Pages

Thursday, December 29, 2011

தேவன்- மனிதரில் பலவிதம்--5

a







‘’ஒப்புக் கொண்டுவிட்டாயா?’’ என்று அவசரமாககஃ கேட்டான் வேதாந்தம்
‘’’ஆஹா! நமக்கு இது போன்ற ஒரு சான்ஸ் கிடைத்தால் எத்தனை சௌக்யம்!
என்று அவன் மனம் எண்ணி மிக ஏங்கியது.

சீதாராமன் ஓர் அசட்டுச் சிரிப்பு சிரித்தான் ‘’எல்லாம் சரியாக இருந்தது. என்
துரதிருஷ்டம் ஒன்று கூடக்கூட இருக்கிறதே. எங்கே போனாலும் விடாமல்
அதுவும் தொடர்ந்தல்லவா வருகிறது. டியூஷன் சொல்லித் தருகிறவன் ஸ்ரீவைஷ்ணவனாக இருக்கவேண்டும் என்று சொல்லிவிட்டார் சந்தானம் அய்யங்கார்! பேசாமல் ஓடி வந்துவிட்டேன்.!’’

‘’ரொம்ப வைதீகம் போல்இருக்கிறது’’
‘’ஏன் கேடகிறே! நான் போகிறபோதெல்லாம் வேதபுத்தகம் கையிலே. என்னையே புருஷசூகதம் சொல்லச்சொல்லி பரீடசை செயது விடுவாரோ
என்று பயமாக்கஃ கூட இருந்தது.’’

வேதாந்தம் சிரித்தான். இப்போது அவன் சிரிப்பிலும் ஒரு மலர்ச்சி’ இருந்தது.
அந்த மலர்ச்சியில் நம்பிக்கையின் நாதம் தொனித்தது. செல்லம் அனவரதமும்
வேண்டிக் கொண்ட அந்த மாருதிதான் இந்தச் சீதாராமனை அவன் வழி துரத்தி
வைத்து இத்தனை சமாச்சாரங்களையும் சொல்லும்படி செயதிருப்பாரோ? இல்லாவிட்டால் அவனுக்கு எக்ஸ்டெனில் சந்தானம் அய்யங்காரைப் பற்றி த்
தெரிந்திருக்க சந்தர்ப்பம் ஏது? நீ போய் முயறசி செயது பார்!’’’ எனபதுதான்
பெருமாளின் ஆக்ஞையோ! மெய்மறந்து நின்றான் வேதாந்தம்.
இப்படி வாழ்க்கையில் எத்தனை சந்தர்பங்கள் நாம் அறியாமல் ஏறபட்டுவிடுகின்றன.. அறபமாகத் தோன்றும் காரியங்கள் பெரிய பலனகளுக்கு
அஸ்திவாரமாக அல்லவோ அமைந்தவிடுகின்றன.?

சீதாராமன் அவன் முதுகில் தட்டினான். ‘’உனக்கென்னடா, ஒரு கவலை இல்லை.! யாரானும் அழகு ராணியை நினைத்துக் கொண்டிருப்பாய் நம் மாதிரி
வயிற்றுப் பாட்டுக் கவலை கிடையாதே! எங்க அப்பா படிக்க வைத்துவிட்டார்.
இனிமேலே அவருக்குச் சாப்பாடு போடவேடிய பொறுப்பு நம்முடையது. நான்
வரேண்டா! போய் தேவை விளம்பரங்களைப் புரட்டினாலும் புண்ணியம் உண்டு.’’

போய்விட்டான் சீதாராமன். ஏ பைத்தியக்கார மனிதனே1 நீ பிற்ரைப்பற்றி
எவ்வளவு தவறாக நினைக்கிறாய்? நீ ஒருவன்தான் கவலையுள்ளவன் போலவும்,பொறுப்பு உள்ளவன் போலவும் எண்ணி, பிறர் நிச்சிந்தையாக இருப்பதாக முடிவு செய்கிறாய்.! என்ன ஏமாற்றம் அது.! சிலசமயம் நான்ஒருவனே மேதாவி என்று இருமாப்புக் கொள்கிறாய்1 என்ன முட்டாள்தனம்.1 ஒரு சமயம்
நம் சகதியே சக்தி என்று மெச்சிக் கொள்கிறாய்! என்ன அசட்டுத் தனம்!’
வேதாந்தம் நடந்துகொண்டேயிருந்தான் எக்ஸ்டென்ஷனை நோக்கி.

(அமரர் தேவன்—மிஸ்டர் வேதாந்தம்)

Wednesday, December 28, 2011

தேவன்- மனிதரில் பலவிதம்-4

ஒரு முறை கடைத்தெருவில் ஒரு மோட்டாரிலிருந்து வைரம் கோபாலசுவாமி அய்யங்காரும் ஒரு செட்டியாரும் இறங்கியதைக் கண்டான்.. வேதாந்தம் எதிரில் அருகாமையில் இருந்தானாகையால், வைரத்தின் கண்களில் பட்டிருக்க வேண்டும். என்று எண்ணி, மரியாதைக்காகஃ கை கூப்பினான்.வைரம் அதைக்
கவனித்ததாகவே தெரியவில்லை. அவன் தலைக்கு மேல் எதையோ பார்த்தார்.
சௌக்கியமா ?’’ என்றுவேறு கேட்டுவிட்டான் வேதாந்தம்., உடனேயே ஏன் கேட்டோம் என்று மிக நொந்து கொண்டான்.

செட்டியார் , வேதாந்தம் கேட்டதைக் கவனித்து, ‘’அய்யங்கார், உங்களை யாரோ கேடக்கிறாங்களே! என்றார்.
கோபாலசாமி ஒருமுறை வேதாந்தத்தை விறைத்துவிட்டு, என்னையாக இருக்காது!’’ என்று சொல்லிக் கொண்டு நடந்துவிட்டார்.
அந்த சந்தர்ப்பத்தில் ‘’ஹல்லோ!’’ என்று அவன் முதுகிலே ஒரு ஷொட்டு விழுந்தது திரும்பிப் பார்த்தால், பழைய ஹாஸ்டல் நண்பன் சீதாராமன் நின்றான்.

என்னப்பா! உன்னைப் பார்த்து எத்தனையோ யுகங்கள் ஆச்சு!’’ என்று கேட்டான் சீதாராமன்.

உன்னைப் பார்த்தும்தான்! உன் நம்பர் பத்திரிகையில் பார்த்தேன். மூணுபாகமும் செகண்டஃ கிளாசில் இருக்கிறது.! நமக்கு மூணும் ஃபோர்த் கிளாஸ்!’’ என்றான் வேதாந்தம்.

சே1 அதெல்லாம் ஒரு ப்ளூக்’’! தவிர, அந்த சமயத்திலே உனக்கு எத்தனை
சங்கடம்! உன் தகப்பனார் போயிருந்த சமயம்—இன்னொருத்தனாக இருந்தால்
அந்த சமயத்தில் பரீடசையில் உடகார்ந்து எழுதியே இருக்க மாட்டானே? நீ, என்ன, செப்டம்பரிலே ஒரு சான்ஸ் பார்க்கிறாயா? என்று கேட்டான் சீதாராமன்.

‘ஊம் ஹூம்! இனிமேல் படிக்க முடியாது நம்மால்1’’
‘’உனக்கென்ன,அப்பா பணம் வைத்துவிட்டுப் போயிருக்கிறார். படிக்கத் தேவையும் இல்லை. உத்தியோகம் அவசியமும் இல்லை. நான்தான் ஒரு வேலைக்கு அலைகிறேன்., அலைகிறேன்,கிடைக்கவில்லை.’’

‘’சர்க்கார் உத்தியாகம் ஏதானும்—‘’

‘’ஊம். அதெல்லாம் கிடையாது.! மெட்ராஸிலே கம்பெனி,கிம்பெனி என்று
புகுந்து கொண்டால்,நாளக்கு அதிர்ஷ்டமிருந்தால் நாமே முதலாளியாக்கஃ கூட வரலாம். எனக்கு ‘’லா’’ படிக்கணம்னு ஆசை. பொருளாதாரம் போதவில்லை! இப்போ முன்னாடி, நமக்கு மெட்ராஸிலே போய் தங்க ஒரு இடம் வேணும்.
அது கிடைத்தால் ஜமாய்ச்சுடுவேன்.!’’

‘சரிதான், இப்போ—‘’
‘’ஆமா! அந்த முயறசியிலேதான் ஈடுபடுத்திண்டிருக்கேன் டயத்தை---- இங்கே
எக்ஸ்டென்ஷனிலே மிஸ்டர் சந்தானம் அய்யங்கார் என்று தெரியுமா உனக்கு?’’
‘’தெரியாது’’
அவர் பெரிய ஆள். ந்ல்ல காசு. ஏகப்பட்ட பிள்ளை பெண்கள்- மொத்தம் பதினாலோ பதினைந்தோ1அவர்களில் கடைசி நாலு பசங்களுக்கும் , மூத்த
இரண்டு பையன்களுடைய குழந்தைகளுக்கும் ஆள் தேடுகிறதாகத் தெரிந்தது.
ஒரு சின்னப் பள்ளிக்கூடம் போடலாம்.. எல்லாம் மெடராஸிலே போய், பங்களாவில் ஜாகை. ஒரு சமையல்காரன். ஒருவேலைக்காரன் சந்தானம் அய்யங்கார், இந்தப் பசங்கள், ஒரு டியூஷன் வாத்தியார், எப்படி! நினைத்தபோது சொல்லிக் கொடுக்கலாம். கையிலே நாற்பது ரூபாய்
கொடுப்பதாகச் சொன்னாற்கள்.’’
‘’தேவலையே, ரொம்ப சௌக்யமாச்சே!’’

நானும் அப்படித்தான் நினைத்தேன்., வேதாந்தம்., அவரை நேரில் கண்டு கேட்டு
விட்டுத்தான் வரேன் இப்போ! பி.ஏ. செகண்டஃ கிளாஸ் என்றேன். பி.ஏ. பெயிலானால்கூடப் பாதகமில்லை என்று அவர் சொல்லிவிட்டார்.’’’

‘’பேஷ் பேஷ்! அப்புறம்’’

‘’பசங்களையும் பார்த்தேன் , நல்ல இடம். போய் மெட்ராஸிலே இருந்துகொண்டு, கவனித்துக் கொண்டே வந்தால் சரியான சமயத்திலே= என்ன! சரியான சமயத்திலே எங்கேயானும் தாவிக்கொள்ளலாம்’’

((அமரர் தேவன்—மிஸ்டர் வேதாந்தம்)

தேவன்- மனிதரில் பலவிதம்--3

கோபாலசுவாமி அய்யங்கார் அவனை அழைத்து, தேசிகாச்சாரியின் பொருளாதார நிலை படுமோசமாக இருக்கிறதென்று சொன்னதும் , வேதாந்தத்திறகு தன்
தகப்பனார் பேச்சில் ஒரு புதிய அர்த்தம் தொனித்தது.’’என்னால் உனக்கு பணம்
ஒன்றும் வைத்துவிட்டுப் போக முடியவில்லை. குறைந்த படசம் ஒரு பி.ஏ. பட்டமாவது கிடைக்கும்படி செயது விட்டேன் எனக்குப் பிறபாடு எப்படியோ
பிழைத்துக் கொள்ள வேண்டும். ஆகவே தவறாமல் பாஸ் செயதுவிடு.!’’ என்று
அவர் சொல்வதாக அர்த்தம் புரிந்து கொண்டான்.

உண்மையும் அதுதான். கெட்ட சகவாசம், துர்நடத்தை என்று ஒன்றுமே தேசிகாச்சாரிக்கு இருந்ததில்லை. அவருடைய ஒரே கெட்ட குணம் நாலு பேருக்கு தான் ஒரு பெரிய பணக்காரன் என்று காட்டிக் கொள்ள வேண்டும்.
என்பதுதான்.! இதற்காக அதீதமான செலவுகளில் தொடர்ந்து ஈடுபட்டார் அவர்.
முக்கியமாக அவருடைய பணத்தை ஒன்றுவிட்ட மாமா கோபால சுவாமி அய்யங்காரே சாப்பிட்டிருக்கிறார். அய்யங்காருக்குப் பட்டணம் போகவேண்டுமென்றால், தேசிகனையே தமக்குத் தகுந்ததுணையாகத் தேர்ந்தெ
டுத்துக் கொள்வார் பட்டணத்தில் நண்பர்களுக்குச் செயதுவைக்கும் உபசாரங்க
ளுக்குத் தேசிகனைக் கையைக்காட்டிவிடுவார். மாமாவின் கூடச் செல்வது,அவர்பின் கைகட்டி நிறபது,அவருக்குத் தாசானுதாசனாக உழைப்பது,
தம் பணத்தை அள்ளி வீசுவது இதெல்லாம் தேசிகாச்சாரிக்கு ஒரு பெருமையாக இருந்தது. ‘’நான் கோபாலசுவாமி அய்யங்காரின் மருமான்’’என்று சொல்லும்போது,’’சாட்சாத் ஸ்ரீமந்நாராயணனுடைய மருமான்’’
என்று சொல்லிக் கொள்ளுகிற மாதிரி அவர் உள்ளம் பூரித்துப் போனார்.


வேதாந்தத்திறகு அப்பாவின் மாதுலபகதி ஒரு புதிராகவே இருந்தது. அப்படி அந்த மாமாவிடம் என்ன விசேஷம் இருந்ததென்று அவனால் கண்டுகொள்ள
முடியவில்லை. ‘’காலணா வரத்து இல்லாத,கௌரவம் கொடுக்காத மாமன் வீட்டை இவர் ஏன் சுற்ற வேண்டும்?’’ என்று எண்ணினான்.’’நம் அப்பாவுக்கு சொத்து இல்லையா? இவர் அய்யங்காரை மாமா என்று கொண்டாடுகிறாரே ஒழிய,மாமா ஒருகாலத்திலும் ‘என் மருமான் என்று சொல்லிக கொள்ளவில்லையே’ என்று அவன் இளம் மனதில் தோன்றியது உண்டு.

ஒருசமயம் அந்த மாமாவுடன் வேதாந்தத்தை நாகப்பட்டணம் அனுப்பியபோது
அவர் தமக்கு என்று இரண்டாம்வகுப்பு டிக்கட்டும், வேதாந்தத்துக்கு மூன்றாம்வகுப்பு டிக்கட்டும் வாங்கிக கொண்டது இன்றும் அவன் நெஞ்சைவிட்டு அகலவே இல்லை.! அத்தனை வித்தியாசம் பாராட்டுபவர் அவர். என்ற எண்ணம் ஊர்ஜிதமாகிவிட்டது.

