Pages

Sunday, January 15, 2012

மழலையர் உலகம் மகத்தானது

மழலையர் உலகம் மகத்தானது என்ற தலைப்பில் தொடர் பதிவு எழுத
மதிப்பிறகுரிய லக்ஷ்மி அம்மா அன்பழைப்பு விடுத்துள்ளார்கள். அவர்கள் அநுமதியுடன் கொஞ்சம் அவகாசம் எடுத்துக் கொண்டேன். இனியும்
காலம் தாழ்த்தல் தகாது என்பதால் சற்று முயன்று இப் பதிவினை
இடுகின்றேன். அழைப்புக்கு அம்மாவுக்கு நன்றி.


‘’படைப்பு பல படைத்துப் பலரோடு உண்ணும்
உடைப் பெருஞ் செல்வர் ஆயினும்
இடைப்படக்

குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி,
இட்டும் தொட்டும், கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்,
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத்தாம் வாழும் நாளே’’
--பழந் தமிழ்ப் பாடல்—

குழந்தைகள் பற்றி சிறுகதை மன்னர் அமரர் கு. அழகிரிசாமி குறிப்பிடும் போது

‘’ அதுகள்(குழந்தைகள்) ஒவ்வொன்றும் ஒரு பொக்கிஷம் ‘’என்றும்
குழந்தையின் அழகிலும் அதன் விளையாட்டுகளிலும் பேதைமையிலும் ஈடுபட்டு மெய் மறக்காத கலைஞர்கள் கிடையாது.’’ என்றும்கூறுவது ஒரு
தேர்ந்த முடிவாகவே கொள்ளலாம். அவர் கூறுவது போல் உலகில் எந்தக் கலைஞனும், கவிஞனும் குழந்தைகளைப் புறக் கணித்ததில்லை’’குழல் இனிது
‘யாழ் இனிது’’ போன்ற வள்ளுவ வரிகள் குழந்தை பற்றிய தமிழ்ச் சிந்தையின் வெளிப்பாடு மட்டுமல்ல, தமிழ் மொழியைக் கனியவும் நெகிழவும் வைத்த வரிகளாகும். தாகூரின் காபூலிவாலா, ‘’Home- coming, the baby, my lord””
போன்ற சிறுகதைகள் மட்டுமல்ல,The crecent moon
என்ற கவிதை நூலும் குழந்தைகளைப் பற்றியதுதான்.


உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல—குழந்தைகள் உங்கள் மூலமாக வருகிறார்கள் . ஆனால் உங்களிடமிருந்து அல்ல—நீங்கள் அவர்களைப் போல் இருக்கலாம் அவர்களை உங்களைப் போல் உருவாக்க
முயலாநீர்கள்.’’ என்பது கலீல் கிப்ரானின் புகழ்பெற்ற வாசகங்களாகும்.


எந்த ஒரு சிருஷ்டியின் ஆரம்பமும் சிலிர்ப்பை உண்டாக்கக்கூடியதே . இந்த
ஆரம்பத்தின் உருவகமாக குழந்தைகள் இருப்பதால் உலகெங்கும் இவை இலக்கிய கர்தாக்களைக் கவர்கின்றன.
குழந்தைகளைப் பற்றிய கதை என்றாலே பெரும்பாலும் தாயோடு சம்பந்தப் பட்டதாகவே இருக்கும். உலகப் புகழ் பெற்ற கதைகள் கூட இதற்குப் பெரிதும் விதிவிலக்காக இருப்பதில்லை. முல்க் ராஜ் ஆனந்தின் ‘’ The lost child
என்ற கதை உலகச் சிறு கதைகளில் ஒன்றாக்கஃ கருதப் படுகிறது. அதுவும் குழந்தை-தாய் பந்த உணர்ச்சிகளையே கவித்வ கம்பீரத்தோடு சொல்லுகிறது-.


சந்தைக்குக் குழந்தையை அழத்துச் சென்றார்கள் தாயும் தகப்பனும்.

பொம்மைக் கடையைப் பார்த்து குழந்தை நின்றது.

‘எனக்கு பொம்மை வேணும்’’

தந்தை மறுத்து விட்டார். தாய் சமாதானம் செய்தாள்.

இனிப்புப் பலகாரங்களைக் கூவிக் கொண்டு ஒருவன் சென்றான்.

‘குலோப்ஜான்,பர்பி, ஜிலோபி—‘’

குழந்தை முணுமுணுத்தது.

‘’எனக்கு பர்பி வேணும்’’

‘’பூக்காரன் கூவினான்.

‘’குல்மாஹர் பூ மாலை—குல்மாஹர் பூ மாலை—‘’’

‘’எனக்கு அந்த பூமாலை வேணும்.’’

வானவில் நிறத்தில் பலூன்கள் விற்பதைக் குழந்தை கண்டது.

தன் பெற்றோர்கள் வாங்கித்தரமாட்டார்கள் என்று தெரிந்தும் குழந்தை நினைத்தது.

‘’எனக்கு பலூன் வேணும்.’’

வழியில் ஒரு பாம்பாட்டி மகுடி ஊதிக் கொண்டிருந்தான்.

‘அந்த மகுடி எனக்கு வேணும்’’

குழந்தை கூட்டத்தில் புகுந்து மேலே சென்றது.

குடை ராட்டினம் சுழன்று கொண்டிருந்தது.

‘’குடை ராட்டிணத்தில் நான் சுற்றணும்—அம்மா—அப்பா—‘’’

குழந்தை முன்னால் பார்த்தது.சுற்றிலும் பார்த்தது தன் பெற்றோர்களைக் காணவில்லை.

