Pages

Friday, December 9, 2011

தி. ஜானகி ராமன்

அன்பு வைத்த பிள்ளை

இரவு பத்து மணிக்கு ரேழியில் படுத்திருந்த கிழம் ஜலம் ஜலம்

என்று அரற்றிற்று. ஊருக்கு அப்போது இரண்டாம் ஜாம.ம். ஊமைக்

கோட்டானின ஊங்காரம் ஓய்ந்து , இருளின் சுவட்டிலேயே கிராமத்

துக்குள் வந்த தூக்கமும் வந்துவிடும்.. அந்திவேளையியில் சோற்றைக் கொட்டிக் கொள்ளக் கூடாது என்ற பழைய பழைய கட்டுப்பாட்டைக்

கொலைசெய்துவிடாமல் காத்திருந்து,நாலு நட்சதிரத்தைக் கண்டதும்

மத்தியான மிச்சத்தைச் சாப்பிட்டுவிட்டுப் படுத்துவிடுவார்கள். அடுத்த வீட்டு ஊஞ்சல்பலகை மட்டும் மந்த ஆட்டம் ஆடி யாரையோ தூங்கப் பண்ணிக் கொண்டிருந்த்து. இந்த அகாலத்தில்தான் கிழம் நீருக்கு அலறிற்று. மாட்டுப்பெண் சுட்டதும் சுடாததுமாகக் கால் சேர் வெந்நீர் கொண்டு வந்து

வைத்துவிட்டுப் போனாள். குடித்துவிட்டுஅம்மாடி,அம்மாடி என்று கிழம்

ஆச்வாசக் குரல் கொடுத்த்து.

தப்பு தப்பென்று மெத்தையை தட்டி உதறிவிட்டு அகமுடையான் காமிரா

உள் ஜன்னல் அடிக்கதவைச் சாத்தினான். மாட்டுப்பெண் வெந்நீர்பாத்திரத்தை

ஷெல்பில் வைத்து அடுக்களைச் சங்கிலியைப் போட்டுவிட்டு அங்கே வந்துவிட்டாள்.

ஒரு நாழி ஆயிற்று.

கொஞ்சம் ஜலம் கொண்டு வரயா?’’ பதிலில்லை.

பாகு, பாகு, கொஞ்சம் வெந்நீர் கொண்டு வாயேன்,’’

பதிலாக அடுத்த வீட்டுக் கடிகாரம் டாக் டாக் டாக் என்று ஆற்று மணலை

எண்ணுவதுபோலக் காலத்தை வினாடி வினாடியாக அளந்து கொட்டிற்று.

பாகு, பாகு!’’

நாலாவது வீட்டில் நெருப்புக் குச்சி கிழித்தால் கிழத்திற்றுக் கேட்கும். ஆனால்

அதைவிடக் கம்மிய குரலில் காமிரா உள் சம்பாஷணை நடந்த்தால், அதன்

செவிக்கு எட்டவில்லை.

விடுங்கோன்னா அம்மா தூத்தம் கேட்கரா’’

தூங்கறாப்பலே இருந்துடேன்.’’

இப்ப ஏன்னு கேட்டுட்டேனே’’

தாகம் கிடந்து அடிச்சுக்கரது அப்புறம் கொண்டு கொடேனாம்.’’

பாகு, பாகு---தூங்கறியாம்மா?’’

நீங்க விடுங்கோ-இதென்ன பச்சக் குழந்தை மாதிரி- ரொம்ப அழகாயிருக்கு-அவ்வளவு என்ன!’’

சரி, கொடுத்துட்டு உடனே வந்துடறியா?’’

ம்’’

உடனே வந்துடணும்’’

உடனே வந்துடரேன், விடுங்கோ’’ என்று வாக்குறுதியளித்துவிட்டு, தலைப்பைப் பிடுங்கி குலைவை சரிப் படுத்திக் கொண்டு வெளியே வந்தாள்.

