Pages

Friday, December 16, 2011

தி. ஜானகி ராமன்-யாதும் ஊரே-4

‘’வரணும்—வரணும்—இப்படி வரணும்’’ என்று ஸ்வாமியைத்திண்ணைக்குக்
கூப்பிட்டார். ஸ்வாமி திண்ணையில் உட்கார்ந்து கொண்டார்.

‘’நீங்கள்தானா?’’ நான் யாரோன்னு நினைச்சேன்.’’ என்றார் ஸ்வாமி.
‘’எப்ப வந்தது?’’
‘’காலமேதான். பாலகரத்திலே இவர்களோடுதான் தங்கியிருக்கிறேன்’’ என்று
கீழே உட்கார்ந்திருந்த என்னைக் காட்டினார் ஸ்வாமி.

எல்லோரும் என்னைப் பார்த்தார்.கள்.ஸ்வாமியைப் பார்த்தார்கள். கதை
சொல்கிறவர் என்னைப் பார்த்து புன்முறுவல் பூத்தார். திண்ணைமீது உட்காரா
விட்டாலும் நான் சகலத்தையும் துறந்த சன்யாசியாகத்தான் எனக்கு ஒரு கணம் தோன்றியது.

நின்றிருந்த ஸ்ருதிப் பெட்டி மீண்டும் ரீங்கரிக்கத் தொடங்கிற்று. கதை
தொடர்ந்தது.
ஸ்வாமி ரசித்துக் கேட்டார். நடுநடுவே சுவர் மீது சாய்ந்து கொண்டார். களைப்
பாகத்தான் இருக்க வேண்டும்.
கேகயத்திலிருந்து திரும்பிவந்த பரதன் தந்தை காலமான சந்தர்ப்பங்களைக் கேட்டு, துக்கமும் கோபமும் அடந்து ராஜ்யத்தை வெறுக்கிறான். தாயைத் திட்டுகிறான். கூனியைத் திட்டுகிறான். ராமன் இருக்கும் காட்டுக்கு எல்லாருமாகப் போய்த்திருப்பி அழைத்து வருவதென்று சாலை போட உத்தரவிடுகிறான். மணி பத்தரை. கதையை நிறுத்தினார் அவர். சுருதிப் பெட்டி
யைக் கையமர்த்தி நிறுத்தச் சொன்னார். பிறகு நிசப்ததஃதுக்கிடையே பேசினார்.
‘’தாயாதிகள் என்றால் காய்ச்சல், பொறாமை எல்லாம் கூடவே பிறந்துவிடும்.
அப்படித் தப்பித் தவறி அவர்கள் சுமுகமாயிருந்தாலும் மற்றவர்களுக்குத்
தாங்காது.—கூனியைப் போல ஏதாவது சொல்லிக் கிளப்பிவிட்டு விடுவார்கள்.
ராமாயணத்துக்கோ பாரததஃதுக்கோ போக வேண்டாம்..இதோ நம் கண் முன்னால் பார்க்கிறோம்.’’ என்று சன்யாசியைக் காட்டினார்.

