Pages

Sunday, November 27, 2011

வயதானோர் அதிகரிக்கும் அபாயம்

‘’’இன்னும் நீங்க குளிக்கப் போகல்லியா?’’ அறை வாசற்படியிலிருந்து அதட்டலான குரல் வந்த்து.

அறையில் சுவர் ஓரமாகப் பழைய நார்மடிப் புடவை

ஒன்றை விரித்து சுருண்டு படுத்திருந்த நாகுப்பாட்டி

குரல் வந்த திசையைப் பார்த்தாள். பார்வதியின்

ஸ்தூல சரீரம் நிழற் படமாகத் தெரிந்த்து. எழுந்திருக்

காமலேயே ‘’இதோ போகிறேன்’’ என்றாள். ‘’கிணத்தடி

ஒழிஞ்சிருக்கா?’’

‘’எல்லாம் ஒழிஞ்சிருக்கு.நீங்க எழந்திருங்கோ’’ என்றாள்

பார்வதி சிடுசிடுப்புடன்.

‘’ அப்ப சரி’’என்று நாகுப்பாட்டி எழுந்தாள். தலைமாட்டிற்கு

வைத்திருந்த துண்டை எடுத்துக் கொண்டு சுவரோரமாய் இருந்த கைத்

தடியுடன் நடந்தாள்.

‘’என்ன மணி ஆறது’’

‘’ஒன்பதரை’’

‘’ஒன்பதரைதானே?’’

‘’ என்ன தானே? நீங்க ஒண்ணரை நாழி குளிச்சி,

அதுக்கப்புறம் ஜபதபம்ன்னு சொன்னதையே சொல்லிண்டு சுத்திச்

சுத்தி சாப்பிட வரதுக்குள்ளாற பன்னண்டு மணியாயிடறது. ஒரு

நாளைப்போல. இன்னிக்கு எனக்கும், காமுக்கும் கடைக்குப் போகணும்

சாப்பாட்டுக் கடை ஆனவுடனே!’’

‘’சரிதான்,. என்ன வாங்கணும்?’’

‘’இந்தக் கிழத்திற்கு எல்லாம் சொல்லியாகணும்’’

‘’என்னவோ வாங்கணும். பெண்ணைப் பார்க்க நாளைக்கு அவ பம்பாய்க்குக்

கிளம்பறா; எவ்வளவோ இருக்கும் வாங்க.. நீங்க தினம் போல நேரமாக்கி

னேள்னா...’’

‘’ இல்லேடி இல்லே. இதோ போறேன்.. நேரமாக்க மாட்டேன்.’’

நாகுப்பாட்டி மெல்ல கூடத்தைத் தாண்டி நடையைக் கடந்து கொல்லைப் புரத்துக்கு வந்தாள்.

கிணற்றடியில் பட்டம்மா துணிகளை அலசிக் கொண்டிருந்தாள்.

‘’ஏண்டி பட்டம்மா, இன்னும் வேலை முடியல்லே?கிணத்தடி ஒழிஞ்சிருக்குன்னாளே பார்வதி?’’

‘’ ஏய் பட்டு, சீக்கிரம் அங்கே இடத்தை காலி பண்ணு! சொன்னதும் இன்னிக்கு எழுந்துடுத்து கிழம். நல்ல வேளையா குளிக்கட்டும். எனக்கு வெளியிலே போற வேலையிருக்கு’’

‘’இதோ ஆச்சும்மா! ஒரு நிமிஷம் கழுவி விட்டுடறேன். சோப்புத் தண்ணி

இருக்கில்லே? எங்கேயாவது வழுக்கி விழுந்து மண்டையைப் போட்டாங்கன்னா’’ ;

‘’போட்டா ஒண்ணும் மோசமில்லே. வேற தினுசா அது போகும்னு

தோணல்லே.’’பட்டம்மாள் சட்டென்று நிமிர்ந்து நாகுப்பாட்டியைப் பார்த்தாள்.

பார்வதியின் பேச்சு காதிலேயே விழாதது போல் பாட்டி நின்றிருந்தாள்.

‘’ஆச்சா பட்டம்மா?’’ என்றாள் இயல்பாக..

தென்னந் துடைப்பத்தால் பரபரவென்று நீரைத் தள்ளிவிட்டு, ‘’ஆச்சு! என்று நிமிர்ந்து பாட்டிக்காக ஒதுங்கி நின்றாள் பட்டு..

பாட்டி சர்வ ஜாக்கிரதையாக நடந்து கிணற்றடியை அடைந்தாள்.

‘’அவளுடைய அலுப்பு அவளுக்கு!’’ என்று மெல்ல முணுமணுத்தாள்.

‘’நானும் முப்பது வருஷமாக காத்திருக்கேண்டி பட்டம்மா. எடுத்துண்டு போக

மாட்டேங்கறானே எமன்?’’

‘’அவன் லிஸ்டிலே உங்க பேர் விட்டுப் போயிருக்கும்’’

புடவையை இளக்கிக் கொண்டு நிமிர்ந்தபோது பேத்தி காமு நின்றிருந்தாள்.

பார்வதியின் கடுகடுப்பு இவளிடம் இல்லை.

‘’உட்காருங்கோ தண்ணி ஊத்தறேன்!’’

பாட்டியின் முகத்தில் மெலிதான பிரசன்னம் படர்ந்த்து. கீழே குந்தியபடி ‘’ஊத்து’’ என்றாள்.

கிணற்றிலிலிருந்து நீரை இழுத்துத் தலையில் காமு ஊற்றுகையில் ‘’பெண்ணைப் பார்க்க போயிண்டிருக்கியா?’’ என்றாள் பாட்டி இதமாக.

ஆமாம் பாட்டி. நாளைக்குக் கிளம்பறேன். இடைச்சன் பிரசவத்திற்கு

எங்கிட்டே வந்துடுன்னு சொன்னேன். வர சௌகரியப்படாதுன்னு பம்பாயிலேயே தங்கிட்டாளே. குழந்தை பிறந்து மூணு மாசமாறது.,என்னாலேயும் போக முடியல்லே.!’’

‘’ நீ எப்படிப் போவே? அப்பத்தான் உன் ஆம்படையான் காலை ஒடிச்சிண்டு

படுத்திருந்தானே!’’

‘’பாட்டியம்மாவுக்கு எல்லாம் எப்படி நினைவிருக்கு. பாத்தீங்களா?’’

‘’காமு, கிழத்துக்கிட்ட பேச்சுக் கொடுத்திண்டு நின்னியானா நாம்ப இன்னிக்கு

கடைக்குப் போனாப்பலேதான்!’’

‘’போறுமா, பாட்டி?’’ என்றாள் காமு.

‘’ போறும்டியம்மா. மடிப்புடவையை கொண்டு வந்து வச்சிருக்கியா?’’

‘’வெச்சிருக்கேன்’’

கம்பில் அவள் நீட்டிய நார்மடிப்புடவையை உருவிக் கொண்டு பாட்டி நிதானமாகப் புடவையை ஜாதிக்கட்டாக உடுத்துகையில் தொலைவிலிருந்து

பட்டம்மாள் சொன்னாள்.

‘’நாளைக்கி அம்பட்டனைக் கூட்டியாரவாம்மா?’’

ஆமாண்டி, நானே சொல்லணும்னு நினைச்சேன். படுத்தா முள் முள்ளா குத்தறது அரிச்சுப் பிடுங்கறது. நாள், கிழமை, அமாவாசைன்னு ஒத்திப் போட்டாச்சு’’.

பாட்டி, உங்க ஜபத்தை முடியுங்கோ, வாங்கோ!’’

‘’இதோ வரேண்டி’’ என்று முணுமுணுத்தபடி பாட்டி நகர்ந்தாள். கொல்லை

முற்றத்து வெயிலிலிருந்து உள் நடைக்கு வந்த்தும் இருட்டாக இருந்த்து.

தட்டுத்தடுமாறி சுவரில் இருந்த மின்விளக்கு சுவிட்சைத் தட்டி பூஜை

அறைக்கு பாட்டி சென்றாள்.

இந்தப் பட்டணத்து குச்சுவீடு இன்னும் பழக்கமாகவில்லே. இவர்

இருக்கிற வரைக்கும் கிராமத்து நாலுகட்டு வீட்டிலே கால் வீசி நடந்த பழக்கம்தான் நினைவிலே இருக்கு பெரிய மிராசு அரண்மணைன்னே பேரு.

எல்லா கட்டிலேயும் வெளிச்சத்துக்குப் பஞ்சமில்லே. இப்படிப் பகல் வேளையிலே கூட விளக்கைப் போடும்படி இருக்காது. அப்பல்லாம் வேற

காலம்.ராணி மாதிரி வளைய வந்த காலம்.இந்தப் பார்வதி எதிர நிக்கவே

பயப்படுவாளே! இவர் மகாராஜனா முன்னாடி கிளம்பிப் போயிட்டார். மரியாதையைக் காப்பாத்திண்டு....................

