Pages

Saturday, November 26, 2011

வயதானோர் அதிகரிக்கும் அபாயம்

உலக ம்க்கள் தொகை அக்டோபர் 31ம்தேதி700 கோடியை எட்டியுள்ளது. இது ஒரு பிரச்சினை என்று மக்கள் நினைத்துக்

கொண்டிருக்க ,இன்னொருபுரம் வயதானோரின் எண்ணிக்கை

அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உலக அளவில் குழந்தை பிறப்பு விகிதம் குறையும்

அதே நேரத்தில், மக்களின் ஆயுட்காலம் அதிகரிப்பதால்

மக்கள் தொகை மேலும் அதிகரிக்கிறது..நவீன மருத்துவம்,

உணவு முறையில் முன்னேற்றம், உணவுக் கட்டுப்பாடு,

பொருளாதார உயர்வு ஆகியவை காரணமாக மனிதனின்

வாழ்க்கைத்தரம் உயர்ந்து ஆயுட்காலம் அதிகரிக்கிறது. கறுவு

றுதல் விகிதம் குறைவதால் பெண்களுக்கு ,கல்வி மற்றும்

வேலை வாய்ப்பில் சாதிக்க முடிகிறது. இதனால் உலகம் வளம்

பெறுகிறது.

அமெரிக்காவின் ‘’சோஷியல் செக்யூரிட்டி’’யின் கடந்த

சில சென்சஸ் விவரங்களின்படி ,60முதல்64வயதுள்ள மக்களின்

எண்ணிக்கை, 1 கோடியே 10 லட்சத்திலிருந்து 1கோடியே 70 லட்

சமாக அதிகரித்துள்ளது. 1935ல் அமெரிக்கர்களின் ஆயுட்காலம்

62 ஆக இருந்த்து.இது தற்போது 78 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கறுவுறுதல் விகிதம் 2..68 ஆக இருக்கிறது. இது

உலகசராசரியைவிட(2.. 1) அதிகம். அதே நேரம் ,இந்தியாவில் 1960ல் சராசரி ஆயுட்காலம் 42 ஆக இருந்த்து. இப்போது இது 64.1 ஆக அதிகரித்துள்ளது. இது போன்ற காரணங்களால் எதிர் காலத்தில் வயதானோர் எண்ணிக்கை அதிகாரித்து, இளைஞர்களின் எண்ணிக்கை குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

(தினமலர்-6-11-11)

மேற்கண்ட செய்தியைப் படித்தவுடன் ஏதோ அபாய

அறிவிப்பைக் கண்டதுபோல்தான் இருக்கும். ஆனால் பல நூற்றாண்டு காலமாக மிகுந்த நாகரீகத்தோடு வாழ்ந்துவரும் நம்

இந்தியத்திருநாட்டிற்கு இது பெரிய அபாயமா? நம் முன்னோர்கள்

இந்த விவரம் அறியாதவர்களா? ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும் பொழுது இரண்டு கைகளுடன்தான் பிறக்கின்றன. அவற்றிற்குத் தேவையான வாழ்க்கை ஆதாரங்களை அவை ஏற்படுத்திக் கொள்ளும். அதற்குத் தேவையான சூழலை நாம்

உருவாக்கிக் கொடுத்தால் போதும். .அல்லது உள்ள சூழலைக்

கெடுக்காமல் இருந்தால் போதும்.

வேலைசெய்ய இயலாத வயதானோர் எண்ணிக்கை

அதிகரிக்கின்றதாம். அவர்கள் தமக்குரிய கடமைகள முடித்து

விட்டுத்தானே முதியோர்களாக ஆகியிருக்கிறார்கள்.. அவர்களைப்

பராமரிப்பது இளையோரின் கடமை இல்லையா?(அல்லது மேல்

நாடுகளில் இருப்பது போல் அரசின் கடமை இல்லையா?) அதறகான திட்டங்களைத் தீட்டி நிறைவேற்றுவதைவிட்டு,

அபாயமணி அடிப்பது முறையா?

நம் பாரதநாட்டின் பண்பாட்டின்படி, தனிநபர்களின்

முதன்மையான ;’’ஆயுள்காப்பீடு’’ என்பது அவர்களின் குழந்தைகள்தான். பெற்றோர் உ.ழைத்துப் பாடுபட்டு தம் மக்களைப் பராமரித்து, உலக வாழ்வியலைக் கற்பித்து (அதாவது

படிக்கவைத்து,சம்பாதிக்க வைத்து)ஆளாக்குவது பின்னால் அந்தக் குழந்தைகள் பெற்றோரைப் பார்த்துக் கொள்வார்கள்(எளிய மக்கள்

கூற்றுப்படி கஞ்சி ஊற்றுவார்கள்) என்ற நம்பிக்கையோடுதான்..

