Pages

Thursday, June 21, 2012

ரஸனையில் பலவிதம்


அந்தப் பெரிய கம்பி ஜன்னலுக்கு ஒரு கனமான திரையைப் போட்ட மாதிரி மணிபிளாண்ட் தன்னுடைய கொடிகளைப் பரப்பியிருந்தது. இளம் பச்சையாக புதியஇலைகள் பளபளத்துக்கொண்டு, பழையவை சற்றுமங்கி ஒருதீவிரத்துடன் படர்ந்திருந்த்து. பரபரவென்று தூசிதட்டிக்கொண்டிருந்த மாலதி ஒருவினாடிநின்று ஒருஇரவுப் போதுக்குள் துருத்திக்கொண்டு நின்றிருந்த புதியகொடிகளைக் கம்பிச்சட்டத்துக்குள் நுழைத்துவிட்டாள்.. இந்த வீட்டிற்கு வந்த புதிதில் வேலைக்காரி ஒரு சின்னத்துண்டைக் கொண்டுவந்து கொடுத்தாள். அதை அவளே ஒரு சின்ன மண் தொட்டியில் வைத்து விட்டுப் போனாள்.நான்கு இலைகளோடுஇருந்த அந்த சின்னத்துண்டு இதுதான் என் வாசஸ்தலம் என்கிறமாதிரி எத்தனைசீக்கிரம் வேர்களைக் கிளைபரப்பி இலைகளை மேலே விரித்துக்கொண்டுவிட்டது. இப்பொழுது இந்த ஜன்னலுக்குத் திரையே அவசியமில்லாமல் போய்விட்டது..வெய்யிலுக்கு இதமான, கண்ணுக்குக் குளிர்ச்சியான திரை. வீட்டிற்கு வருபவர்கள் எல்லாரும் பார்த்து அதிசயப்படும் திரை. ‘’ ஓ! உங்க வீட்டிலே எத்தனை நன்றாக வளர்ந்திருக்கு இந்தச் செடி?’’ ‘’பணத்துக்குப் பஞ்சமில்லேன்னு அர்த்தம்?’’ அவள் சிரிப்பாள். இந்த இலையெல்லாம் உங்க கண்ணுக்குக் கரன்ஸிநோட்டாத் தெரியறதா?’’ கரன்ஸிநோட்டோ இல்லையோ,இந்தமாதிரிவளர்ந்ததானாவீட்டு சுபீட்சத்தைக்காட்டறதா சொல்லுவா...’’ சுபீட்சம்னா பணம் இருக்கிறதா அர்த்தமா? ஆமாம்.’’ அவள் விளையாட்டாகப் பேச்சை ஆரம்பித்துத் தீவிரமாகத் தலையை அசைப்பாள். ‘பணம் இருகறவாவீட்டிலேயெல்லாம் சுபீட்சம் இருக்கிறதா எனக்குத் தெரியலே..! பணத்துக்குத்தான் சுபீட்சம்னு பேரு...’’ அவள் இல்லையென்று தன்குள் சொல்லிக் கொள்வாள். எங்க அம்மாவீட்டில் ரொம்ப்பஃ பணம் இருக்குன்னு சொல்ல முடியாது. ஆனா சுபீட்சம் இருக்கிறதா எனக்குத் தோணும். எங்க மாமனார்வீட்டில் எக்கச்சக்கப் பணம். அங்கே சுபீட்சமே இல்லேன்னு தோணும்....’’ சரிதான். உனக்குன்னு ஏதாவது தோணும். எல்லாத்திலேயும் உனக்கு வித்தியாசமான பார்வை.’’ இந்தச் செடியை தினம் பார்க்கும்போதெல்லாம் இந்த சம்பாஷணைகள் நினைவுக்கு வரும். உதட்டில் புன்னகை மலரும். உங்களுக்குத்தான் வித்தியாசமான பார்வை’’ என்றுஅவள் தனக்குள் சொல்லிக் கொள்வாள். எதையும் பணத்தைக் கொண்டு அளக்கிற பார்வை. வைரத்தையும் தங்கத்தையும் மட்டும் மதிப்புப் போடும் பார்வை. வைரத்தோடு போடாதவர்களை அவளுடைய மாமியார் மதித்துப் பேசவேமாட்டாள்.. அவளுடைய அம்மாவை இன்னும் சமதையாகப் பாவித்துப் பேசுவதில்லை.... நஷ்டம் உங்களுக்குத்தான் ‘’என்று அவள் முணுமுணுத்துக் கொள்வாள்.மனிதர்களை மனிதர்களாகப் பார்கத் தெரியாதவர்கள். நீங்கள்தான் வித்தியாசமானவர்கள். நான் என் குழந்தைகளை உங்களைப்போல் நினைக்கவிடமாட்டேன். எத்தைக்கண்டாலும் காசின் நினைவு வராமல், எடைபோட்டுப் பேரம் பண்ணும் புத்திவராமல், செடியைக் கண்டாலும் அதில் பணத்தைக்காணும் பார்வைவராமல் பார்த்துக் கொள்வேன்...... அவளுக்கு ஊரும் வீடும் காம்பவுண்டு முழுவதும் நிழலைவிரித்துக்கொண்டு நின்ற அரசமரமும் ஊஞ்சலும் நினைவுக்கு வந்தன. மரத்தில் வாசம் செய்த பலநிற பட்சிகளின் நினைவு வந்தது.தோட்டத்து மூலையில் தோட்டத்துக்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்காக ஒரு குழாய் உண்டு. அப்பா வேலைக்குப் போவதற்கு முன் அதில் ட்யூபைப் பொருத்தி, செடிகளின் பாத்திகளில் வைத்துவிட்டுப் போவார். அதிலிருந்து விரியும் சின்னச் சின்ன ஓடைகளில் நீர்அருந்த அரசமரத்துப் பட்சிகளெல்லாம் இறங்கிவந்து உட்காரும். எத்தனை தினுசுப் பட்சிகள்! ஊர்தெரியாத , பேர் தெரியாத பட்சிகள்—கருநீலமாய் , இளமஞ்சளாய், மயில் கழுத்தாய்...’பொளக் பொளக்’ சதக் சதக்’கென்று சப்தமிட்டபடி அவைநீரில்விளையாடுவதை நாள் முழுக்கப் பார்க்கலாம் போல் இருக்கும். தோட்டத்தில் அப்பா போடும் விதவிதமான பூச்செடிகளைத் தேடிக்கொண்டு பல தினுசு வண்ணாத்திப்பூச்சிகள் வரும். அவற்றைத்துரத்திக் கொண்டு ஓடுவது பெரிய வேடிக்கையாக இருக்கும். அந்த மாதிரியெல்லாம் ஒரு தோட்டத்தைப் பார்த்து அழகை அனுபவிக்காதவர்கள்தான் இந்த மணிபிளாண்டைப் பார்த்து மங்கமாண்டுபோவார்கள் என்று தோன்றிற்று. அதுவும் இந்தச் செடிக்கும் பணத்துக்கும் ஏதோ சம்பந்தம் கற்பித்துக் கொண்டு படும் சந்தோஷம்....ரசனையிலும் வியாபாரத்தனம்.... (அனுமானங்கள் நம்பிக்கைகள்- வாசந்தி சிறுகதைகள் )