கூடத்து ஆணியிலிருந்து பெட்ரூம் விளக்கை எடுத்து, அடுக்களையில் மெழுகின அடுப்பின் மீதிருந்த கெட்டிலிலிருந்து வெந்நீர் எடுத்து இடை கழிக்கு

வந்தாள். கிழிசல் புடவையுடன் கிழம் கிடந்த அலங்கோலம் சகிக்கவில்லை.

பிள்ளை வைத்திருந்த அன்பு ஒவ்வொரு கிழிசலிலும் எட்டிப் பார்த்து.—

இந்தாங்கோ-வெந்நீர் ஆறியிருக்கே.’’

ஆறியிருந்தா என்னடீம்மா?—வாயை நனைச்சுக்கத்தானே—ம்---அப்பாடா, அம்மாடி,அப்பா—ஹூம் போறும்’’

போறுமா, இன்னும் கொஞ்சம் கொண்டு வரட்டுமா?

போ றும், நீ போய் படுத்துக்கோம்மா

காலை அமுக்கி விட்டஃடுமா?’’

வாண்டாண்டிம்மா—ம்—நீ போய் படுத்துக்கோ’’

மாட்டுப்பெண் திரும்பி, ஆணியில் விளக்கை மாட்டிச் சிறிதாக்கிவிட்டு,வாக்குறுதியைக் காப்பாற்ற உள்ளுக்குள் வந்தாள்.

கட்டிலைவிட்டு எழுந்து காத்திருந்தவன் திடீதென்று அவளை அணைப்பில்

கொண்டு வேண்டாத திகைப்பில் அவளை ஆழ்த்தினான்.

இடைகழியில் மீண்டும் இருட்டு. மழை பெய்கிறமாதிரி தோன்றிய இருளைத்துளைத்து த் துளைத்துப் பார்த்த்து கிழம். அதற்கு வருத்தந்தான்.

கடைசி காலத்தில் இஷ்டப்படி இருக்க முடியவில்லையே என்று.’’ உடம்பில் தெம்புள்ள போதே செத்துப் போய்விட வேண்டும், கழுகு மாதிரி முடிவில்லாமல் உயிரை வைத்துக் கொண்டு ஊன் தளர்ந்து, புத்தி குழம்பி,

தொட்டதெள்கெல்லாம் இரண்டாம் கையை எதிர்பார்ர்த்துக் கொண்டிருப்பது

பரம துக்கம் என்று கிழம் அநுபவ பூர்வமாக சித்தாந்தம் செய்து கொண்டது.

அது அவ்வாறு துக்கப் பட்டதற்குப் பாத்தியம் உண்டு. குடும்த்திற்கு இருக்கிற இரண்டரைவேலி சொத்தும் அது கொண்டு வந்த்துதான். கட்டின புருஷனுக்கு சூச்சக்கரக் குழி நிலம் கூடக் கிடையாது. கிழம் அப்பாவுக்கு ஒரே

பெண். பையனிடம் அலாதியான பிரீதியினால், பூமி பூஜ்ஜியமாக இருந்தாலும்

பெண்ணைக் கொடுத்து இரண்டரைவேலியையும் அவனுக்கு எழுதிவைத்துப் பெண்ணுக்கு என்று தனியாக ஒரு ஆயிரம் ரூபாயை ஒதுக்கி வைத்துவிட்டுப்

போனார் அவர். கிழத்துக்கு இப்போது அறுத்தைந்து வயது. நாற்பத்தைந்து வயதிலேயே கொழுக் கொம்பை இழந்துவிட்டது. இப்போது பிள்ளையிடமும்

,மாட்டுப் பெண்ணிடமும் மாட்டிக் கொண்டு தவிக்கிறது.

கிழத்தின் நிறைவேறாத பாழ்த்துப்போன ஆசைகளெல்லாம் ஒன்று திரண்டு

புலம்பத் தொடங்கின.

