Pages

Sunday, January 1, 2012

தேவன்- மனிதரில் பலவிதம்--6

a







வாசலில் அவன் உடகார்ந்திருக்கும்மோதே சுமார் எட்டு வயதிலிருந்து பதினான்கு வயதுக்குடபட்ட பல குழந்தைகள் ஓடிவந்து எட்டிப் பார்ப்பதும்,
கோஷம் போட்டுக் கொண்டு உள்ளே ஓடுவதுமாக இருந்தன. வந்த குழந்தையே
திரும்பத்திரும்ப வந்து பார்த்துவிட்டு ஓடியது.




விதியை நொந்துகொண்டு உடகார்ந்திருந்தான் வேதாந்தம்.. கடைசியில் ஹாலில் ஒரு பெரியவரின் இரைச்சல் சப்தம் கேட்டது. சிறு பசங்கள் நடமாட்
டமும் ஓயந்தது. சுமார் அறுபதுவயது மதிக்கக்கூடிய ஒருவர் வெளியே வந்தார். அவர்தான் சந்தானம் அய்யங்கார் என்று அநுமானம் செயதுகொண்டு, எழுந்து நின்றான் வேதாந்தம்..





அவர் ஒரு நாறகாலியில் சாயந்துகொண்டு, வேதாந்தத்தை பக்கத்தில்
நிற்கும்படி ஜாடைகாட்டினார். பிறகு ஜந்துநிமிஷம் அவனை விழுங்கிவிடுகிறாற்போல் விறைத்துப் பார்த்தார். முதல் கேள்வியாக ,, ‘’உனக்கு இங்கே ட்யூஷனுக்கு ஆள் தேவை என்று யார் சொன்னது?’’ என்று
ஒரு வெடிகுண்டைப் போட்டார்.


‘’என் ஸ்னேகிதன் சீதாராமன் என்று பெயர். அவன் ஸ்ரீவைஷ்ணவன் இல்லை என்று நீங்கள் ---‘’

சரி, அது சரி—கல்யாணத்திறகு ஜாதகப் பொருத்தம் பார்த்தானாம். ஒருத்தன்.
எல்லாம் சரியாயிருந்ததாம்., பத்துப் பொருத்தம் எல்லாம்! கடைசியிலே ஒரு
தப்பு. இரண்டும் ஒரே கோத்திரம்.! ஹஹ்ஹஹஹ!அந்தமாதிரி ஆயிப் போச்சு
முன்னாடி கோத்திரம் பார்த்துக் கொண்டுதானே கொருத்தம் பார்க்கணும்? ஹ!’’
என்று கேட்டார் அவர் குரல் வேதாந்தம் ஏதோ குற்றம் செய்துவிட்டவன் போலவும், அதறகாக அவர் கண்டிப்பது போலவும் பார்ப்பவருக்குத் தோன்றும்படி இருந்தது.


‘’எந்த ஊர் உனக்கு ?’’, உங்கப்பாவின் பேர்?’’ என்ன படித்திருக்கே? இதுக்கு
முந்தி அநுபவம் உண்டா?’’ என்ன சம்பளம் எதிர்பார்க்கிறே?’’ என்று பெரியவர்
சரமாரியான கேள்விகளை அடுக்கினார். வேதாந்தம் மரியாதையுடன் நின்றபடி பதில் சொல்லி வந்தான். ‘தேசிகாச்சாரி’’ என்றபோது, சந்தானம் அய்யங்கார், மண்டையைத் துருவிப் பார்த்தார்.. ஞாபகத்துக்கு வரவில்லை. அ.ப்புறம் பார்த்துக் கொள்கிறேன்’’’ என்ற ரீதியில் தலையை ஆட்டிக் கொண்டார்.
‘எப்போ முதல் வருவே?’’ என்று அவர் கேட்டதும் ,நீங்கள் அழைத்தவுடன்
வருகிறேன்1’’ என்றான் அவன்.

உன் விலாசத்தை எழுதிக் கொடுத்துவிட்டுப் போ! தேவையானால் உனக்கு எழுதுகிறேன்.!’’ என்றார்.

‘’சார், எப்போது எழுதுகிறீர்கள்?’’


‘’ஒரு வாரம் பார்1 அதற்குள் லெட்டர் வரவில்லையென்றால், நான் வேறே ஆளை வைத்துக் கொண்டுவிட்டேன் என்று அர்த்தம். தெரிந்ததா?’’