6 comments:

 1. எத்தனை விதமான ரசனைகள். மனிதமனக்களுக்குள். அதையும் சுவைபட சொல்லவும் ஒரு திறமை வேனுமே. வாசந்தி கதைகளில் அதைக்காணமுடியும். பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 2. அருமையான பகுதியை ரசித்து
  நாங்களும் ரசிக்கப் பதிவாக்கிக் கொடுத்தமைக்கு
  மனமார்ந்த நன்றி

  ReplyDelete
 3. @LAKSMI,
  உடனே வந்து விட்டீர்களே அம்மா?மிக்க,மிக்க
  மகிழ்ச்சி.சிறந்தவற்றைப் படித்தவுடன் உடனடியாகப்
  பகிர்ந்துகொள்ள ஆர்வம் மேலிடுகிறது.ஒரு வலைப்பூ
  வையும் வைத்துக் கொண்டு சும்மாயிருக்க முடியுமா?
  எழுத்தாளர்களுக்குத்தான் எப்படியெல்லாம் சிந்தனைகள் தோன்றுகின்றன?வருகைக்கும்
  கருத்துக்கும் மிக்க நன்றி அம்மா.

  ReplyDelete
 4. @ரமணி,
  சார்,உடனேவந்துவிட்டீர்களே, எப்படி சார்?மிக்க மகிழ்ச்சி.
  நீண்டநாட்களுக்குப் பின் உங்கள் தளத்திற்கு வந்தபோது நீங்கள் ஒருமாறுதலாக அரட்டையில்
  இறங்கிவிட்டது தெரிந்த்து.கொஞ்சம் முன் தயாரிப்புடன் உங்களுடன் அரட்டையில் இறங்கலாம்
  என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
  தங்கள் வருகைக்கும், ஊக்கமூட்டும் கருத்துக்கும்
  மிக்க நன்றி.

  ReplyDelete
 5. /சின்னச் சின்ன ஓடைகளில் நீர்அருந்த அரசமரத்துப் பட்சிகளெல்லாம் இறங்கிவந்து உட்காரும்.எத்தனை தினுசுப் பட்சிகள்! ஊர்தெரியாத, பேர் தெரியாத பட்சிகள்—கருநீலமாய், இளமஞ்சளாய், மயில் கழுத்தாய்...’பொளக் பொளக்’ சதக் சதக்’கென்று சப்தமிட்டபடி அவை நீரில் விளையாடுவதை நாள் முழுக்கப் பார்க்கலாம் போல் இருக்கும்./
  அருமை.ரசித்தேன்.

  ReplyDelete
 6. @காளிதாஸ்,
  சார்,தினமும் நேரிலேயே இக்காட்சிகளைக் காணக் கொடுத்துவைத்தவர் நீங்கள. நாங்கள் எழுத்துக்களில்
  மட்டுமே இவற்றைக் கண்டு நேரில்காணத் துடிக்கிறோம்.எப்போதாவது இக்காட்சிகளைக்காண
  காவேரி, பெரியார் நீர்வளங்களைக் கைவிட்டுப்போகாவண்ணம் பாதுகாக்க வேண்டும்.

  தங்கள் வருகைக்கும்,இயற்கையை ரசிக்கும்
  அன்பு மனத்திற்கும் மிக்க நன்றி

  ReplyDelete