Pages

Saturday, December 24, 2011

தி. ஜானகி ராமன்-யாதும் ஊரே--5

வேதாந்தத்தின் தகப்பனார் தேசிகாச்சாரி,பிள்ளை சம்பந்தப்பட்ட வரையில்
கடுமையான பேர்வழியே இல்லை.அவன் கேட்டதை வாங்கிக் கொடுத்தார்
டென்னிஸ் மட்டைகளில் நாலு வைத்திருந்தான். உயர்ந்த துணிகளில் தயாரிக்கப்பட்ட உடுப்புகள் மூன்று பெட்டிகள் இருந்தன. புரொபஸர் ஒரு புத்தகத்தின் பெயரைச் சொல்ல வேண்டியதுதான்.மறுநாள், என்ன விலையானாலும் லடசியம் செய்யாமல் வாங்கிவிடுவான்.. தேசிகாச்சாரி படித்தவர் இல்லை.தாமாகச் சம்பாதித்தவரும் இல்லை.’’ பூர்வ ஜன்ம க்ருதம்’’
என்று சொலவார்களே, அந்த நியாயத்தின்படி அவரிடம் தனம் வந்து சேர்ந்தது
அதைத் தன் பிள்ளைக்கு தாராளமாகச் செலவழித்தார். அவன் கேட்கவேண்டியதுதான்.. உடனே பணம் கையில் இருக்கும்.!

ஒரு சமயம் காலேஜில் கெமிஸ்ட்ரி லெக்சரர் சிலகேள்விகளைக் கொடுத்து
அவைகளுக்கு பதில் எழுதிவரும்படி உத்தரவு போட்டிருந்தார். கேள்விகளுக்கு
பதில் எழுதினால் மட்டும் போதாது. காலேஜ் சொசைட்டியில் விறபனை செய்யப்படும் ஒரு நோட் புத்தகத்தில்தான் அதை எழுதிவர வேண்டும். மறுநாள் எழுதிவராதவர்கள் ஒனபது பேரை லெகசரஃர் பெயர் சொல்லி அழைத்து
வகுப்புக்கு வெளியே அனுப்பிவிட்டார். அவர்களில் வேதாந்தமும் ஒருவன்.
அவன் நோட் புக் வாங்கிவிட்டான். ஆனால் பாடந்தான் எழுதவில்லை.

விடை எழுதப்பட்ட நோட்டுகளைப் பரிசீலனை செய்துவந்த லெகசர்ரஃ
சட்டென்று ‘’வாசுதேவன்1எம். வாசுதேவன்!’’ என்று உரக்கக் கூப்பிட்டார்.
பதினேழு வயது இளைஞன் ஒருவன் மெலிந்த தேகமும் ,ஒட்டியகன்னங்களும்
வறுமையை எடுத்துக்காட்ட தன் இடத்தில் எழுந்து நின்றான்.

‘’இது உன் நோட் புக்கா?’’
‘ஆமாம் சார்’’
‘நீ காலேஜ் நோட் நோட் புத்தகத்தில் எழுதி வரவில்லையா’?
‘’இல்லை. வாங்க நேற்று வசதி இல்லை. எப்படியும் இன்று தவறாமல்
பதிலகள் எழுதிவர வேண்டுமென்று நானே நோட் ஒன்றைத் தைத்து—‘’
‘’’யூ கெட் அவுட் ஆப் மை கிளாஸ்!’’
பத்தாவது பையனாக வேளியேறினான் வாசுதேவன்.நோட்டு வாங்கி எழுதாதவனும் வேளியே நின்றான். வாங்காமல் எழுதினவனும் வேளியே நின்றான்.

வேதாந்தம் அந்த சமயத்தில் தன் தகப்பனாரை நினைத்துக் கொண்டான்.
வாசுதேவனையும் தன்னையும் ஒப்பிட்டுக் கொண்டான். ஒழுங்காக இருக்க வேண்டும் தனக்குள்ள வசதியை நனகு பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.
என்று ஆவல் ஏற்பட்டது. அதே வாசுதேவன் ‘’இண்டரில் முதல் கிளாஸில்
பாஸ் செய்து விட்டான் ஸ்காலர்ஷிப் வாங்கி இரண்டுவேளை பழையஅமுது சாப்பிட்டுவிட்டு,துவைத்த இரண்டு சட்டைகளை மாற்றி மாற்றிப் போட்டுக்
கொண்டு காலேஜ் வந்து கொண்டிருக்கிறான். வருஷம் பூராவும் மற்றவர்கள் அவனைப் பார்த்துச் சிரித்தாலும் , ரிசல்ட் வந்த தினம் அவன் மற்றவர்களைப் பார்த்துச் சிரிக்கப் போகிறான். சந்தேகம் இல்லை.’

