Pages

Wednesday, January 4, 2012

தேவன்- மனிதரில் பலவிதம்-9

a





.





சுற்றும் முற்றும் பார்த்தான். அவனுக்கு அருகில் யாரும் இல்லை.இருந்த
இரண்டொருவரும் அவர்கள் காரியமாகவே இருந்தார்கள் எங்கே போய்விட்டது? எப்படிப் போய்விட்டது? யாரைப் போய்க் கேட்க முடியும்?


திணறிக் கொண்டு நிறகும் போதே, இருபது கஜத்திறகு அப்பால் ஒரு மோட்டாரின் கதவு தடார் என்று ஆவேசத்துடன் சாத்தப் படும் சத்தம்
கேட்டது. அதிலிருந்து இறங்கியவரை வேதாந்தத்திறகு நன்றாக ஞாபகம்இருந்தது.
கும்பகோணம் ஸ்டேஷனில் அவனைப் பார்த்துப் பேசியவரே அவர்.
வரும்போதே அவர் தொந்தியும் மார்பும் குலுங்கின. பல்லைக் கடித்துக் கொண்டு அவனை அடித்துவிடுபவர் போல் ஆவேசமாக வந்தார்.


பை நிறையப் பணம் இருந்தால் இருதயம் இருக்கத் தேவை இல்லை என்ற கொள்கையைக் கடைபிடிப்பவர்களின் கூட்டத்திறகுத் தலைமை
தாங்குபவர்கள், ஜேப்படிக்கார்ரஃகள். இவர்களிடம் சிக்கி அவஸ்தைக்குள்ளாகிறவர் அநேகமாகச் சூதுவாதறியாத அப்பாவி அயலூர்காரர்கள்,,கையில் இருக்கும் அத்தனை பணத்தையும் கோட்டைவிட்டுவிட்டு,டிராம் சத்ததிறகுக் கூட மார்க்கமின்றி,சுற்றிலும் ஒரு
தெரிந்த முகமேனும் இல்லாமல் திண்டாடும் இவர்களைப் பரிதாபமாககஃ கூட
நின்று பாராமல் ஜேப்படிக்காரன் ஓடி ஒளிந்து கொள்கிறான். ‘’ஜயோ பாவம்!
அத்தனை பணத்தையும் அடித்துக் கொண்டு போகிறோமே! ஊருக்குத் திரும்ப டிக்கட் வாங்கவோ, அல்லது ஒரு வேளை சாப்பிடவோ, சில்லரையை விட்டு வைப்போமே’’ என்ற எண்ணம் இவனுக்கு ஒரு போதும் ஏறபட்டதே இல்லை!



தன் சட்டைப் பையைத் தடவிப் பார்த்த வேதாந்தத்திறகு,அது
காலி என்றவுடன் உலகெங்குமே காலியாகிவிட்டது போன்றதொரு பிரமிப்பு ஏறபட்டது. எப்படிக் கொண்டு போனான்? நான் எவ்வளவோ ஜாக்கிரதையாக
வைத்துக் கொண்டிருந்தேனே!’’ என்று எண்ணி வியந்தான்.



‘’பட்டணம் போக்கிரி ஊர். ஜாக்கிரதை!’’என்று அத்திம்பேர்
சொன்னதாக அத்தை சொன்னாளே. ‘அது தெரிந்து இப்போது என்ன பிரயோசனம்?’’ என்று மனம் வருந்தினான். இந்த சமயத்தில்தான் காரிலிருந்து
அந்த புதிய, பெரிய மனிதர் இறங்கி, மார்பும் வயிரும் குலுங்க பல்லைக் கடித்துக் கொண்டு அவனை நோக்கி வந்து கொண்டிருந்தார். முட்டாள் பையா1
மகாபுத்திசாலி என்று நினைத்துக் கொண்டு பட்டணம் வந்ததும் வராத்துமாககஃ
கைக் காசைத்தொலைத்துவிட்டு விழிக்கிறாயே! அதைக் காபந்து செய்யத் தெரி
யாதவன் நீ! நீ என்ன சம்பாரித்துப் புறட்டிவிடப் போகிறாய்!’’ என்று கன்னத்தில் நாலு அறை வைக்கவே அவர் வருகிறார் என்று வேதாந்தம் எண்ணினான்.


