Pages

Tuesday, December 20, 2011

தேவன்-கும்பகோணம் கல்லூரி-2

ஒரேபாடத்திறகு மூன்று நான்குபேர் வந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும்
ஒவ்வொருவிதlதில் பெயர் போனவர்கள். ஷேகஸ்பியரைப் புத்தகம் இல்லாமலே கறபிக்கும் பெருமை கொண்டவ்ர் ஒருவர். எந்தஇடத்தில் எந்த
வார்த்தை ஷேகஸ்பியர் உபயோகித்தார். அதனபொருள் என்னவென்று எந்தெந்த வியாக்யானகர்த்தாக்கள் என்னென்ன கூறியிருக்கிறார்கள் என்பதாக
‘’அத்யயனமே’’ செய்திருந்தார் அவர். அவருடைய புலமையைவிடக் கோபத்திலே மாணவர்களுக்கு அச்சம் அதிகம்!.


இன்னொருவர் மனச்சாடசியை முன்னால் வைத்துக்கொண்டு பாடம் கறபித்
தவர். அத்தனை மாணவர்களும் புரிந்து கொண்டாலதான் மேலே போவார்.
இவர் ஹைஸ்கூல் வார்யார் மாதிரி இருக்கிறாரே’’ என்ற அபக்யாதியையும்
லடசியம் செய்யாமல் தெயவத்தினமுன் கடமையைச் செயதார்.. இன்னொருவர் நோடஸஃகளை வைத்துககொண்டே காரியத்தைச்சாதித்துக் கொளபவர். தாமொருமுறை நோட்ஸ்களை வாசித்து, பிள்ளைகள் அதை
எழுதிக கொண்டுவிட்டால்,அவர்களிடம் சம்பளம் பெற்ற ‘’ரிணம் ‘’ காலேஜூக்கும்,சர்க்காரில் சம்பளம் வாங்கும்’’ ரிணம்’’ தமக்கும் தீர்ந்து
விடுகிறதெனபதாக அவருடைய எண்ணம்.!
இவர்களை யெல்லாம்விட கெட்டிக்கார வாதயார் ஒருவரும் இருந்தார்.
இவர் எம்.ஏ. முதல் கிளாஸில் பாஸ் செயதிருந்தார். அதறகாக எல்லாம்கரைத்துககுடித்தவர் என்றோ,அபாரமூளைபலம்படைத்தவர் என்றோ
தவறாக எண்ணிவிடவேண்டாம். அவரிடம் இருந்த ஒரு திவ்யமான சக்திதான்
அதில் ரகசியம். எந்தப பரிடசையில் எந்தக்கேள்வி வரும் என்று அவருக்குத் தெரியும். அவர் சொன்னால் இடசிணிவேலை மாதிரி இருக்கும்! அவரிடம் பாடப் புத்தகங்களைக் கொடுத்துவிட வேண்டியது, இன்ன பக்கங்களைப் படித்தால் பாஸ் செய்துவிடலாம் என்று ‘’கரெகடாக’’ இவர் எழுதியே
கொடுத்து விடுவார். அது தவறினது எனபது ஒருக்காலும் இல்லை.!


சிலபேர்வழிகள் இருக்கிறார்கள். அவர்கள் வருஷவாரியாக்கஃ கேள்விதாள்களை அடுக்கி வைத்துக்கொண்டு, போனவருஷமும் மூன்றாம்
வருஷமும் இந்தக்கேளவி கேட்டுவிட்டார்கள். இந்தவருஷம் திரும்பாது’’என்று
ஹேஷ்யம் செய்வதுண்டு. இது சிலசமயம் பலிக்கும். சிலசமயம் பலிக்காமலும் போகும். இந்த ரகத்தைச்சேரந்தவர் இல்லை நம் புரொபஸர்.
யார் பரீடசைப்பேப்பர் தயார் செயகிறவர் என்று அவருக்குத் தெரிந்துவிட்டால் போதும். இந்த ஆசாமிக்கு இன்ன கேள்விதான் கேடகத்தெரியும் என்று நிர்தாரணம் செய்யும் சகதியைப்பெற்றிருந்தார். அதுமட்டுமல்ல. அதறகு சரியான விடை எழுதினால் மட்டும் போதாது.. யார் அதைத் திருத்துவார்,
அவர் எந்த மாதிரியான விடை எழுதினால் மார்க் நிறையப் போடுவார் எனகிற
வரை அளந்து வைத்திருந்தார். புரொபஸரின் அளவை ஒருபோதும் தவறியது
கிடையாது. ஆகவே அவரைச்சுற்றி ஒரு கூட்டம் போவதும் சகஜம்தான்.


