Pages

Monday, December 26, 2011

தேவன்- மனிதரில் பலவிதம்-2

தூத்துக்குடி தேசிகாச்சாரி எனபவர் ஏழைகளான பெற்றோருக்கு மூன்றாவது
பிள்ளையாகப் பிறந்தாலும்கூட,அவரது வலது உள்ளங்கையின் மத்திய
பாகத்தில் செங்குத்தாக ஒரு நீண்ட கோடு ஓடியது. ரேகைசாஸ்திரப்
புத்தகங்களில் இது தனப்ராப்தியைக் குறிப்பதாகும் என்று போட்டிருக்கும்.
அதையொட்டித்தானோ என்னவோ ,அதே ஊரில் மிராசுதாராக இருந்த
சக்கரபாணி அய்யங்காருக்குப் புத்திர சந்தானம் ஏறபடவில்லை. தேசிகாச்சாரியின் களை மிகுந்த முகமும் அவரை வசீகரித்தது.. இரண்டாம்
பேரைக்கலந்து கொள்ளாமலே அந்தப்பிள்ளையை ஸ்வீகாரம் செயதுகொண்டு
விட்டார்.!

அதன் விளைவுகள் விபரீதமாக மாறின. அவருடைய சாக்ஷாத் தர்மபத்தினி
செண்பகவல்லிக்கு ஆத்திரம் வந்தது. தன் சொந்த அண்ணனுக்கும், தமக்கைக்கும் தங்க விக்ரகம்போல் குழந்தைகள் இருக்க, உள்ளூரில் ஒரு
கழுதையைப் பிடிக்க வேண்டுமா என்று தலையில் தலையில் போட்டுக் கொண்டாள். சக்கரபாணியின் வகையிலேயே பலபேர் அவருடைய சொத்தில்
ஒரு பகுதியாவது கிடைக்காதா என்று சகோரபடசிகள்போல் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சுவீகாரம் அவர்கள் வகையிலே ஒரு அதிர் வேட்டையே வெடிக்கச் செயதுவிட்டது. ‘’சக்கரபாணி ஒரு முட்டாள். மடத்
தனமாக ஏதானும் ஒன்று செயது வைப்பான். எனபது நாங்கள் எதிர்பார்த்ததுதான்.! ‘’என்று அவர்கள் சொல்லி, பொங்கும் மனதை சமாதானம்
செயது கொண்டார்கள்.
சக்கரபாணி அய்யங்கார் அவ்வளவு முட்டாள் இல்லை. சுவீகாரம் செயதுகொண்ட சில வருஷங்களுக்குள்ளேயே இந்தச் சண்டாள உலகம் பணத்திறகாக எப்படியெல்லாம் ஆடுகிறது என்று கண்டு கொண்டார்.
அதை நன்றாக ஆட்டிப் பார்ப்பது என்ற எண்ணம் தோன்றுவதற்கேற்ப, யாரோ
ஒரு மகான், ஒரு மனிதன் சம்பாதித்து எவ்வளவென்றால் அவன் வாரீசுதாரர்
களுக்கு சேகரித்து வைத்துப் போவது இல்லை. தானே செலவழித்து அநுபவித்ததுதான்!’’ என்று எழுதியிருந்ததையும் படித்து மனதில் ஏற்றிக் கொண்டிருந்தார்.

எல்லாவற்றுக்கும் மேலாக , தேசிகாச்சாரியின்மீது அகாரணமாக ஏறபட்ட
ஒரு துவேஷத்தின்மேல், நமது சொத்தை இவன் அநுபவிப்பதா?’’ என்ற கோபம் பொங்கி மளமளவென்று கரைக்க ஆரம்பித்தார். தேசிகாச்சாரியின் கையில் கொடுத்தே தமது பணத்தை வாரிவீசச் செய்தார். ஆகவே சக்கரபாணி காலமாகி தேசிகாச்சாரி பட்டத்துக்கு வந்தபோது ஆஸ்தி பெரும்பாலும் கரைந்து போயிருக்க, மிகுதி நின்றது தேசிகாச்சாரியின் பரந்த உள்ளமும் , படாடோப இச்சையும், டம்பச் செலவுகளும்தான்.

நமது கதாநாயகனாகிய வேதாந்தத்தின் சாக்ஷாத் தகப்பனார்தான் இந்தத் தேசிகாச்சாரியார். தூத்துக்குடி கிராமத்தில் மாடிவீட்டில் உடகார்ந்துகொண்டு
தம் ஏக புதல்வனாகிய வேதாந்தத்தை மாயவரம் ஹைஸ்கூலுக்கு அனுப்பி
வைத்தார்.

பையன் பள்ளிக்கூடம் போகிறான் என்றால் , அது சாமான்யமான விஷயமாக்கஃ கருதப்படவில்லை. மாயவரத்தில் தேசிகாச்சாரியின் பிள்ளையைத் தெரியாதபேர் கிடையாது. அவன் ஹோட்டலில் ஹல்வா தின்றால், அவன்கூட இருபது சகாக்களாவது ஹல்வா தின்பார்கள். பிள்ளையாண்டானுக்கு வெற்றிலைபாக்கு ஒரு ரூபாயக்குக் குறைந்து
வாங்கத் தெரியாது.வாங்கினால், அதை ஒரேநொடியில் மாயமாக மென்று துப்ப நணபர்கள் காத்திருந்தார்கள். மாயவரத்தில் புதிதாக நாடகம், சர்கஸ், கணகாடசி என்று எது வந்தாலும் வேதாந்தம் முதல்வரிசையில் இருந்துகொண்டு ஒரு டஜன் பரிவாரங்களுடன் பார்ப்பான்.


ஒருசில ஆப்தர்கள் தேசிகாச்சாரியிடம் , வேதாந்தம் இப்படி இருக்கிறானே, கவனியேன்’’ என்று சொல்லியிருக்கிறார்கள். ‘’இருக்கட்டுமே
நம்ம பையன்தானே,அவன் பாஸ் செயது முன்னுக்கு வந்து தங்கமும் வெள்ளியுமாக வேண்டியது சம்பாதித்துக் கொள்கிறான்!’’ என்று பதில் சொல்லி
அனுப்புவார். அவர் எங்கிருந்து வாரிவீசுகிறார், அவர் வரும்படி என்ன என்பது
ஒரு பெரிய மர்மம் .வேதாந்தம் அதைப்பற்றிக் கேட்டதும் இல்லை. மனத்தை
வருத்திக் கொண்டதும் இல்லை.

(அமரர் தேவன்—மிஸ்டர் வேதாந்தம்)

2 comments:

  1. சுவீகாரம் எடுத்ததால் ஏற்படும் மற்றவர்களின் உள்ளக்குமுறல் தெரியவருது.பணக்காரக்குழந்தைகள் படிக்கும் சமயம் அவர்களைச்சுற்றி இருக்கும் கூட்டமும் தெரிய வருது எல்லாம் பணம் படுத்தும் பாடுதான்

    ReplyDelete
  2. சரியாகச்சொன்னீர்கள்.பங்காளிக் காய்ச்சல் என்று
    இதைத்தான் கூறுவார்கள்.
    நன்றி அம்மா

    ReplyDelete