Pages

Thursday, December 22, 2011

தேவன்-கும்பகோணம் கல்லூரி- 3

இத்தனைவிதச் சிறப்புகள் நிறைந்த காலேஜிலதான் வேதாந்தம் ஹாஸ்டலில்
சேர்ந்து படித்தான். உள்ளூரிலிருந்தும் பக்கத்துக் கிராமங்களிலிருந்தும் வந்து
படிக்கும் பிள்ளைகளுக்கிருந்ததைவிட அதிகமான வசதிகளை அளித்தது ஹாஸ்டல். குடும்பக்கவலையின்றி, அருகாமையில் இருந்து நிதானமாகப் படிக்கலாம். யாரோ ஓர் அறிவாளியான பிரின்ஸிபலின் ஆக்ஞையின் மேல்
மாணவர்கள் விடியற்காலம் எழுந்து பாடங்களைக் கவனிக்க உதவியாக
ஜந்துமணிக்கு காலேஜ் மணி அடிப்பது வழக்கம். இரவு பத்து மணிக்குமேல்
கண்விழிக்காதபடி, கண்டிப்பும், கண்ணியமும் மிகுந்த ஹாஸ்டல் வார்டன்
கவனித்துக் கொண்டார்.

வேதாந்தம் புத்திசாலி.ஆனால் அவனை அவன் தகப்பனார் அடங்காத பிள்ளையாக வளர்த்தார். வகுப்புக்கு பத்து மணிக்குப் போக வேண்டுமென்றால்
பத்தேகாலுக்குத்தான் செல்லுவான்.ஹாஸ்டலுக்குப் பத்து மணிக்குள் திரும்ப
வேண்டுமென்றால் பத்தரைக்குத்தான் வருவான். எனினும் இதுவரை யாருடைய கோபத்திறகும் ஆளானதில்லை.

ஒரே ஒரு சமயம் சம்ஸ்கிருதவகுப்பின் இடையில் அவன் வெளியே பார்த்தான். ஒரு நண்பன் அவனை டென்னிஸ் ஆட வரும்படி சமிக்ஞை செயது கொண்டிருந்தான்.. சட்டென்று எழுந்து வெளியே போயவிட்டான்.

பண்டிதர் கவனித்ததாகவே தெரியவில்லை. ‘’கிராதார்ஜூனீ’’யத்தில் ஒரே
சுலோகத்தில் இரண்டு அர்த்தங்கள் வரும்படி அறபுதமாக்கஃ கவி எழுதியிருக்கும் கட்டம் நடந்து கொண்டிதுந்தது. ‘’கராப்ரசங்கேன ஜனைருதாஹ்ருதா’’ ரஸித்து ஸ்வானுபவம் தோன்ற இரு அர்த்தங்களையும்
பிரித்துப் பிரித்துச் சொல்லிக் கொண்டிருந்தார். வேதாந்தம் வெளியே சென்றவன் அன்று வரவே இல்லை. மறுநாள் அதேவகுப்பில் நுழைந்தபோது
பண்டிதர் ,’’வேதாந்தம் தானேடா? போ வேளியே!’’ என்றார் கண்டிப்பாக.
‘’
ஏன் சார்?’’
‘’போ என்றால்! ஆமாம்! இந்த வகுப்பிலிருந்து வெளியே போகிறதென்றால்
என்னைக் கேழ்க்க வேண்டியதில்லை. உள்ளேவருகிறதென்றால் என் உத்தரவு
வாங்கிக் கொண்டாகணும். நிறகாமல் போயவிடு.!’’ என்றார்.

‘’ஸார்’’
எனக்கு மேலே பாடம் நடக்கணும். போய்விடு. நேற்று டென்னிஸ் ஆடப் போனபோது என்னைக் கேட்டாயோ?
ஸார்’’
எனக்கு அப்புறம் கோபம் வந்துவிடும். கோபம்வந்தால் இன்ன நடக்கும் என்று
சொல்ல முடியாது. தெரிந்ததா
ஸார் இனிமேல்---‘’
உனக்கு எந்த ஊரடா?
தூத்துக்குடி,சார்!’’
தூத்துக்குடியில் யார் வீட்டா?
தேசிகாச்சாரியார் என் தகப்பனார்.

சக்கரபாணி ஜயங்கார் சுவீகாரமதானே? உங்கப்பாவை எனக்குத் தெரியும். நீ
தேசிகன் பிள்ளையென்று எனக்கு இத்தனை நாளாகத்தெரியாதே.! உன்னை ஹாஸ்டலில் சேர்த்து நீ முன்னுக்கு வரணும் என்று காத்துக் கொண்டிருக்கிறான். நான் எழுதுகிறேண்டா!’’

வேதாந்தம் கணகளில் ஜலம் வந்தது. பதில் சொல்லாமல் நின்றான்.
அழுகிறாயே1 போகிற போதே இந்தப்புத்தி இருக்க வேண்டாம்? இடத்திலபோய் உடகார்! அசடு, வேறும் அசடு!’’

வேதாந்தம் கண்ணால் ஜலம் விட்ட காரணமே வேறு, ‘’நீ. முன்னுக்கு வர
வேண்டுமென்று காத்திருக்கிறான்’’ என்றதுதான் அவன் மனதை ஊடுறுவி
விட்டது. உள்ளூற அவனுக்கு தகப்பனாரின் பாசம் நிரம்ப உண்டு. தாயும் தகப்ப
னும் ஒரு உருவாகத் தேசிகாச்சாரி அவனுக்கு இருந்திருக்கிறார் அல்லவா?

(அமரர் தேவன்---மிஸ்டர் வேதாந்தம்)

5 comments:

 1. அந்த அறியாதவயதில் விளையாட்டு புத்தியும் படிப்பில் ஆர்வமும் இருக்கும் பையன்களின் மன நிலை நன்றாக பதிவு செய்திருக்கார். ஆசிரியரும் எவ்வளவு தன்மையாக நடந்து கொள்கிரார்.

  ReplyDelete
 2. இதையெல்லாம் படித்தால் இந்தமாதிரி கல்லூரியிலெ
  ல்லாம் படிக்கவேண்டும்போல் ஆசையாக இருக்கும்.
  ஆனால்நான் பொறியியல்பாடங்களில் டிரைசப்ஜெக்டுகளாகப் படிக்கவேண்டியதாயிற்று.
  ஹாஸ்டல் வாசமும் கிடைக்கவில்லை.எனவே
  தமிழ்கதையிலக்கியத்தில் ஆதிக ஆர்வம் உண்டாயிற்று. வருகைக்கு நன்றி அம்மா
  கதாசிரியர் வித்யாசுப்பிரமணியன் தளத்திற்கு வருவதில்லையா?உங்களை அங்கு பார்க்க முடியவில்லையே?

  ReplyDelete
 3. ராதா கிருஷ்னன் சார் வித்யா சுப்ரமனியம் லிங்க் கொடுங்க. இவ்வளவு நாள் தெஇந்திருக்கலே அதான் அங்க வல்லே.

  ReplyDelete
 4. நீங்கள் கேட்டவுடன் உடனே கிடைக்கிறதே.ஆச்சரியமாக இருக்கிறது. அவர்
  கதைகள் படித்திருக்கிறீர்களா? லடசுமிக்குப பிறகு
  அதிகமாக எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.
  நன்றாக இருக்கும் நன்றி அம்மா

  ReplyDelete
 5. அதுதானே கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்னு சொல்லி இருக்காரே. ஒரு பெரியவர்.

  ReplyDelete