(அமரர்தேவன்—மிஸ்டர் வேதாந்தம்)
?

5 comments:

 1. ஒரு வேளை ஏழ்ம்ழி நிலயில் தான் படிக்க மனது வரும்போல இருக்கு. இந்தப்பதிவின் தலைப்பும் பதிவும் கொஞ்சம் குழப்பமா இருக்கே?

  ReplyDelete
 2. தலைப்பில் தி.ஜா பெயரைப் பார்த்ததும் அகமகிழ்ந்து போனேன். அடியில் தேவன என்று போட்டிருக்கிறது. சரி செய்யவும். எனது வலைப்பக்கம் வந்து கருத்துரை இட்டதற்கு நன்றி. நிறைய பேட்டிகளில் ஆகாச தூது பற்றி சொல்லி இருப்பதால் மக்கள் தொலைக் காட்சியில் கூறவில்லை.அது பற்றி நானே பதிவு எழுதுவதை விட வாசித்த நீங்கள் எழுதலாமே. :-))

  ReplyDelete
 3. @lakshmi,,
  அவசரத்தில் தலைப்பு மாறிவிட்டது, அதனால்
  என்ன. இருவரும் அசல் தஞ்சாவூர் ஜாம்பவான்கள்தானே. புதிய பதிவைக் கொடுத்துவிட்டேன் பதிவை டெலிட் செய்தால்
  மதிப்புவாய்ந்த உங்கள் இருவர் மறுமொழியும்
  போய்விடுமே.
  இந்தவகையான ஏழ்மையைப் பற்றி இப்போது
  அனேகம்பேருக்குத்தெரியாது. வாரச்சாப்பாடு
  சாப்பிட்டு பல ஏழைமாணவர்கள் படித்துமுன்னேறியிருக்கிறார்களே.
  மேலே வித்யா அம்மாவின் பெயரைச் சொடுக்கினால் அவர் தளத்திறகுச் செல்லலாமே.
  வரவுக்கு நன்றி அம்மா

  ReplyDelete
 4. @வித்யா சுப்ரமணியம்,
  வருகைக்கு நன்றி அம்மா.யதேச்சையாக கோபியின்
  தளத்தில் உங்கள தளத்தின் முகவரி கிடைத்த்தால்
  அதறகு வரமுடிந்தது.மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.
  என்ன வசதி பாருங்கள.
  அவசரத்தில் தலைப்பு மாறிவிட்டது அதனால் என்ன,
  இரண்டு பேரும் அசல் தஞ்சாவூர் ஜாம்பவான்கள்தானே.தேவன் உங்களுக்கும் பிடித்தவர் தானே.பதிவை நீக்கினால் மதிப்புவாயந்த உங்கள் மறுமொழி போய்விடுமே
  எனவே புதிதாக மாற்றிப் போட்டு விட்டேன்.
  மிகவும் பிடித்த தி.ஜா கதைப் பகுதிகளை அவ்வப்போது கொடுப்பேன்.அப்படியே தேவனும்.
  இந்தத் தலைமுறைகளுக்கு எங்கு பிடிக்கப் போகிறது.?
  தி.ஜா வைப் போல் யார் எழுத முடியும்?
  உங்கள் பாலக்காட்டு மண்வாசனைக் கதைகள்
  நான் படித்ததில்லை எழுதியிருக்கிறீர்களா?
  நான் ரஸிகன் மட்டும்தான் அம்மா.பதிவு போடும்
  அளவு கோர்வையாக எழுதும் அளவு பயிற்சி
  இல்லை.உங்கள் முக்கியமான கதை பற்றிய
  பேட்டிகளைப் பதிவாககஃ கொடுத்தால்நன்றாக இருக்கும்.பத்திரிகைகளைத்தேடிப் படிக்க முடிவதில்லை.ஆகாயதூது நாவலில் உங்கள்
  எழுத்து அபாரமானது.முக்கால் பகுதி உண்மை
  என்று கூறியுள்ளீர்கள்.பலமுறை படிக்கும் அளவு
  அருமையாக உள்ளது.
  வருகைக்கு நன்றி அம்மா

  ReplyDelete
 5. இங்க வித்யா மேடம் பின்னூட்டம் போட்டிருந்தாங்க இல்லியா அதில் க்ளிக் பண்ணி அவங்க பக்கமும் போப்படித்து கமெண்டும் போட்டாச்சு.

  ReplyDelete