பூஜை அறைக்குள் சென்று மேடைமேல் இருந்த சம்படத்திலிருந்து

சுருங்கிய மெல்லிய விரல்களால் விபூதியை எடுத்து நெற்றியில் பூசிக் கொள்ளும்போது-

‘’

‘’எனக்கின்னும் வேளை வரல்லியே!.!’’என்றாள்.

மணையில் அமர்ந்து சுக்லாம் பரதரம் குட்டிக் கொண்டதும் மேற்கொண்டு

எந்த அட்சரமும் நினைவுக்கு வரவில்லை.

‘’அவன் லிஸ்டிலே உங்க பெயர் விட்டுப் போயிருக்கும்.’’

அப்படித்தான் இருக்கணும். எமன் வாசலுக்கு வராம இல்லே. காஞ்ச சருகா நா வாசல்லேயே அவனுக்காக உட்கார்ந்திருக்கிறது அவன் கண்ணுக்குப் படல்லே. கனியாத பழத்தையும் , பூவையும், பிஞ்சையும் உள்ளேர்ந்து வாரிண்டு போயிண்டிருக்கான். என் வயித்தெரிச்சலைக் கொட்ட எத்தனை பேர்? சுப்பிணியிலிருந்து ஆரம்பிச்சது.

எப்படி இருப்பான் சுப்பிணி. வீட்டுக்குத் தலைப்பிள்ளையா லட்சணமா, ராஜா மாதிரி வளைய வருவானே. வக்கீலா ரெண்டு கையாலேயும்

வாரிக் கொட்டினானே.! புருஷனைப் பார்த்துப் பார்த்து பார்வதியே மயங்கி நிப்பா. அத்தனை பெருமையும் கோர்ட்டுக் கச்சேரியிலே வாதாடிண்டிருக்கச்சையே பொசுக்குனு மாரடைப்பிலே அவிஞ்சு போச்சு..

அந்த அதிர்ச்சியிலே இவரும் போய்ச் சேர்ந்தார். நான்தான் இடிச்ச புளியாட்டம்

நகராம உட்கார்ந்திருக்கேன். வரிசையா பாலா,மீனு,வெங்கிட்டு,எச்சு ரமேஷ்-

எல்லாருமே நன்னாயிருக்கிற உடம்போடு எச்சரிக்கையேஇல்லாம ஏமாத்திட்டுக் கிளம்பிப் போறதைப் பார்த்திண்டு,மூலையிலே,வாசத்திண்ணையிலே பாவியா உட்கார்ந்திருக்கேன்.

ஒவ்வோரு தடவையும் பாடையைத் தூக்கிண்டு கிளம்பறதைப் பார்க்கும் போது மனசு பதறிப் போறது. ஜயோ, நான்னா அதிலே இருக்கணும்னு துடிச்

சுப் போறது.

பார்த்திண்டு உட்காரறதைத் தவிற ஒண்ணும் செய்ய முடியல்லே.

கண் பார்வை இன்னும் நன்னாயிருக்கு. காது நன்னா கேட்கறது எல்லாத்தையும் பாரு, எல்லார் பேச்சையும் கேளுன்னு யாரோ சபிச்சாப்பலே. மனசுதான் சுரணையத்துப் போச்சு. இல்லேன்னா சுப்பிணி செத்த அன்னிக்கோ

அவன் பிள்ளை ரமேஷ் செத்த அன்னிக்கோ உசிரு விர்ருண்ணு கிளம்பியிருக்கணுமே. பார்வதி பேசின பேச்சுக்கு----

‘’பாட்டி, ஜபத்தை முடிச்சாச்சா?’’

‘’ யாருக்காக கிழம் ஜபத்தைப் பண்றதோ தெரியல்லே. அதோட

வயசுதான் நீண்டுண்டு போரதே தவிர, குடும்பத்துக்கு எந்தப் பலனையும் காணல்லே.’’

‘’சும்மா இரும்மா, பாவம் . தொண்ணூத்தெட்டு வயசுலே யாரையும் தொந்தரவு செய்யாம இந்த மட்டும் கெட்டி முட்டியா இருக்காளே

பாட்டி’’

‘’அதாலே யாருக்கு என்னடி பிரயோசனம்? இத்தனை வயசு

பூமிக்கு பாரமா உட்கார்ந்து என்ன லாபம்? கட்டக் கடுங்காளை வயசுலே நா

பிள்ளையை வாரிக் கொடுத்த வயத்தெரிச்சலை எங்கே கொட்டடஃடும்?

இது போயிருக்கலாமோல்லியோ?’’

‘’அதுக்கென்னம்மா செய்ய முடியும்?’’