அவருடைய வேகத்தைக்கண்டு வேதாந்தம் ஏமாந்து
போனான். அவர் அவனை நோக்கி வரவே இல்லை.! அவன் மீது கனமாக உராயந்து கொண்டு அவர் அவனையும் தாண்டி ஸ்டேஷன் படிக்கட்டுகள் மீது
துடியாக ஏறினார். அவன் சற்றும் எதிர்பாராத விதமாக, ஒரு தூண் அருகே சடக்கென்று நின்று, அங்கே பரம சாதுவாககஃ காணப்பட்ட ஓர் ஆசாமியின்
கழுத்தை முரட்டுத் தனமாகப் பற்றி இழுத்து, அவனை அப்படியே ஒரு வளை வளைத்தார் அதை அடுத்து, ‘’தொம்’’ ‘’ தொம்’’ என்று அவன் முதுகில் நாலைந்து குத்துகள் விழுந்தன. அதே சமயம் அவருடைய பூட்ஸ் கால்களும்
சுழன்று சுழன்று அவனுடைய பிருஷ்ட பாகவ்களையும் துடைகளையும் செம்மையாகத் தாக்கின. சுமார் பதினைந்து இடங்களிலாவது அடியும் உதையும் கொடுத்த பிறகே அவர் நிறுத்தினார். அவருடைய ஸ்தூல தேகத்திறகு இந்தப் பயிறசி ஏற்றதல்ல என்பதுபோல் மேல் மூச்சு வாங்கியது.
அவர் திணறினார். அடிபட்ட ஆள் முகத்தை நிமிர்த்தினான் அவனுக்கேகூட இது ஓர் அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்க வேண்டும். இல்லையெனில் இவ்வளவு வகையாகத் தன் கன்னத்தை அவருக்குக் காட்டியிருக்க மாட்டான்.!
பளார் பளார் என்று இரண்டு கன்னங்களிலும் அறைகள் விழுந்துவிட்டன. நிதானிக்கவும் அவகாசம் கொடுக்காமல் அவன் வயிற்றுக்கடியில் கை கொடுத்து அந்தப் புதிய மனிதர் ஒரு பணப் பையை வெளியே இழுத்துவிட்டார்.!.



‘ஏஞ்சாமி அவனைப் போட்டுக் கொல்ரீங்க?’’என்று கேட்டுக் கொண்டே வந்தான் யாரோ ஒருவன். இதற்குள் ஒரு சிறு கூட்டம் கூடிவிட்டது. ஏனா? இதறகுத்தான்! தெரிந்து கொள்!( பல்லைக் கடித்து) யாரிடம் இந்த வேலை காட்டுகிறான்.! பட்டணத்திறகு புதிதாக ஒரு ஆள் வந்து இறங்கினால், உடனே ஜேபியை அடிக்க வேண்டியதுதானா? நான்தான் காரில்
உடகார்ந்து, இருமாதிரி நடக்குமென்று எதிர்பார்த்து இங்கேயே கவனித்துக் கொண்டிருக்கிறேனே!’’



வேதாந்தம் திடுக்கிட்டான். அவன் பறிகொடுத்துவிட்டுப்
பரிதவித்துக் கொண்டிதுந்த பணப் பைதான் அவரிடம் இருந்தது. ‘’சார்!—என்னுடையது சார், அது!’’ என்றான்.


