Pages

Wednesday, November 2, 2011

பகுத்தறிவிற்கு சவால்(9)

நான் என் கதையில் வர்ணித்திருந்தபடியே என்

தாய் மாறிப்போனார். என்னை அடையாளம்

தெரியவில்லை. பேச்சே நின்று போயிற்று. கதை

யில் வந்த சில சம்பவங்கள் காட்சி மாறாமல்

நடந்தன. பணிப்பெண்கூட கதையில் வரும்

பெண் பேசியது போலப் பேசினாள். உயிர் உள்ள

வர்களைக் கதாபாத்திரமாக வைத்துஇனிக் கதை

எழுதுவதில்லை என்று உறுதி பூண்டேன். என்

தாய் இறந்த பிறகும் என் கதை என்னைத் துன்

புறுத்துகிறது. பீதி அளிக்கிறது. ஏனென்றால்

கதையின் முடிவில் எனக்கும் என் தாயின் நிலை

ஏற்படுவதாக எழுதியிருக்கிறேன்!.

******* ********** ************ **********

பிரபல எழுத்தளர் வாசந்தி அவர்கள் தன் சொந்த

அநுபவங்களைப் பதிவு செய்துள்ளதை இதுவரை

பார்த்தோம். அவருக்கு ஏற்பட்ட மிக முக்கியமான

வாழ்க்கை அநுபவங்கள் ‘’பகுத்தறிவிற்கு சவால்’’

விடும் தருணங்களாக அமைந்துள்ளன.

கதையில் அவர் எழுதும் சம்பவங்கள்,

முடிவுகள் ஆகியவை, கதாபாத்திரங்களாக அவர்

எடுத்துக் கொள்ளும் (உயிர் வாழும்) மனிதர்களுக்கும்

அப்படியே, அச்சு அசலாக நிகழ்வது எவ்வளவு

ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் உள்ளது? ஒன்றல்ல,

பல கதைகளில் இவ்வாறு நிகழ்ந்துவிட்டது. இறுதியாக

தன்னையும் தன் குடும்பத்தாரையும் வைத்து எழுதிய

கதைகளிலும் இவ்வாறே நிகழ்ந்தால் அவர் என்னதான்

செய்ய முடியும்? அந்தக் கதையில் வரும் முடிவு போல்

தனக்கும் நிகழ்ந்துவிடுமோ என்ற பீதி, வாழ்நாள் முழுவதும்

துரத்தும் அளவு வாழ்வில் நிகழ்வுகள் அமைந்து இனி

எப்போதும் உயிரோடு வாழும் மனிதர்களைக் கதாபாத்திரங்

களாக வைத்து எழுதுவது இல்லை என்று அவர் முடிவெடுத்

த்தை ‘’பகுத்தறிவிற்கு சவால்’’ என்றுதானே கூறமுடியும்.

இப்பதிவினைத் தொடர்ந்து படித்த அன்பர்கள்

இதுபற்றி தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கும்படி கேட்டுக்

கொள்கிறேன். முக்கியமாக நான் பெரிதும் மதிக்கும் பண்பாளர்,

பதிவர் லட்சுமி அம்மையார் தனது கருத்துக்களை விரிவாக

தனது வலைப்பூவில் எழுதினால் பெருமகிழ்ச்சி அடைவேன்.

ஏனெனில் வாழ்க்கை என்ற இயந்திரத்தில் சக்கையாக அடிபட்டு

ஒவ்வொரு சோதனையிலிருந்தும் தன் மனோதிடத்தாலும்,பெரு

முயற்சியாலுமே மீண்டெழுந்து, இன்று அவர் பெருமதிப்போடு

பீடுநடை போடுகிறார். தடைக்கற்களையெல்லாம் வெற்றிப் படிக்

கட்டுகளாக மாற்றிக்கொண்டு நான் கண்ட சிறந்த ‘’சாதனை

யாளர்களில் ‘’ குறிப்பிடத் தகுந்தவராக இருக்கிறார். இங்கு

குறிப்பிட்டுள்ளவை வெறும் அலங்கார வார்த்தைகளல்ல.

அவரது கடந்த இரண்டாண்டு காலப் பதிவுகளையெல்லாம்

‘’தமிழ் விரும்பி’’மற்றும் ‘’குறையொன்றுமில்லை’’ ஆகிய

வலைத்தளங்களில் முற்றாகப் படித்து ,அறிந்து தெளிந்ததால்

ஏற்பட்ட மன உந்துதல்களே இவ்வாறு போற்றுவதற்குரிய

காரணிகள் ஆகும். வாழ்க அவர் பெருமை. இனியும் பலகாலம்

அவரது அநுபவப் பதிவுகளைக் கொடுத்துப் பலரையும் பயனடயச்

செய்ய வேண்டுமென்பதே எனது ஆசை...