சொத்தெல்லாம் என் பேரில் இருந்தால் இப்படி அலட்சியம் பண்ணுமா

கீழ்க் கிளை? அம்மா, அம்மான்னு காலைப் பிடிச்சிண்டு கிடக்கும்!.பணம்தான் என் பேரில் போட்டு வைத்திருக்கப் படாதா?

கையெழுத்துப் போடத் தெரியாட்டா, கீறல் வச்சு வாங்கிக்கறேன் அவன் பேரில்

இருக்ககஃ கொண்டுதானே சம்பாதிச்ச பணம்னு நெனச்சுனூட்டான் . ரெண்டு

புடவையும் ராம பாணம் போட்டாப்போல ஆயிடுத்து ஒரு புடவை எடுத்துத் தாடான்னு எத்தனை மாசமாய்ச் சொல்றேன்.? காதிலே போட்டுண்டானா---

வீட்டிலே சுடலாட்டமா பளிச் பளிச் சின்னு ஒண்ணு நிக்கறது. எதித்த வீட்டு முகரக் கட்டைக்குக் கொண்டுபோய் வண்டி வண்டியா நெல்லைக் கொட்டறான். ஒத்தருக்கும் தெரியாதுன்னு நெனச்சிக்கிண்டு, ஊரிலே சேதி படை படைச்சுக் கிடக்கு--- பாவம் பண்ணினா ஒரு பிராணிக்குத் தெரியாதுன்னு நெனச்சிண்டு பண்றதே உலகம்!.

ஏழு பிள்ளை பிறந்து ஆறு மாசத்திலேயும் மூணுமாசத்திலேயும் குழியிலே

புதைச்சிட்டுது. குறை வேறு நாலு ஆயிட்டுது. அந்தப் பாவிக்கு அப்படித்தான்

நடக்கும். அவன் தொட்டது துலங்காது இருக்கற இடமே விடியாது. வீடு , வீடாவா இருக்கு? சுடுகாடாட்டமா, வெறிச்சோடிக் கிடக்கு மனுஷா வாழற

இடமாவே இல்லை’’

கிழம் தாகத்திலும், பசியிலும் பழங்கணக்குப் பார்த்துக் கொண்டிருந்த்து. அதற்கு

என்னமோ குழந்தைகளுக்குக் குறைச்சல் இல்லை பெரிய பிள்ளைக்குப் பிறகு

மூன்று பெண்கள்,அப்புறம் இரண்டு பிள்ளைகள் அப்புறம் இரண்டு பெண்கள்.

எல்லாவற்றிற்கும் கல்யாணமாகிவிட்டது குழந்தை குட்டிகளும் பிறந்து விட்டன.

அம்மாடா, கல்யாணந்தான் பண்ணிக் கொடுத்தாச்சு, கூடப் பிறந்த்துகளை ஒருநாளைக்காவது அழைச்சிண்டு வந்து வச்சிக்கணும்னு ஆசையிருக்காதா? ஒரு பிரசவம், வளைகாப்புன்னு பிறந்தவீட்டில் ஒன்று

நடந்திருக்கணுமேஅதுகளுக்கு.பெரிசு இரண்டும் இங்கே பிள்ளை பெத்தது

மகாராஜா மாதிரி அவர் இருந்தார். நடந்த்து. அப்புறம் ஒரு பெண்ணாவது

தலைகாட்டணுமே. புருஷன் வீட்டில் அடிவச்சதுதான். இருக்கோ செத்து

தோன்னுகூடத் தெரியலை. போன வருஷம் சின்னது கடிதாசு போட்டது.

‘’உடம்பு சரியில்லை,அங்கே வந்து ஒரு மாசம் மருந்து சாப்பிட்டுட்டுப்

போறேன்’’னு பதில் போட்டானா பாவி, பாவி! எப்படி இருக்க முடிஞ்சது

வீடு வெரிச்சோடிக் கிடக்காமல் என்ன செய்ய முடியும்?’’