தேசிகாச்சாரி, மாமாவின் மூலம் கோட்டைவிட்ட பணத்திற்குக் கணக்கே இல்லை. வேறு ஆடம்பரங்களிலும் இவர் பணம் செலவாயிற்று. ஆவணிஅவிட்டம் என்றால் ஒரு பெரிய பேலா நிறைய வெள்ளிப் பணத்தை வைத்துக் கொண்டு விநியோகம் செயது யகஞோபவீதங்கள் வாங்கிக் கொள்வார். அரைரூபாய் செலவாக வேண்டிய இடத்தில் ஜந்துரூபாய் போகும்.
வருவாய் இல்லாத குடும்பமாகையால் ‘’முதல்’’ அழிந்தது. நிலங்களும் வீடும் சேர்ந்து அடைமானமாக இருந்தன. வேதாந்தம் பி.ஏ. வகுப்பில் சேர்ந்தபோது
அவருக்கு தேக அசௌக்கியம் வந்து , சென்னை பெரிய டாக்டர் ஒருவர் தருவிக்கப் பட்டார். ஏராளமான செலவு..’’ இருதயம்கோளாறாக இருக்கிறது.
மெள்ளத் தள்ளிக் கொண்டு வர வேண்டியதுதான்.’’ என்று வைத்தியர் சொல்லிவிட்டுப் போயிருந்தார்.

இருதய நோய், மார்வலி முதலியவை பெரியமனுஷர்களைச் சேர்ந்தவை. அவைகளைப் பெற்று நாலுபேரிடம் சொல்லிக் கொள்வதே ஒரு கியாதி என்று
ஒரு தப்பபிப்ராயம் கொண்ட தேசிகாச்சாரி விலைஉயர்ந்த மருந்துகளை நாமஸ்மரணம் செயதுகொண்டும் , பீரோக்களில் வாங்கி அடுக்கிக் கொண்டும் காலந்தள்ளினார். மருந்துகள் பலன் தரும் காலம் போய்க் கடைசியில் அவரைக் கீழேதள்ளிவிட்டன. வேதாந்தத்துக்கும் ஆள் வந்தது.

(அமரர் தேவன்---மிஸ்டர் வேதாந்தம்)’.

Monday, December 26, 2011

தேவன்- மனிதரில் பலவிதம்-2

தூத்துக்குடி தேசிகாச்சாரி எனபவர் ஏழைகளான பெற்றோருக்கு மூன்றாவது
பிள்ளையாகப் பிறந்தாலும்கூட,அவரது வலது உள்ளங்கையின் மத்திய
பாகத்தில் செங்குத்தாக ஒரு நீண்ட கோடு ஓடியது. ரேகைசாஸ்திரப்
புத்தகங்களில் இது தனப்ராப்தியைக் குறிப்பதாகும் என்று போட்டிருக்கும்.
அதையொட்டித்தானோ என்னவோ ,அதே ஊரில் மிராசுதாராக இருந்த
சக்கரபாணி அய்யங்காருக்குப் புத்திர சந்தானம் ஏறபடவில்லை. தேசிகாச்சாரியின் களை மிகுந்த முகமும் அவரை வசீகரித்தது.. இரண்டாம்
பேரைக்கலந்து கொள்ளாமலே அந்தப்பிள்ளையை ஸ்வீகாரம் செயதுகொண்டு
விட்டார்.!

அதன் விளைவுகள் விபரீதமாக மாறின. அவருடைய சாக்ஷாத் தர்மபத்தினி
செண்பகவல்லிக்கு ஆத்திரம் வந்தது. தன் சொந்த அண்ணனுக்கும், தமக்கைக்கும் தங்க விக்ரகம்போல் குழந்தைகள் இருக்க, உள்ளூரில் ஒரு
கழுதையைப் பிடிக்க வேண்டுமா என்று தலையில் தலையில் போட்டுக் கொண்டாள். சக்கரபாணியின் வகையிலேயே பலபேர் அவருடைய சொத்தில்
ஒரு பகுதியாவது கிடைக்காதா என்று சகோரபடசிகள்போல் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சுவீகாரம் அவர்கள் வகையிலே ஒரு அதிர் வேட்டையே வெடிக்கச் செயதுவிட்டது. ‘’சக்கரபாணி ஒரு முட்டாள். மடத்
தனமாக ஏதானும் ஒன்று செயது வைப்பான். எனபது நாங்கள் எதிர்பார்த்ததுதான்.! ‘’என்று அவர்கள் சொல்லி, பொங்கும் மனதை சமாதானம்
செயது கொண்டார்கள்.
சக்கரபாணி அய்யங்கார் அவ்வளவு முட்டாள் இல்லை. சுவீகாரம் செயதுகொண்ட சில வருஷங்களுக்குள்ளேயே இந்தச் சண்டாள உலகம் பணத்திறகாக எப்படியெல்லாம் ஆடுகிறது என்று கண்டு கொண்டார்.
அதை நன்றாக ஆட்டிப் பார்ப்பது என்ற எண்ணம் தோன்றுவதற்கேற்ப, யாரோ
ஒரு மகான், ஒரு மனிதன் சம்பாதித்து எவ்வளவென்றால் அவன் வாரீசுதாரர்
களுக்கு சேகரித்து வைத்துப் போவது இல்லை. தானே செலவழித்து அநுபவித்ததுதான்!’’ என்று எழுதியிருந்ததையும் படித்து மனதில் ஏற்றிக் கொண்டிருந்தார்.

எல்லாவற்றுக்கும் மேலாக , தேசிகாச்சாரியின்மீது அகாரணமாக ஏறபட்ட
ஒரு துவேஷத்தின்மேல், நமது சொத்தை இவன் அநுபவிப்பதா?’’ என்ற கோபம் பொங்கி மளமளவென்று கரைக்க ஆரம்பித்தார். தேசிகாச்சாரியின் கையில் கொடுத்தே தமது பணத்தை வாரிவீசச் செய்தார். ஆகவே சக்கரபாணி காலமாகி தேசிகாச்சாரி பட்டத்துக்கு வந்தபோது ஆஸ்தி பெரும்பாலும் கரைந்து போயிருக்க, மிகுதி நின்றது தேசிகாச்சாரியின் பரந்த உள்ளமும் , படாடோப இச்சையும், டம்பச் செலவுகளும்தான்.

நமது கதாநாயகனாகிய வேதாந்தத்தின் சாக்ஷாத் தகப்பனார்தான் இந்தத் தேசிகாச்சாரியார். தூத்துக்குடி கிராமத்தில் மாடிவீட்டில் உடகார்ந்துகொண்டு
தம் ஏக புதல்வனாகிய வேதாந்தத்தை மாயவரம் ஹைஸ்கூலுக்கு அனுப்பி
வைத்தார்.

பையன் பள்ளிக்கூடம் போகிறான் என்றால் , அது சாமான்யமான விஷயமாக்கஃ கருதப்படவில்லை. மாயவரத்தில் தேசிகாச்சாரியின் பிள்ளையைத் தெரியாதபேர் கிடையாது. அவன் ஹோட்டலில் ஹல்வா தின்றால், அவன்கூட இருபது சகாக்களாவது ஹல்வா தின்பார்கள். பிள்ளையாண்டானுக்கு வெற்றிலைபாக்கு ஒரு ரூபாயக்குக் குறைந்து
வாங்கத் தெரியாது.வாங்கினால், அதை ஒரேநொடியில் மாயமாக மென்று துப்ப நணபர்கள் காத்திருந்தார்கள். மாயவரத்தில் புதிதாக நாடகம், சர்கஸ், கணகாடசி என்று எது வந்தாலும் வேதாந்தம் முதல்வரிசையில் இருந்துகொண்டு ஒரு டஜன் பரிவாரங்களுடன் பார்ப்பான்.


ஒருசில ஆப்தர்கள் தேசிகாச்சாரியிடம் , வேதாந்தம் இப்படி இருக்கிறானே, கவனியேன்’’ என்று சொல்லியிருக்கிறார்கள். ‘’இருக்கட்டுமே
நம்ம பையன்தானே,அவன் பாஸ் செயது முன்னுக்கு வந்து தங்கமும் வெள்ளியுமாக வேண்டியது சம்பாதித்துக் கொள்கிறான்!’’ என்று பதில் சொல்லி
அனுப்புவார். அவர் எங்கிருந்து வாரிவீசுகிறார், அவர் வரும்படி என்ன என்பது
ஒரு பெரிய மர்மம் .வேதாந்தம் அதைப்பற்றிக் கேட்டதும் இல்லை. மனத்தை
வருத்திக் கொண்டதும் இல்லை.

(அமரர் தேவன்—மிஸ்டர் வேதாந்தம்)

Sunday, December 25, 2011

தேவன்- மனிதரில் பலவிதம்

வைரம் ‘’ கோபால சுவாமி அய்யங்கார் கும்பகோணத்தில் நல்ல
செலவாக்கோடு நல்ல செயலில் இருந்து வந்தார் என்றால் , அதறகு
அவருடைய முகவிலாசமும் சாமர்த்தியமும் பெரிய காரணங்கள்
எனபதை முதலில் ஒப்புக கொண்டாக வேண்டும். ஆரம்ப காலத்திலே

சிரமதசையில் இருந்து, படிப்படியாக ஏறி வந்தவராகையால், எந்த
இடத்தில் பணம் தங்கலாம், எந்த இடத்தில் க்ஷணகாலமும் வைக்கக் கூடாது
எனபது அவருக்கு ஓர் உள்ளுணர்வாகவே வளர்ந்துவிட்டது. யாரிடம்
எப்போது பேசலாம், எப்போது ஒருவரை அடையாளம் கண்டு கொள்ளலாம்
எப்போது அவசரமாக வெளியேற வேண்டும் என்ற வித்தைகள் தாமாக வந்துவிட்டன.

கோபால சுவாமி அய்யங்கார் எதிரில் உடகாரந்து ஒருவரைப் பார்த்துக் கொண்டேதான் இருப்பார். ஆனால் தெரிந்துகொண்டார் என்று சொலவதறகு
முகபாவத்தில் லவலேசமும் தெரியாது. சம அந்தஸ்துள்ளவர்களின் சமூகத்தில் இருக்கும்போது தெரிந்தகொள்ளாதவர்களைத் தனிமையில் காணும்போது சிலாகித்துப் பேசுவார். பொதுவில் ‘’உங்களைப் போல் உண்டா?’’ என்று புகழ்ந்துவிட்டு,தம்வீட்டில்,’’வெறும் உதவாக்கரை அவன்’’ என்றும் சொல்லியிருக்கிறார்.

மிதரபேதம் செய்துவைப்பதில் புலி அவர் அந்தச்சமயங்களில் அவர்
போடும் தர்ம்புத்திர வேஷம் அறபுதமாக இருக்கும். குப்புசாமியைக் கூப்பிடுவார்.’’ நீ மகா புத்திசாலி, எனக்கு அப்போதே தெரியும். ஆனல் உன்தம்பி
செய்கிறதைப் பார்க்கும்போது உன் தம்பிதானா அவன் என்று சந்தேகம் வருகிறதடா!’’ எனபார். குப்புசாமி(அவன் அசடாகத்தான் இருப்பான்) ‘’ஆமாம் சார்! அவன் காரியங்கள் எனக்கும் பிடிக்கிறதில்லை! என்று பேச்சுவாக்கில்
ஏதாவது உளறி வைப்பான்.அய்யங்கார் அடுத்த சமயம் குப்புசாமியின் தம்பியைப் பார்க்கும் போது ‘’என்னடாது உங்க அண்ணன் ஏதேதோ உளறிக்
கொண்டு திரிகிறானேடா உன்னைப் பற்றி ! நான் வேண்டாமென்று ஒருமாதிரி
அடக்கினேன். நான் சொன்னதாகத் தெரிய வேண்டாம் இங்கே வந்துடுவான்.
உன்மட்டில் ஜாக்ரதையாக இரு!’’ என்று அவன் முதுகைத் தடவி ஓர் ‘’எச்சரிக்கை’’ போட்டு வைப்பார்.

இதைவிட ஆச்சரியமான குணாதிசையம் ஒன்றும்அவரிடம் உண்டு. அபிப்ராயத்தை மாற்றும் வேகந்தான் அது! ‘’அடே! ராம்பத்திரன் சுத்த அயோக்கியப்பயல்! அவன் அத்திம்பேர் வந்து சொன்னப்பறம்தான் தெரிகிறது.
இந்தமாதிரி ஆள்களை வெட்டி மடைவாயில் வைத்தாலும் பாபம் இல்லை, ஹூம்! எனபார் ஒரு நாள். அன்று ராம்பத்திரனின் அத்திம்பேர்
அவரிடம் வியாபாரம் செயதிருப்பார். மூன்று நாள் கழித்து ராம்பத்திரனே
ஒரு ‘’பேரம்’’ கொண்டு வர வேண்டியதுதான் அய்யங்காரின் அபிப்ராயம் ஒரு
சடார் ‘’பல்டி’’ அடிக்கும். ‘’நான் என்னமோ நினைத்துவிட்டேன்! முழுக்க கேட்டப்புரம்னா விஷயம் வெளியிலே வர்றது! வெறும் கச்சடாப்பயல் அத்திம்பேர் எனகிறவன்.! சீச் சீச் சீ1 பன்னாடை! அவன் கழுத்தைச் சீவினாலும் பாபம் இல்லை!’’ என்று கூசாமல் கூறுவார்.

எப்படி இருந்தால் என்ன! இன்று’’ வைரம்’’ கோபாலசுவாமியிடம்
பணம் இருந்தது. ஆகவே அவருக்கு மதிப்பு இருந்தது. ஊரில் அட்டகாசம்
செய்தார். பணம் சேரும் என்று மனதிற்குப் பட்டால் அது எந்த வியாபாரம்
ஆனாலும் தைரியமாக –இதயத்தையும் இரும்புப் பெட்டியில் பூட்டி வைத்துவிட்டு—இறங்கிவிடுவார்

(அமரர் தேவன்—மிஸ்டர் வேதாந்தம்)

தேவன்-கும்பகோணம் கல்லூரி-5

வேதாந்தத்தின் தகப்பனார் தேசிகாச்சாரி,பிள்ளை சம்பந்தப்பட்ட வரையில்
கடுமையான பேர்வழியே இல்லை.அவன் கேட்டதை வாங்கிக் கொடுத்தார்
டென்னிஸ் மட்டைகளில் நாலு வைத்திருந்தான். உயர்ந்த துணிகளில் தயாரிக்கப்பட்ட உடுப்புகள் மூன்று பெட்டிகள் இருந்தன. புரொபஸர் ஒரு புத்தகத்தின் பெயரைச் சொல்ல வேண்டியதுதான்.மறுநாள், என்ன விலையானாலும் லடசியம் செய்யாமல் வாங்கிவிடுவான்.. தேசிகாச்சாரி படித்தவர் இல்லை.தாமாகச் சம்பாதித்தவரும் இல்லை.’’ பூர்வ ஜன்ம க்ருதம்’’
என்று சொலவார்களே, அந்த நியாயத்தின்படி அவரிடம் தனம் வந்து சேர்ந்தது
அதைத் தன் பிள்ளைக்கு தாராளமாகச் செலவழித்தார். அவன் கேட்கவேண்டியதுதான்.. உடனே பணம் கையில் இருக்கும்.!

