Pages

Monday, November 14, 2011

உண்மை(யாகிப் போன) கதை-5

புனரபி ஜன்னம்

புனரபி மரணம்

புனரபி ஜன்னீ

ஜடரே சயனம்

இதிசம்சாரே பஹு துஸ்தாரே

க்ருபையா பாரே பாகிமுராரே

க்ருபையா பாரே என்னும்போது மீண்டும் கண்ணில்

நீர் நிறைந்தது. இதை இனிமேல் பாடக்கூடாது என்று

நினைத்துக் கொண்டேன்.ஆதிசங்கரருக்கு ஜனனம்,

மரணம்,இரண்டைப் பற்றிதான் தெரியும். உயிர் இருந்தும்

நிகழும் மரணங்களைப் பற்றித் தெரியாது.அது ஏற்படுத்தும்

குழப்பங்களைப் பற்றி தெரியாது. குழப்பங்கள் ஏற்படுத்தும்

பீதிகளைப் பற்றித் தெரியாது.

புடவைக்குத் தகுந்த ரவிக்கை அணிவது அம்மா

வுக்கு முக்கியமாக இருந்த்து. பார்ப்பதற்கு அம்சமாக

இருப்பது கௌரவப் பிரச்சனையாக இருந்த்து.வீட்டில் ஒரு

சாமான் இல்லை என்று சொல்வது அகௌரவம் என்று

நினைத்தவள் , மண்டையே காலியாகி வள்ளியின் தயவில்

உயிர் வாழ்வது எப்படி இருக்கும் என்று இரண்டுவருஷம்

முன்பு வரை நாட்டு அரசியலைப் புட்டுப் புட்டு வைத்த

அம்மா நினைத்திருக்க மாட்டாள். நினைத்திருந்தால் என்ன

செய்திருப்பாள் என்று இப்போது யோசனை செய்வது முட்

டாள்தனம் என்று நான் நினைத்துக் கொண்டேன். இவையெல்லாம் தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட விஷயங்கள்

என்று சோர்வேற்பட்டது. நான் மீண்டும் அம்மாவிடம்

சென்ற போது வள்ளி சாப்பாடு கொடுக்கும் ஆயத்ததஃதில்

இருந்தாள்.

‘’ஆயா சாப்பிட மாட்டேங்குது’’ என்றாள்.

‘’சாப்பாட்டிலே உப்பு போட்டிருக்கமாட்டே’’

‘’ இல்லம்மா. போட்டிருக்கிறேன் சாப்பிட்டுப்

பாருங்க’’

நான் ஒரு ஸ்பூன் சாப்பிட்டுப் பார்த்தேன். சரியாகத்தான்

இருந்த்து.அதாவது உப்பிருந்த்து. ருசியில்லாத பத்தியச்

சாப்பாடு. நான் கொடுத்துப் பார்த்தேன். அம்மா துப்பினாள்.

சரி,இனிக்கு ஏதோ பிடிக்கல்லே போலிருக்கு.,விடு’’

என்றேன். அம்மா என்னைப் பார்த்த பார்வை என்னை

என்னவோ செய்தது. மருந்தையும் துப்பினாள்.

‘’ என்ன வள்ளி இது’’ என்றேன் குழப்பத்துடன்..

‘’ சில நாளைக்கு அப்படித்தான் துப்புது நாளைக்கு

சரியாகும். கவலைப்படாதீங்க. நீங்க சாப்பிட்டுப் படுங்க’’

என்றாள் வள்ளி.

மறுநாள் சரியாகவில்லை. அம்மா தொடர்ந்து

சாப்பாட்டையும் மறுத்தாள். மாலையில் நான் அம்மாவின்

எதிரில் நிற்கும்போது அம்மா என் பார்வையைத் தவிர்த்தாள்

வள்ளி அருகில் இல்லாதபோது அம்மாவின் கைகளைப் பிடித்து

நான் சுய இரக்கத்தில் கரைந்தேன்.