கிழம் மௌனமாக்கஃ கண்ணீர் உகுத்தது

அடுத்த இரண்டு பிள்ளைகளும் நல்லதுகள்தான். அம்மா என்று ஒரு பாசத்தை

உணரும் சக்தி உண்டு.அதுகளுக்கு!. கிழத்திற்கு அவர்களிடம் போய் இருக்க வேண்டுமென்று ஆசை.

இரண்டாவது பிள்ளைக்கு கும்பகோணத்தில் இரண்டுவருஷங்களாகப் பாங்கியில் வேலை. அவனுக்குப் பெண்டாட்டி வழியில்லை.அவனைவிட உயரத்தில் ஒரு சாணும் அகலத்தில் இரண்டு சுற்றுமாகச் செழித்திருந்த அவள்

அவனைக் கட்டை விரலில் மடக்கி வைத்திருந்தாள். பிண்ணாக்கு மூட்டை மாதிரி உடம்பும்-ஆனைக் காலும், பட்டிக்காட்டுப் பேச்சுமாக்கஃ காட்சி கொடுத்த கிழத்தைக் கண்டால் அவளுக்குச் சிரிப்பும், ஆத்திரமும் வருகிறதாம்.

ஆகவே அவன் விசுவாசம் செயல் வரையில் வரவில்லை.

மூன்றாவது பிள்ளைக்கும் பெண்டாட்டி வழியில்லை. சாந்திக் கல்யாணத்தன்று

இரவில் கட்டிலில் ஓர் ஓரமாக மூஞ்சியைத்தூக்கிக் கொண்டு உட்கார்ந்து

‘’நீ ஒரு ஆம்பிளையா இருந்தால் என்னைத் தொடாதே, தொட்டால் கூச்சல்

போடுவேன் என்று கணவனை பயமுறுத்திற்றாம். அதைப் போகிற வழியில் விட்டுத் திருப்ப முயன்றார்கள். பையன் கிராப் வைத்துக் கொண்டான்.பவுடர் போட்டுக் கொண்டான். மைனர் வேஷம் போட்டான். தமிழ் நாவல் வாங்கிக்

கோடுத்தான். அவள் மசியவில்லை.ஆறு மாதம் கழித்து ‘’எங்காத்திலே வந்து

இருந்துவிடுங்கள் ‘’ என்று அவனை அழைத்துக் கொண்டு சிதம்பரம் போய்

விட்டது. மாமனாரின் காபி ஹோட்டலில் அவன் ‘’காஷியர்’’ வேலை பார்க்கிறான் இப்போது.

பிள்ளைகளின் துரதிஷ்டத்துக்காகவும் கிழம் கண்ணைத்துடைதுதுக் கொண்டது. அது புக்ககத்திற்கு வந்தபோது மாமனார் மாமியாருக்கு, தெய்வத்துக்கு செய்வது போல்தான் செய்து போட்டது. மாமியார் கொஞ்சப்

பாடு படுத்தவில்லை. கொஞ்சப் பட்டினி போடவில்லை. இரண்டரை வேலியைக் கொண்டுவந்தவள் என்று பயப்படவில்லை.

கிழத்தின் பெரிய மாட்டுப்பெண்வெந்நீர் கொடுத்துவிட்டுப் போனவள்

செய்துபோடத்தயாராய் இருக்கிறாள். அவள் சாது. அவன்தான் விட மாட்டான்.

அவனுக்கு எப்பொழுது பார்த்த்தாலும் காலதேசப் பிரக்ஞையே இல்லாமல்மங்கள விலாசத்தில் இருக்க வேண்டும். மனைவிக்கு மனித சரீரம் இல்லை

என்று அவன் நினைத்துவிட்டான்போல இருக்கிறது. கல்லுக் கல்லாக ஏழு

குழந்தைகளைப் பறிகொடுத்து நாலு குறையும் கண்டுவிட்டாள் அவள்.அவனுக்கு மனம் கோணாமல் நடந்து வதுகிறாள். தெய்வப்பி றவியோ என்னவோ?