ஒரு சமயம் காலேஜில் கெமிஸ்ட்ரி லெக்சரர் சிலகேள்விகளைக் கொடுத்து
அவைகளுக்கு பதில் எழுதிவரும்படி உத்தரவு போட்டிருந்தார். கேள்விகளுக்கு
பதில் எழுதினால் மட்டும் போதாது. காலேஜ் சொசைட்டியில் விறபனை செய்யப்படும் ஒரு நோட் புத்தகத்தில்தான் அதை எழுதிவர வேண்டும். மறுநாள் எழுதிவராதவர்கள் ஒனபது பேரை லெகசரஃர் பெயர் சொல்லி அழைத்து
வகுப்புக்கு வெளியே அனுப்பிவிட்டார். அவர்களில் வேதாந்தமும் ஒருவன்.
அவன் நோட் புக் வாங்கிவிட்டான். ஆனால் பாடந்தான் எழுதவில்லை.

விடை எழுதப்பட்ட நோட்டுகளைப் பரிசீலனை செய்துவந்த லெகசர்ரஃ
சட்டென்று ‘’வாசுதேவன்1எம். வாசுதேவன்!’’ என்று உரக்கக் கூப்பிட்டார்.
பதினேழு வயது இளைஞன் ஒருவன் மெலிந்த தேகமும் ,ஒட்டியகன்னங்களும்
வறுமையை எடுத்துக்காட்ட தன் இடத்தில் எழுந்து நின்றான்.

‘’இது உன் நோட் புக்கா?’’
‘ஆமாம் சார்’’
‘நீ காலேஜ் நோட் நோட் புத்தகத்தில் எழுதி வரவில்லையா’?
‘’இல்லை. வாங்க நேற்று வசதி இல்லை. எப்படியும் இன்று தவறாமல்
பதிலகள் எழுதிவர வேண்டுமென்று நானே நோட் ஒன்றைத் தைத்து—‘’
‘’’யூ கெட் அவுட் ஆப் மை கிளாஸ்!’’
பத்தாவது பையனாக வேளியேறினான் வாசுதேவன்.நோட்டு வாங்கி எழுதாதவனும் வேளியே நின்றான். வாங்காமல் எழுதினவனும் வேளியே நின்றான்.

வேதாந்தம் அந்த சமயத்தில் தன் தகப்பனாரை நினைத்துக் கொண்டான்.
வாசுதேவனையும் தன்னையும் ஒப்பிட்டுக் கொண்டான். ஒழுங்காக இருக்க வேண்டும் தனக்குள்ள வசதியை நனகு பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.
என்று ஆவல் ஏற்பட்டது. அதே வாசுதேவன் ‘’இண்டரில் முதல் கிளாஸில்
பாஸ் செய்து விட்டான் ஸ்காலர்ஷிப் வாங்கி இரண்டுவேளை பழையஅமுது சாப்பிட்டுவிட்டு,துவைத்த இரண்டு சட்டைகளை மாற்றி மாற்றிப் போட்டுக்
கொண்டு காலேஜ் வந்து கொண்டிருக்கிறான். வருஷம் பூராவும் மற்றவர்கள் அவனைப் பார்த்துச் சிரித்தாலும் , ரிசல்ட் வந்த தினம் அவன் மற்றவர்களைப் பார்த்துச் சிரிக்கப் போகிறான். சந்தேகம் இல்லை.’

(அமரர்தேவன்—மிஸ்டர் வேதாந்தம்)
?

Saturday, December 24, 2011

தி. ஜானகி ராமன்-யாதும் ஊரே--5

வேதாந்தத்தின் தகப்பனார் தேசிகாச்சாரி,பிள்ளை சம்பந்தப்பட்ட வரையில்
கடுமையான பேர்வழியே இல்லை.அவன் கேட்டதை வாங்கிக் கொடுத்தார்
டென்னிஸ் மட்டைகளில் நாலு வைத்திருந்தான். உயர்ந்த துணிகளில் தயாரிக்கப்பட்ட உடுப்புகள் மூன்று பெட்டிகள் இருந்தன. புரொபஸர் ஒரு புத்தகத்தின் பெயரைச் சொல்ல வேண்டியதுதான்.மறுநாள், என்ன விலையானாலும் லடசியம் செய்யாமல் வாங்கிவிடுவான்.. தேசிகாச்சாரி படித்தவர் இல்லை.தாமாகச் சம்பாதித்தவரும் இல்லை.’’ பூர்வ ஜன்ம க்ருதம்’’
என்று சொலவார்களே, அந்த நியாயத்தின்படி அவரிடம் தனம் வந்து சேர்ந்தது
அதைத் தன் பிள்ளைக்கு தாராளமாகச் செலவழித்தார். அவன் கேட்கவேண்டியதுதான்.. உடனே பணம் கையில் இருக்கும்.!

ஒரு சமயம் காலேஜில் கெமிஸ்ட்ரி லெக்சரர் சிலகேள்விகளைக் கொடுத்து
அவைகளுக்கு பதில் எழுதிவரும்படி உத்தரவு போட்டிருந்தார். கேள்விகளுக்கு
பதில் எழுதினால் மட்டும் போதாது. காலேஜ் சொசைட்டியில் விறபனை செய்யப்படும் ஒரு நோட் புத்தகத்தில்தான் அதை எழுதிவர வேண்டும். மறுநாள் எழுதிவராதவர்கள் ஒனபது பேரை லெகசரஃர் பெயர் சொல்லி அழைத்து
வகுப்புக்கு வெளியே அனுப்பிவிட்டார். அவர்களில் வேதாந்தமும் ஒருவன்.
அவன் நோட் புக் வாங்கிவிட்டான். ஆனால் பாடந்தான் எழுதவில்லை.

விடை எழுதப்பட்ட நோட்டுகளைப் பரிசீலனை செய்துவந்த லெகசர்ரஃ
சட்டென்று ‘’வாசுதேவன்1எம். வாசுதேவன்!’’ என்று உரக்கக் கூப்பிட்டார்.
பதினேழு வயது இளைஞன் ஒருவன் மெலிந்த தேகமும் ,ஒட்டியகன்னங்களும்
வறுமையை எடுத்துக்காட்ட தன் இடத்தில் எழுந்து நின்றான்.

‘’இது உன் நோட் புக்கா?’’
‘ஆமாம் சார்’’
‘நீ காலேஜ் நோட் நோட் புத்தகத்தில் எழுதி வரவில்லையா’?
‘’இல்லை. வாங்க நேற்று வசதி இல்லை. எப்படியும் இன்று தவறாமல்
பதிலகள் எழுதிவர வேண்டுமென்று நானே நோட் ஒன்றைத் தைத்து—‘’
‘’’யூ கெட் அவுட் ஆப் மை கிளாஸ்!’’
பத்தாவது பையனாக வேளியேறினான் வாசுதேவன்.நோட்டு வாங்கி எழுதாதவனும் வேளியே நின்றான். வாங்காமல் எழுதினவனும் வேளியே நின்றான்.

வேதாந்தம் அந்த சமயத்தில் தன் தகப்பனாரை நினைத்துக் கொண்டான்.
வாசுதேவனையும் தன்னையும் ஒப்பிட்டுக் கொண்டான். ஒழுங்காக இருக்க வேண்டும் தனக்குள்ள வசதியை நனகு பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.
என்று ஆவல் ஏற்பட்டது. அதே வாசுதேவன் ‘’இண்டரில் முதல் கிளாஸில்
பாஸ் செய்து விட்டான் ஸ்காலர்ஷிப் வாங்கி இரண்டுவேளை பழையஅமுது சாப்பிட்டுவிட்டு,துவைத்த இரண்டு சட்டைகளை மாற்றி மாற்றிப் போட்டுக்
கொண்டு காலேஜ் வந்து கொண்டிருக்கிறான். வருஷம் பூராவும் மற்றவர்கள் அவனைப் பார்த்துச் சிரித்தாலும் , ரிசல்ட் வந்த தினம் அவன் மற்றவர்களைப் பார்த்துச் சிரிக்கப் போகிறான். சந்தேகம் இல்லை.’

(அமரர்தேவன்—மிஸ்டர் வேதாந்தம்)
?

Friday, December 23, 2011

தேவன்-கும்பகோணம் கல்லூரி-4

இந்தத் தடவை காலேஜூக்கு வரும் போது தேசிகாச்சாரி மார்பைத்
தொட்டுத் தடவிக்கொண்டது,கட்டாயம் பாஸ் செயதுவிடுவாயல்லவா?
என்று கேட்டது, அனபாகப் பேசினது எல்லாம் அவனை விவரிக்க முடியாதபடி
மிக வருத்தி வேதனைப் படுத்தின.

வேதாந்தம் நன்றாக வாசிக்க வேண்டுமென்று உறுதி செய்து கொண்டான்.
அப்படி இவன் உறுதி செயது கொண்டது முதல் தடவைஅல்ல. ஆனால் பாடபுத்தகங்களை எடுத்தால் வேம்பாக்கஃ கசந்தன. நாளைக்கு நாளைக்கு என்று ஒத்திப போட்டு, ஒரு வருஷம் ஏழுமாதங்களைத் தள்ளி விட்டான்.
மணி அடித்த பிறகும் போர்டுடன் போராடிக் கொண்டு நிறகும் கணக்குப் பரொபஸர் அவனுக்கு எரிச்சலைக் கொடுத்தார்.ஸ்பெஷல் கிளாசுகள் வைத்துக கொளவதாகச் சொன்ன இங்கிலீஷ் லெகசர்ரஃ, தலைவேதனை அளிப்பதாக அவனுக்குப்பட்டது. யாரானும் இன்ன பக்கங்களை மட்டும் படித்துக்கொள்,மூன்று மணி பரிடசைக்கு அதறகு மேல் தேவை இல்லை என்று இப்போது சொல்லியிருந்நால், அவன் தன் ஆஸ்தியில் பாதியை
அவருக்கு சந்தோஷமாக எழுதிக் கொடுத்திருப்பான்.

ஸ்காலர்ஷிப் வாங்கிக் கொண்டு மேலதுண்டு கூட இல்லாமல் , கிழிசல் காக்கிச் சட்டையுடன் பலமைல்கள் நடந்து வந்து கொண்டிருந்த இரண்டு பையனகள் போட்டி போட்டுக் கொண்டு அதுதான் வரும், இது நிச்சயம்
வரும், பார்1’’ என்று பேசிக் கொண்டவை எல்லாம் அவனுக்குப் புரியாத புதிர்களாக இருந்தன.

‘’என்ன வேராந்தம், எந்தமட்டில் இருக்கிறது, உன் பிரிபரேஷன் எல்லாம்?’’
என்று ஒரு புரொபசர் அவனை வழியில் அகஸமாத்தாககஃ கண்டு விசாரித்தார்.

எனக்கு மூன்றாம் கிளாஸ் கிளாஸ் கிடைத்தால்கூடப் போதும் சார்! எங்க அப்பா முதல் கிளாஸ், இரண்டாம் கிளாஸ் என்று கேட்பவர் இல்லை.
என் பெயருக்குப் பின்னால் பி.ஏ. என்று இரண்டு எழுத்துப் போட்டுக் கொள்ள
வேண்டியது, அவ்வளவுதான் அவருக்கு!’’ என்று ஒரு கித்தாப்புடன் சொல்லிக் கொண்டான்.

அவர் சிரித்துக் கொண்டே போனார். இரண்டாம் கிளாசுக்குத் தயார் செயது
கொண்டு போகிறவர்களுக்குத்தானே நிச்சயம் மூன்றாம் கிளாஸாவது
கிடைக்கும்?

வேதாந்தம் வாசிக்கவே இல்லையென்று சொல்ல முடியாது. விளக்கை ஏற்றி வைத்துக் கொண்டு படித்தான்.கணகள் முன் வார்த்தைகள் வரிவரியாக ஓடின.
அவ்வப்போது புரிந்து கொள்கிறமாதிரியும் தோன்றியது. ஆனால் ஒன்றாவது
நிறகவில்லை. அந்த நேரத்தில் அவன் ஏதேனும் துப்பறியும் நாவல்களைப் படித்திருந்தால்கூட உபயோகமாக இருந்திருக்கும். பொழுதாவது இன்பமாக ஓடியிருக்கும்.

(அமரர் தேவன்—மிஸ்டர் வேதாந்தம்)

Thursday, December 22, 2011

தேவன்-கும்பகோணம் கல்லூரி- 3

இத்தனைவிதச் சிறப்புகள் நிறைந்த காலேஜிலதான் வேதாந்தம் ஹாஸ்டலில்
சேர்ந்து படித்தான். உள்ளூரிலிருந்தும் பக்கத்துக் கிராமங்களிலிருந்தும் வந்து
படிக்கும் பிள்ளைகளுக்கிருந்ததைவிட அதிகமான வசதிகளை அளித்தது ஹாஸ்டல். குடும்பக்கவலையின்றி, அருகாமையில் இருந்து நிதானமாகப் படிக்கலாம். யாரோ ஓர் அறிவாளியான பிரின்ஸிபலின் ஆக்ஞையின் மேல்
மாணவர்கள் விடியற்காலம் எழுந்து பாடங்களைக் கவனிக்க உதவியாக
ஜந்துமணிக்கு காலேஜ் மணி அடிப்பது வழக்கம். இரவு பத்து மணிக்குமேல்
கண்விழிக்காதபடி, கண்டிப்பும், கண்ணியமும் மிகுந்த ஹாஸ்டல் வார்டன்
கவனித்துக் கொண்டார்.

வேதாந்தம் புத்திசாலி.ஆனால் அவனை அவன் தகப்பனார் அடங்காத பிள்ளையாக வளர்த்தார். வகுப்புக்கு பத்து மணிக்குப் போக வேண்டுமென்றால்
பத்தேகாலுக்குத்தான் செல்லுவான்.ஹாஸ்டலுக்குப் பத்து மணிக்குள் திரும்ப
வேண்டுமென்றால் பத்தரைக்குத்தான் வருவான். எனினும் இதுவரை யாருடைய கோபத்திறகும் ஆளானதில்லை.