இத்தனை நிதானம் உள்ளவராகையால் அவர் வகுப்புகளில் அநாவசியமான பாடங்களைக் கொண்டு மனதைத் துளைக்க மாட்டார். ஆணித்தரமாகச்சொல்லிக் கொடுப்பார். அதறகு அதிக நேரம்பிடிக்காதாகையால்
மிகுதி நேரங்களில் கதைகள் சொல்லுவார். கதைப்புத்தகங்கள் படிப்பார் அல்லது அவர் இளமபருவத்தைப்பற்றியே பல கறபனைகளைச்சொல்லி,
வகுப்பை பிரமையில் ஆழத்தித் தாமும் மாணவ ரஞ்சகமாக இருந்து கொளவார்.
கணித வகுப்புகளில் புலிகள் தோன்றினாரகள்.. கும்பகோணத்தில் இருந்தது
ஒரு ராமானுஜம் இல்லை, ராமானுஜ பரம்பரை எனபதை நிரூபிப்பதேபோல்
இந்த வகுப்புகள் கணக்காக, ஜரூராக நடந்தன. வரும்போதே சாகபீஸை
நீட்டிக்கொண்டு வரும் புரொபஸரையும், ஆஜானுபாகுவாக நின்று , வினாக்களை துவமசமே செய்யும் லெகசர்ரரையும், மணி அடித்தும் கணக்கை
முடித்துவிட்டுத்தானபோவேன் என்று பிடிவாதம் பிடிக்கும் ஆசிரியரையும்
மாணவர்கள் கண்டார்கள். களித்தார்கள். வகுப்புக்குள்ளும், வகுப்புக்கு வெளியும், மாணவர்களுக்குப்பரோபகாரியாக இருந்தார்கள் இந்தப்புலிகள்.


ஹாஸ்யத்துக்குப் பெயர் போன ஹிஸ்டரி புரொபஸர்கள் இருவர் சிரிக்க வைத்தே அறிவை வளர்த்தார்கள்.

சம்ஸ்கிருத வகுப்புகளிலே ‘’கிராதார்ஜூனீயம்’’ சாகுந்தலம் ஆகியவற்றின்
சமஸ்கிருதமான ஸூனாதம் நிரம்பி நின்றது. அநாயசமான தமிழ்க் காப்பி
யங்களை பெரிய நாம்மஃ போட்ட ஆசிரியர் எடுத்து விளக்கினார். சட்டை
போட்டுக கொள்ளாத பண்டிதர்கள் எனினும் , வகுப்பிலே யாரும் அசட்டையாக
இருந்துவிடாதபடி ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொண்டிருந்தாரகள்.
(அமரர்தேவன்—மிஸ்டர் வேதாந்தம்)

4 comments:

 1. ப்ரொபசர்கள் , வாத்தியார்களைப்பற்றிய அலசல் சுவார்சியமா இருக்கு.

  ReplyDelete
 2. தேவன் குறிப்பிட்டுள்ளவை 50வருடங்களுக்கு முன்
  உள்ள நிலை. ஆசிரியர் வேலை மருத்துவர்களைப்போலமிக உன்னதமான பணி
  என்று கருதி உழைத்தவரகள் இருந்த காலம். இப்போது இரண்டு பணிகளுமே தரங்கெட்டு பணத்தினபின் அலையும்நிலையாகப் போயவிட்டது.
  எல்லாருமே சைடு பிசினஸ் செயகிறார்கள்.
  நன்றி அம்மா
  நீங்கள் தொலைபேசியதுபற்றி மிகவும் மகிழ்ச்சி

  ReplyDelete
 3. மிகச் சரியாக எழுதி உள்ளார்.1963 - 1967 அங்கு படித்தேன்.மீண்டும் சங்கிலித் தொடராய் எண்ணங்கள். அசை போடுகிறேன்..

  ReplyDelete
 4. @காளிதாஸ் முருகையா,
  வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete