Pages

Tuesday, December 13, 2011

தி. ஜானகி ராமன்-யாதும் ஊரே

!

இன்னும் இரண்டு மாதங்கள் வரையில் எல்லாம் என் இஷ்டம்தான்.

நான்தான் ராஜா. இல்லை, இல்லை சாதாரண மனிதன். பாமரன்;;இஷ்

டப்படி அலைகிற சாதாரண மனிதன்.மூன்று மாத லீவில் ஒரு மாதம்தான்

போயிருக்கிறது. இன்னும் இரண்டு மாதங்கள் இப்படியேதான்.மார்க்கெட்டுக்குப்

போக மாட்டேன். கடிகாரத்தைப் பார்த்து குளிக்க மாட்டேன். கடிகாரத்தைப் பார்த்து சாப்பிட மாட்டேன். பஸ் ஸ்டாப்புக்கு ஓடமாட்டேன். யானா மாதிரியும், டபிள்யூ மாதிரியும் வியூகம் வகுத்து பஸ்ஸைத் தாக்க நிற்கும்

க்யூ வரிசையில் நிற்கமாட்டேன்.!

இங்கே பஸ்போன வருட வெள்ளம் அடித்துக் கொண்டு போய்விட்டது. பத்து நாளாயிற்றாம் கட்டி முடிய. அது வரையில் வெளியுலக வாடையில்லாமல்

கழிந்ததாம். இப்பேர்ப் பட்ட ஊரில் யார் நம்மை அதிகாரம் பண்ண? இஷ்டப்படி

தூங்குகிறேன். விழித்துக் கொள்கிறேன்.

இன்று காலையில் கூட விழித்துக் கொள்ளும் போது எட்டு மணி. பிறகு

வயலுக்குப் போய் நாற்றுப் பிடுங்கிவிட்டார்களா என்று பார்த்துவிட்டு வரும் பொழுது ஒன்பது மணி. அப்பொழுதுதான் குரல் கேட்டது.

‘’மாமோவ்!’’

கோணல் கிச்சான்தான். வ் வன்னா போட்டு வேறு யார் கூப்பிடுவார்கள் ?

‘’இருக்கேளா, பொழைச்சேன்’’ என்று ஆறரை அடி உயரமும் கூனி நிமிர்ந்தான்.

என்ன சேதி?’’

‘’

‘’சேதிதான்கை கொடுக்கணும்’’

என்ன வந்துடுத்து இப்போ?

‘’சொல்கிறேன் மாமா. காலமே எழுந்தவுடன் ஆற்றங்கரைக்குப் போனேனா?

பஜனை மடத்திலே ஒரு சன்யாசி தண்டமும் கமண்டலமுமாக உட்கார்ந்து

ஜபம் செய்து கொண்டிருந்தார். பல்லைத் தேய்த்து ஸ்நானம் பண்ணி அவருக்கு முன்னால் விழுந்து நமஸ்காரம் பண்ணினேன். உட்காருங்கோன்னார்.உட்கார்ந்தேன். பேரு, குடும்பம் எல்லாம் விசாரிச்சார்.

அப்புறம் பெரியவர்களுக்கு எந்த ஊரோ என்று கேட்டேன்.சன்யாஸும் கிடையாது.மார்க்கெட்டும் கிடையாது. இது பட்டணமில்லை.

பாலகரம். பட்டணத்திலிருந்து ஒரு இரவு ரயில் பயணம். ரயிலில் இறங்கி

ஒன்றரை மணி பஸஸில் பயணம். அப்புறம் மண் சாலையிலிருந்து வாய்க்கால் மதகைக் கடந்து ஊருக்குள் வர வேண்டும். அந்த மதகைக் கூட சிக்கு ஊர்

ஏது,உறவு ஏதய்யான்னார். அப்புறம்தான் அட,அசடேன்னு உதடைக் கடிச்சிண்டேன்.’’