பீற்றல் பாயில் படுத்து மனசை அலையவிட்டுக் கொண்டிருந்த கிழத்திற்கு வாய் விட்டு அழலாம் போல இருந்த்து. ஆனால் தெம்பு இல்லை. பத்து நாளாக அதற்குக் கடும் ஜுரம் அன்ன ஆகாரம் இல்லை. வெந்நீர்தான்

மருந்து, சாப்பாடு எல்லாம் பிள்ளை ரிஷி மாதிரி பற்ற்றஃறுத் திரிகிறான்.

ஒரு வைத்தியனை அழைத்துப் பார்க்கத் துப்பில்லை.

‘’ பாகு, பாகு!’’

கிழம் ஈனஸ்வரத்தில் அழைத்த்து. மீண்டும் நா வரட்சி.. கண் மேலே கொண்டு செருகிற்று.

பாகு,பாகு, ஏ பாகு, கொஞ்சம் ஜலம் கொண்டு வாயேன்.’’

கடிகாரம் காலத்தை அளந்து கொட்டிற்று.

‘’பாகு,பாகு’’

விச் விச்சென்று எங்கோ ஒரு சுவர்க் கோழி.

‘’பாகு, பாகு’’

காமிரா உள்ளில் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டு, அயர்ந்து போய் கனவில்லாத் துயிலில் ஆழ்ந்து கிடந்தாள் பாகு. அவளுக்கு முன்னாலேயே அவன் தூங்கிவிட்டான்.!.

வெளுக்கிற வேளைக்குச் சாணி தெளிக்க வந்த வேலைக்காரி’’எழுந்து அப்பாலே குந்தும்மா, மெளுகணும்’’

என்று ஒரு சத்தம் போட்டாள். கிழம் அசையவில்லை

‘’

யம்மா, எளுந்திரும்மான்னா,’’

அருகில் போய்ப் பார்த்த போது அவளுக்கு சந்தேகம் தட்டிற்று.. கிழத்தின் முகம் சரியில்லை. கண் கறுப்பைக் காணோம். மூக்கில் கை வைத்துப் பார்த்

தாள்.கால், கைஎல்லாம் ஜில்லிட்டிருந்தது

காமிரா உள்ளண்டை ஓடி, அம்மா,அம்மா ‘’ என்று பறந்தாள் வடுவாயி.

பதில் வராததும் உரக்ககஃ கூப்பிட்டாள்.

‘’ஏண்டி?’’

ஏண்டியா? வாங்கம்மா, சட்டுனு நல்லா படுத்திருக்கீங்க.’’

திகிலடைந்து, மேலிருந்து கையை எடுத்து வைத்துவிட்டு பாகு ஓடி வந்தாள்.

‘’

அம்மாவைப் பாருங்கோ’’

மஞ்சத்தில் அரைத் தூக்கத்தில் படுத்திருந்தவனுக்கு ஆத்திரமாக வந்த்து.

சனி’’ என்று வைய வாயெடுத்த போது ‘’ஜயோ,ஜயோ அம்மா வடிவு, ஜயாவை எழுப்புடீ! அம்மா,அம்மா, போயிட்டேளே!’’ என்று அவச் சத்தம் வீறிட்டு எழுந்து அவன் உடலை வெருட்டி, உடலை உலுக்கி நிமிர்த்தியது.

சோம்பியிருந்த உள்ளம், கலவரத்தால் துடித்தது. நெஞ்சு அடித்துக் கொள்ள, போர்வையைப் காலால் உதறிவிட்டுப் பாதி ஓட்டமாக ஓடி வந்தான்.