‘’உம்முடையதா? உம்ம பையில் இருந்தால்தான் உம்முடையது! நான் இதை வெளியே எடுக்காமல் இருந்தால் இவனுடையதுதான்!’’ ‘இவனுடையதுதான்’ என்னும் போதே, அந்த ஆசாமி மண்டையில்’ டக்’
கென்று ஒரு தட்டுத்தட்டி,
அவனை அடையாளமும் காட்டினார்


உம்ம பணம் பூராவும் இருக்கிறதா பாரும். அதறகுள் ஏதானும் குட்டி வேலை
செயதிருக்கப் போகிறான். என்றார் பெரிய மனிதர் வேதாந்தம் க்ஷணகாலத்தில் சொல்லிவிட்டான்.’’’ இருக்கிறது சார்.! இருக்கிறது’’’
இந்த சந்தர்பத்தில் அடி வாங்கினவன்மீது கைப் பிடியை அவர் தளர்த்தியிருக்க வேண்டும்.. கண் இமைக்கும் நேரத்தில் அவன் கையை உதறிக் கொண்டு, அங்கிருந்து நாவி, ஓட்டமாக ஓடி மறைந்துவிட்டான். ‘’பிடி, பிடி!’’ என்று நாலைந்து பேர் அவனைத் துரத்துவது போல் ஓடினார்கள்.


பெரியவர் சிரித்தார். ‘’ஓடுகிறவர்கள் எல்லாரும் அவனைச் சேர்ந்தவர்கள் துரத்துவது பாசாங்கு! வாரும், இப்போது எங்கே கிளம்பினீர்?’’ என்று கேட்டார் வேதாந்தத்தைப் பார்த்து.. ‘’ ஹோட்டலில் இரண்டு இட்டிலி சாப்பிடலாம் என்று எண்ணித்தான் பையில் கை வைத்தேன்’’
‘’இப்போ அந்த ஆளுக்கு முன்னாடி’ டிபன்’ பண்ணி வைத்தீர் வாரும் இங்கேயே நின்று கொண்டிதுந்தால்? கையை அலம்பிக் கொண்டு நானும் உம்மோடு இரண்டு இட்டிலி சாப்பிடுகிறேன். நீர் வாங்கித் தருகிறீரா?’’


இரண்டு பேரும் எழும்பூர் ஹோட்டலில் ஆகாரம் செயதார்கள். ‘’உங்களுக்கு எப்படி சார் தெரிந்தது? ஆச்சரியமாயிருக்கிறதே!’’ என்று கேட்டான் வேதாந்தம் அவன் கண்ணிலே நன்றி பெருக் கெடுத்து ஓடியது அப்போது அவர் ஒரு தெய்வமாகவே அவன் முன்னால் தென்பட்டார்.

(அமரர் தேவன்—மிஸ்டர் வேதாந்தம்)

2 comments:

  1. புது இடத்தில் பணம் தொலைந்து அவதிப்படுபவர்மன நிலை நல்லா வெளிப்படுதுகிரார் வேதாந்தத்தின் நல்லகாலம் அந்தமனிதர்சமயத்தில் பார்த்து உதவி செய்தார்.
    பணம் திரும்ப கிடைத்ததும் வேதாந்தத்தின்மன நிலை எப்படி இருந்திருக்கும் இல்லியா?

    ReplyDelete
  2. இந்தஅநுபவம் பலருக்கும் ஏற்பட்டிருக்கும்.எனக்கும்
    ஒருமுறை சென்னையில் ஏறபட்டது. பணத்தோடு
    ரயில் பயண முன்பதிவோடுகூடிய டிக்கட்டும்
    போய்விட்டது. அப்புறம் டூபளிகேட் டிக்கட் வாங்கிக்
    மகொண்டு உறவினர்களிடம்பணமும்பெற்றுக் கொண்டு மதுரை திரும்பியது வேறு விஷயம்.
    நிர்கதியான நிலையிலிருந்த வேதாந்தத்திற்கு
    தெய்வம் போல் உதவியிருக்கிறார் நடப்பதைத்தானே எழுதுகிறார்கள்நன்றி அம்மா

    ReplyDelete