ஒரே ஒரு சமயம் சம்ஸ்கிருதவகுப்பின் இடையில் அவன் வெளியே பார்த்தான். ஒரு நண்பன் அவனை டென்னிஸ் ஆட வரும்படி சமிக்ஞை செயது கொண்டிருந்தான்.. சட்டென்று எழுந்து வெளியே போயவிட்டான்.

பண்டிதர் கவனித்ததாகவே தெரியவில்லை. ‘’கிராதார்ஜூனீ’’யத்தில் ஒரே
சுலோகத்தில் இரண்டு அர்த்தங்கள் வரும்படி அறபுதமாக்கஃ கவி எழுதியிருக்கும் கட்டம் நடந்து கொண்டிதுந்தது. ‘’கராப்ரசங்கேன ஜனைருதாஹ்ருதா’’ ரஸித்து ஸ்வானுபவம் தோன்ற இரு அர்த்தங்களையும்
பிரித்துப் பிரித்துச் சொல்லிக் கொண்டிருந்தார். வேதாந்தம் வெளியே சென்றவன் அன்று வரவே இல்லை. மறுநாள் அதேவகுப்பில் நுழைந்தபோது
பண்டிதர் ,’’வேதாந்தம் தானேடா? போ வேளியே!’’ என்றார் கண்டிப்பாக.
‘’
ஏன் சார்?’’
‘’போ என்றால்! ஆமாம்! இந்த வகுப்பிலிருந்து வெளியே போகிறதென்றால்
என்னைக் கேழ்க்க வேண்டியதில்லை. உள்ளேவருகிறதென்றால் என் உத்தரவு
வாங்கிக் கொண்டாகணும். நிறகாமல் போயவிடு.!’’ என்றார்.

‘’ஸார்’’
எனக்கு மேலே பாடம் நடக்கணும். போய்விடு. நேற்று டென்னிஸ் ஆடப் போனபோது என்னைக் கேட்டாயோ?
ஸார்’’
எனக்கு அப்புறம் கோபம் வந்துவிடும். கோபம்வந்தால் இன்ன நடக்கும் என்று
சொல்ல முடியாது. தெரிந்ததா
ஸார் இனிமேல்---‘’
உனக்கு எந்த ஊரடா?
தூத்துக்குடி,சார்!’’
தூத்துக்குடியில் யார் வீட்டா?
தேசிகாச்சாரியார் என் தகப்பனார்.

சக்கரபாணி ஜயங்கார் சுவீகாரமதானே? உங்கப்பாவை எனக்குத் தெரியும். நீ
தேசிகன் பிள்ளையென்று எனக்கு இத்தனை நாளாகத்தெரியாதே.! உன்னை ஹாஸ்டலில் சேர்த்து நீ முன்னுக்கு வரணும் என்று காத்துக் கொண்டிருக்கிறான். நான் எழுதுகிறேண்டா!’’

வேதாந்தம் கணகளில் ஜலம் வந்தது. பதில் சொல்லாமல் நின்றான்.
அழுகிறாயே1 போகிற போதே இந்தப்புத்தி இருக்க வேண்டாம்? இடத்திலபோய் உடகார்! அசடு, வேறும் அசடு!’’

வேதாந்தம் கண்ணால் ஜலம் விட்ட காரணமே வேறு, ‘’நீ. முன்னுக்கு வர
வேண்டுமென்று காத்திருக்கிறான்’’ என்றதுதான் அவன் மனதை ஊடுறுவி
விட்டது. உள்ளூற அவனுக்கு தகப்பனாரின் பாசம் நிரம்ப உண்டு. தாயும் தகப்ப
னும் ஒரு உருவாகத் தேசிகாச்சாரி அவனுக்கு இருந்திருக்கிறார் அல்லவா?

(அமரர் தேவன்---மிஸ்டர் வேதாந்தம்)

Tuesday, December 20, 2011

தேவன்-கும்பகோணம் கல்லூரி-2

ஒரேபாடத்திறகு மூன்று நான்குபேர் வந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும்
ஒவ்வொருவிதlதில் பெயர் போனவர்கள். ஷேகஸ்பியரைப் புத்தகம் இல்லாமலே கறபிக்கும் பெருமை கொண்டவ்ர் ஒருவர். எந்தஇடத்தில் எந்த
வார்த்தை ஷேகஸ்பியர் உபயோகித்தார். அதனபொருள் என்னவென்று எந்தெந்த வியாக்யானகர்த்தாக்கள் என்னென்ன கூறியிருக்கிறார்கள் என்பதாக
‘’அத்யயனமே’’ செய்திருந்தார் அவர். அவருடைய புலமையைவிடக் கோபத்திலே மாணவர்களுக்கு அச்சம் அதிகம்!.


இன்னொருவர் மனச்சாடசியை முன்னால் வைத்துக்கொண்டு பாடம் கறபித்
தவர். அத்தனை மாணவர்களும் புரிந்து கொண்டாலதான் மேலே போவார்.
இவர் ஹைஸ்கூல் வார்யார் மாதிரி இருக்கிறாரே’’ என்ற அபக்யாதியையும்
லடசியம் செய்யாமல் தெயவத்தினமுன் கடமையைச் செயதார்.. இன்னொருவர் நோடஸஃகளை வைத்துககொண்டே காரியத்தைச்சாதித்துக் கொளபவர். தாமொருமுறை நோட்ஸ்களை வாசித்து, பிள்ளைகள் அதை
எழுதிக கொண்டுவிட்டால்,அவர்களிடம் சம்பளம் பெற்ற ‘’ரிணம் ‘’ காலேஜூக்கும்,சர்க்காரில் சம்பளம் வாங்கும்’’ ரிணம்’’ தமக்கும் தீர்ந்து
விடுகிறதெனபதாக அவருடைய எண்ணம்.!
இவர்களை யெல்லாம்விட கெட்டிக்கார வாதயார் ஒருவரும் இருந்தார்.
இவர் எம்.ஏ. முதல் கிளாஸில் பாஸ் செயதிருந்தார். அதறகாக எல்லாம்கரைத்துககுடித்தவர் என்றோ,அபாரமூளைபலம்படைத்தவர் என்றோ
தவறாக எண்ணிவிடவேண்டாம். அவரிடம் இருந்த ஒரு திவ்யமான சக்திதான்
அதில் ரகசியம். எந்தப பரிடசையில் எந்தக்கேள்வி வரும் என்று அவருக்குத் தெரியும். அவர் சொன்னால் இடசிணிவேலை மாதிரி இருக்கும்! அவரிடம் பாடப் புத்தகங்களைக் கொடுத்துவிட வேண்டியது, இன்ன பக்கங்களைப் படித்தால் பாஸ் செய்துவிடலாம் என்று ‘’கரெகடாக’’ இவர் எழுதியே
கொடுத்து விடுவார். அது தவறினது எனபது ஒருக்காலும் இல்லை.!


சிலபேர்வழிகள் இருக்கிறார்கள். அவர்கள் வருஷவாரியாக்கஃ கேள்விதாள்களை அடுக்கி வைத்துக்கொண்டு, போனவருஷமும் மூன்றாம்
வருஷமும் இந்தக்கேளவி கேட்டுவிட்டார்கள். இந்தவருஷம் திரும்பாது’’என்று
ஹேஷ்யம் செய்வதுண்டு. இது சிலசமயம் பலிக்கும். சிலசமயம் பலிக்காமலும் போகும். இந்த ரகத்தைச்சேரந்தவர் இல்லை நம் புரொபஸர்.
யார் பரீடசைப்பேப்பர் தயார் செயகிறவர் என்று அவருக்குத் தெரிந்துவிட்டால் போதும். இந்த ஆசாமிக்கு இன்ன கேள்விதான் கேடகத்தெரியும் என்று நிர்தாரணம் செய்யும் சகதியைப்பெற்றிருந்தார். அதுமட்டுமல்ல. அதறகு சரியான விடை எழுதினால் மட்டும் போதாது.. யார் அதைத் திருத்துவார்,
அவர் எந்த மாதிரியான விடை எழுதினால் மார்க் நிறையப் போடுவார் எனகிற
வரை அளந்து வைத்திருந்தார். புரொபஸரின் அளவை ஒருபோதும் தவறியது
கிடையாது. ஆகவே அவரைச்சுற்றி ஒரு கூட்டம் போவதும் சகஜம்தான்.


இத்தனை நிதானம் உள்ளவராகையால் அவர் வகுப்புகளில் அநாவசியமான பாடங்களைக் கொண்டு மனதைத் துளைக்க மாட்டார். ஆணித்தரமாகச்சொல்லிக் கொடுப்பார். அதறகு அதிக நேரம்பிடிக்காதாகையால்
மிகுதி நேரங்களில் கதைகள் சொல்லுவார். கதைப்புத்தகங்கள் படிப்பார் அல்லது அவர் இளமபருவத்தைப்பற்றியே பல கறபனைகளைச்சொல்லி,
வகுப்பை பிரமையில் ஆழத்தித் தாமும் மாணவ ரஞ்சகமாக இருந்து கொளவார்.
கணித வகுப்புகளில் புலிகள் தோன்றினாரகள்.. கும்பகோணத்தில் இருந்தது
ஒரு ராமானுஜம் இல்லை, ராமானுஜ பரம்பரை எனபதை நிரூபிப்பதேபோல்
இந்த வகுப்புகள் கணக்காக, ஜரூராக நடந்தன. வரும்போதே சாகபீஸை
நீட்டிக்கொண்டு வரும் புரொபஸரையும், ஆஜானுபாகுவாக நின்று , வினாக்களை துவமசமே செய்யும் லெகசர்ரரையும், மணி அடித்தும் கணக்கை
முடித்துவிட்டுத்தானபோவேன் என்று பிடிவாதம் பிடிக்கும் ஆசிரியரையும்
மாணவர்கள் கண்டார்கள். களித்தார்கள். வகுப்புக்குள்ளும், வகுப்புக்கு வெளியும், மாணவர்களுக்குப்பரோபகாரியாக இருந்தார்கள் இந்தப்புலிகள்.


ஹாஸ்யத்துக்குப் பெயர் போன ஹிஸ்டரி புரொபஸர்கள் இருவர் சிரிக்க வைத்தே அறிவை வளர்த்தார்கள்.

சம்ஸ்கிருத வகுப்புகளிலே ‘’கிராதார்ஜூனீயம்’’ சாகுந்தலம் ஆகியவற்றின்
சமஸ்கிருதமான ஸூனாதம் நிரம்பி நின்றது. அநாயசமான தமிழ்க் காப்பி
யங்களை பெரிய நாம்மஃ போட்ட ஆசிரியர் எடுத்து விளக்கினார். சட்டை
போட்டுக கொள்ளாத பண்டிதர்கள் எனினும் , வகுப்பிலே யாரும் அசட்டையாக
இருந்துவிடாதபடி ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொண்டிருந்தாரகள்.
(அமரர்தேவன்—மிஸ்டர் வேதாந்தம்)

தேவன்-கும்பகோணம் கல்லூரி

ஒரு விஷயம் மிக உயர்ந்ததாக இருக்கிறதென்று உபமானத்துடன்
வெளியிட விரும்பும் ,ஆங்கிலம் படித்த புத்திசாலி, அதை உடனே தான்
கண்டிராத ஒரு மேலநாட்டு விஷயத்துடன் ஒப்பிட்டுச்சொலவது
வழக்கம். இப்படித்தான் நம் ஊரிலநடக்கும் சங்கரஜயந்தி உபன்யாசங்களக்
கேட்டுப் பரவசமடைந்த ஒருவர் அவைகளை ‘’ஆகஸபோர்ட் லெகசர்களுக்கு
ஒப்பிட்டுக் பேசினார். ஒப்பிட்டவர் ஆக்ஸ்போர்ட் லெகசர்க ளைக் கேட்டிருப்பவர் என்று சொல்ல முடியாது. முகம் சந்திரபிம்பம் போல்
இருந்தது என்று நாம் கூறும்போது,சந்திரபிம்பம் முகத்தைவிட அழகுதான்.
அது நமக்குத் தெரியும். ஆகையால்தான் அதை உபமானப் பொருளாக
எடுத்துக் கொண்டோம் ‘’எனபதும் தெரிந்த விஷயந்தான். அப்படி இருக்க,
பகதியிலும், மேதையிலும் வாக்கு வனமையிலும், பாஷையை அடக்கி
யாளும் திறமையிலும் விறபன்னர்களான நம் கலைவாணர்களின் உபன்யா
சங்களை வேறு எதறகாவது உபமான பாத்திரங்களாக்கஃ கொள்ளலாமே
ஒழிய, அவை வேறொன்றுக்கு ஒப்பாக இருப்பதாகச் சிலாகித்துச்சொலவதெனபது சரியாகாது..

அப்படித்தான் யாரோ அவசரப்பட்டுக கொண்டு கும்பகோணம் கல்லூரிக்குக்
கூட ‘’தென்னிந்தியாவின் கேம்ப்ரிட்ஜ்’’ என்றதொரு பட்டம் வழங்கியிருக்க
வேண்டும்.!

இருகரை புரண்டோடும் காவிரியாற்றினகரையிலே, பல விருக்ஷங்களின்
குளிர்ந்த நிழலிலே, சிவப்புக்காவி பூசிய பிரம்மாண்டமான சுவரகளுடன்
நீண்டு படுத்திருக்கிறது கல்லூரிக்கட்டடம்.கரையோரம் கிடக்கும் நீல நிறப்பெயிண்டஃ அடித்த பெஞ்சுகளிலசாயந்து, சுழியிட்டுஓடும் ந்தியைப்பார்த்தவாறு சிந்தனைக்குதிரையைத் தட்டி விடலாம். ஆற்றிலே
மிதக்கும் வெள்ளை வர்ணம் பூசிய படகுகளில் ஏறி பிரவாகத்தை எதிர்க்கலாம். காற்று வாங்கியபடி அலுக்காது சலிக்காது தாழ்வாரங்களில் உலாவி வரலாம். அல்லது பெரிய பெரிய ஹாலகளில் நடக்கும் லெக்சர்களைக் கவனிக்கலாம். அல்லது தூங்கிவழியலாம். ஹாலகளுக்கு
வெளியே சகாக்களுடன் நின்று அரட்டை அடிக்கலாம். அல்லது டென்னிஸ்
விளையாடலாம். இத்தனை சலுகைகளும் , சம்பளமகட்டிக்கொண்டு அங்கே
வித்யார்த்தியாகச்சேரும் ஒவ்வொரு மாணவருக்கும் உண்டு.