சவத்தின் மார்பின் மீது சாய்ந்து பாகு புலம்பினாள். இடுப்பில் கைகளை வைத்து அவன் கண நேரம் இமை கொட்டாமல் நின்றான். அதிர்ச்சியில் நின்று போன கடிகாரத்தைப்போல அறிவு ஸ்தம்பித்திருந்த்து. முகத்தைப் பார்த்தான்.

கண்ணைப் பார்த்தான். புரண்டு கிடந்த கையைப் பார்த்தான். வீங்கிப் போயும், சூம்பிப் போயும் வெளுத்திருந்த காலைப் பார்த்தான். பிரமை தெளிந்து அருகில்

வந்தான். உதட்டைக் கடித்து,அழுகையை அமுக்கி ‘’அம்மா’’ என்றான். கோரமாக அந்த ஆண் குரல் தேம்பிற்று. கரகரவென்று கண்ணில் நீர் பெருக்

கெடுத்த்து. அம்மா, அம்மா’’! என்று துடையை அசைத்தான். அம்மா எங்கே?

திடீரென்று நாலைந்து ஸ்திரிகள் வாசலிலிருந்து வந்து மாட்டுப் பெண்ணைக் கட்டிக் கொண்டு பிலாக்கணத்திற்கு ஆரம்பித்தார்கள். ஜந்து நிமிஷம் ஆயிற்று.

கூட்டம் பெருகிற்று. கடைசியில் இடைகழி கொள்ளவில்லை. பெண்மை முழுவதும் திரண்டமர்ந்து ஓலமிட்டது. ஒருவரோடும் பேசாமல் ஓரிரண்டு குரல்கள் தமக்கென்று தனிச்சுருதி எடுத்துக் கொண்டு சோகத்தைக் கர்ண கடூரமான கேலிக் கூத்தாக அடித்தன. அவனுக்கே இதைச் சகிக்க முடியவில்லை பக்கத்திலிருந்த வயது முதிர்ந்த ஸ்திரி

பத்துப் பொண்ணு பிள்ளை பெத்து

பட்டுப் பாயில் உக்காத்தி வச்சு

பாத்து மகிழ்ந்தாயே,

பீத்தல் பாய்தான் கிடைச்சுதோடீ,

படுத்திண்டு செத்துப் போக

பீத்தல் பாய்தான் கிடைச்சுதோடீ!’’

என்று சொந்தக் கவனம் ஒன்று புனைந்து அவன் மீதிருந்த எரிச்சலைக் கம்பங்கள், கமகங்களுடன் அழுது தீர்த்தாள்.

மாமி,மாமி நான் மோசம் போயிட்டேன் மாமி. இப்படி திடீர்னு போயிடு

வான்னு நெனக்கலியே; நீங்க சொல்லிக் காட்டும்மடி ஆயிட்டுதே!’’ என்று

விக்கினான் நாராயணசாமி. அதுதான் அவன் பெயர்.

‘’நாராயணசாமி, அவ்வளவுதான் கொடுத்து வச்சது. பிணத்துக்காவது நல்ல

கிழிவா வாங்கிப் போர்த்து---எழுந்து வா, நாழியாச்சு. தம்பி, தங்கைகளுக்கெல்லாம் சொல்லியனுப்பணும். சாமான்களைத் தருவிக்கணும்’’

என்று ஊருக்குப் பெரிய கிழவர் கிண்டலை மறந்துவிடாமல் துரிதப் படுத்தினார்.

குடவாசலுக்குப் போய் சின்னப் பிள்ளைக்கு சிதம்பரத்துக்குத் தந்தி கொடுக்க

ஒரு ஆள் ஓடினான் கும்ப கோணத்திற்கு ஒரு ஆள் சைக்கிளில் கிளம்பினான்.

இரண்டாவது பிள்ளைக்குச் சொல்லிவிட்டு சாமான் வாங்கிவர. சாமான் ஜாபிதா தயாரானதும் சைக்கிள் புறப்பட்டு விட்டது

சைக்கிள் தெருக்கோடி திரும்பியதும் என்னமோ நினைத்துக் கொண்டான்

நாராயணசாமி. திடுதிடுவென்று எதிர்வீட்டுக்குள் ஓடி கொல்லையைக் கடந்து

வாய்க்காலையும் தாண்டி சாலை மீது ஏறினான். சைக்கிளும் வந்து.