சன்யாசிகளிடம் பூர்வாசிரமத்தைப் பற்றி விசாரிக்கப்படாதுன்னு தெரியாதா

உனக்கு? ஏண்டா சமத்து!’’

அதான் சொல்றேனேதவறிப் போயிடுத்துன்னு,

கொஞ்ச நாழி ஒண்ணும் பேசாமல் உட்கார்ந்திருந்தோம்.. அப்புறம் இன்னிக்கு

பிட்சை பண்ணி என்னை அநுக்ரகம் பண்ண்ணும்னு கேட்டுண்டேன். பேஷா

அதுக்கென்ன? செஞ்சுட்டுப் போறதுன்னார். அழைச்சிண்டு வந்தேன். உள்ளே

போனால் அப்பா அம்மான்னு முனகல் கேட்டுது. என்னடான்னு பார்த்தால்

மீனாட்சி அலங்கோலமாப் படுத்திண்டு கிடக்கா. காப்பி சாப்பிட்டவளுக்கு

என்னமோ தலையைக் கிறு கிறுன்னுதாம். கண்ணை இருட்டிண்டு வந்த்தாம்.

நாலைஞ்சு தடவை வாந்தி எடுத்த்தாம்.தொட்டுப் பார்த்தால் , உடம்பு அனலா வீசறது.. கண்ணைத் திறக்க முடியல்லே. படுத்திண்டு கிடக்கா . என்ன பண்றது? சன்யாசி வாசல் திண்ணையிலே உட்கார்ந்திண்டிருக்கிறார். கிடந்து

முழிக்கிறேன். என்ன பண்றதுன்னு புரியல்லே.பட்டணத்து மாமாதான் கதின்னு வந்துட்டேன். நீங்கதான் வழி காட்டணும்.’’

நல்ல கறுப்பும் கச்சலுமாக இருந்த கிச்சானின் கண் ஏற்கனவே சுண்ணாம்பு வெள்ளை.. இக்கட்டில் இன்னும் வெளுத்துக் கிடந்தது.

‘’வழி என்னடா வழி? பிக்ஷையை இங்கே பண்ணிவிட்டால் போகிறது. பட்டணத்திலே சங்கோஜப் படற மாதிரின்னா படறே.! பார்வதீ! என்று உள்ளே

பார்த்துக் கூப்பிட்டேன். வந்தாள். சொன்னேன். ‘’நானே வந்து அழைச்சிண்டு வரேன்’’ என்று கோணல் கிச்சான் முன்னே நெளிய, வெளியே வேகமாக நடந்தேன்.

கிச்சான் வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்த சன்யாசியைக் கண்டேன்.

எட்டு அங்கமும் பட விழுந்து வணங்கினேன்.’’ நாராயண, நாராயண’’’ என்று

என்றார் ஸ்வாமி. புன்முறவல் பூத்தார். ஜம்பது வயதிருக்கும். முண்டனம்

செய்த தலை. ஆனால் தலையிலும்முகத்திலும் ஒரு மாத ரோம்மஃ வெளுத்துக் கிடந்த்து.

‘’கிச்சானைப் பெரிய மனது பண்ணி மன்னிக்கணும்.. வீட்டில் அசந்தர்ப்பம்

அவனுக்கு. உள்ளே ரொம்ப உடம்பு சரியில்லை. பெரியவாளை பிக்ஷைக்கு

சொல்லிட்டமேன்னு கிடந்து தவிச்சுப் போயிட்டான். நான் இன்னிக்குக் கொடுத்து வச்சிருக்கேன். நாலுவீடு தள்ளி அஞ்சாவது வீடு. பெரியவா வந்து

பெரிய மனசு பண்ணி பிக்ஷை பண்ணி வைக்கிற பாக்கியத்தை எனக்குத் தரணும்.’’

