Pages

Wednesday, November 9, 2011

உண்மை(யாகிப் போன) கதை-2

நான் எதுவும் பேசாமல் நாற்காலியில் அமர்ந்தேன்.

‘’முந்தா நாள் அப்படித்தான். திடீர்னு கட்டிலை விட்டு

இறங்கி நடக்க ஆரம்பிச்சாங்க.நா ஓடிப்போய் பிடிச்சுக்க

றத்துக்குள்ள கீழே விழுந்தாங்க. நா நடுங்கிப் போனேன்.

தோட்டக்காரனும் நானுமா எப்படியோ நாற்காலியிலே

உடகார்த்தி வெச்சோம். இப்படித்தான் எதுவுமே நடக்காத

மாதிரி ஆயா பார்க்குது. ஆயாவுக்கு உசிறு கெட்டின்னு

சொல்றான் தோட்டக்காரன்.’’

இதையெல்லாம் மூன்று நான்குதடவை இந்த

இரண்டு நாட்களில் வள்ளி சொல்லிவிட்டாள்.எண்பதுவயதுக்

கிழவிகள் வானத்தில் இடிஇடித்தால் உதிர்ந்துவிடும் சருகாய்

மாறிவிடுவதுதான் நியாயமானது. இயற்கையானது என்று

அவள் நினைப்பது போல் தோன்றிற்று. அவள் அன்று உண்மை

யிலேயே பயந்திருக்க வேண்டும்.

‘’ உனக்கு ஏதாவது செய்யணும்னா செய்யி,போ வள்ளி

நா அம்மாவைப் பார்த்துக்கறேன்.’’ என்றவுடன் அவள் நன்றிப்

பெருக்குடன் புல்தரையில் இருந்த மாலைமுரசை எடுத்துக்

கொண்டு உள்ளே சென்றாள்.

நான் அம்மாவின் நாற்காலிக்கு அருகில் எனதை

இழுத்துப் போட்டுக் கொண்டேன். அம்மாவின் தொடைமேல்

அசைவில்லாமல் இருந்த நலிந்த கைகளை மெல்ல வருடினேன்

ரோஜாவிலிருந்து பார்வையை விலக்கி அம்மா என்னைப் பார்த்தாள்.

ஆபீஸிலிருந்து வந்ததும் உடுப்பை மாற்றிக் கொள்ளாதது எனக்கு நினைவுக்கு வந்த்து அம்மாவுக்குப் பிடிக்காது. அம்மா ஆசாரமில்லை. ஆனால் தானே போட்டுக்

கொண்ட நியாயங்களுக்குக் கட்டுப் பட்டவள். சுத்தத்தில் வெறி

கொண்ட பற்றுடையவள். இப்போதுகூட வியற்வை நாற்றத்துடன்

யாராவது அருகில் வந்தால் மூக்கைச் சுருக்கிக் கொள்கிறாள்.

வீட்டிற்குள் நுழைந்த்தும், வெளியே செல்லும்போதும் உடுப்பை

மாற்றுவதில் எத்தனை கவனமோ அத்தனை கவனம் மாட்சிங்காக உடுப்பு அணிவதில்.. அம்மா புடவைக்குப் பொருந்தாத ரவிக்கை அணிந்து நான் பார்த்த்தில்லை. மாக்ஸி

அணிவது சுத்தமாகப் பிடிக்காது.ஒரு முறை ஆஸ்பத்திரியில்

ஒரு அறுவைசிகிச்சைக்காக இருந்தபோது ஆஸ்பத்திரி கவுனை

மறுத்து புடவைதான் வேண்டுமென்று ரகளை செய்துவிட்டாள்.

‘’அம்மா, அப்படி என்னைப் பார்க்காதே’’என்றேன்.

‘’இந்தப் புடவையைத் தோய்க்கணும்.நா அதனாலேதான் டிரஸ்ஸை மாத்திக்கல்லே.’’ என்று சிரித்தேன்.

அம்மா பதில் ஏதும் சொல்லவில்லை. நான்

அவளுடைய விரல்களை வருடியபடி அன்று ஆபீஸில் நடந்த

விஷயங்களையெல்லாம் சொன்னேன். எல்லாவற்றையும்

தெரிந்துகொள்ள அம்மாவுக்கு ஆசை.. ஆபீஸ் விஷயம் முடிந்ததும் அரசியல் பேசினோம். வர்ர தேர்தல்லே நரசிம்ம

ராவுக்கு ஜெயிக்க சான்ஸ் இருக்குன்னு நினைக்கிறியா?’’ என்று

கேட்டேன். அம்மா சிரித்தாள். அம்மா முன்பு தீவிர காங்கிரஸ்

பக்தை. காந்தி அவளுக்கு அவதாரபுருஷர். அவர் இறந்த சேதி

கேட்டதும் மூர்ச்சித்து விழுந்தாளாம். மூன்றுநாள் சாப்பிடவில்லை என்று அப்பா சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

