Pages

Thursday, December 15, 2011

தி. ஜானகி ராமன்-யாதும் ஊரே-2

..

ஸ்வாமி சிரித்தார். ஏன் சிரித்தார் என்று புரியவில்லை. சற்றுக் கழித்துப்

பெருமூஊச்சு விட்டார். யோசனையில் ஆழ்ந்திருந்தார்.. என்னமோ பகவான் கொடுக்கிறான். இஷ்டமில்லேன்னா கொடுக்காமல் இருக்கான். தகப்பனார்

சம்பாதிச்சு வச்ச பணத்தையும் பகவான் இஷ்டப்பட்டாத்தானே இவா கையிலே

கொடுப்பான்?’’

(ஸ்வாமிகளின் வார்த்தைகளின் அர்த்தம் கதையின் இறுதியில் தெரியும்)

‘’ம், ம்’’ என்றேன். இந்த ததஃதுவ விஷயங்களில் எனக்கு எப்பொழுதுமே புத்தி கட்டை. நம்முடைய அதிர்ஷ்டத்திற்கு யார் காரணம் என்று எனக்கு என்றுமே பரிந்தது கிடையாது. எனக்குப் பத்து வருஷங்களாககஃ கிடைத்த

சம்பள உயர்வு முப்பது ரூபாய்தான். சம்பளம் முந்நூறுவேலை இரண்டு

முந்நூற்றுக்குச் செய்கிறேன். ஆபீசில் பல காக்காய்கள்’’ லபக், லபக்’’ என்று

கவளம் , கவளமாக விழுங்கிக் கொண்டிருக்கின்றன. போதும் போதாத்தற்கு

‘’ஹோய், ஓடி வாங்கோஇதோ போன வருஷத்து மிச்சம், இதோ மூணாம் வருஷத்து மிச்சம் போட்டுக்கோங்கோ வாயிலே’’ என்று வேறு வீசுகிறார்கள்.

இதில் ஏன் ஒரு பருக்கை கூட நம் பக்கம் தெறிக்கவில்லை என்று ஆராயந்து

ஆராய்ந்து களைத்துப் போய்விட்டேன். வேலை செஞ்சாப் போதுமா? சரியான இடத்தைப் பிடிச்சிருக்கணும். துரைகிட்ட நீயாகப் போய்ப் பேசணும். விசாரிக்கணும். ஏன் முகம் இப்படிவாடினாப் போல இருக்குன்னு கேக்கணும்.

அவர் ஏதாச்சும் சொன்னா, கிச்சு கிச்சு மூட்டிக்கிட்டாவது சிரிக்கணும். உன் வேலையை எவன்யா கேட்கிறான்? களுதைகூட டன் டன்னா சுமக்குது.

சுமந்தப்புறம் எங்க போய் நிக்குது, பாத்தியா? என்கிறான் ‘’லோ,லோ(அவன்

பேரையும் ,ஊரையும் குறிக்கிற முதல் எழுத்துக்கள் இவை) பொய்ப் புன் சிரிப்புச் சிரித்துச் சிரித்து, பயலுக்கு வாய்க்கடையே வெந்துவிட்டது. கூனல் நிரந்தரமாகவே விழுந்துவிட்டது. இதையே நான் செய்தால் துரைக்குப்

பிடிக்காது என்று இந்தப் பயலுக்கு யார் புரிய வைக்கிறது? சீச்சீச்சீஎன்னத்துக்கு இந்த நினைவெல்லாம். இந்தச் சனியனெல்லாம் வேண்டாமென்று தானே மூன்றுமாத லீவு போட்டுவிட்டு இங்கே வந்து ஒதுங்

கியிருக்கிறேன். இந்தச் சன்யாசி ஏன் இதையெல்லாம் கிளப்புகிறார்?

என்ன நான் சொல்றது?’’ என்றார் அவர்.

‘’ எது?’’

அவர் தெளிவு படுத்துவதற்குள், உள்ளேயிருந்து என் மனைவி வந்து ஜாடை

செய்யவே ஓடினேன். ஒன்றுமில்லை. சமையல் திட்டம்தான், வாழைக்காயை

நானே சீவி நறுக்கிக் கொடுத்தேன். கொத்தவரைக்காயை ஆய்ந்து கொடுத்தேன். ஆபீசில் செய்கிற வேலையைவிட எத்தனையோ சிறந்த வேலை. கை மேல் பலன். இவள் கைக்கு அத்தனை மணமுண்டு.

அடுக்களையும் தனிமையும் என் ஆத்மாவுக்கே வேலி போட்டுக் காப்பது

போல் இருந்த்து. அவள் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தாள்.சமைப்பதைப்

பார்த்துக் கொண்டு ஈட்டியை முதுகில் பாய்ச்ச வந்த எதிரியிடமிருந்து

தப்பி ஒளிந்து கொண்டது போல நிம்மதியாக, அமைதியாக உட்கார்ந்திருந்தேன்.கை மட்டும் கொத்தவரைக் காம்பை ஆய்ந்து கொண்டிருக்

கிறது. அவள் சமைக்கும் போது நான் இப்படி உட்கார்ந்துபார்த்தது. கிடையாது.