5 comments:

 1. ராதாகிருஷ்னன் சார் எனக்கு என்ன சொல்ரதுன்னுதெரியலே. பகுத்தறிவுக்கு சவால் பதிவு வரிசையாகப்படித்து வருகிரேன். வாசந்தி அவர்களின் நாவல்களும் பல பத்ரிகைகளில் படித்திருக்கேன் அவர்களின் உன்னத எழுத்தை விமரிசிக்க நமக்கெல்லாம் தகுதியே கிடையாது.
  மனதை தொட்டு செல்லும் எழுத்து திறமையை பார்த்து பிரமிச்சு பாராட்டமட்டுமே முடியும் இல்லியா? நீங்க ரசித்த விஷயங்களை படிப்பவர்களையும் ரசிக்க வச்சிருக்கீங்க. நமக்கு பிடித்த நல்ல விஷயங்களை 4-பேர் கூட பகிர்ந்து கொள்வதால் அவர்களுக்கும் சிறந்த எழுத்துக்களை படிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிரது இல்லியா? என்னையும் அளவுக்கு அதிகமா பாராட்டி சொல்லி இருக்கீங்க. நானும் உங்க எல்லாரையும்போல சாதாரண கத்துக்குட்டி எழுத்தாளர்தான். நிறைய படிக்க ,னிறைய தெரிந்துகொள்ள அதிக ஆர்வம் உண்டு அவ்வளவுதான். இந்தக்கதையில் அவர் எழுதும் விஷயங்கள் அவர்வாழ்க்கையிலும் அப்படியே நடந்து வருவது எதேச்சையாக அமைந்த ஒரு நிகழ்வாகைருக்கலாம் இல்லியா? அவர் எழுத்துக்கு அவ்வளவு சக்தி இருந்திருக்குமோன்னும் சொல்லலாம்.

  ReplyDelete
 2. காளிதாசன் தன்னைக் குறித்து இரங்கற்பா பாடி தான் கேட்க வேண்டும் என ஆசைப்பட்டான் போஜராஜா. கவிஞனோ மாட்டேன் எனக் கூறிவிட்டான், ஏனெனில் தான் கூறியபடியே நடந்துவிடும் என்னும் எண்ணம் அவனுக்கு என கதை போகிறது.

  அதுதான் இப்போது நினைவுக்கு வருகிறது.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  ReplyDelete
 3. லட்சுமி அம்மா,
  கருத்துக்கு மிக்க நன்றி.நீங்கள் கடந்து வந்த பாதை
  உங்களுக்கு ஏற்பட்ட சோதனைகள்,அவற்றை
  நீங்கள் தயங்காமல் பகிர்ந்து கொண்டது,
  ஆகியவை நீங்கள் மிக நெருங்கிய உறவினர்,ஏன்,
  சொந்த சகோதரி(மூன்றோடு சேர்ந்து நான்கு)என்ற
  வகையில் ஒரு நெருக்கத்தை உண்டு பண்ணிய
  தாலேயே உங்களை பலவாறு புகழத் தோன்றுகிறது.மிகையாகத் தோன்றினால்
  மன்னிக்கவும்.
  மற்றபடி பிடித்த கதை,கட்டுறைகளை ஒத்த கருத்துள்ளவர்களோடு பகிர்ந்து கொள்வது பெரு
  மகிழ்ச்சியளிக்கின்றது. மீண்டும் நன்றி அம்மா.

  ReplyDelete
 4. டோண்டு சார்,
  நான்,எனக்குப் பிடித்த கதை, க ட்டுரைகள் பற்றிய
  விஷயங்களைப் பற்றி தீவிரமாகப் பதிவிடத்
  தொடங்கியபோது பதிவுலக ''ஜயண்ட்டான
  உங்களிடம் தெரிவிக்காதது குற்றமே. மன்னிக்கவும்.
  எப்படி மறந்தேன் என்று தெரியவில்லை.ஆனால்
  அது தெரிந்தவுடன் உடனே வந்து அரிய கருத்தைக்
  கூறி ஊக்கப் படுத்திவிட்டீ.ர்களே.மிக்க நன்றி சார்

  ReplyDelete
 5. ராதாகிருஷ்னன் என்னையும் உங்க சகோதரியாக ஏற்றுக்கொண்டதற்கு நன்றி.புகழ்ச்சி வார்த்தைகள் கேக்கும் போது கொஞ்சம் சங்கோசமா இருக்கு அதான் சொன்னேன் தப்பா எடுத்துக்காதீங்க.

  ReplyDelete