பயபீதியுடன் வறண்ட தொண்டை கிழியப் பெருங்குரல் எடுத்து குழந்தை கத்தியது. கூட்டத்தில் புகுந்து இங்குமங்குமாய் ஓடியது.

இரக்கப் பட்ட வழிப்போக்கன் குழந்தையைத் தூக்கிக் கொண்டு’’ எப்படி நீ இங்கே வந்தே? யாரோட பாப்பா நீ?’’

குழந்தை முன்னிலும் அதிகமாக அழுது கொண்டு கூறியது.

‘’எனக்கு அம்மா வேணும், அப்பா வேணும்’’.

குடைராட்டிணத்தின் அருகில் குழந்தையைத் தூக்கிச் சென்று அதனிடம் கேட்டான்.

‘’அந்தக் குதிரையில் ஏறி சுற்றி வற்றையா?’’

குழந்தை மறுத்துவிட்டுக் கத்தியது.

‘’எனக்கு அம்மா வேணும், எனக்கு அப்பா வேணும்.’

பாம்பாட்டியிடம் அவன் குழந்தையைக் கூட்டிச் சென்றான்.

‘’இந்த மகுடி இசை எவ்வளவு இனிமையாக இருக்கு. கேளு குழந்தே ‘’

குழந்தை காதுகளைப் பொத்திக் கொண்டு கத்தியது.

‘’’எனக்கு அம்மா வேணும், எனக்கு அப்பா வேணும்.’’

பலூன்களைக் காட்டி அவன் கேட்டான்.

‘’பாப்பாவுக்கு பலூன் வேணுமா?’’

குழந்தை முகம் திரும்பிக் கத்தியது.

‘’எனக்கு அம்மா வேணும், எனக்கு அப்பா வேணும்’’

பூக்காரனிடம் தூக்கிப் போய் அவன் கேட்டான்.’’

ஒனக்குப் பூமாலை வேணுமா’’?

குழந்தை அதைக் கேடக விருப்பமில்லாமல் அலரியது.

‘’எனக்கு அம்மா வேணும் ,அப்பா வேணும்’’.

அவன் மேலே நடந்தான்.

இனிப்புப் பதார்த்தங்களைக் காட்டி அவன் குழந்தையிடம் கேட்டான்.

‘ஒனக்கு பர்பி வேணுமா’’?

குழந்தை வெறியுடன் தலையை ஆட்டி மறுத்தது.

‘’எனக்கு அம்மா வேணும் , அப்பா வேணும்—‘’.

கதை இங்கே முடிந்து போகிறது. தாய் தந்தையைக்காட்டிலும் குழந்தைக்கு முக்கியமானது வேறெதுவும் இல்லை என்பதை வெகு அற்புதமாகச்
சொல்லும் கதை இது.

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று கூறுவார்கள். அவர்கள்
உலகமும் மகத்தானதுதானே!

9 comments:

 1. லேட்டா தொடர்பதிவு எழுதினாலம் அசத்திட்டீங்க. இவ்வளவு திறமை இருக்கும்போது நிறைய எழுதுங்க ராதாகிருஷ்னன். சித்திரமும் கைப்பழக்கம்தானே. எழுத எழுததானே நம்மை வளர்த்துக்க முடியும். சிறப்பான பதிவுக்கு பாராட்டுக்கள். ஆஆஊஆல்.

  ReplyDelete
 2. நன்றி, அம்மாமுயற்சி செய்கிறேன். அநியாயத்துக்கு
  பாராட்டியுள்ளீர்களே?மீண்டும் நன்றி.

  ReplyDelete
  Replies
  1. ராதா கிருஷ்னன் அனியாயத்துக்கெல்லாம் பாராட்டல்லே. நியாயமா சொல்லி இருக்கேன்.இவ்வளவு நாள் நீங்க ரசித்த பிரபலங்களின் பதிவுகளிருந்து ஒரு பகுதி போட்டுவந்தீங்க. இப்ப இந்தபதிவு உங்க சொந்தமுயற்சியிலும் உழைப்பிலும் உருவானது இல்லியா.இங்கயும் சில மேற்கோள்கள் சுட்டிகாட்டி இருக்கீங்க. மத்தபடி நீங்க யோசித்து எழுதி இருக்கீங்க. திறமை இருக்குரவங்களை பாராட்டி உற்சாகப்படுத்துவதில் என்ன தவறு இருக்கு.இன்னும் முற்சி செய்து கொஞ்சம் கொஞ்சமா எழுத ஆரம்பிச்சுடுங்க. வாழ்த்துகள்.ராமாயணத்ல சொல்வாங்க இல்லியா அனுமனின் பலம் அவருக்கே தெரியாதாம். மத்தவங்க சொன்னாதான் புரியுமாம். உங்க பலம் உங்களுக்குத்தெரியனும் ராதா கிருஷ்னன்.

   Delete
 3. ரொம்ப அருமையாய் எழுதி இருக்கீங்க .பாராட்டுக்கள்..

  ReplyDelete
 4. அருமையான கதை
  மிக அழகாக சொல்லிப்போகிறீர்கள்
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. @kalidas murugaiya,
  மிக்க நன்றி சார்

  ReplyDelete
 6. @ramani,
  மிக்க நன்றி சார்

  ReplyDelete
 7. really nice, what and all u wrote about a child, i am experiencing with my daughter , good effort , pls continue kumar

  ReplyDelete