இவர்களுக்கு பூர்வாசிரமத்தில் சந்தானம் சந்தானம் என்று
பெயர். இங்கிருந்து ஜம்பது மைல் அவர்கள் கிராமமஃ. கோரையாற்றுப் பாசனத்தில் ஏழுவேலி நிலம். ஏழுவேலியும் அப்படியே தங்கம். ஸாரபூமி..
விளைந்ததானால் ,ஒரு ஆளை அடிக்கலாம்.,அப்படி ஒவ்வொரு கதிரும். இரு
போகம் ஏழு வேலியும். நெல்லு கலம் இரண்டு ரூபாய் விற்ற நாளிலேயே
வருஷம் நாலாயிரம், ஜயாயிரம் கிடைக்கும்.. இப்ப கலம் பத்து ரூபாய்க்கு விற்கிறது. என்ன மோசமாக விளைந்தாலும் வருஷம் இருபதாயிரத்துக்குக்
குறையாது.. தானமும் தர்மமும் யதேஷ்டமாகச் செய்து கொண்டிருந்தார்கள்.
பிள்ளை, குட்டி கிடையாது. சந்தானம் என்று பெயர் வைத்தார்கள் பெற்றவர்கள். ஆனால் புத்திர பாக்கியம் இல்லாமல்போய்விட்டது. தாயாதிக்காரன்கள் எத்தனை காலமாககஃ கறுவிக் கொண்டிருந்தான்களோ,
பகவான்தான் சொல்ல வேண்டும். போன வருஷம் சித்திரை மாதம் இவர்களுக்கு ரொம்ப உடம்பு வந்து விட்டது. பிழைக்க மாட்டாமல் கிடந்தார்கள். தாயாதிக் காரன்கள் வந்து மொயத்துக் கொண்டான்கள்.அண்ணா
என்றார்கள். முத்தண்ணா என்றார்கள். பெரியண்ணா என்றார்கள்.’’எப்பவுமே
உனக்கு உலகப் பற்றே கிடையாது. பிழைக்க மாட்டாமல் கிடக்கிறாய் இப்ப.
ஆபத்து சன்யாசம் வாங்கிக் கொள்’’ என்று கரையாய்க் கரைத்தார்கள்.
சன்யாசிகளுக்கு மறு பிறவி கிடையாது. உயிருக்கு ஆபத்து வந்திருக்கிற
இந்த வேளையில் சன்யாசம் வாவ்கிக் கொண்டால் நாளைக்கே உயிர் போனாலும் ஆத்மாவுக்கு மோட்சம்—நம்ம குலத்துக்கும் பெருமை என்று இவரைக் கரைத்து சன்யாசம் எடுத்து வைத்து விட்டான்கள். படுத்த படுக்கை
யாக இருக்கிறவர் கையில் கமண்டலத்தையும், தண்டத்தையும் கொடுத்துவிட்டான்கள். ஆனால் விபரீததஃதைப் பாருங்கள். இவர்கள் நாலைந்து நாட்களில் பிழைத்துக் கொண்டு விட்டார்கள். உடம்பு தேறிவிட்டது.
நடமாட்டம் வந்து விட்டது. ஆனால் காஷாயம் கமண்டலமுடன் வீட்டில்
இருக்கலாமோ.! வீட்டைவிட்டு வெளியேறுகிற நிர்பந்தம் வந்துவிட்டது. சம்சாரமோ பரம சாது. ஒரு திரிசமன் அறியாதவள். அப்படியே கண்ணாலே ஜலம் விட்டுக் கதறிவிட்டாள். பாருங்கள்—இந்த அபர வயதில் ஊர் ஊராகப் போய்க் கொண்டு! யார் பிக்ஷக்குக் கூப்பிடுகிறார்கள் என்று காத்துக் கொண்டு!
வெய்யில், பனி, மழை என்று பாராமல் ஊர் ஊராக அலைந்து கொண்டு!
பரம அயோக்கியன்கள் அந்ததஃ தாயாதிகள்.?’’ என்று கதை சொல்கிறவர்
அறிமுகப் படுத்தி நிறுத்தினார்.

ஸ்வாமிகள் குனிந்த தலை நிமிரவில்லை.. குப்பென்று கண் கலங்கிற்று.. உதடு
நடுங்கிற்று. முகச்சதைகள் கோணின. விசித்து விசித்து அழத் தொடங்கினார்.

‘’மகா பாவம்—இப்பேர்ப் பட்ட பரம சாதுவை இப்படிச் செய்தவர்களுக்கு, என்ன
கிடைக்கப் போகிறதோ?’’ என்றார் கதை சொல்கிறவர்.

ஸ்வாமி மேலும் விசித்து அழுதார். அவரால் அடக்கமுடியவில்லை. எழுந்து
தண்டத்தை எடுத்து நின்றார்.

கர்ப்பூர ஆரத்தி ஆயிற்று எல்லோரும் சிறிது நின்று ஸ்வாமியைப் பார்த்து விட்டு நகர்ந்தார்கள்.
‘’என்ன அநியாயம்! இப்படிச் செய்யலாமா?’’என்றார்கள்.
ஸ்வாமி பலர் வணக்கங்களை ஏற்று விடை பெற்றுக் கொண்டு என்னுடன்
நடந்தார். கோணல் கிச்சானின்’’ பாட்டரி’’ வெளிச்சம் வழி காண்பித்தது.

ஸ்வாமிக்கு வாசல் திண்ணையில் தட்டி மறைவில் கோரைப்பாயைக் கொடுத்துப் படுக்கச் சொல்லி உள்ளே வந்தேன்.

செய்தியைச் சொன்னேன்.
‘’அழுதாரா! ஸ்வாமிகளா!’’ என்றுவியந்தாள். ‘’மறுபடி சொல்லுங்கள்—கதை
சொல்ரவர் என்ன சொன்னார்?’’
சொன்னேன்.
‘’கதை சொல்ல ஆரம்பிச்சாலே, குறும்பு,விஷமமஃ எல்லாம் வந்திடுமோ?’’ என்றாள்.
பிறகு விழுந்து விழுந்து குலுங்கிக் குலுங்கி, முந்தானையால் வாயைப் பொத்திச் சிரிக்க ஆரம்பித்தாள்.