அண்ணாவு, அய்யா வரப்போ,ஒரு போட்டோ பிடிக்கிறவனையும் அழைச்சுக்கிட்டு வரச் சொல்லு. மறந்து போயிடாமே அழைச்சிக்கிட்டு வரச் சொல்லணும்.’’அவன் சொல்லும்போது தொண்டை அடைத்துக் கொண்டது.

ஏதுக்கு ஜயா?’’

அவனுக்குப் பதில் சொல்ல முடியவில்லை கொஞ்சம் சமாளித்துக் கொண்டு, நீ சொல்லேன்’’ என்று சுருக்கமாகச் சொன்னான்.

ஒரு மணிக்குப் பிறகு, மண்டை வேடிக்கிற வேயிலில் ஒரு ஸ்பெஷல் பஸ்ஸில் ஒரு கூட்டம் வந்திரங்கிற்று. கும்பகோணத்திலேயே இருந்த

பெரிய பெண், அவள் புருஷன், ஜந்து பேரன் பேத்திகள், மூன்றாவது பெண்

அவள் குடும்பம், பிறகு கிழத்தின் பிள்ளை, மாட்டுப் பெண்—கடைசியாக

ஒரு போட்டோக்காரன் சாமக்கிரியையுடன்—எல்லோரும் இறங்கினார்கள்.

தெருவுக்கு விசேஷப் புதுமையான பஸ்ஸைப் பார்க்க ஒரு சிறுவர்

கூட்டம் கூடிற்று. ஸ்திரிகள் வாசலில் நின்று வேடிக்கை பார்த்தார்கள்.

பீற்றல் பாயில் செத்த கிழம் அல்ல, அதன் கும்பகோணத்துச் சந்த்திகள் கூட்டம் ஒரு கார் கொள்ளும்!’’. என்று அறிந்து ஆச்சரியப் பட்டார்கள்.

ஜந்தாறு பேராகத் தூக்கி கிழத்தை நாற்காலியில் உட்கார வைத்தார்கள்

கிழத்திற்கு ரொம்பவும் பாரி தேகம். ஆனால் நாற்காலியில் வைத்த்தும் தலை

நிற்காமல் துவண்டு விழுந்த்து. அங்கங்கள் விறைத்துவிட்டன.சரிப்படவில்லை

கீழே இறங்கிச் சுவர் மீது சாய்த்துப் பார்த்தார்கள். பயனில்லை. போட்டோக்காரனின் முகம் பேதிக்குச் சாப்பிட்டது போல் இருந்த்து.

‘’சார்,ஒரு போஸூம் சரிப்படவில்லை. நான் போட்டோ எடுக்க முடியாது.’’ என்றான்.

‘’

ஏன்’’

இந்த உடம்புக்கு இனிமே நல்ல போஸ் வராது. இன்னும் இரண்டு மணி

முன்னாலாயினும் ஏதாவது செய்து எடுத்து விடலாம்.. இனிமேல் முடியாது.

எடுத்துப் பாரேன்.’’

அது எப்படி முடியும்? முடிந்த மட்டும் பார்த்தாச்சு. நடக்கவில்லை. நல்லா

எடுக்காவிட்டால் எனக்கு சமாதானப் படாது. பணத்துக்காகப் பார்க்கிறவன் இல்லை.’’

அதுக்காக விட்டு விடுகிறதா? நாங்கள் ஆசையாகத்தானே உம்மை அழைத்து வந்தோம்.’’

எனக்குத் தெரிகிறது. ஆனால் முடியவில்லையே. நாம் கொடுத்து வக்கல்லேன்னு நெனச்சுக்க வேண்டியதுதான்.’’

