Pages

Monday, June 25, 2012

உபதேச மந்த்ரம்


அப்போ நாங்கள், பைக்ராப்ட்ஸ்ரோடு, ஜாம்பஜார் மார்க்கெட்டுக்கெதிரே, ஆயில்மாங்கர் தெருவிலே குடியிருந்தோம். கிழக்கில் அதே பைக்ராப்ட்ஸ் ரோடில் கலக்கும் நல்லதம்பிமுதலித்தெருவில் என் தங்கை மகளின் புக்ககம்.. நடைதூரம்தான். என் மருமாள் மாதம் ஒருமுறை, இருமுறை பாட்டியை ,மாமாவைப் பார்க்க வருவாள். ஆபீஸ்விட்டு பஸ் திரும்புகையில் அவள் தெரு முனையில்தான்நான் இறங்கணும்.வாரம் ஒரு முறையேனும் எட்டிப் பார்த்து வருவேன். என்வீட்டிற்கு நாலுவீடுகளேதாண்டி, எதிர்ச்சாரியில் எங்களுடைய வாடிக்கை மளிகைக்கடை.முதலாளி செட்டியார், பிதுங்கிய பெரும் வண்டு விழிகள். கடை பார்க்கச் சிறியது ஆயினும்,;;’’ ஜே ஜே’’. தொப்புளடியிலிருந்து கத்திய வண்ணம், செட்டியார் சிப்பந்திகளைக் கார்வார் பண்ணுகையில், எங்கள் வீட்டுக் கூடத்தில் கேட்கும். நான் எப்பவோ ஒப்புக்கொள்ள வேண்டிய விவரம்,இனியும் ஒத்திப் போட முடியாது. என் பாடும் ‘பற்று’’த்தான்.நாடுவிடுதலைபெற்று எத்தனை வருடமானாலும்சரி, எந்தக்கட்சி ஆண்டாலும் சரி,இந்த நடுத்தரக் குடும்பம் இருக்கிறதே, இதற்கு விமோசனம் கிடையாது. எல்லாருடனும் சேர்ந்து கும்மியடிக்கிறேனா? அடித்துவிட்டுப்போகிறேன். நாங்கள் குடியேரின ஆறுமாதங்களுக்குள் முழியான் செட்டியார், எங்களைத்தன் கணக்குப் புத்தகத்துள் இழுத்துவிட்டார். சிறுகச்சிறுக ஆரம்பித்து, ஒருநாள் முழுக்க. அப்புறம் முதலைவாய்தான். சம்பளத்துக்கு ஒருவாரம் முன்னரே லிஸ்டைக்கொடுத்துவிட்டால், அன்றுமாலையே, மறக்காமல் கொசிர்பொட்டலத்துடன்(அதைச்சொல்லு) பெரிய அட்டைப் பெட்டியில் சாமான்கள் வந்து இறங்கிவிடும். லிஸ்டைத்தவிர, தனித்தனியா வேற அப்ப்பஃப பெண்டிருக்கு வெகு சௌகரியம். அம்மியில் தேங்காய்த்துறுவலையும்,பச்சைமிளகாயையும் வைத்துக் கொண்டு, உடைத்த கடலைக்கு, கடைக்குட்டியைக் கடைக்கு அனுப்பலாம். சின்னப் பையனிடம்கூட செட்டியாரின் கவனமும் மரியாதையும் குறிப்பிடத்தக்கதாக இருக்கும். ‘’இந்தமாதம் சாமான்கள் கூட ஆயிடுத்து செட்டியார்...’’ ‘’ஆவட்டும், ஆவட்டும், பிள்ளைங்க நல்லா சாப்பிட்டு நல்லா வளரட்டும்ஃ.’’ ‘’பணம் செட்டியார்—‘’ ‘’என்னாசாமி ,பணம், பணம்? நான் வாயைத் துறந்து கேட்டேனா? பணம் எங்கே ஓடிப்போவுது? மனுஷாள்தான் முக்யம் சாமி!’’ அவ்வளவுதான், தொப்புள்வரை’’ ஜில்’’. ஒருசமயம் ஆபீஸ்விட்டு,வழக்கம்போல் கல்யாணிவீட்டில் எட்டிப்பார்க்கையில், என்னைக்கண்டதும் அவள் முகம் இறங்கிற்று. என்னோடு முகம் கொடுத்துப் பேசவும் இல்லை. எனக்குப் புரியவில்லை. வீட்டில் ஏதேனும் மசமசப்போ? நோ,நோ,நோ. அவளுக்கு அங்கே ரொம்மச் செல்லம். அதிர்ஷ்டசாலி. தென் வாட்? அடுத்த தடவையும் அப்படியே. நான் என்ன குற்றம் செய்தேன்? மூன்றாம்’’பீட்’’ டின்போது மாடியில் நான் தனியாக ஏதோ பத்திரிகையைப் புறட்டிக்கொண்டிருக்கையில், மேலே வந்தாள். ‘’மாமா, உங்களிடம் சொல்ல்லாமா வேண்டாமா, இதுவரை யோசனை பண்ணிப் பண்ணி உங்களுக்குத் தெரியப்படுத்துவது என் கடமைன்னு முடிவுபண்ணிட்டேன்.’’ என்ன, என்ன ஆச்சு? சுப்ரீம் பீடிகை வயிற்றில் புளியைக் கரைத்த்து, அன்னிக்கு உங்காத்துக்கு வந்திருந்தேனா? நிரும்பும்போது வீட்டில் டீ தீர்ந்து போச்சு ஞாபகம்வந்த்து.. எதிரே செட்டியார் கடையேறி 50கி பாக்கெட் ஒண்ணு கேட்டேன். கடையில் அவரைத்தவிர யாரும் இல்லை. செட்டியார் ஏதோ கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தார். சாமானை எடுத்துவர கடையின் உள் அறைக்குப் போனார். தற்செயலில் என் பார்வை,திறந்தபடி அப்படியே விட்டுப் போயிருந்த கணக்கு நோட்டின் மேல் விழுந்த்து. கொட்டை எழுத்தில் , தலைப்பில் உங்கள் பெயர் பார்த்த்தும், கவனம் சட்டுனு அங்கே ஊணித்து.. ஜட்டங்களின் நடுவில் இருந்த டீ—ஒத்தை எழுத்தோன்னோ—தனியாய் பிதுங்கிற்று ‘’100 கி பாக்கட் 2.50’’ ‘’இந்தாம்மா டீ-A 1 சரக்கு.-என்னம்மா பார்க்கறீங்க?’’ குண்டுக் கண் கடுத்து உடனே கனிஞ்சதை டிக்கட் கொடுத்துப் பார்க்கலாம். புத்தகத்தைப்’ படக்’’னு மூடினார் என்ன செட்டியார்வாள், எனக்கு டீ விலை ரூ.2. அதேபொட்டலம், அதே ரகம் மாமாவுக்கு 2.50 !’’ ரோசத்தில் என் குரல் தேம்பித்தோ, என்னவோ? அவர் அமைதியாக, ‘’ஏம்மா, நீங்க காசைக் கொடுத்திட்டு டீ சாப்பிடரீங்க, அவங்க குடிச்சிட்டுத்தானே கொடுக்கறாங்க !’’ அன்னியிலிருந்து எனக்கு மனசு சரியில்லே மாமா. அம்மாடி! இன்னிக்கு சுமை இறங்கிற்று, இனி உங்கபாடு,’’ -துடித்துப் போனேன் என்பது ஒருபக்கம் இருக்கட்டும்., கஜகர்ணம் கோகர்ணம் போட்டு, எப்படியோபுரட்டி, அடுத்தநாளே, செட்டியார்’’ பற்றைப்’’ பூறா அடைத்தேன் என்பது வேறுகதை. அன்றிலிருந்து ரொக்கம்.. காசில்லேன்னா அந்தசாமான் இல்லாமலேயே நடக்கட்டும்’’-உத்தரவு போட்டுவிட்டேன். ஆச்சு. முப்பது வருடங்களுக்குமேல் இது எல்லாமே கிடக்கட்டும் அன்று செட்டியார் பேசினது நியாயமோ, நாணயமோ, கேலியோ—ஆனால் சந்தேகமில்லாமல் இலக்கியம்., என்ன கச்சிதம், ஸ்வரக்கட்டு,, லயம், என்ன அர்த்தவீச்சு! இன்றும் வியக்கிறேன் சுரீல்-ஒருபொறி --ஒருமுள்தைப்பு --ஒரு பாம்ப்பஃ பிடுங்கல் --ஒருவார்த்தையில், ஒருசைகையில், ஒரு திருப்பத்தையே ஏற்படுத்தக் கூடிய உபதேச மந்திதம் இப்படித்தான் அமையுமோ? சிந்தாந்தியில் தண்ணீர் எப்போதுமே பளிங்கல்ல. உச்சி வெய்யிலுக்கு, க்கஃகல், கரைசல், பாசி, கும்மி, அழுகிய இலை, தழை வேரோடு பிடுங்கிக் கொண்ட கோரை, எல்லாம் மிதக்க, கலங்கலாயும் வரும் போலும். (சிந்தா ந்தி---லா.சா. ராமாமிருதம்)

