று உங்களிடம் தெரிவிக்கத்தான் வந்தேன்.’’

‘’சரி போய் ஏறிக் பொள்!’ சந்தானம் மிடுக்காகப் பேசிக் கொண்டே வெளியே
எட்டிப் பார்த்தார்.’’இது உன் மூட்டை என்று சொல்!’’

‘’ஆமாம்’’

‘’உள்ளே எடுத்துப் போடேன்! டிக்கட் வாங்கியிருக்கிறாயா?’’



’ வாங்கிவிட்டேன். நான் அடுத்த கம்பார்ட்மெண்டில் ஏறிக் கொள்கிறேன்!’’

‘’போ, பின்னே! ஏன் நிறகிறே? வண்டி புறப்பட்டு விடும்—ஹூம்!’’

தன் பெட்டி படுக்கைகளை அவர்களுடைய சாமான்களுடன் சந்தானம் ஏன்

வாங்கி வைத்துக் கொண்டார் எனபது வேதாந்தத்துக்குப் புரியவில்லை.

அவன் வருவது நிச்சயம் எனபதறகாக இருக்குமோ, என்னவோ! அவரிடம்

சொன்னபடி வேகமாக அடுத்த பெட்டியை நோக்கி விரைந்தான். அங்கே

ஏகக் கூட்டம்.

(அமரர் தேவன்—மிஸ்டர்வேதாந்தம்)

Sunday, January 1, 2012

தேவன்- மனிதரில் பலவிதம்--6

a







வாசலில் அவன் உடகார்ந்திருக்கும்மோதே சுமார் எட்டு வயதிலிருந்து பதினான்கு வயதுக்குடபட்ட பல குழந்தைகள் ஓடிவந்து எட்டிப் பார்ப்பதும்,
கோஷம் போட்டுக் கொண்டு உள்ளே ஓடுவதுமாக இருந்தன. வந்த குழந்தையே
திரும்பத்திரும்ப வந்து பார்த்துவிட்டு ஓடியது.




விதியை நொந்துகொண்டு உடகார்ந்திருந்தான் வேதாந்தம்.. கடைசியில் ஹாலில் ஒரு பெரியவரின் இரைச்சல் சப்தம் கேட்டது. சிறு பசங்கள் நடமாட்
டமும் ஓயந்தது. சுமார் அறுபதுவயது மதிக்கக்கூடிய ஒருவர் வெளியே வந்தார். அவர்தான் சந்தானம் அய்யங்கார் என்று அநுமானம் செயதுகொண்டு, எழுந்து நின்றான் வேதாந்தம்..





அவர் ஒரு நாறகாலியில் சாயந்துகொண்டு, வேதாந்தத்தை பக்கத்தில்
நிற்கும்படி ஜாடைகாட்டினார். பிறகு ஜந்துநிமிஷம் அவனை விழுங்கிவிடுகிறாற்போல் விறைத்துப் பார்த்தார். முதல் கேள்வியாக ,, ‘’உனக்கு இங்கே ட்யூஷனுக்கு ஆள் தேவை என்று யார் சொன்னது?’’ என்று
ஒரு வெடிகுண்டைப் போட்டார்.


‘’என் ஸ்னேகிதன் சீதாராமன் என்று பெயர். அவன் ஸ்ரீவைஷ்ணவன் இல்லை என்று நீங்கள் ---‘’

சரி, அது சரி—கல்யாணத்திறகு ஜாதகப் பொருத்தம் பார்த்தானாம். ஒருத்தன்.
எல்லாம் சரியாயிருந்ததாம்., பத்துப் பொருத்தம் எல்லாம்! கடைசியிலே ஒரு
தப்பு. இரண்டும் ஒரே கோத்திரம்.! ஹஹ்ஹஹஹ!அந்தமாதிரி ஆயிப் போச்சு
முன்னாடி கோத்திரம் பார்த்துக் கொண்டுதானே கொருத்தம் பார்க்கணும்? ஹ!’’
என்று கேட்டார் அவர் குரல் வேதாந்தம் ஏதோ குற்றம் செய்துவிட்டவன் போலவும், அதறகாக அவர் கண்டிப்பது போலவும் பார்ப்பவருக்குத் தோன்றும்படி இருந்தது.


