Pages

Saturday, February 16, 2013


விதுரநீதி அறிஞர்(ஞானி)எனப்படுபவர்- ஆத்மஞானம்(தன்அடிப்படையை அறிதல்), முயற்சியுடைமை, சகிப்புத் த்தன்மை, அறநெறியில் உறுதி ஆகிய இய ல்புகள் உடையவராக இருப்பார். மேலும் வாழ்க்கையின் குறிக்கோள்களைக் கைவிடாதவராகவும் இருப்பார் (அறிஞர் என்பதற்கு விதுர்ரஃ, பண்டிதர் என்ற சொல்லைப் பயன் படுத்துகிறார். பண்டா என்பது வேர்ச்சொல்.இதன் பொருள் ஆன்மிக அறிவு என்பதாகும். அறநூல்களைப் படிப்பதால் ஆத்மிக ஞானமும், திறமைக்கேற்ற முயற்சியும், பற்ற்ற்ற மனப்பான்மையால் சகிப்புத்தன்மையும்,நம்பிக்கை காரணமாக அறநெறியில் உறுதியும் உருவாகின்றன.வாழ்க்கையின் குறிக்கோள்கள் நான்கு.. அறம், குடும்பம் நடத்தப் பொருள்,வம்ச வளர்ச்சிக்கான இன்பம், வீடு(மோட்சம்). பாரதப் போர் சமயம் கீதை தொடங்குகிறது. அதற்கு மிகவ்ம் முன்பாகவே விதுர்ரஃ இங்கு வருணிக்கும் அறிஞரின் பண்புகள் கீதை காட்டும் லட்சிய லட்சிய மனிதனின் பண்புகளாகவும் அமைந்துள்ள ஒற்றுமை கவனிக்கத் தக்கது)- 2. மரம் என்னவோ ஒன்றுதான். ஆனால அதிலிருந்து பூஜைப் பாத்திரம், கரண்டி, படகு,மரக்கூடை(டப்பா), உலக்கை முதலிய பலவகையிலான போருள்கள் தயாரிக்கப் படுகின்றன. இதேபோல் ஒரே மூலப் பொருளிலிருந்துதான்(பரம்பரையின் ஒரே மூத்தோரிடமிருந்துதான்) நல்லது-கெட்டது இரண்டுமே தோன்றுகின்றன. (மகாபாரத காலத்தில் பெரும்பான்மையான வீட்டுப் பொருட்கள் மரத்தால் செய்யப்பட்டவை என்பதை இப்பாடலால் அறிகிறோம்) ,