4 comments:

  1. இந்தவாரம் லா சா ரா வா? சூப்பர் அவர்கதைகளில்யதார்த்தம் நிறம்பி இருக்கும். நடுத்தரவர்க்கத்தினரை எவ்வளவு அழகா விவரிச்சு சொல்லி இருக்கார்.கடைக்காரர்களும் அப்படித்தானே இருக்காங்க.

    ReplyDelete
  2. அருமை.ரசித்தேன் .

    ReplyDelete
  3. @லக்ஷ்மி,
    மத்தியதரவர்க்கத்தினர் இன்றும் மாறவில்லை.பொருள்சேர்த்து சொத்து வாங்குவதற்குப் பதில் அதை வாங்கி அனுபவித்துக் கொண்டே கடனை(அதுகழுத்தளவு இருந்தாலும்)
    அதைஆயுள் முழுவதும் அடைக்கத்தயாராய் இருக்கிறார்கள்.நாம்கட்டிய மொத்தக்கணக்கைப் பார்த்தால் தலை சுற்றும்.என்ன செய்வது? வேறுவழி?
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்மா.

    ReplyDelete
  4. @காளிதாஸ்,சார்!
    தங்கள் வருகைக்கும் ஊக்கமூட்டும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.தங்கள் எடைக்குறைப்பு முயறசியில் வெற்றி பெற்றமைக்கு
    வாழ்த்துக்கள்.இதுபற்றி உங்களிடம் அந்ததஃ தளத்தில் பேசுகிறேன்

    ReplyDelete