‘’எந்த ஊர் உனக்கு ?’’, உங்கப்பாவின் பேர்?’’ என்ன படித்திருக்கே? இதுக்கு
முந்தி அநுபவம் உண்டா?’’ என்ன சம்பளம் எதிர்பார்க்கிறே?’’ என்று பெரியவர்
சரமாரியான கேள்விகளை அடுக்கினார். வேதாந்தம் மரியாதையுடன் நின்றபடி பதில் சொல்லி வந்தான். ‘தேசிகாச்சாரி’’ என்றபோது, சந்தானம் அய்யங்கார், மண்டையைத் துருவிப் பார்த்தார்.. ஞாபகத்துக்கு வரவில்லை. அ.ப்புறம் பார்த்துக் கொள்கிறேன்’’’ என்ற ரீதியில் தலையை ஆட்டிக் கொண்டார்.
‘எப்போ முதல் வருவே?’’ என்று அவர் கேட்டதும் ,நீங்கள் அழைத்தவுடன்
வருகிறேன்1’’ என்றான் அவன்.

உன் விலாசத்தை எழுதிக் கொடுத்துவிட்டுப் போ! தேவையானால் உனக்கு எழுதுகிறேன்.!’’ என்றார்.

‘’சார், எப்போது எழுதுகிறீர்கள்?’’


‘’ஒரு வாரம் பார்1 அதற்குள் லெட்டர் வரவில்லையென்றால், நான் வேறே ஆளை வைத்துக் கொண்டுவிட்டேன் என்று அர்த்தம். தெரிந்ததா?’’


ஒரு நமஸ்தே போட்டுவிட்டு வேதாந்தம் வெளியே வந்தான். கிழவர் முகபாவத்தையும் அவர் தலையை ஆட்டியதையும் பார்த்தால் அவனுக்கு
நம்பிக்கை ஏறபடவே இல்லை. சிறு பசங்கள் எல்லாம் கிஷ்கிந்தா வாசிகளாக
அவன் மனக் கண்ணில் உருவெடுத்தார்கள். ‘’தேவையானால் எழுதுகிறேன் எனபதறகு ‘’தேவையில்லை, போய்விட்டு வா! என்று அர்தமாக இருக்குமோ?’’ என்று ஆராயச்சி செயதான்.ஒன்றும் புலப்படவில்லை.


இதறகு ஒருவாரம் சென்று கீழ்கண்ட கடிதம் ஒன்று

வேதாந்தத்திற்கு வந்தது.


‘’மி!ஸ்டர் வேதாந்தம்,

உமக்கு எங்கள் குடும்பத்துடன் சென்னையில் வந்து தங்கி , ஏழு குழந்தை
களுக்கு ட்யூஷன் சொல்லிவைக்கஃச் சம்மதமானால், நாளை இரவு உம் சாமான்களுடன் மாயவரம் ஸ்டேஷனில் போட் மெயிலில் சந்திக்கவும்..
நாங்கள் அந்த வண்டியில் புறப்பட்டுச் செல்கிறோம்.. சென்னையில் உமது ஜாகை, சாப்பாட்டுவசதிகள் எங்களுடன் செய்து தரப்படும். மாதச் சம்பளம்
ரூபாய் முப்பது எதிர்பார்க்கலாம். எனபதை அறியவும்.

நாளை ரயிலில் சந்திக்க இயலாத படசத்தில், வேறு ஒருவரை நாங்கள்
ஏற்பாடு செயது கொள்ளுவோம்.. அப்புறம் என்னை சந்திக்க
முயற்சி செய்யத் தேவை இல்லை.

என். எஸ். சந்தானம் அய்யங்கார். ‘’


(அமரர் தேவன்—மிஸ்டர் வேதாந்தம்)