திறமை மிகுந்த ஆசிரியர்களும் , கட்டுப்பாட்டுக்கு மரியாதை செய்யும் மாணவர்களும் இந்தக் கல்லுரியின் பெருமதிப்புக்குக் காரணமாகி,கேம்ப்ரிட்ஜின்
பெயரை உபமானமாகச் சொல்ல வைத்தார்கள்.!


விடுமுறை முடிந்து காலேஜ் திறந்த தினங்களில் அதிகமாகவே கலகலவென்றிருக்கும் காலேஜ் கட்டடம் நோட்டீஸ் போர்டைச் சுற்றி நிறகும் பிள்ளைகளின் கூட்டம்! ‘’ புரோபஸர்ஸ் காமன்’’ என்னும் மத்தியமான
ஹாலிலிருந்து எழும் சிரிப்பொலி. ‘’டக்டக்’’ கென்று பூடஸ் ஓசையுடன்
இரண்டொரு புத்தகங்களை ஏந்தித் தாழவாரங்களில் விரைந்து நடக்கும்
புரபஸர்கள், அவர்களை வளையவரும் அபிமான மாணவர்கள், ஜம்பது நிமி
ஷத்துக்கொருமுறை ஒலிக்கும் மணியோசை, அதைத் தொடர்ந்து வகுப்புக்கலைந்து கூட்டமாக வெளியேறும் பையனகள், எல்லாவற்றையும்
மேறபார்வை செய்யும் பிரினஸிபால்., பிரினஸிபாலைவிட மதிப்பாக நடந்து
கொள்ளும் குமாஸ்தாக்கள், குமாஸ்தாக்களைக்காட்டிலும் மேலாக அதிகாரம்
செய்யும் சேவகர்கள், தகப்பனார் செலவாக்கினால் அட்டகாசமாக நடைபோடும் பிள்ளைகள்;;மூளைச்சிறப்பினால் புருவத்தை நெறித்து அலடசியமாக நோக்கும் படிப்பாளிகள், விளையாட்டுமுகமாக அலையும்
காளைகள், பிழைப்பைத்தேடிக்கொள்ள காலேஜ்படிப்பைச் சாதனமாக எண்ணி
நாட்களைத்தள்ளும்பிள்ளைகள்’, அடங்கினவர்கள், அடங்காதவர்கள், காலேஜ்
சம்பளத்தை ஒரு பெரும் சுமையாக்கஃ கருதி அதைக்கட்டும் தேதியைக்கண்டு
நடுங்குபவர்கள், அதையே ஒரு துச்சமாக்கருதி மொத்தமாக்கஃ கட்டிவிட்டு
விச்ராந்தியாக உடகார்ந்திருப்பவர்கள், பெற்றோர் நிர்பந்தத்துக்காக காலேஜை
நாடியவர்கள், நிலத்தைவிற்று பணத்தைப்படிப்பில் போட்டவர்கள் எனபதாகப் பலவகைப்பட்டதொரு சமூகம் அந்தக் காலேஜில் அன்றாடம் காலையில் கூடியது. மாலையில் பிரிந்தது.


பலவேறு விதமான மாணவர்களையும், புரொபஸர்கள் குழாம் பல வேளைகளில் சமாளித்தது. வருஷக் கடைசியிலே ஆவென்று வாய் திறந்து
நிறகும் பரீடசை பூத்தினுள் பிரவேசித்து, அதன் பல் படாமல், வயிற்றில்
சிக்காமல் வெளியே வர அறிவைப் புகட்டப் பாடுபட்டார்கள். நாடகங்களிலேவரும் கதாபாத்திரங்களைப்போல, மணிக்கொருவராகத்தோன்றி
வெவ்வேறு பாடங்களை ‘’லெக்சர்களாகப் பொழிந்தார்கள்.


ஒரேபாடத்திறகு மூன்று நான்குபேர் வந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும்
ஒவ்வொருவித்தில் பெயர் போனவர்கள்.
(அமரர் , தேவன் --, மிஸ்டர் வேதாந்தம்)

Monday, December 19, 2011

தேவன்

.


லக்ஷ்மி கடாக்ஷம்

தேவன் கைவண்ணத்தில் உருவான படைப்புகளில், லக்ஷ்மி கடாக்ஷத்திறகு
தனி மதிப்பு உண்டு. மனித குணங்களில் எத்தனை வகை உண்டோ ,அத்தனை
யிலும் ஒவ்வொரு மாதிரியை லக்ஷமி கடாக்ஷத்தில் நிச்சயம் பார்க்கலாம்,
அப்படிப்பட்ட வகைவகையான பாத்திரவhrளை இந்த நாவலில் தேடாமலே
கண்டு கொள்ள முடியும்.

சுருக்கமாக்கஃ கதை இதுதான்.
தகப்பனார் பசுபதி பிள்ளை—சிறிய தாயார் அகிராமி இவரகளிடையே, அனபும் பாசமும் இன்றி வளரும் பெண் காந்தாமணியை மணக்கிறான், அவளது இளம்
வயது நணபன் துரைசாமி.
துவக்கத்தில் சந்தோஷமாக ஆரம்பித்தது குடும்பம்.. துரைசாமிக்கு வேலை
போகிறது.துனபங்கள் ஒன்றனபின் ஒன்றாகத் தொடரகின்றன. துரைசாமி-காந்தாமணி தம்பதிக்கு மிக வலுவான துணையாக வேங்கடாசலம்-சரோஜா
தம்பதி கிடைக்கிறாரகள்.

முனபு வேலை செயத நிறுவனத்தின் மூலம் ஒரு முறை அயல் நாடு சென்று
வந்ததில், அங்கே மலாயா கலயாணசுந்தரம்பிள்ளையின் பரிச்சயமும், நடபம்
கிடைக்கிறது. இதுவே பிறகு துரைசாமியின் வாழ்க்கையில் அவனை உயரத்தி
வைக்கிறது.

இடையே காந்தாமணிக்குச் சோதனைகள், அவளை மணக்க நினத்து ஏமாந்த
நடராஜபிள்ளை, அவளைப் பழி வாங்கியே தீருவது என்று திட்டமிட்டுச் செயல்
படுகிறான். தக்க சமயத்தில் வேங்கடாசலம் வந்து அவளைக்காப்பாற்றுகிறான்.


மலாயா கலயாணசுந்தரம்பிள்ளை, பல திட்டங்கள் தீட்டி,துரைசாமியின் திறனைக்பயன் படுத்தி , பல தொழிலகங்கள் திறக்கச் செயகிறார். துரைசாமியின் முன்னாள் முதலாளி கோவிந்தனுக்கும் ஒரு வழி பிறக்கிறது.
வேங்கடாசலத்தினமீதும் கலயாணசுந்தரமபிள்ளையின் கருணைப்பாரவை
விழுகிறது.

காலம் சுழன்ற சுழறசியில் பசுபதிப்பிள்ளை தன் மகளின் ஆதரவிலேயே வாழ
வருகிறார். துரைசாமி-காந்தாமணி-குழந்தை மீனாடசி குடும்பத்தில் மகிழச்சி
மலருகிறது.

நடபுக்கு ஒரு வேங்கடாசலம், பெருந்தனமைக்கு ஒரு கோவிந்தன், குரூரத்துக்கு ஒரு நடராஜபிள்ளை, கபடத்துக்கு ஒரு சாரங்கபாணி,ஆதரவுக்கு
ஒரு கலயாணசுந்தரம்பிள்ளை என்று பாத்திரங்களைப் பாரத்துப் பாரத்து
உருவாக்கியிருப்பதில்தான் ‘’லக்ஷ்மிகடாக்ஷத்தின் உயிர்த்துடிப்பே இருக்கிறது.

Saturday, December 17, 2011

தேவன்

அக்கரைக்கு இக்கரை பச்சை என்பது மிகப் பழைய பழமொழிதான்
அதிகமும் வழக்கில் இருந்து வருவதுதான். என்றாலும் அதன் சாரத்தை,
உட்கருத்தை யாரும் நன்றாக உணர்ந்து கொண்டிருப்பதாகச் சொல்ல
முடியாது. இன்றைக்குப் பட்டணத்தில் இருப்பவர் கிராம வாசத்தைப்
போல கிடையாது என்கிறார். கிராமவாசி பட்டண வாழ்க்கையைக்
கண்டு மயங்குகிறார். அந்த மாற்றம் அவர்களுக்குக் கிடைத்துச் சிறிது
அநுபவமும் ஏற்பட்டு விட்டால், திரும்பவும் பழைய இடங்களையே விரும்புகிறார்கள்.

‘’காலையில் எழுந்தால் பசும் வயல்களும், செழித்த மரங்களும் கண்ணில்
படாவிட்டால் வாழ்க்கையே ரசிக்காதே.! காலைவீசி, திறந்த வெளியில் நடப்பதற்கு உங்கள் பட்டணத்தில் எங்கே இடம் இருக்கிறது?’’ என்று
கேட்கிறார் கிராமவாசி.

‘அதெல்லாம் சும்மா, நாடக பாணியில் பேசுகிற பேச்சு ’’என்கிறார் பட்டணப்
பேர்வழி.
‘’அவசரப் பட்டுச் சொல்லி விடாதீர்கள். முழுக்ககஃ கேளுங்கள். நான் விரும்பினால் பட்டணத்திலேயே இருந்திருப்பேன். மெட்ராஸூக்கு ஆறாவது
மைலில் நான் ஏழு வருஷம் இருந்தேன்’’
‘’பட்டணம் பிடிக்கவில்லை என்று முதலில் சொன்னது பொய்தானே?’’

‘’நான் பொய் பேசவில்லை ஆசைப் பட்டுக் கொண்டுதான் போனேன். ஏழு வருஷம் அதையும் பார்த்து விட்டேன். இனிமேலே அந்தப் பக்கம் தலை
வைத்துக்கூட படுக்க மாட்டேன்.. நாடகம், நாட்டியம், சங்கீதம் தினமும்
ஏதாவது ஒரு விசேஷத்தில் தவறாமல் இருப்பேன். ‘கிளப்’பிலிருந்து
நடுநிசிக்கு முன் திரும்பியதில்லை.—‘’

‘’சரிதான்’சரிதான்! அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம்!’
‘’தப்பு! பிடித்த விஷயமானால் அளவு மிஞ்சித்தான் செய்வார்கள். நான்
சொல்ல வந்தது, பட்டணத்தில் சுவைகிடையாது, தெரிந்து விட்டது.—‘’

‘’உங்கள் கிராமத்தைவிட ஒரு நாளும் மோசமாக இராது’’
‘’ஏன் ஜயா?’’
‘’நானும் இருந்து பார்த்துவிட்டுத்தான் சொல்கிறேன். பேச ஆள் கிடைக்க மாட்டான். படிக்க பத்திரிக்கை இராது. தலைவலி வந்தால் மருந்து கிடைக்காது.’’
‘’பேச ஆள் தேவையில்லை. மனம் போன படி சுற்றலாம். உங்கள் மாதிரி
தினசரி நாலு பத்திரிகையை மேலோடு மேய மாட்டோம். வாரம் ஒன்றானாலும் ஆழ்ந்து படிப்போம். அங்கே தலைவலி ஏன் ஜயா வரது?
அருமையான இளம் கறிகாய் பறித்த உடனே சாப்பிடலாம்.’’

‘’அது மட்டும் சொல்ல வேணாம். அதைவிட இளம் கறிகாய் அங்கிருந்தே முதலில் பட்டணத்திற்கு வருகிறது—‘’.
ஆமா! நினைத்துக கொண்டிரும். எங்களுக்கு வைத்துக்கொள்ளாமல் முன்னாடி
பட்டணத்துக்குப் பறித்துக்கொடுத்து விடுவோம்’’

உங்க கிராமத்தில் நூறு ரூபாய் புரளாதே ஜயா,ஒரு அவசர வேளைக்கு!’’

நாலாயிரம் புரண்டும் ஆகிறதென்ன பட்டணத்தில்! மனசுக்கு சாந்தி இல்லையே! எல்லாம் டாக்ஸி வேகம்,ஏரோப்ளேன் வேகம்’’

நல்லவேளை, கட்டைவண்டி வேகம் இல்லையே.! ஒரு சமயம் கட்டை வண்டியில் ஏறிவிட்டு முதுகு வலி எடுத்து விட்டது---‘’

மோட்டாரில் ஆகஸிடெண்டஃ ஆகி, மூக்கு முகரை உடைந்த பேர் எத்தனையோ! இயற்கயழகு,இயறகையில் கிடைக்கும் ஆரோகயம் எல்லாம் பட்டணம் தார் ரோடிலும் ஆஸ்பத்திரிகளிலும் கிடைக்குமா ஜயா! வரீரா, நம்ம கிராமத்துக்கு—‘’
மன்னிக்கணும் , இந்த ஜனமத்தில் மறுபடி அந்த அநுபவம் வேண்டாம்!’’
நான் வருகிறேன்—ஜயோ பாவம்!’’
‘’ஜயோ பாவம்! உம்மை நினைத்தால் எனக்குப் பரிதாபமாய் இருக்கிறது’’

இப்படி எல்லாம் நகரவாசிகளும் கிராம வாசிகளும் பேசிக் கொள்ளலாம்
பெருகிக் கொண்டு வரும் பட்டணத்திலே,ஜீவனத்தை முன்னிட்டு வரும் ஏராளமான பேர்களுக்கு, கிராமம்,நகரம் என்ற பாகுபாடுகளைப் பற்றிச் சிந்தனை செய்யவும் நேரமில்லை,அதைப் பரீடசித்துப் பார்க்க வசதியுமில்லை. சிறு குடும்பங்கள் ஏறபடுத்திக் கொண்டும்,அறைகள் எடுத்துக் கொண்டும், எத்தனையோ இளைஞர்கள் பல் வேறு அலுவலகங்களில் அவர்கள் அதிர்ஷடத்தின் மீது பாரத்தைப் போட்டு விட்டு மாதம் முப்பது நாளும் உழைத்து காலம் தள்ளுகிறாரகள்
(அமர்ரஃ தேவன்-லக்ஷ்மிகடாக்ஷம்)

Friday, December 16, 2011

தி. ஜானகி ராமன்-யாதும் ஊரே-4

‘’வரணும்—வரணும்—இப்படி வரணும்’’ என்று ஸ்வாமியைத்திண்ணைக்குக்
கூப்பிட்டார். ஸ்வாமி திண்ணையில் உட்கார்ந்து கொண்டார்.

‘’நீங்கள்தானா?’’ நான் யாரோன்னு நினைச்சேன்.’’ என்றார் ஸ்வாமி.
‘’எப்ப வந்தது?’’
‘’காலமேதான். பாலகரத்திலே இவர்களோடுதான் தங்கியிருக்கிறேன்’’ என்று
கீழே உட்கார்ந்திருந்த என்னைக் காட்டினார் ஸ்வாமி.