அப்படியா? உடம்பு சரியாயில்லை என்று சொல்லவே இல்லை இவர்’’

பெரியவா கிட்ட காலமே சொல்ரபோது அவனுக்குத் தெரியாது. வந்து பார்த்தா, ஒரே வாந்தியா எடுத்து , தலை தூக்க முடியாமல் கிடக்கிறாளாம்.

பெரியவா கிட்ட சொல்ல எப்படி வாய் வரும் அவனுக்கு.? ஆசையா அழைச்சிண்டு வந்தான். லபிக்கலே.அவனும் நானும் வேறே இல்லே. அங்கே வந்துடணும். அவ்விடத்திலே.’’

‘’செஞ்சுட்டா போறது’’

நான் கொடுத்து வெக்கலே இன்னிக்கு. பெரியவா இருந்து நாளைக்கு இங்கே

பிக்ஷைபண்ணிட்டுத்தான் போகணும்.’’ என்றான் கிச்சான்.அவன் குரல் நடுங்குவதைக் கேட்டு நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தார் ஸ்வாமி.

குழந்தை, சுபாவம், கவலைப் படாதீர் நாளைக்கு இங்கேயே பிக்ஷையை

வச்சுக்கறேன். ஒரு ஊர்லே ஒரு நாளைக்கு மேலே தங்கும்படியா இதுவரை

நேரலே. நீர் சொல்கிறபோது என்ன பண்றது?---செஞ்சுடலாம்.’’

தயவு பண்ண்ணும். அப்ப, நான் உடையாரைப் பார்த்து மருந்து வாங்கிண்டு

வரேன்’’ என்று மறுபடியும் பெரியவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான்

கிச்சான். பெரியவர் தண்ட கமண்டலங்களைக் கையில் எடுத்து, பாதக் குறட்டில் ஏறி நடந்து வந்தார். கை கால் கழுவி , தாழ்வாரத்தில் தூண்டியில் போட்டிருந்த மணைமீது முற்றத்தில் ஒரு காலைத் தொங்க விட்டு உட்கார்ந்தார். இருவரும் விழுந்து வணங்குனோம்.

சொந்த வீடுதானே?’’

ஆமாம்’’

பூஸ்திதி—‘’

ஏதோ சொல்பம் இருக்கு’’

சொல்பம்னாநாலுவேலி, ஜந்து வேலி—‘’

‘’அவ்வளவு இருந்தால் பட்டணத்திலே போய் ஏன் இருபத்தைந்து வருஷமாய்ப்

பிழைக்கணும்! அரைவேலிக்குக் கொஞ்சம் கூட, அவ்வளவுதான்’’

‘’அப்படியா? எங்கே ஜாகையோ?’’

அதையும் சொன்னேன்.

‘’பேஷ், பெரிய மனுஷா, மேதாவிகள்ளாம் இருக்கற இடம்னு சொல்வாளே அதை!’’

‘’ஆமா, ஆமா’’

நாலைந்து பெரிய பெயர்களைச்சொல்லி, அவர்கள் எல்லாம் அங்கேதான் இருக்

கிறார்களா என்று கேட்டார்.

‘’ஆமாம்’’

நல்ல சம்பத்து; நல்ல செல்வாக்கு. இல்லையா?’’

‘’தகப்பனார்கள் சம்பத்தைத் தேடி வைத்தார்கள் அதைச் செலவழித்தும் செலவழிக்கிறார் போல பாச்சை காட்டியும் செல்வாக்கு சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்’’

ஸ்வாமி சிரித்தார். ஏன் சிரித்தார் என்று புரியவில்லை. சற்றுக் கழித்துப்

பெருமூச்சு விட்டார். யோசனையில் ஆழ்ந்திருந்தார்.. என்னமோ பகவான் கொடுக்கிறான். இஷ்டமில்லேன்னா கொடுக்காமல் இருக்கான். தகப்பனார்

சம்பாதிச்சு வச்ச பணத்தையும் பகவான் இஷ்டப்பட்டாத்தானே இவா கையிலே

கொடுப்பான்?’’

6 comments:

 1. பிட்சைக்கு சன்யாசியை கூப்பிடும் மன நிலை அழகா சொல்லி இருக்கார். பட்டணத்து மிஷின் வாழ்க்கையும் கிராமத்து விச்ராந்தியான வாழ்க்கை முறையும் கண்ணுக்கு முன்னால வரது. இங்க நான் மும்பைல இருக்கேன்னுதான் பேரு. நான் இருப்பது ரொம்பவே ஒதுக்குப்புறமான இடம்தான். பக்கத்ல தமிழ்க்காராளே கிடையாது. காலை எழுந்து வாக்கிங்க், யோகா மெடிடேஷன், பிரானா யாமம் எல்லாமா ஒருமணி நேரம் செய்வேன். பிறகு குருவிகளுக்கு ஒரு பிடி அரிசி போட்டு அதுகள் கொத்தி சாப்பிடும் அழகை ரசிப்பேன்.எதிராப்ல தென்னை, வாழை இருக்கு இன்னிக்கு எத்தனை காய்கள் இருக்குன்னு பாப்பேன் அதில் ஓடிப்பிடித்து விளையாடும் அணில்களை ரசிப்பேன். நான் இருப்பது ஃப்ளாட் சிஸ்டம் வீடுதான் மூனாவதுமாடி. பில்டிங்க் பேரு ச்ப்ரபாதம். உங்க ப்ளாக் பேரு சுப்ரதீபம். ஒரு எழுத்துதான் இடம் மாறி இருக்கு. இதுவும் ஒரு கிராம லைஃப்தான் இதுவே சிட்டில பையன்வீடுகளுக்குப்போனா என் ரொடீன் எல்லாமே டிஸ்டர்ப் ஆகிடும். அவசர உலகம் அங்கே. அமைதியான உலகம் என்னுது. பின்னூட்டம் போடவந்துட்டு என்னைப்பற்றி கதை சொல்ரேன் சாரி.

  ReplyDelete
 2. பிறந்து , வளர்ந்த்து , வாழ்வது எல்லாமே நகரம்
  என்று ஆகிவிட்ட நிலையில்,தி.ஜா. போன்றவர்கள்
  படைப்புகளைப் படித்துத்தான் கிராம வாழ்க்கை பற்றிய ஏக்கங்களை,விழைவுகளை நிறைவேற்றிக்
  கொள்ளும்,நிலையில் உள்ள எனக்கு,பிறந்து வளர்ந்த அருமையான கிராமச் சூழல் பற்றிய உங்கள்
  ஏக்கங்களை நன்றாகப் புரிந்து கொள்ள முடிகிறது.நல்லவேளையாக ஓரளவு நகர நெருக்கடிஇல்லாத சூழலைத்தக்க வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் பிடிவாதமாக. இது எத்தனை
  பேரால் முடியும் என்று எனக்குத் தெரியவில்லை.
  அவ்வப்போது சென்று வரலாம் என்றால் கிராமத்தில் வாழும் உறவினர்கள் யாரும் எனக்கு
  இல்லை. எனவே கதைகளைப் படித்து அந்தச் சூழ்
  நிலையில் வாழ கற்பனை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை

  ReplyDelete
 3. கதை பற்றிய பின்னூட்டங்களைவிட ஒத்த கருத்துளள உங்கள் சொந்த சொந்த வாழ்க்கை பற்றிய பகிர்தல் மிகவும் மகிழ்ச்சியும் பயனும்
  அளிக்க்கஃ கூடியவை என்று நினைக்கிறேன்.முக்கியமாக அதற்கே இந்தப் பகுதி
  மிகவும் உதவுகிறது. கதைகள் என்பவை முழுவதும்
  கற்பனை அல்ல. 75% உண்மை கலந்த கற்பனையோடு,எழுத்தாளர்களின் அநுபவங்கள், அவர்கள் கண்டு கேட்டு ரசித்தவற்றைக் கலந்து
  நமக்குக் கொடுக்கும் போது, அவைகாலத்தால்
  அழியாத படைப்புகளாகின்றன.அவரவர்களுக்குப்
  பிடித்தவற்றை எடுத்துக் கொள்கிறோம்.இதே போல் உங்கள் பலவிதவிதமான அநுபவங்கள்
  பகிர்ந்து கொள்ளப்படும் போது மிகவும் பயனுள்ளவை ஆகின்றன.எனவே அல்ல்லஃமிகுந்த
  இந்த வாழ்க்கையில் மிகவும் ஆறுதலைத் தறுபவை நல்ல எழுத்தாளர்களின் படைப்புகளே.
  நீங்களும் நல்ல எழுத்தாளர் தானே? பகிர்தலும் மிக அருமையான வாய்ப்பே.கருத்துக்கு மிக்க
  நன்றி அம்மா.

  ReplyDelete
 4. ராதாகிருஷ்னன் மும்பை வாங்க என் வீட்டுக்கு நல்ல கிராமத்து சூழலில் இருக்கும் அனுபவம்கிடைக்கும். உறவுகாரா இல்லைனா என்ன ஒரு ஃப்ரெண்டா நான் இருக்கேனே.

  ReplyDelete
 5. அழைப்பிற்கு மிக்க நன்றி அம்மா. இரண்டுவருடங்கள்
  முன்பு (மே,2009) நானும், துணைவியும் நவிமும்பை வந்து,நெருங்கிய மதுரைநண்பரின் மகள் வீட்டில் தங்கி,ஷீரடி,பண்டரிபுரம் ,த்ரயம்ப
  கேஷ்வர்,பீமா ஷங்கர்,சனிசிங்கனாப்பூர் மற்றும்
  உள்ளூர் இடங்களைப் பார்த்துவிட்டுத் திரும்பும்
  போது மூன்றாவது(கடைசி)பையனுக்கு சென்னையில் பெண்ணையும் பார்த்து விட்டுத்திரும்பினோம்.உடனே நிச்சயம் செய்து
  திருமணம் முடித்து விட்டோம்.அவன் வெளிநாட்டில் இருந்ததால் பெண்ணையும் நேரில்
  பார்க்கவில்லை.நிச்சயதார்த்த்தஃதிற்கும் வரவில்லைஆகஸடில் திருமணம்.
  இன்னொருமுறை மும்பை வந்தால் அவசியம்
  உங்களைப் பார்க்க வருகிறோம் ,. நீங்கள் மதுரை
  வரும்போது(சமீபத்தில் வரப்போவதாககஃ கூறியிருந்தீர்கள்)கண்டிப்பாக வீட்டிற்கு வர வேண்டும்மீண்டும் நன்றி அம்மா

  ReplyDelete
 6. ஆமா ராதா கிருஷ்னன் நான் ஈரோடுக்கு மகன் வீட்டுக்கு வரேன் அவன் வீட்டுக்குப்பொயே 3- வருஷம் ஆச்சு அழைப்பு மேல அழைப்பு. ஈரோடு வரும்போது 2, 3, நாள் மதுரை வரலாம்னு இருக்கேன் விளாங்குடியில் சம்மந்தி வீடுக்கு. அப்ப நாம சந்திக்கலாம்னு நினைக்கிரேன். பிப்ரவரி 15-க்கு இங்கேந்து ஈரோட் போரேன் மதுரை 20-க்கு மேல வருவேன். உங்க மொபைல் நம்பர் தந்தீங்கன்னா காண்டாக்ட் பண்ண சவுரியமா இருக்கும். என் மெயில் ஐ.டி அனுப்பி இருக்கேன் அதில் போன் நம்பர் அனுப்புங்கோ echumi@gmail.com

  ReplyDelete