காந்தி மெட்ராசுக்கு வந்திருந்தபோது அவருக்கு இந்திமொழி

பெயர்பெயர்பாளராக இருந்த்தை ஏதோபுண்ணியம் என்பது போல

வும் தெய்வ கைங்கர்யம் என்பது போலவும் எங்களிடம் பெருமைப் பட்டுக் கொள்வாள். சில வருஷங்கள் முன்புவரை

அவளுக்கு காங்கிரஸை விமர்சிக்க மனசு வந்த்தில்லை.’’தியாகம்

என்கிற விதையிலிருந்து கிளம்பின விருட்சம் அது. பட்டுப் போகாது. துளிர்த்து விடும்.’’என்பாள் தன்னையே சமாதானப் படுத்திக் கொள்வதுபோல

இப்போது சிரிக்கிறாள். அம்மாவுக்கே நம்பிக்கை

போய்விட்டது.

‘’தமிழ்நாட்டு நிலவரம் எப்படி?’’என்றேன்

அம்மா பார்வையை அகற்றி ரோஜாப்பூவின் மேல்

பதித்தாள்.

நான் வாய்விட்டுச் சிரித்தேன். ‘’பலே கில்லாடிம்மா நீ!’’ என்று

கன்னத்தைத் தட்டினேன்.

‘’ வெறுத்துப் போச்சா?’’ என்றேன் செல்லமாக.

நம்பிக்கையை இழக்கக் கூடாது. நீதான் சொல்லுவியே. நம்பிக்கைதான் வாழ்க்கைக்கு ஆதாரம்.நம்பிக்கை போச்சுன்னா

எல்லாம் போச்சும்பியே’’

நானா சொன்னேன் என்பதுபோல் அம்மா உட்கார்ந்

திருந்தாள்.’’ஆமாம், நீதான் சொல்லுவே’’என்றேன் நான் ஆவேசத்

துடன். ‘’அதனாலெதான் நா இப்படி இருக்கேன்.நீ கொடுத்த நம்பிக்கைதானே? சொல்லு!’’

நான் பேசுவதை அம்மா கவனிக்கிறாள் என்று

தோன்றிற்று.

.

4 comments:

  1. வசூல்ராஜா படத்தில் ஆனந்த் என்ற கோமா நோயாளியுடன் கமல் பேசிப்பேசி அவரை இயல்பு நிலைக்கு கொண்டு வருவார். அது தான் நினைவுக்கு வந்தது. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. அம்மாவை எவ்வளவு கவனித்து வருகிரார்கள் அவர்களின் ஒவ்வொரு அசைவையும் உன்னிப்பாக தெரிந்துகொண்டு அவர் விருப்பப்படி செய்துவருவது சந்தோஷமான விஷயம் சார் வேர்ட் வெரிபிகேஷன் நீக்கியது ரொம்ப வசதியா இருக்கு நாங்க கமெண்ட் போட்டதுமே பப்லிஷ் ஆயிடுது. இதுக்குத்தான் சொன்னேன்.

    ReplyDelete
  3. சரியாகச் சொன்னீர்கள் சித்திரை வீதிக்காரன்.
    நோயாளிகளிடம் நாம் காட்டும் அன்பே மருந்துகளைவிட மேலானது.வருகைக்கு நன்றி

    ReplyDelete
  4. இதையெல்லாம் ஒரு டெடிகேஷனோடு செய்தால்தான்சமாளிக்க முடியும்.இதைப் பற்றியெல்
    லாம் வாசந்தி கோன்ற வெகு ஜன எழுத்தாளர்கள்
    விரிவாக எழுதியதால் நாம் அறிந்து கொள்ள
    முடிகிறது.நீங்களும் பதிவில் தயக்கம் இல்லாமல்
    எழுதியதால் இப்படியெல்லாம் கஷ்டங்கள் இருக்கின்றன. அவற்றையும் உறுதியுடன் சமாளித்
    திருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள முடிகிறது.
    வாசந்தி கதைகள் அதிக பேர் வாசிக்காத சிற்றிதழ்
    களில்(தீராநதி போன்றவை) வந்தவை என்பதால்தான் இவற்றை நான் பதிவுகளில்
    கொடுத்தேன். எனக்கும் பொறுக்கியெடுத்த நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளும் சந்தோஷம்
    கிடைத்த்து. இந்த சீரியஸ் விஷயங்களை அதிகம்
    பேர்கள் விரும்புவதில்லை என்பதால்தான் இவை
    சிற்றிதழ்களில் வரும் நிலை உள்ளது.வருகைக்கும்
    கருத்துக்கும் நன்றி லட்சுமி அம்மா

    ReplyDelete