இந்த வாழ்க்கைமுறை எந்தமேல்நாடுகளிலும் இல்லாமல் நம்

பாரதநாட்டில்’’ தர்ம்ம்’’ என்ற பெயரில் இயங்கி வருகின்றது.

எனவே இளைஞர்களை ,தறிகெட்டுப் போகாமல் வழிப் படுத்தி, நமது அறநெறிகளைத் தீவிரமாக்கஃ கற்பித்து, இதற்குத் தோதான சட்டங்களை உருவாக்கினால்,அந்தந்தக் குடும்ப இளையோரே

முதியோரைக் கவனித்துக் கொள்ளும்படி செய்ய வேண்டும்..

தம் பெற்றொர்களும், முதியநிலையில்,’’’’ தம் குழந்தைகளே’’

என்று அவர்களை உணரச் செய்ய வேண்டும்.

ஆனால் பாரம்பரியமாக நல்ல வழக்கங்களைக்

கடைபிடித்து வரும் நமது குடும்பங்களே வயதானவர்களை எப்படி

அவமரியாதை செய்கிறார்கள் என்று நடப்பைக் கூறும் குடும்பக் கதைகள் சில எழுத்தாளர்கள் மூலம் நமக்குக் கிடைக்கின்றன..

பிரபல எழுத்தாளர் சகோதரி வாசந்தி அவர்களின் இந்தக்கதை

என் மனதை மிகவும் பாதித்து அதிர்ச்சியளித்த்து.. எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு இந்தக் கதையில் வரும் மாந்தர்களே எடுத்துக் காட்டு..

இனி ‘’பயணம்’’ என்ற அந்தக் கதையைப் பார்ப்போமா? (நன்றி-வாசந்தி சிறுகதைகள்-வானதி

பதிப்பகம்)

6 comments:

  1. நம்முடைய கல்விமுறை அன்பை வளர்பதற்கு பதில் பொருளாதார மேம்பாடை நோக்கியே இருக்கிறது. பாடப்புத்தகங்களோடு படிப்பை நிறுத்தி விடாமல் மேலும் வாசிக்கும் போது தான் மனிதம் பழக முடியும். வாசிப்பு மனிதனை மேம்படுத்தும். வண்ணநிலவனின் கடல்புரத்தில் வாசித்து முடித்ததும் அனைவர் மீதும் அன்பு ஏற்பட்டது. அந்நூலை வாசிக்கத்தந்து உதவியதற்கு நன்றி. பயணம் தொடரட்டும்.

    ReplyDelete
  2. ;நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரி. இத்துணை
    இளைய வயதில் , உங்கள் மன முதிர்ச்சி கண்டு
    வியக்கிறேன்.இது தற்கால இளையோர் பெரும்
    பாலோரிடம் மிஸ்ஸிங்.
    இலக்கிய வாசிப்புதான் உங்களை மேம்படுத்தியுள்ளது
    மற்றபடி, பலர் படித்தால்தான் புத்தகம் வாங்கியதற்கு
    உரிய பயன் கிடைக்கிறது.கடல் புறத்திற்கு எப்போது பதிவை எதிர் பார்க்கலாம்?வருகைக்கு
    நன்றி, சித்திரை.

    ReplyDelete
  3. வண்ணநிலவன் பிறந்த மாதமான டிசம்பரில் 'கடல்புரத்தில்' குறித்த பகிர்வை பதிவேற்றிவிடலாம் என்று இருக்கிறேன். நன்றி.

    ReplyDelete
  4. நல்ல வாசிப்பு அனுபவம் பலருக்கும் கிடைக்கணும். தேடித்தேடி நல்லவற்றைப்படிக்க பழகிக்கணும். நம்மை மேம்படுத்திக்கொள்ள இது ஒரு வாய்ப்பாக அமையும்.

    ReplyDelete
  5. நீங்கள் கூறியது சரிதான் அம்மா. வண்ண நிலவன்
    கதைகள் அருமையாகவும், எளிமையாகவும் இருக்கும். இவர் கதைகள் படித்திருக்கிறீர்களா?
    உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்களைக் கூற முடியுமா?
    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி அம்மா.

    ReplyDelete
  6. நான் அனேகமா நிறைய எழுத்தாளர்கள்கதை படிச்சிருக்கேன்.சிவசங்கரி, அனுராதாரமனன், இந்துமதி, வாசந்தி,தேவிபாலா, சுஜாதா, ஸ்ரீ வேணுகோபாலன் கல்கி, வண்ண நிலவன்,அசோகமித்ரன்,தேவன்,சாண்டில்யன்,இன்னும் என் லிஸ்ட் பெரிசு. எல்லார்கதைகளுமே பிடிக்கும்.

    ReplyDelete