எல்லோரும் என்னைப் பார்த்தார்.கள்.ஸ்வாமியைப் பார்த்தார்கள். கதை
சொல்கிறவர் என்னைப் பார்த்து புன்முறுவல் பூத்தார். திண்ணைமீது உட்காரா
விட்டாலும் நான் சகலத்தையும் துறந்த சன்யாசியாகத்தான் எனக்கு ஒரு கணம் தோன்றியது.

நின்றிருந்த ஸ்ருதிப் பெட்டி மீண்டும் ரீங்கரிக்கத் தொடங்கிற்று. கதை
தொடர்ந்தது.
ஸ்வாமி ரசித்துக் கேட்டார். நடுநடுவே சுவர் மீது சாய்ந்து கொண்டார். களைப்
பாகத்தான் இருக்க வேண்டும்.
கேகயத்திலிருந்து திரும்பிவந்த பரதன் தந்தை காலமான சந்தர்ப்பங்களைக் கேட்டு, துக்கமும் கோபமும் அடந்து ராஜ்யத்தை வெறுக்கிறான். தாயைத் திட்டுகிறான். கூனியைத் திட்டுகிறான். ராமன் இருக்கும் காட்டுக்கு எல்லாருமாகப் போய்த்திருப்பி அழைத்து வருவதென்று சாலை போட உத்தரவிடுகிறான். மணி பத்தரை. கதையை நிறுத்தினார் அவர். சுருதிப் பெட்டி
யைக் கையமர்த்தி நிறுத்தச் சொன்னார். பிறகு நிசப்ததஃதுக்கிடையே பேசினார்.
‘’தாயாதிகள் என்றால் காய்ச்சல், பொறாமை எல்லாம் கூடவே பிறந்துவிடும்.
அப்படித் தப்பித் தவறி அவர்கள் சுமுகமாயிருந்தாலும் மற்றவர்களுக்குத்
தாங்காது.—கூனியைப் போல ஏதாவது சொல்லிக் கிளப்பிவிட்டு விடுவார்கள்.
ராமாயணத்துக்கோ பாரததஃதுக்கோ போக வேண்டாம்..இதோ நம் கண் முன்னால் பார்க்கிறோம்.’’ என்று சன்யாசியைக் காட்டினார்.

இவர்களுக்கு பூர்வாசிரமத்தில் சந்தானம் சந்தானம் என்று
பெயர். இங்கிருந்து ஜம்பது மைல் அவர்கள் கிராமமஃ. கோரையாற்றுப் பாசனத்தில் ஏழுவேலி நிலம். ஏழுவேலியும் அப்படியே தங்கம். ஸாரபூமி..
விளைந்ததானால் ,ஒரு ஆளை அடிக்கலாம்.,அப்படி ஒவ்வொரு கதிரும். இரு
போகம் ஏழு வேலியும். நெல்லு கலம் இரண்டு ரூபாய் விற்ற நாளிலேயே
வருஷம் நாலாயிரம், ஜயாயிரம் கிடைக்கும்.. இப்ப கலம் பத்து ரூபாய்க்கு விற்கிறது. என்ன மோசமாக விளைந்தாலும் வருஷம் இருபதாயிரத்துக்குக்
குறையாது.. தானமும் தர்மமும் யதேஷ்டமாகச் செய்து கொண்டிருந்தார்கள்.
பிள்ளை, குட்டி கிடையாது. சந்தானம் என்று பெயர் வைத்தார்கள் பெற்றவர்கள். ஆனால் புத்திர பாக்கியம் இல்லாமல்போய்விட்டது. தாயாதிக்காரன்கள் எத்தனை காலமாககஃ கறுவிக் கொண்டிருந்தான்களோ,
பகவான்தான் சொல்ல வேண்டும். போன வருஷம் சித்திரை மாதம் இவர்களுக்கு ரொம்ப உடம்பு வந்து விட்டது. பிழைக்க மாட்டாமல் கிடந்தார்கள். தாயாதிக் காரன்கள் வந்து மொயத்துக் கொண்டான்கள்.அண்ணா
என்றார்கள். முத்தண்ணா என்றார்கள். பெரியண்ணா என்றார்கள்.’’எப்பவுமே
உனக்கு உலகப் பற்றே கிடையாது. பிழைக்க மாட்டாமல் கிடக்கிறாய் இப்ப.
ஆபத்து சன்யாசம் வாங்கிக் கொள்’’ என்று கரையாய்க் கரைத்தார்கள்.
சன்யாசிகளுக்கு மறு பிறவி கிடையாது. உயிருக்கு ஆபத்து வந்திருக்கிற
இந்த வேளையில் சன்யாசம் வாவ்கிக் கொண்டால் நாளைக்கே உயிர் போனாலும் ஆத்மாவுக்கு மோட்சம்—நம்ம குலத்துக்கும் பெருமை என்று இவரைக் கரைத்து சன்யாசம் எடுத்து வைத்து விட்டான்கள். படுத்த படுக்கை
யாக இருக்கிறவர் கையில் கமண்டலத்தையும், தண்டத்தையும் கொடுத்துவிட்டான்கள். ஆனால் விபரீததஃதைப் பாருங்கள். இவர்கள் நாலைந்து நாட்களில் பிழைத்துக் கொண்டு விட்டார்கள். உடம்பு தேறிவிட்டது.
நடமாட்டம் வந்து விட்டது. ஆனால் காஷாயம் கமண்டலமுடன் வீட்டில்
இருக்கலாமோ.! வீட்டைவிட்டு வெளியேறுகிற நிர்பந்தம் வந்துவிட்டது. சம்சாரமோ பரம சாது. ஒரு திரிசமன் அறியாதவள். அப்படியே கண்ணாலே ஜலம் விட்டுக் கதறிவிட்டாள். பாருங்கள்—இந்த அபர வயதில் ஊர் ஊராகப் போய்க் கொண்டு! யார் பிக்ஷக்குக் கூப்பிடுகிறார்கள் என்று காத்துக் கொண்டு!
வெய்யில், பனி, மழை என்று பாராமல் ஊர் ஊராக அலைந்து கொண்டு!
பரம அயோக்கியன்கள் அந்ததஃ தாயாதிகள்.?’’ என்று கதை சொல்கிறவர்
அறிமுகப் படுத்தி நிறுத்தினார்.

ஸ்வாமிகள் குனிந்த தலை நிமிரவில்லை.. குப்பென்று கண் கலங்கிற்று.. உதடு
நடுங்கிற்று. முகச்சதைகள் கோணின. விசித்து விசித்து அழத் தொடங்கினார்.

‘’மகா பாவம்—இப்பேர்ப் பட்ட பரம சாதுவை இப்படிச் செய்தவர்களுக்கு, என்ன
கிடைக்கப் போகிறதோ?’’ என்றார் கதை சொல்கிறவர்.

ஸ்வாமி மேலும் விசித்து அழுதார். அவரால் அடக்கமுடியவில்லை. எழுந்து
தண்டத்தை எடுத்து நின்றார்.

கர்ப்பூர ஆரத்தி ஆயிற்று எல்லோரும் சிறிது நின்று ஸ்வாமியைப் பார்த்து விட்டு நகர்ந்தார்கள்.
‘’என்ன அநியாயம்! இப்படிச் செய்யலாமா?’’என்றார்கள்.
ஸ்வாமி பலர் வணக்கங்களை ஏற்று விடை பெற்றுக் கொண்டு என்னுடன்
நடந்தார். கோணல் கிச்சானின்’’ பாட்டரி’’ வெளிச்சம் வழி காண்பித்தது.

ஸ்வாமிக்கு வாசல் திண்ணையில் தட்டி மறைவில் கோரைப்பாயைக் கொடுத்துப் படுக்கச் சொல்லி உள்ளே வந்தேன்.

செய்தியைச் சொன்னேன்.
‘’அழுதாரா! ஸ்வாமிகளா!’’ என்றுவியந்தாள். ‘’மறுபடி சொல்லுங்கள்—கதை
சொல்ரவர் என்ன சொன்னார்?’’
சொன்னேன்.
‘’கதை சொல்ல ஆரம்பிச்சாலே, குறும்பு,விஷமமஃ எல்லாம் வந்திடுமோ?’’ என்றாள்.
பிறகு விழுந்து விழுந்து குலுங்கிக் குலுங்கி, முந்தானையால் வாயைப் பொத்திச் சிரிக்க ஆரம்பித்தாள்.

என்ன சிரிப்பு வேண்டுக் கிடக்கிறது!
சற்று நின்றவள்’’ அழுதாரா?’’ என்று கேட்டுவிட்டு மீண்டும் ஓர் ஆவர்த்தம்
சிரித்தாள்.கண்ணைத்துடைத்துக் கொண்டாள் இருமினாள்.

‘’நீங்கள் போய் அந்ததஃ தாயாதிக்காரா கிட்ட சொல்லி ராஜி பண்ணுங்கள்.
ஊருக்குள் வராமல் களத்திலாவது உட்கார்ந்து சாகுபடியைக் கவனிக்கட்டும்.’’
என்றாள் அவள்.
அவர் தண்டமும் கமண்டலுவுமாககஃ களத்தில் உட்கார்நது, ஆட்களை அதிகாரம் பண்ணுவது போலிருந்த்து
எனக்குக் கூட இரவில் அப்படித் தோன்றிற்று சொப்பனம் என்று நினைக்கிறேன்.

காலையில் எழுந்து வாசலுக்குப் போன பொழுது,அவர் ஸ்நானத்துக்காக ஆற்றங்கரைக்குப் போகத் தயார் செய்து கொண்டிருந்தார். கோணல் கிச்சான்
பந்தல் தலையில் இடித்துவிடாமல் கூனியவாறே அவரைப் பிக்ஷக்குச்
சொல்லிக் கொண்டிருந்தான்.

**************000***********

தி. ஜானகி ராமன்-யாதும் ஊரே-3

..

.

‘’என்ன! நின்னுண்டேயிருந்தா? என்ன யோசனை இப்ப,,அவரைக் கூடத்திலே
உட்கார்த்தி வச்சுட்டு?’’
கூடத்துக்குப் போனேன். சன்யாசி தூணில் தலையைச் சாய்த்திருந்தார். பசி.
அயர்ந்துவிட்டார். என் அடியோசை கூட அவர் கண்ணைத் திறக்கவில்லை.

திரும்பி உள்ளே வந்தேன். நிலைமையைச் சொன்னேன்.
இதோ –அஞ்சு நிமிஷம். கூட்டும் பாயசமும்தான்.பாக்கி’’ என்று
அடுப்புத் தீயைக் களைக்க விட்டாள் அவள்.
‘’நாமகூட சன்சாசம் வாங்கிண்டா நல்லதில்லையா?’’ என்று கேட்டேன்.

நாம கூடன்னா? ரண்டுபேரும் சேர்ந்து சன்சாசம் வாங்கிண்டு ஆளுக்கொரு
கமண்டலமும் தண்டமும் ஏந்திண்டு, சேர்ந்து நடக்கலாம்னா??’’
‘’இல்லை, ஒருகவலை கிடையாது, பந்தம் கிடையாது. தினம் ஒரு ஊர்—ஏதோ
கிடைச்ச இடத்திலே சாப்பாடு—பகவானை நினைச்சிண்டே இருக்கிறது’’

‘’அதை அப்புறம் யோசிக்கலாம் . இலை இல்லை. கொல்லையிலே போய்
பெரிய நுனி இலையா ஒண்ணு நறுக்கிண்டு வரலாமா---?’’

இலையை நறுக்கிக் கொண்டு கூடத்திற்குத் திரும்பியபோது, ஸ்வாமி விழித்துக் கொண்டு கமண்டலுவைச் சாய்த்து, நீரால் கண்ணைத் துடைத்துக் கொண்டார்.

பிட்சை ஆயிற்று. எங்களுக்கும் சாப்பாடு ஆயிற்று. ஸ்வாமி சற்று ஓய்வு எடுத்துக் கொண்டார். பிறகு ஊர் உலக விஷயங்களெல்லாம் கேட்டார்.ஆத்மிக விஷயங்களைச் சொன்னார். கோணல் கிச்சான் வந்தான். அவன் மனைவியைப் பற்றி விசாரித்தார். உடையாரிடம் மருந்து வாங்கி,வாந்தி நின்று விட்டதாம்.
ஜுரமும் இல்லையாம்.மறுநாள் தன் வீட்டில் பிட்சை ஏற்குமாறு மீண்டும் ஒரு முறை வேண்டிக் கொண்டான் அவன். கர்ணிகர் வந்தார். அவர், அவர் குடும்பம், சொத்து முதலியவற்றை விசாரித்தார் ஸ்வாமி. சீதாராமன் வந்தான்.
அவனையும் விசாரித்தார். சேது வன்னியர் வந்தார். அவரையும் விசாரித்தார்.
மேலத்தருவிலிருந்து பாலுத் தென்கொண்டார் வந்தார். அவரையும் விசாரித்தார். எல்லோரும் விழுந்து வணங்கிவிட்டுப் போனார்கள்.

எனக்குப் பொறாமையாக இருந்த்து. அவர் யாரையும் தாழ்வாக, தவறாகப் பேசவில்லை. உபதேசத்தைத் தொழிலாக்கஃ கொண்டவர்கள் போல் யாரையும்
குறைகூறவில்லை.கிண்டல் செய்ய’வில்லை. பரம சாத்விகராக,எல்லாவற்றையும் துறந்துவிட்டு என்னை ஏங்க ஏங்க அடித்துக்
கொண்டிருந்தார்.

சன்னியாசம் என்ற நிலையை எப்படிக் கற்பனை செய்து ஒரு மரபாகக கொண்டு வந்தாகள்? எந்த மகாமேதையின் கற்பனை அது? அவர் முன்பு
உட்கார்ந்து நினைவிழந்து கிடந்தேன் நான். தெருவில் வெய்யில் மஞ்சள் பூசிக்
குளித்துக் கொண்டிருந்த்து.

வாசலோடு போய்க் கொண்டிருந்த அக்கரை கோபாலன் ஸ்வாமிகளைக்
கண்டதும் வந்தான். வணங்கினான்..அவனையும் விசாரித்தார் அவர்.
‘’சாப்பாடு ஆயிடுத்தா? இன்னிக்குக் கதைக்கு வராப்போல்தானே?’’ என்றான்
என்னைப் பார்த்து.
‘’வரணும்’’ என்றேன்
கதையா?’’ என்றார் ஸ்வாமி.

ஆமாம். அக்கரையிலே இவர் ஊரிலே ராமாயணம் நடக்கிறது, ஒருமாசமா. நானும் தினமும் போய் வருகிறேன். சீக்கிரமாகச் சாப்பிட்டுவிட்டுத் தினமும்
புறப்பட்டு விடுகிற வழக்கம். அதைத்தான் கேட்கிறார்’’ என்றேன்.

நானும் வருகிறேனே. சாப்பிட்டுவிட்டு இதோ புறப்பட்டு விடுகிறது’’ என்று
துரிதப்டுத்தினார் ஸ்வாமி.

இருட்டுகிற சமயத்துக்குக் கிளம்பினோம். கோணல் கிச்சான் கீரைத் தண்டு
மாதிரி ஆடியவாறு முன்னால் பேட்டரி விளக்கை அடித்துக் கொண்டே நடக்க
இருவரும் பின்னால் நடந்தோம். மூங்கில் பாலத்தில் அடி வைத்து ஆற்றைக் கடந்தோம். தவளைகள் கொரகொரத்தன. சிள் வண்டுகள் இரைந்தன. தென்னை
மரங்கள் சலசலக்க,ஒரு சவுக்கைத் தோப்பு கிசுகிசுத்த்து. மூங்கில் தோப்பு உறு
மிற்று. ஸ்வாமியோடு நடக்கும் பொழுது இந்த ஓசைகள்தான் மனிதன் கேட்கவேண்டிய ஓசை, எய்த வேண்டிய பேறு என்று தோன்றியது.

ஊருக்குள் திரும்பினோம். தெருநடுவில் ஒரு பந்தலில் பெட்ரோமாக்ஸ் வெளிச்சம் தெரிந்தது. சுருதிப் பெட்டியின் ரீங்காரமும் குரலும் கேட்டன.

‘கதை ஆரம்பித்து விட்டாற்போல் இருக்கு. என்னாலே தாமதம் உங்களுக்கு’’ என்றார் ஸ்வாமி.

நெருங்கினோம். பந்தல் வந்துவிட்டது. திண்ணையில் கதை சொல்லிக் கொண்டிருந்தவர் சட்டென்று நிறுத்தினார். கண்ணை இடுக்கி நாங்கள் வருவதைக் கவனித்தார். ஸ்வாமிகளைப் பார்த்தார்.

Thursday, December 15, 2011

தி. ஜானகி ராமன்-யாதும் ஊரே-2

..

ஸ்வாமி சிரித்தார். ஏன் சிரித்தார் என்று புரியவில்லை. சற்றுக் கழித்துப்

பெருமூஊச்சு விட்டார். யோசனையில் ஆழ்ந்திருந்தார்.. என்னமோ பகவான் கொடுக்கிறான். இஷ்டமில்லேன்னா கொடுக்காமல் இருக்கான். தகப்பனார்

சம்பாதிச்சு வச்ச பணத்தையும் பகவான் இஷ்டப்பட்டாத்தானே இவா கையிலே

கொடுப்பான்?’’

(ஸ்வாமிகளின் வார்த்தைகளின் அர்த்தம் கதையின் இறுதியில் தெரியும்)

‘’ம், ம்’’ என்றேன். இந்த ததஃதுவ விஷயங்களில் எனக்கு எப்பொழுதுமே புத்தி கட்டை. நம்முடைய அதிர்ஷ்டத்திற்கு யார் காரணம் என்று எனக்கு என்றுமே பரிந்தது கிடையாது. எனக்குப் பத்து வருஷங்களாககஃ கிடைத்த

சம்பள உயர்வு முப்பது ரூபாய்தான். சம்பளம் முந்நூறுவேலை இரண்டு

முந்நூற்றுக்குச் செய்கிறேன். ஆபீசில் பல காக்காய்கள்’’ லபக், லபக்’’ என்று

கவளம் , கவளமாக விழுங்கிக் கொண்டிருக்கின்றன. போதும் போதாத்தற்கு

‘’ஹோய், ஓடி வாங்கோஇதோ போன வருஷத்து மிச்சம், இதோ மூணாம் வருஷத்து மிச்சம் போட்டுக்கோங்கோ வாயிலே’’ என்று வேறு வீசுகிறார்கள்.

இதில் ஏன் ஒரு பருக்கை கூட நம் பக்கம் தெறிக்கவில்லை என்று ஆராயந்து

ஆராய்ந்து களைத்துப் போய்விட்டேன். வேலை செஞ்சாப் போதுமா? சரியான இடத்தைப் பிடிச்சிருக்கணும். துரைகிட்ட நீயாகப் போய்ப் பேசணும். விசாரிக்கணும். ஏன் முகம் இப்படிவாடினாப் போல இருக்குன்னு கேக்கணும்.

அவர் ஏதாச்சும் சொன்னா, கிச்சு கிச்சு மூட்டிக்கிட்டாவது சிரிக்கணும். உன் வேலையை எவன்யா கேட்கிறான்? களுதைகூட டன் டன்னா சுமக்குது.

சுமந்தப்புறம் எங்க போய் நிக்குது, பாத்தியா? என்கிறான் ‘’லோ,லோ(அவன்

பேரையும் ,ஊரையும் குறிக்கிற முதல் எழுத்துக்கள் இவை) பொய்ப் புன் சிரிப்புச் சிரித்துச் சிரித்து, பயலுக்கு வாய்க்கடையே வெந்துவிட்டது. கூனல் நிரந்தரமாகவே விழுந்துவிட்டது. இதையே நான் செய்தால் துரைக்குப்

பிடிக்காது என்று இந்தப் பயலுக்கு யார் புரிய வைக்கிறது? சீச்சீச்சீஎன்னத்துக்கு இந்த நினைவெல்லாம். இந்தச் சனியனெல்லாம் வேண்டாமென்று தானே மூன்றுமாத லீவு போட்டுவிட்டு இங்கே வந்து ஒதுங்

கியிருக்கிறேன். இந்தச் சன்யாசி ஏன் இதையெல்லாம் கிளப்புகிறார்?

என்ன நான் சொல்றது?’’ என்றார் அவர்.

‘’ எது?’’

அவர் தெளிவு படுத்துவதற்குள், உள்ளேயிருந்து என் மனைவி வந்து ஜாடை

செய்யவே ஓடினேன். ஒன்றுமில்லை. சமையல் திட்டம்தான், வாழைக்காயை

நானே சீவி நறுக்கிக் கொடுத்தேன். கொத்தவரைக்காயை ஆய்ந்து கொடுத்தேன். ஆபீசில் செய்கிற வேலையைவிட எத்தனையோ சிறந்த வேலை. கை மேல் பலன். இவள் கைக்கு அத்தனை மணமுண்டு.

அடுக்களையும் தனிமையும் என் ஆத்மாவுக்கே வேலி போட்டுக் காப்பது

போல் இருந்த்து. அவள் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தாள்.சமைப்பதைப்

பார்த்துக் கொண்டு ஈட்டியை முதுகில் பாய்ச்ச வந்த எதிரியிடமிருந்து

தப்பி ஒளிந்து கொண்டது போல நிம்மதியாக, அமைதியாக உட்கார்ந்திருந்தேன்.கை மட்டும் கொத்தவரைக் காம்பை ஆய்ந்து கொண்டிருக்

கிறது. அவள் சமைக்கும் போது நான் இப்படி உட்கார்ந்துபார்த்தது. கிடையாது.

என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு ஆள் நீளம், முக்கால் ஆள் அகலம் உள்ள பட்டணத்து இருட்டு அடுக்களையில் அவள் ஒருத்திக்குத்தான் பம்ப

ரமாட இடமுண்டு இந்த சமையலரை பட்டணத்து வீடளவு இருக்கிறது.

பிஞ்சுக் கொத்தவரைக்காய், கிள்ளக்கூட மனம் வரவில்லை.

‘’ இப்பத்தான் நாற்றங்காலில் நாற்றுப் பிடுங்கியிருக்கு மழைவந்து கலைசல் பண்ணிடப் போறது’’ என்று சிரிக்காமல் சிரித்தாள் அவள். இவ்வளவு கரிசனமாக நான் அவளுக்கு உதவுவது அவளுக்கே தாங்கவில்லை.

‘’ஸ்வாமிகளுக்கு சுருக்கத் தயாராக வேண்டாமா?’’

‘’நான் பாத்துக்கறேன். ஒண்டியா கூடத்திலே அவரை வச்சுட்டு வரணுமா? ‘’என்ன நினைச்சுப்பார்?’’

‘’அவர் காரியமாகத்தானே இருக்கேன்--?’’

‘’அவரோடு போய் ஏதாவது பேசிண்டிருங்களேன்- இது ஒரு பிரமாதமா எனக்கு?’’

எழுந்து கொண்டேன்.

உண்மையில் இருவருக்கும் உடம்பு , உள்ளெல்லாம் நிறைந்துதான் கிடந்தன.

பத்து நாட்கள் வேலைக்குச் சம்பளம் கொடுத்து இருபத்தைந்து நாள் வேலையைக் கசக்கி வாங்கிக் கொண்டிருக்கிற பட்டணத்து ஆபீசைவிட்டு இந்த ஒருமாதம் ஒதுங்கியிருப்பதே, ரத்தக் கட்டி உடைந்துவிட்டாற்போல,

நோவு நீங்கிய நிம்மதியாக,விடுதலையாக எங்களைக் கவ்விக் கொண்டிருந்த்து.

மூங்கில் தோப்புகள், சுழியிட்டு ஓடுகிற ஆறு, வழிந்து ஓடுகிற வாய்க்கால்

கொல்லை முறுங்கை மரத்தில் தினைக்குறுவியின் ஊசிக்கத்தல்,வலியன்

குருவி கனைத்துக் கனைத்துக் குழைக்கிற இனிமை,நீளமான ஒரு வாக்கியத்தைத் திருப்பித் திருப்பிப் பேசிக் கோண்டிருந்த புளியமரத்துக் குருவி, ஆழங்காண முடியாத நிசப்தம், அதன் நடுவே கீச்சிடும் அடுத்தவீட்டு ஊஞ்சல்,

நிழல், காற்று, நாற்றங்காஃகளில் அலையோடுகிற பசும்போன், வரப்புகளில்

நாயுருவிகளை உராய்ந்து நடப்பது, களத்துக் கலியாண முறுங்கையில்

‘’ட்ரூவ்’’ என்று அழைக்கிற மணிப்புறா,மகாபிரபோ, எங்கள் மெய் சிலிர்க்கிறது.

எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல இந்த சன்யாசி வந்திருக்கிறாரே

அவருக்கு ஒரு கவளம் சோறு போடும் பேறு கிடைத்த்தே--! நாங்கள் கூடச் சன்யாசிகளாகத்தான் இருப்பதாகத்தான் தோன்றிற்று.. சிறுமை, மனநோவு, பற்றாக் குறையின் குமைச்சல்அனைத்தையும் விட்டு விடுதலையடைந்தி

ருப்பதே சன்யாசம்தான்.

‘’என்ன! நின்னுண்டேயிருந்தா? என்ன யோசனை இப்ப,,அவரைக் கூடத்திலே

உக்காத்தி வச்சுட்டு?’’

கூடத்துக்குப் போனேன். சன்யாசி தூணில் தலையைச் சாய்த்திருந்தார். பசி.

அயர்ந்துவிட்டார். என் அடியோசை கூட அவர் கண்ணைத் திறக்கவில்லை.

Tuesday, December 13, 2011

தி. ஜானகி ராமன்-யாதும் ஊரே

!

இன்னும் இரண்டு மாதங்கள் வரையில் எல்லாம் என் இஷ்டம்தான்.

நான்தான் ராஜா. இல்லை, இல்லை சாதாரண மனிதன். பாமரன்;;இஷ்

டப்படி அலைகிற சாதாரண மனிதன்.மூன்று மாத லீவில் ஒரு மாதம்தான்

போயிருக்கிறது. இன்னும் இரண்டு மாதங்கள் இப்படியேதான்.மார்க்கெட்டுக்குப்

போக மாட்டேன். கடிகாரத்தைப் பார்த்து குளிக்க மாட்டேன். கடிகாரத்தைப் பார்த்து சாப்பிட மாட்டேன். பஸ் ஸ்டாப்புக்கு ஓடமாட்டேன். யானா மாதிரியும், டபிள்யூ மாதிரியும் வியூகம் வகுத்து பஸ்ஸைத் தாக்க நிற்கும்

க்யூ வரிசையில் நிற்கமாட்டேன்.!

இங்கே பஸ்போன வருட வெள்ளம் அடித்துக் கொண்டு போய்விட்டது. பத்து நாளாயிற்றாம் கட்டி முடிய. அது வரையில் வெளியுலக வாடையில்லாமல்

கழிந்ததாம். இப்பேர்ப் பட்ட ஊரில் யார் நம்மை அதிகாரம் பண்ண? இஷ்டப்படி

தூங்குகிறேன். விழித்துக் கொள்கிறேன்.

இன்று காலையில் கூட விழித்துக் கொள்ளும் போது எட்டு மணி. பிறகு

வயலுக்குப் போய் நாற்றுப் பிடுங்கிவிட்டார்களா என்று பார்த்துவிட்டு வரும் பொழுது ஒன்பது மணி. அப்பொழுதுதான் குரல் கேட்டது.

‘’மாமோவ்!’’

கோணல் கிச்சான்தான். வ் வன்னா போட்டு வேறு யார் கூப்பிடுவார்கள் ?

‘’இருக்கேளா, பொழைச்சேன்’’ என்று ஆறரை அடி உயரமும் கூனி நிமிர்ந்தான்.

என்ன சேதி?’’

‘’

‘’சேதிதான்கை கொடுக்கணும்’’

என்ன வந்துடுத்து இப்போ?

‘’சொல்கிறேன் மாமா. காலமே எழுந்தவுடன் ஆற்றங்கரைக்குப் போனேனா?

பஜனை மடத்திலே ஒரு சன்யாசி தண்டமும் கமண்டலமுமாக உட்கார்ந்து

ஜபம் செய்து கொண்டிருந்தார். பல்லைத் தேய்த்து ஸ்நானம் பண்ணி அவருக்கு முன்னால் விழுந்து நமஸ்காரம் பண்ணினேன். உட்காருங்கோன்னார்.உட்கார்ந்தேன். பேரு, குடும்பம் எல்லாம் விசாரிச்சார்.

அப்புறம் பெரியவர்களுக்கு எந்த ஊரோ என்று கேட்டேன்.சன்யாஸும் கிடையாது.மார்க்கெட்டும் கிடையாது. இது பட்டணமில்லை.

பாலகரம். பட்டணத்திலிருந்து ஒரு இரவு ரயில் பயணம். ரயிலில் இறங்கி

ஒன்றரை மணி பஸஸில் பயணம். அப்புறம் மண் சாலையிலிருந்து வாய்க்கால் மதகைக் கடந்து ஊருக்குள் வர வேண்டும். அந்த மதகைக் கூட சிக்கு ஊர்

ஏது,உறவு ஏதய்யான்னார். அப்புறம்தான் அட,அசடேன்னு உதடைக் கடிச்சிண்டேன்.’’

சன்யாசிகளிடம் பூர்வாசிரமத்தைப் பற்றி விசாரிக்கப்படாதுன்னு தெரியாதா

உனக்கு? ஏண்டா சமத்து!’’

அதான் சொல்றேனேதவறிப் போயிடுத்துன்னு,

கொஞ்ச நாழி ஒண்ணும் பேசாமல் உட்கார்ந்திருந்தோம்.. அப்புறம் இன்னிக்கு

பிட்சை பண்ணி என்னை அநுக்ரகம் பண்ண்ணும்னு கேட்டுண்டேன். பேஷா

அதுக்கென்ன? செஞ்சுட்டுப் போறதுன்னார். அழைச்சிண்டு வந்தேன். உள்ளே

போனால் அப்பா அம்மான்னு முனகல் கேட்டுது. என்னடான்னு பார்த்தால்

மீனாட்சி அலங்கோலமாப் படுத்திண்டு கிடக்கா. காப்பி சாப்பிட்டவளுக்கு

என்னமோ தலையைக் கிறு கிறுன்னுதாம். கண்ணை இருட்டிண்டு வந்த்தாம்.

நாலைஞ்சு தடவை வாந்தி எடுத்த்தாம்.தொட்டுப் பார்த்தால் , உடம்பு அனலா வீசறது.. கண்ணைத் திறக்க முடியல்லே. படுத்திண்டு கிடக்கா . என்ன பண்றது? சன்யாசி வாசல் திண்ணையிலே உட்கார்ந்திண்டிருக்கிறார். கிடந்து

முழிக்கிறேன். என்ன பண்றதுன்னு புரியல்லே.பட்டணத்து மாமாதான் கதின்னு வந்துட்டேன். நீங்கதான் வழி காட்டணும்.’’

நல்ல கறுப்பும் கச்சலுமாக இருந்த கிச்சானின் கண் ஏற்கனவே சுண்ணாம்பு வெள்ளை.. இக்கட்டில் இன்னும் வெளுத்துக் கிடந்தது.

‘’வழி என்னடா வழி? பிக்ஷையை இங்கே பண்ணிவிட்டால் போகிறது. பட்டணத்திலே சங்கோஜப் படற மாதிரின்னா படறே.! பார்வதீ! என்று உள்ளே

பார்த்துக் கூப்பிட்டேன். வந்தாள். சொன்னேன். ‘’நானே வந்து அழைச்சிண்டு வரேன்’’ என்று கோணல் கிச்சான் முன்னே நெளிய, வெளியே வேகமாக நடந்தேன்.

கிச்சான் வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்த சன்யாசியைக் கண்டேன்.

எட்டு அங்கமும் பட விழுந்து வணங்கினேன்.’’ நாராயண, நாராயண’’’ என்று

என்றார் ஸ்வாமி. புன்முறவல் பூத்தார். ஜம்பது வயதிருக்கும். முண்டனம்

செய்த தலை. ஆனால் தலையிலும்முகத்திலும் ஒரு மாத ரோம்மஃ வெளுத்துக் கிடந்த்து.

‘’கிச்சானைப் பெரிய மனது பண்ணி மன்னிக்கணும்.. வீட்டில் அசந்தர்ப்பம்

அவனுக்கு. உள்ளே ரொம்ப உடம்பு சரியில்லை. பெரியவாளை பிக்ஷைக்கு

சொல்லிட்டமேன்னு கிடந்து தவிச்சுப் போயிட்டான். நான் இன்னிக்குக் கொடுத்து வச்சிருக்கேன். நாலுவீடு தள்ளி அஞ்சாவது வீடு. பெரியவா வந்து

பெரிய மனசு பண்ணி பிக்ஷை பண்ணி வைக்கிற பாக்கியத்தை எனக்குத் தரணும்.’’

அப்படியா? உடம்பு சரியாயில்லை என்று சொல்லவே இல்லை இவர்’’

பெரியவா கிட்ட காலமே சொல்ரபோது அவனுக்குத் தெரியாது. வந்து பார்த்தா, ஒரே வாந்தியா எடுத்து , தலை தூக்க முடியாமல் கிடக்கிறாளாம்.

பெரியவா கிட்ட சொல்ல எப்படி வாய் வரும் அவனுக்கு.? ஆசையா அழைச்சிண்டு வந்தான். லபிக்கலே.அவனும் நானும் வேறே இல்லே. அங்கே வந்துடணும். அவ்விடத்திலே.’’

‘’செஞ்சுட்டா போறது’’

நான் கொடுத்து வெக்கலே இன்னிக்கு. பெரியவா இருந்து நாளைக்கு இங்கே

பிக்ஷைபண்ணிட்டுத்தான் போகணும்.’’ என்றான் கிச்சான்.அவன் குரல் நடுங்குவதைக் கேட்டு நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தார் ஸ்வாமி.

குழந்தை, சுபாவம், கவலைப் படாதீர் நாளைக்கு இங்கேயே பிக்ஷையை

வச்சுக்கறேன். ஒரு ஊர்லே ஒரு நாளைக்கு மேலே தங்கும்படியா இதுவரை

நேரலே. நீர் சொல்கிறபோது என்ன பண்றது?---செஞ்சுடலாம்.’’

தயவு பண்ண்ணும். அப்ப, நான் உடையாரைப் பார்த்து மருந்து வாங்கிண்டு

வரேன்’’ என்று மறுபடியும் பெரியவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான்

கிச்சான். பெரியவர் தண்ட கமண்டலங்களைக் கையில் எடுத்து, பாதக் குறட்டில் ஏறி நடந்து வந்தார். கை கால் கழுவி , தாழ்வாரத்தில் தூண்டியில் போட்டிருந்த மணைமீது முற்றத்தில் ஒரு காலைத் தொங்க விட்டு உட்கார்ந்தார். இருவரும் விழுந்து வணங்குனோம்.

சொந்த வீடுதானே?’’

ஆமாம்’’

பூஸ்திதி—‘’

ஏதோ சொல்பம் இருக்கு’’

சொல்பம்னாநாலுவேலி, ஜந்து வேலி—‘’

‘’அவ்வளவு இருந்தால் பட்டணத்திலே போய் ஏன் இருபத்தைந்து வருஷமாய்ப்

பிழைக்கணும்! அரைவேலிக்குக் கொஞ்சம் கூட, அவ்வளவுதான்’’

‘’அப்படியா? எங்கே ஜாகையோ?’’

அதையும் சொன்னேன்.

‘’பேஷ், பெரிய மனுஷா, மேதாவிகள்ளாம் இருக்கற இடம்னு சொல்வாளே அதை!’’

‘’ஆமா, ஆமா’’

நாலைந்து பெரிய பெயர்களைச்சொல்லி, அவர்கள் எல்லாம் அங்கேதான் இருக்

கிறார்களா என்று கேட்டார்.

‘’ஆமாம்’’

நல்ல சம்பத்து; நல்ல செல்வாக்கு. இல்லையா?’’

‘’தகப்பனார்கள் சம்பத்தைத் தேடி வைத்தார்கள் அதைச் செலவழித்தும் செலவழிக்கிறார் போல பாச்சை காட்டியும் செல்வாக்கு சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்’’

ஸ்வாமி சிரித்தார். ஏன் சிரித்தார் என்று புரியவில்லை. சற்றுக் கழித்துப்

பெருமூச்சு விட்டார். யோசனையில் ஆழ்ந்திருந்தார்.. என்னமோ பகவான் கொடுக்கிறான். இஷ்டமில்லேன்னா கொடுக்காமல் இருக்கான். தகப்பனார்

சம்பாதிச்சு வச்ச பணத்தையும் பகவான் இஷ்டப்பட்டாத்தானே இவா கையிலே

கொடுப்பான்?’’

தி. ஜானகி ராமன்

பட்டணத்தில் வேலை பார்த்துக்கொண்டு, வாழ்க்கையைப் பல நெருக்கடி

களுக்கிடையே நடத்திக் கொண்டிருக்கும் நடுத்தர மக்களுக்கு ஒரு

மாறுதலாக பூர்வீககஃ கிராம வாழ்க்கை கிடைத்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக

இருக்கும். அப்படியே துள்ளிக் குதிப்பார்களோ? விடுதலை, விடுதலை என்று

இப்படித்தான் கூத்தாடுவார்களோ? தி. ஜானகிராமனின் விஸ்தாரமான

விவரிப்பால் நமக்கும் அந்த ஆசை தொற்றிக் கொள்கிறதே! !

‘’ ஒரு மாதமாக எல்லாமே என் இஷ்டப்படிதான் நடக்கின்றன!

இஷ்டப் பட்டபோது குளிக்கிறேன். இஷ்டப் பட்ட போது சாப்பிடுகிறேன்.

நினைத்தபோது தூங்குகிறேன்அதுவும் பகலில்!கால் மணி அரை மணி

இல்லை!நேற்று உச்சிவேளைக்குச் சாப்பிட்டுப் படுத்தவன் இந்நச் சூரியன்

மறைந்தால் ஒழியக் கண்டளைத் திறப்பதில்லை என்று சபதம் செய்து

கொண்டாற்போல, அந்தி மயங்கிக் கறுக்கிற வேளைவரை தூங்கியிருக்கிறேன்

அப்புறம் இரவு மூன்று மணிக்குத்தான் படுத்தேன். அது வரையில் கோணல்

கிச்சானோடு வாசலில் கட்டிலைப் போட்டுக் கொண்டு அரட்டையடித்தேன்!

என்னை யார் கேட்கிறது!’’

Sunday, December 11, 2011

தி. ஜானகி ராமன்

காவேரி தீரம்3

சரஸ்வதி பூஜையன்று புத்தகம் படிக்கக் கூடாது என்பார்கள். ஆனால்,

அன்று ஒரு நாளாக இல்லாத திருநாளாக புத்தகத்தின் மேல் வருகிற

ஆசை! கீழே கிடக்கிறபல்பொடி மடிக்கிற காகித்தஃதையாவது

எடுத்துப் படிக்க வேண்டும் என்ற மோகம்! அப்படி ஒரு மோகம் அல்லவா

பிறந்திருக்கிறது இன்று இந்தக் காவேரி மீது!.

அப்படியும் சொல்வதற்கில்லை என்று திருத்திக் கொண்டான் அப்பு.

காணாத்தைக் கண்டுவிட்டாற்போல காவேரியை இப்பொழுது பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறோம். ஆனால் பதினாறு வருடமாக,பொழுது

விடிந்தால், பொழுது சாய்ந்தால் காண்கிற காவேரிதான் இது. இந்தூருக்கு வந்த நாளிலிருந்துஅரையில் மூன்று முழ ஈரிழைத் துண்டும், தலையில் எஸ்

கட்டுப் பின்னலுமாக அப்பாவோடு இங்கு வந்த நாள் முதல் இந்தக் காவேரியைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

அன்று பாடசாலையில் சேர்ப்பதற்காக அவனை அழைத்து வந்தார் அப்பா.

ரயிலில் இருவரும் வந்தார்கள். இரவு துழுவதும் பயணம். திருச்சி ஜங்ஷனில் வண்டி மாறி, மறபடியும் ஒரு நான்கு மணி நேரப் பயணம். சுடச்சுட வெளுப்பு வெயில் ஏறிய நேரத்தில் ஸ்டேஷனில் இறங்கினார்கள். ஒரு மைல் ரயில்

பாதையை ஒட்டிய சாலையில் நடந்தார்கள். கிராமத்தில் நுழைந்தார்கள்.

பாடசாலையில் சேர்த்தாயிற்று. இரவு கூடவே படுத்திருந்தார் அப்பா.அவனுக்குப் பக்கத்திலேயே. வெகு நேரம் வரை அவன் கையையும், முதுகையும் தடவிக் கொடுத்துக் கொண்டேயிருந்தார். விடியற்காலையில்

எழுந்து இந்தக் காவேரிக்கு, இதே துறைக்குத்தான் அழைத்து வந்தார்.

குயில் கூவிற்று. அக்காக் குருவி கத்திற்று. நீ-சோவ் என்றும் ஒரு குருவி

கத்திற்று. காவேரி முழுவதும் வெள்ளம் மோதி மோதி பெரிய பாம்பு மூச்சு

விடுகிறதைப் போல நகர்ந்த்து. யானை நகர்ந்து கொடுப்பதைப் போலிருந்த்து.

மிரண்டு கரையிலேயே நின்ற குழந்தையைக் கையைப் பிடித்து முழங்கால்

தண்ணீரில் நிறுத்திக் குளிப்பாட்டி விட்டார் அப்பா. பிறகு வேட்டியைத்

துவைத்துக் கொடுத்தார்.கௌபீனத்தைக் கசக்கிக் கொடுத்தார். தலையில்

அம்மா கட்டிவிட்ட எஸ் கட்டு கலையாமலேயே குளித்துவிட்டு உஹூ,

உஹூ, உஹூ என்று உதடு நடுங்க, கையிரண்டும் கூப்ப , சில்லிப்பில் சிலிர்த்துக் கொண்டே, நிர்வாணமாக, மீன்குத்தி ஒன்று தண்ணீருக்குள் செங்குத்தாகப் பாய்ந்து முழுகிச் சிலிர்ப்பதைப் பார்த்துக் கொண்டே நின்றான்

அவன்.. சிலுப்பிவிட்டு, , அலகில் எதையோ கவ்விக் கொண்டு, நீர் மட்டத்திற்கு மேலேயே, தவளைக்கல் வீசினாற் போல, தொட்டும், தொடாத்து

மாக பறந்து கோயிற்று மீன்குத்தி சடப்’—

அப்பா ஈரவேட்டியை உதறி இந்தா என்று கட்டிக் கொள்ளக் கொடுத்தார்.

விபூதியைக் குழைத்து நெற்றியில் இட்டார்., கையில் இட்டார். பார்த்துக் கொண்டிருக்கும் போதே கண்கட்டு வித்தை போல,வானத்தில் நட்சத்திரம்

முளைப்பது போல, ஈரம் உலர்ந்து விபூதி பளிச்சிட்ட வெண்மை!எல்லாம் அந்த விபூதியைப் போலவே நினைவில் பட்டையடித்துத் தெரிகிறது---அன்று

பிற்பகல் சாப்பிட்டுவிட்டு அப்பா ஊருக்குக் கிளம்பியதும் ஞாபகம் இருக்கிறது.

(அம்மா வந்தாள்---தி.ஜானகிராமன்)