என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு ஆள் நீளம், முக்கால் ஆள் அகலம் உள்ள பட்டணத்து இருட்டு அடுக்களையில் அவள் ஒருத்திக்குத்தான் பம்ப

ரமாட இடமுண்டு இந்த சமையலரை பட்டணத்து வீடளவு இருக்கிறது.

பிஞ்சுக் கொத்தவரைக்காய், கிள்ளக்கூட மனம் வரவில்லை.

‘’ இப்பத்தான் நாற்றங்காலில் நாற்றுப் பிடுங்கியிருக்கு மழைவந்து கலைசல் பண்ணிடப் போறது’’ என்று சிரிக்காமல் சிரித்தாள் அவள். இவ்வளவு கரிசனமாக நான் அவளுக்கு உதவுவது அவளுக்கே தாங்கவில்லை.

‘’ஸ்வாமிகளுக்கு சுருக்கத் தயாராக வேண்டாமா?’’

‘’நான் பாத்துக்கறேன். ஒண்டியா கூடத்திலே அவரை வச்சுட்டு வரணுமா? ‘’என்ன நினைச்சுப்பார்?’’

‘’அவர் காரியமாகத்தானே இருக்கேன்--?’’

‘’அவரோடு போய் ஏதாவது பேசிண்டிருங்களேன்- இது ஒரு பிரமாதமா எனக்கு?’’

எழுந்து கொண்டேன்.

உண்மையில் இருவருக்கும் உடம்பு , உள்ளெல்லாம் நிறைந்துதான் கிடந்தன.

பத்து நாட்கள் வேலைக்குச் சம்பளம் கொடுத்து இருபத்தைந்து நாள் வேலையைக் கசக்கி வாங்கிக் கொண்டிருக்கிற பட்டணத்து ஆபீசைவிட்டு இந்த ஒருமாதம் ஒதுங்கியிருப்பதே, ரத்தக் கட்டி உடைந்துவிட்டாற்போல,

நோவு நீங்கிய நிம்மதியாக,விடுதலையாக எங்களைக் கவ்விக் கொண்டிருந்த்து.

மூங்கில் தோப்புகள், சுழியிட்டு ஓடுகிற ஆறு, வழிந்து ஓடுகிற வாய்க்கால்

கொல்லை முறுங்கை மரத்தில் தினைக்குறுவியின் ஊசிக்கத்தல்,வலியன்

குருவி கனைத்துக் கனைத்துக் குழைக்கிற இனிமை,நீளமான ஒரு வாக்கியத்தைத் திருப்பித் திருப்பிப் பேசிக் கோண்டிருந்த புளியமரத்துக் குருவி, ஆழங்காண முடியாத நிசப்தம், அதன் நடுவே கீச்சிடும் அடுத்தவீட்டு ஊஞ்சல்,

நிழல், காற்று, நாற்றங்காஃகளில் அலையோடுகிற பசும்போன், வரப்புகளில்

நாயுருவிகளை உராய்ந்து நடப்பது, களத்துக் கலியாண முறுங்கையில்

‘’ட்ரூவ்’’ என்று அழைக்கிற மணிப்புறா,மகாபிரபோ, எங்கள் மெய் சிலிர்க்கிறது.

எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல இந்த சன்யாசி வந்திருக்கிறாரே

அவருக்கு ஒரு கவளம் சோறு போடும் பேறு கிடைத்த்தே--! நாங்கள் கூடச் சன்யாசிகளாகத்தான் இருப்பதாகத்தான் தோன்றிற்று.. சிறுமை, மனநோவு, பற்றாக் குறையின் குமைச்சல்அனைத்தையும் விட்டு விடுதலையடைந்தி

ருப்பதே சன்யாசம்தான்.

‘’என்ன! நின்னுண்டேயிருந்தா? என்ன யோசனை இப்ப,,அவரைக் கூடத்திலே

உக்காத்தி வச்சுட்டு?’’

கூடத்துக்குப் போனேன். சன்யாசி தூணில் தலையைச் சாய்த்திருந்தார். பசி.

அயர்ந்துவிட்டார். என் அடியோசை கூட அவர் கண்ணைத் திறக்கவில்லை.

2 comments:

 1. எவ்வளவு வீட்டில் கணவர் மனைவிக்கு சமையலில் ஒத்தாசை செய்கிரார். சந்தோஷமான அனுபவம் அது .ஒவ்வொரு அனுபவமும் கண்முன் காட்சிகளாக தெரிகிரது.அத்போலவே விருந்துபசாரமும் நல்லா சொல்லப்பட்டிருக்கு. நாமெல்லாம் எப்போ விட்டு விடுதலையாவது?

  ReplyDelete
 2. அவர் மிகவும் அநுபவித்து,ரசித்து மனைவிக்கு
  சமையலில் உதவி செய்கிறார்கிராம வாழ்க்கையின்
  அழகை,ஆரவாரமில்லாத தனிமையின் இனிமையை
  எப்படி வர்ணிக்கிறார்?அவர் குறிப்பிடும் பறவைகளை
  இப்போது பார்க்க முடியுமோ என்னமோ? இப்போது
  கிராமங்களே நகரமயமாகிவருகின்றனவே?
  நன்றி அம்மா

  ReplyDelete