Pages

Monday, January 2, 2012

தேவன்- மனிதரில் பலவிதம்-7

a

..

போட் மெயில் வருவதறகு சிறிது நேரத்திறகு முன்பே கும்பகோணம்
ஸ்டேஷனில்ஜனக்கூட்டம் சேர்ந்துவிட்டது. பிளாட்பாரத்தின் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைக்கு நடை போட்டுக் கொண்டு சிலர்
பொழுது போக்கினர். மூட்டைகளை வாகனமாக பாவித்து ஆரோகணித்தபேர் பலர். ஸ்டேஷனில் கிடந்த பெரிய பெரிய மரப்பெட்டிகளை சிம்மாசனமாகப்
பாவித்தனர்., ஸ்டேஷனில் செலவாக்கு பெற்ற ஒரு சிலர்.
நேரம் நெருங்க, ஜனங்கள் வந்து கொண்டேயிருந்தனர். ‘’ஏது, இன்று மெயிலில் இடமே கிடைக்காது போல் இருக்கிறதே!’’ என்று வேதாந்தம்
கவலை கொள்ளும் அளவுக்கு ஜனங்கள் கூடிய பிறகுதான் சந்தானம் அய்யங்காரும் அவர் பந்து ஜனங்களும் அங்கே பிரவேசம் செயதார்கள்.சந்தானம் அய்யங்கார் வெகு விறைப்பாக, ஸ்டேஈனையே விலைக்கு வாங்கி
விட்டவர் போலும், இதுபோன்று அனேகம் ஸடேஷன்களை விலைபேசச் சட்டைப் பையில் தயாராகப் பணம் வைத்திருப்பவர் போலும் காணப் பட்டார்.
அவரைப் பின் தொடர்ந்து அவருடைய கடைசிபிள்ளை சீனிவாசன் என்ற சீனியும் , மூத்த பேரன் ராகவனும் வந்தார்கள்.அப்புறம் இரண்டு பெண்கள், ஒரு வாண்டுப் பயலும்,.வேதாந்தத்தைக் கும்பகோணத்தில் எதிர்பார்க்காதபடியால் சந்தானம் அய்யங்கார் அந்தப பக்கம் திரும்பவேயில்லை. வேதாந்தம் அவர் திருஷடியில்
படச் செய்த முயறசிகளும் பலன் அளிக்காமல் போயின. இந்தச் சமயம் ஜிகுஜிகுவென்று போட்மெயில் ஸ்டேஷனுக்குள் கம்பீரமாக நுழைந்துவிட்டது.


சந்தானம் அய்யங்காரும் மற்றவர்களும், தங்கள் எதிரே நின்ற இரண்டாம் வகுப்பு வண்டியில் ஏறிக் கொண்டார்கள். இரண்டு நிமிஷத்தில் எல்லா சாமான்களும் ஏற்றப் பட்டுப் பல இடங்களிலும் பங்கீடு செய்யப் பட்டு விட்டன. சந்தானம் அய்யங்கார் உடகார்ந்து சாயந்து கொண்டபின்பு வேதாந்தம்
எதிர்ப் பட்டு, ‘’’’சார்!’’ என்றான்
‘’நீ யார்?’’ என்று கேட்டார் அவர்.

மாயவரத்தில் என்னை வந்து சந்திக்கச் சொல்லி எழுதியிருந்தீர்களே?’’

‘’அப்படியென்றால் இங்கே ஏன் வருகிறாய்?’’ இது மாயவரமா?’’

‘’இல்லை, நான் இங்கேயே ஏறிக் கொள்கிறேன் என்று உங்களிடம் தெரிவிக்கத்தான் வந்தேன்.’’

‘’சரி போய் ஏறிக் பொள்!’ சந்தானம் மிடுக்காகப் பேசிக் கொண்டே வெளியே
எட்டிப் பார்த்தார்.’’இது உன் மூட்டை என்று சொல்!’’

‘’ஆமாம்’’

‘’உள்ளே எடுத்துப் போடேன்! டிக்கட் வாங்கியிருக்கிறாயா?’’’ வாங்கிவிட்டேன். நான் அடுத்த கம்பார்ட்மெண்டில் ஏறிக் கொள்கிறேன்!’’

‘’போ, பின்னே! ஏன் நிறகிறே? வண்டி புறப்பட்டு விடும்—ஹூம்!’’

தன் பெட்டி படுக்கைகளை அவர்களுடைய சாமான்களுடன் சந்தானம் ஏன்

வாங்கி வைத்துக் கொண்டார் எனபது வேதாந்தத்துக்குப் புரியவில்லை.

அவன் வருவது நிச்சயம் எனபதறகாக இருக்குமோ, என்னவோ! அவரிடம்

சொன்னபடி வேகமாக அடுத்த பெட்டியை நோக்கி விரைந்தான். அங்கே

ஏகக் கூட்டம்.

(அமரர் தேவன்—மிஸ்டர்வேதாந்தம்)

2 comments:

  1. பணம் படைத்தவர் என்றால் எவ்வள்வு மிடுக்காக இருப்பாங்கன்னு புரிய வைக்கும் எழுத்து. வேதாந்தம் அப்பாவித்தனமும் புரியுது.

    ReplyDelete
  2. சரியாகச் சொன்னீர்கள். அதுவும் தஞ்சாவூர்.
    கேட்கவேண்டுமா?ஏழையைக் கண்டால் மோழையும் பாயும். என்று தெரியாமலா கூறியுள்ளார்கள்

    ReplyDelete