என்ன சிரிப்பு வேண்டுக் கிடக்கிறது!
சற்று நின்றவள்’’ அழுதாரா?’’ என்று கேட்டுவிட்டு மீண்டும் ஓர் ஆவர்த்தம்
சிரித்தாள்.கண்ணைத்துடைத்துக் கொண்டாள் இருமினாள்.

‘’நீங்கள் போய் அந்ததஃ தாயாதிக்காரா கிட்ட சொல்லி ராஜி பண்ணுங்கள்.
ஊருக்குள் வராமல் களத்திலாவது உட்கார்ந்து சாகுபடியைக் கவனிக்கட்டும்.’’
என்றாள் அவள்.
அவர் தண்டமும் கமண்டலுவுமாககஃ களத்தில் உட்கார்நது, ஆட்களை அதிகாரம் பண்ணுவது போலிருந்த்து
எனக்குக் கூட இரவில் அப்படித் தோன்றிற்று சொப்பனம் என்று நினைக்கிறேன்.

காலையில் எழுந்து வாசலுக்குப் போன பொழுது,அவர் ஸ்நானத்துக்காக ஆற்றங்கரைக்குப் போகத் தயார் செய்து கொண்டிருந்தார். கோணல் கிச்சான்
பந்தல் தலையில் இடித்துவிடாமல் கூனியவாறே அவரைப் பிக்ஷக்குச்
சொல்லிக் கொண்டிருந்தான்.

**************000***********

5 comments:

 1. அவரின் தாயாதிகள் தான் அவர் சன்யாசி ஆகவே காரணம் என்பதை எவ்வளவு அழகா சொல்லி இருக்கார் பாவம் அவர் மனைவி அவபாடுதான் பரிதாபம்னு நினைக்க வச்சுட்டார். அவஎன்ன பாவம் செய்தா. கடைசி வரை கணவன் மனைவி உறவுமட்டுமே கூட வரும் அவர் இருந்தும் இல்லாமல் அவர்மனைவி வாழவேண்டியிருப்பது கொடுமையிலும் கொடுமை.படிக்கரவர்களுக்கு இப்படி கதையில் வருவது உண்மையான மனுஷாளா நினைச்சு மனசு பதற வைக்குது இல்லியா இதுதான் அவர் எழுத்துக்களுக்கு கிடைத்த வெற்றி.

  ReplyDelete
 2. நீங்கள் கூறுவது மிகச்சரியான கருத்து.ஆனால்.இந்தமாதிரி
  ஒரு விஷயம் அந்தப் பகுதியில் எங்காவது நடந்திருக்கும் . ஆபத்சன்யாசம் பெரிய ஆபத்தாக
  அல்லவா போய்விட்டது. இப்போழுதுள்ள காலங்களில் இப்படியெல்லாம் நடக்க முடியாது
  பரிதாபமான இந்தவிஷயத்திற்கு கதை சொல்லியின்
  மனைவி ஏன் அப்படி சிரிக்கிறார் என்று தெரியவில்லை.உங்களுக்குத தெரிந்தால் சொல்லுங்களேன்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
  அம்மா

  ReplyDelete
 3. சாமிகள் அழுதாரான்னு கேட்டாங்க இல்லே. சாமியார் தீட்சை வாங்கிண்டா பந்தம் பாசம் அழுகை சிரிப்பு ஒன்னுமே கூடாதுன்னு சொல்வா. இவ்வளவு உணர்ச்சி வசப்படுராரே. என்று எண்ணி சிரித்திருக்கலாமோ. இப்படி உணர்ச்சி வசப்படுகிரவர் எப்படி சாமியாராக இருக்கமுடியும்னு நினைச்சாளோ என்னமோ?

  ReplyDelete
 4. நீங்கள் கூறுவது எனக்கும் தோன்றியது. இருந்தாலும்
  பரிதாபத்து உச்சியில் சன்யாசியின் நிலை குறித்து
  நாம் இருக்கும் போது ஒரு ஆன்டிகிளைமாக்ஸ்
  போல அவர் சிரித்துப் பரிகாசிப்பது சிறப்பாகத் தோன்றவில்லை.தி.ஜா என்ன நினைத்து எழுதினாரோ?
  நன்றி அம்மா?
  தமிழ் விரும்பியில் உடல் நலம் வீடியோ தொடரவில்லையே?ஏன்

  ReplyDelete
 5. இதுல நாம ஜானகிராமன் சாரைப்பார்க்கக்கூடாது ஒவ்வொரு கதாபாத்திரமாகவே மாறி அவர்களின் உணர்வுகளை எழுத்தில் வெளிப்படுத்துவதாகவும், அந்த கதாபாத்திரத்தின் உணர்வுகள் படிக்கும் ரசிகருக்கும் இருக்கணும் என்கிர விதத்தில் எழுத்தைக்கையாண்டிருக்கலாம் இல்லியா.

  ReplyDelete