என்னை மன்னிச்சுக்கோ அம்மா. என்னைப் புரிஞ்சுக்கோ.

ஸாரிம்மா ஸாரி;’’

அம்மா திரும்பவே இல்லை.

.’’ டாக்டரைக்.கூப்பிடல்லியாம்மா? என்றாள் வள்ளி.

இதுக்கெல்லாம் ஒன்றும் செய்ய முடியாதுங்கராங்க

டாக்டர்.’’ என்று புளுகினேன். அதற்கு பிராயச்சித்தமாக அம்மாவின் கைகளைப் பிடித்தபடி ‘’ஸாரி’’ என்றேன்.

அம்மாவை சக்கர நாற்காலியில் உட்கார்த்த முடியாத அளவுக்கு

சோர்ந்து போனாள். நான் அலுவலகத்திற்கு லீவு போட்டேன்.

இரவும் பகலும் கண்அயராமல் அம்மாவின் அருகிலேயே

இருந்தேன். ஒரு ஸ்பூன் நீரையும் விழுங்க மறுத்தாள் அம்மா.

‘’ஆயா ரொம்ப புண்ணியம் பண்ணித்தான் உங்களைப்

பெத்திருக்கணும்.’’ என்றாள் வள்ளி.

அம்மாவின் மூச்சு மெல்ல அடங்குவதை சலனமில்லாமல் பார்த்தேன். அம்மா சாக வேண்டிய நேரம்

வந்தது. அதனாலேயே இறந்தாள் என்று நான் வேதாந்தம்

பேசினேன். அன்று நான் பேசியதை அம்மா நிச்சயம் கிரகித்துக்

கொண்டிருக்க மாட்டாள் என்று திரும்பத்திரும்ப,தினமும் தூக்கம்

வராத இரவு நேரத்தில் சமாதானப்படுத்திக் கொள்கிறேன்.

இப்பொழுதெல்லாம் ஏதாவது ஒரு உபாதைக்காக

டாக்டரிடம் செல்ல வேண்டியிருக்கிறது. கையில் ஒரு ஆவணத்தை எப்பவும் வைத்திருக்கிறேன். டாக்டரின் பார்வைக்கு, இது ஒரு ஆணை. ‘’தீரமுடியாத வியாதி எனக்கு

வந்துவிட்டால்,மூளை செயலிழந்துவிட்டால் எனக்கு எந்த சிகிச்

சையும் டாக்டர்கள் அளிக்க்கஃ கூடாது’’. டாக்டர்கள் அதைப்பார்த்து சிரிக்கிறார்கள். மீண்டும் மருத்துவ தர்மத்தைப் பற்றி கேசுகிறார்கள். ‘’இது என் ஆணை’’ என்ற கத்தலுக்கு

‘’சரிசரி’’ என்று அவசரமாக சமாதானப் படுத்துகிறார்கள்.

இன்றும் அப்படிக் கத்தினேன், ஒரு இதய அறுவை

சிகிச்சைக்காக அழைத்துச் செல்கிறார்கள். அம்மாவின் நினைவு வருகிறது. அம்மா அப்படித்தான் தியேட்டருக்குள் போனாள்.

வெளியில் வந்த போது காணாமல் போயிருந்தாள்.

டாக்டர், என்னை சாக விடுங்கள். எனக்கு சக்கர நாற்காலி

வேண்டாம்.-வள்ளி வேண்டாம்-மாக்ஸி வேண்டாம் வேண்டாம்

வேண் -------

******************************************************-.

8 comments:

  1. ஆதிசங்கரருக்கு ஜனனம்,

    மரணம்,இரண்டைப் பற்றிதான் தெரியும். உயிர் இருந்தும்

    நிகழும் மரணங்களைப் பற்றித் தெரியாது.அது ஏற்படுத்தும்

    குழப்பங்களைப் பற்றி தெரியாது. குழப்பங்கள் ஏற்படுத்தும்

    பீதிகளைப் பற்றித் தெரியாது.