ஒரு நமஸ்தே போட்டுவிட்டு வேதாந்தம் வெளியே வந்தான். கிழவர் முகபாவத்தையும் அவர் தலையை ஆட்டியதையும் பார்த்தால் அவனுக்கு
நம்பிக்கை ஏறபடவே இல்லை. சிறு பசங்கள் எல்லாம் கிஷ்கிந்தா வாசிகளாக
அவன் மனக் கண்ணில் உருவெடுத்தார்கள். ‘’தேவையானால் எழுதுகிறேன் எனபதறகு ‘’தேவையில்லை, போய்விட்டு வா! என்று அர்தமாக இருக்குமோ?’’ என்று ஆராயச்சி செயதான்.ஒன்றும் புலப்படவில்லை.


இதறகு ஒருவாரம் சென்று கீழ்கண்ட கடிதம் ஒன்று

வேதாந்தத்திற்கு வந்தது.


‘’மி!ஸ்டர் வேதாந்தம்,

உமக்கு எங்கள் குடும்பத்துடன் சென்னையில் வந்து தங்கி , ஏழு குழந்தை
களுக்கு ட்யூஷன் சொல்லிவைக்கஃச் சம்மதமானால், நாளை இரவு உம் சாமான்களுடன் மாயவரம் ஸ்டேஷனில் போட் மெயிலில் சந்திக்கவும்..
நாங்கள் அந்த வண்டியில் புறப்பட்டுச் செல்கிறோம்.. சென்னையில் உமது ஜாகை, சாப்பாட்டுவசதிகள் எங்களுடன் செய்து தரப்படும். மாதச் சம்பளம்
ரூபாய் முப்பது எதிர்பார்க்கலாம். எனபதை அறியவும்.

நாளை ரயிலில் சந்திக்க இயலாத படசத்தில், வேறு ஒருவரை நாங்கள்
ஏற்பாடு செயது கொள்ளுவோம்.. அப்புறம் என்னை சந்திக்க
முயற்சி செய்யத் தேவை இல்லை.

என். எஸ். சந்தானம் அய்யங்கார். ‘’


(அமரர் தேவன்—மிஸ்டர் வேதாந்தம்)

3 comments:

  1. இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

    வேலைக்கு இண்டெர்வியூ செய்ய்ம் முறை சுவாரசியமா இருக்கு. எப்படியோ மனசு வந்து வேலைக்கு அழைப்பு விட்டிருக்காரே.

    ReplyDelete
  2. நன்றி அம்மா. உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் என்
    இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை
    தெரிவித்துக் கொள்கிறேன்.
    வெகுளியான, சாதுவான, உலக நடப்பு தெரியாத
    அப்பாவிடம் செல்லமாக வளர்ந்த வேதாந்தம்
    கெடுபிடியான அய்யங்காரிடம் என்ன பாடுபடுகிறான்
    பாருங்கள். இந்த நாவல் கிட்டத்தட்ட தேவன்
    அவர்களின் வாழ்க்கையை ஒட்டியது என்று கூறக்
    கேட்டிருக்கிறேன்.என் தகப்பனாரும் ஏறக் குறைய இதே சாயல்தான். மிக்கஃ கண்டிப்பானவர்.
    சின்ன வயதில் விகடனில் தொடராகப் படித்த, எனக்கு மிகவும் பிடித்த இந்த நாவலை 18 வயதில்வேலைக்குச் சென்ற போது, பைண்டு
    செய்த புத்தகமாக வெளியூருக்குஎடுத்துச் சென்று
    அடிக்கடி படித்துக் கொண்டே இருப்பேன்.என்னிடமிருந்து எப்படியோ அதைக் கிளப்பிக் கொண்டு போய் , பொடிப் பொடியாக உதிரும் அதை இன்னும் தரமாட்டேன் என்கிறான்
    என் மருமான்.புதுப்புத்தகமாக வாங்கிவிட்டேன்

    ReplyDelete
  3. வாழ்க்கையில் அவனுக்கு நேரும் கஷ்டங்களையும்
    அவற்றை அவன் தெய்வ நம்பிக்கையோடு சமாளித்த தையும் அடிக்கடி படித்துக் கொள்வேன்.
    கொஞ்சம் போரடித்தாலும் , அனபோடு படித்துவரும்
    உங்களோடு பகிர்ந்து கொள்வது பேரானந்தமாக உள்ளது.என்னை மிகவும் கவர்ந்த பகுதிகளை மட்டுமே கொடுத்துவருகிறேன்.
    மிக்க நன்றி அம்மா

    ReplyDelete