அப்படியே கிடக்கிற வாக்கில் எடுத்துவிட்டால்.?

நான் அப்படி எடுக்க மாட்டேன்.’’

உண்மையில் அந்தக் கிழத்தைஆனைக்காலும்,பூதுடலும்,தேய்ந்த பல்லும்,

விழுந்த பல்லுமாக்கஃ கிடந்த அந்த கிழத்தை, சதைமூட்டையைப் படம் எடுக்க அவனுக்கு அருவறுப்பாக இருந்த்து. காரணம் அவனுக்கே தெரியவில்லை.

பார்த்தவுடனேயே எடுக்க்கஃ கூடாது என்று தோன்றிய எண்ணத்தை நிறைவேற்றுவதில் முனைந்துவிட்டான்.

பிள்ளைக் கிளைகளும் பெண்களும் மாப்பிள்ளைகளும் ஆன மட்டும்

மன்றாடிப் பார்த்தார்கள். அவன் இன்னும் பிகுப் பண்ணிக் கொண்டான்.

என்னை மன்னிச்சுடுங்க சார், தம்பி, சாமானைத் தூக்கு’’ என்று, அழைத்து வந்த சோக்ராவிடம் சொல்லிவிட்டு நடந்தான் போட்டோக்காரன்.

நாராயணசாமிக்கு ஏமாற்றம்அதைவிட ஆத்திரம், பொங்கிற்று.

அவன்தான் சொல்லிவிட்டானே. கொடுத்து வைக்கல்லேன்னு நினச்சுக்க

வேண்டியதுதான்னு.அவ்வளவுதான்.விடு.காரியத்தைப் பாரு. ஊரில் குஞ்சு

குழந்தைகள்ளாம் பட்டினி கிடக்கு’’ என்று ஊருக்குப் பெரிய கிழவர் சொன்னார்.

புண்ணில் பாய்ச்சிய இந்தக் கோலைப் பொறுத்துக் கொண்டு ‘’இதுக்குக் கூடவா மாமா நான் கொடுத்து வைக்கலை?’’ என்று தேம்பினான் அவன்.

(நன்றி; அமரர். தி.ஜானகிராமன் கதைகள்-யாதும் ஊரே----

மீனாட்சி புத்தக நிலையம்)

2 comments:

  1. ஜானகிராமன் சார் கதை நம்மையும் அந்த இடத்துக்கே அழைத்துச்சென்றுவிடும். அதுபோலதான் இந்தக்கதையும். அந்தகாலகட்டத்தில் வர்ணனைகள் இவ்வளவு விஸ்தாரமாக இருந்ததுதான். இப்ப உள்ள அவசரயுகத்தில் இவ்வளவு நீள வர்ணனைகள் படிக்க உள் வாங்க யாருக்கும் பொறுமை இருப்பதில்லை. அதனால நிறைய ரசனைகளை இழந்து விடுகிரோம்.
    என்னைப்பொறுத்தவரை நன்கு ரசித்து உள் வாங்கி படிக்க முடிந்தது. படித்துமுடிக்கும் போது நம்ம கண்களிலும் கண்ணீர் முட்டிக்கொண்டு நிக்கும்.

    ReplyDelete
  2. நீங்கள் கூறுவது மிகச்சரிதான். இந்த்தஃ தலைமுறையினருக்கு எல்லாமே வேகம்தான்.
    அதனால் கொஞ்சம் கொஞ்சமாக மாதிரிக்காககஃ
    கொடுக்க வேண்டியுள்ளது.face book ல்
    தள்ளிவிடுவதால் என் பையன்கள்,இளைய உறவினர்கள் எல்லாம் கட்டாயமாக பரிச்சயம்
    செய்து கொள்கிறார்கள்.
    ஜானகிராமன் சிறுவயது முதலே எனக்கு உயிர்.

    நீங்களும் ரசிப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி.
    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி அம்மா

    ReplyDelete