    ReplyDelete
  2. வள்ளி சொல்வது மாதிரி வாஸந்தி போல் ஒரு மகள் கிடைக்க அவரது தாய் புண்ணியம் செய்திருக்க வேண்டும். 'அம்மா வந்தாள்' தொடரும் முழுவதும் வாசித்தேன். அற்புதமான பகிர்வு.
    விக்ரமாதித்தனின் கவிதையொன்று ஞாபகம் வருகிறது.
    சும்மா
    சும்மா சும்மா
    சும்மா சும்மா சும்மா
    அம்மாவுக்குப் பிறகு எல்லாமும்!
    பகிர்வுக்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  3. ராதாகிருஷ்னன் சார் ஒரு தொடர்பதிவுக்கு உங்களை அழைச்சிருக்கேன் நேரம் கிடைக்கும் போது தொடருங்க உங்களால முடியும்.

    ReplyDelete
  4. அன்பின் சித்திரை,
    மிக்க நன்றி. நல்ல கவிதை கொடுத்த்தற்கும்
    வருகைக்கும்

    ReplyDelete
  5. லட்சுமி அம்மா,
    பஜகோவிந்ததஃதிற்குப் பின் கருத்து ஏதோகூறவந்து
    பின் அதைக்கூறாமல் விட்டுவிட்டூர்களா? தங்கள்
    பின்னூட்டத்தைப் பாருங்கள்.(அரிய கருத்து விடுபட்டுவிடப் போகிறது)
    தொடர் பதிவு என்றால் என்ன?வெகுஜூனியரிடம்
    இதையெல்லாம் கூறினால் எப்படி? கொஞ்சம் டைம்
    கொடுங்கள். தேரிக் கொள்கிறேன்.
    நான்13ம் தேதியிலிருந்து பையன்கள்வீட்டிற்கு
    பெங்களூருக்கு வந்துள்ளேன்.அதனால் சற்று
    தாமதம் ஆகிறது.24 ம் தைதி மதுரை திரும்புகிறேன்.
    தற்சமயம் கொஞ்ச நாட்களுக்கு அதிகம் பேர்
    படித்திருக்க முடியாத பெரிய எழுத்தாளர்கள் கதைகளை அல்லது மிகவும் ரசிக்க்கஃ கூடிய
    பகுதிகளை பதிவாக்கஃ கொடுக்கலாம் என்று
    நினைக்கிறேன்.செய்யலாமா?வருகைக்கும் அழைப்
    பிற்கும் நன்றி அம்மா.

    ReplyDelete
  6. http://echumi.blogspot.com/2011/11/blog-post_16.html

    மழலை உலகம் என்கிர தலைப்பில் நிறையபேர் தொடர்பதிவு எழுதி வராங்க என்னையும் கூப்பிட்டாங்க நம்மைத்தொடர நாலு பேருக்கு அழைப்பு விடச்சொன்னாங்க பாக்கப்போனா இது ஒரு ரிலே ரேஸ் போலத்தான்.முடிஞ்சா ட்ரை பண்ணுங்கோ இதெல்லாம் ஒரு வாய்ப்புத்தானே பயன்படுத்திக்கலாமே?
    பஜகோவிந்தம் பற்றி கருத்து சொல்ல வந்துட்டு வேர நினைவா வேர எங்கியோ போயிட்டேன். நீங்க சொன்னப்பரம் தான் நானே கவனிச்சேன்.

    ReplyDelete
  7. பெரிய எழுத்தாளர்களின் கதைகள் கொடுங்க அதுவும் ரசனைக்குறியதுதான்.

    ReplyDelete
  8. உண்மையாக இருக்கக் கூடாத, இந்த கதை படித்து முடிக்கும் போது கண்கள் பனித்தன. மனம் பாரம் உணர்ந்தது.

    அதிக பட்சம் அரை பக்கம் பிடிக்கும் எழுத்துக்கள் மூலம் ஆழ இறங்கி விட்டீர்கள்.

    ReplyDelete