அப்படிச் சொல்லாதே! பாபாத்மா இது! இது உசிரோட இருக்

கிறவரை எல்லாரும் வயத்திலே நெருப்பைக் கட்டிண்டு உட்கார்ந்திருக்கணும்’’

‘’ போம்மா, இதையெல்லாம் நம்ப மாட்டேன்.’’

நாகுப் பாட்டி எழுந்திருந்தாள். நடையின் விளக்கை யாரோ அணைத்திருந்தார்கள். இருட்டுக்குப் பழக்கப் பட்டுப் போன பார்வையுடன் பாட்டி மெல்ல நடந்து சமையலரையை எட்டிப் பார்த்தாள். காமு ஏதோ வேலையாய் இருந்தாள்.

‘’ வாங்கோ, உங்களுக்கு இலை போடறேன்’’ என்றாள்

‘’ நீ சாப்பிடல்லையா?’’

‘’ நானும் அம்மாவும் சேர்ந்து சாப்பிடரோம்’’

‘’ பார்வதி எங்கே காணும்?’’

‘’ வாசல்லே கறிகாய்க் காரன் வந்திருக்கான்’’

‘’ சரிதான்’’

இலையில் விழுந்த பதார்த்தங்களைப் பாட்டி நிதானமாக, நாசூக்காகச் சாப்பிட ஆரம்பித்தாள்.

‘’ வாழைத்தண்டு மோர்க்கூட்டா? நீயா

சமைச்சே, காமு?

‘’’ஆமாம் பாட்டி,எப்படியிருக்கு?’’

அமிர்தமாயிருக்கு’’

சாப்பிடறதெல்லாம் அமிர்தமாத்தான் போயிண்டிருக்கணும் உங்களுக்கு’’ என்றபடி பார்வதி உள்ளே நுழைந்து கறிகாய்க் கூடையை மூலையில் வைத்தாள். அம்மாவும் பெண்ணும் ஒருவரை

யொருவர் பாஃத்து நமட்டுச் சிரிப்புச் சிரித்தார்கள்.

நாகுப் பாட்டி அதைக் கவனிக்காமல் வாழைத்தண்டுக் கறியை விரல் நுனியால் நசுக்கி சாதஃதுடன் கலந்து வாயில் போட்டுக் கொண்டாள். வெளிய

றையில் இருந்த டெலிபோன் ஒலிக்கிறார் போல் இருந்த்து.

காமு அலுப்புடன் எழுந்தாள்.’’ இதோட மூணு தடவை அடிச்சு அடிச்சு எடுக்கறதுக்குள்ளே நின்னு போறது!’’

‘’பம்பாயிலிருந்து பத்மா பண்றாளோ என்னவோ! வெளியூர்லேர்ந்து வரதெல்லாம் லேசிலே கிடைக்காது’’

பேசியபடியே வட்டிலில் சாதஃதை எடுத்து வந்த பார்வதியிடம்

‘’கழக்கோடி அளவு போட்டு மோர் விடு’’ என்றாள் பாட்டி.

பறிமாரியபடி பார்வதி கூடத்துப் பக்கம் குரல் கொடுத்தாள்.

பத்மாவாயிருந்தா, இங்கேர்ந்து என்ன சாமான் வேணும்னு ஞாபகமாக் கேளு.!’’

மோரைவிட்டுப் பிசைகையில் காமுவின் உயர்ந்த குரல் கூடத்திலிருந்து

வெடித்த்து.

.

3 comments:

 1. பாட்டியம்மா நிலமை பாவமா இருக்கு அதுக்கு அவ என்ன செய்யமுடியும் வாங்கி வந்த வரம் அப்படி.

  ReplyDelete
 2. கடவுள் சிலரை மிகவும் சோதிக்கிறார். விரும்பும்
  போது போகமுடியுமா?அல்லது வரும்பும் வரை
  இருக்க முடியுமா?
  நன்றி அம்மா.

  ReplyDelete
 3. இந்தப் பாட்டி போல எங்கள் வீட்டுக்கருகிலும் ஒரு பாட்டி தொண்ணூறு வயதைத் தாண்டி சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறார். அவரை இக்கதையில் வருவது போல அனைவரும் திட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர் சாப்பிடுவதைக் கூட திட்டுகிறார்கள். என்ன சொல்வது?
  இதயங்கள் எல்லாம் இயந்திரமாக மாறி வருகிறது.
  மனிதம் மலரட்டும்.
  பகிர்விற்கு நன்றி.
  -சித்திரவீதிக்காரன்.

  ReplyDelete