Pages

Monday, January 9, 2012

தேவன்- மனிதரில் பலவிதம்-14

நல்ல நடுமத்தியான வேளையாதலால், ஜன நடமாட்டமே இல்லை
ஒரு பெடரோல் பங்கில் மஞ்சள் நிறக்கார் ஒன்று பெடரால் போட்ட வண்ணம் நின்றது. வேதாந்தம் அதை அணுகி அங்கிருந்த ஆளிடம் ,’’போஸ்டாபீஸ் எந்தப் பக்கத்தில் இருக்கிறது?’’ என்று விசாரித்தான்.

மறு கணம் திடுக்கிட்டான்.
காரில் இருந்தவர் மிஸ்டர் ஸ்வாமி! வழக்கமாக ஓட்டிவரும் கறுப்புக் காரை விடுத்து, இந்த மஞ்சள் காரைக் கொண்டு வந்திருந்தார். அவருடைய இடது புறத்தில் அவருடைய மனைவியாரும், பின் ஸீட்டில் ஓர் இளைஞரும்
உடகார்ந்திருந்தார்கள்.

‘’வாருங்கள் சார், பின்னால் உடகாருங்கள்!’ என்று உற்சாகமாக அழைத்தார்
சுவாமி.
‘’நான்—வந்து—‘’ என்று ஏதோ சொல்ல வாயெடுத்தான் வேதாந்தம்.

‘’என்னையா யோசனை பலமாக? சந்தானம் டெல்லியில் இருக்கிறார். ஒருநாளைக்குத்தான் அந்தப் பசங்கள் விஸ்ராந்தியாக இருக்கட்டுமே! என்று
காரை ஓட்டினார் சுவாமி.

‘மஹாபலிபுரத்துக்கா போகிறோம்?’’ என்று மெல்லக் கேட்டான் வேதாந்தம்..

‘’காரில் நீர் உடகார்ந்தாகிவிட்டது! நான் கொண்டு போகிற இடத்துக்குப் பேசாமல் வரவேண்டியது!’’ என்றார் சுவாமி முடிவாக.

தாம்பரத்தை நோக்கி வழுவழுப்பான தார் ரஸ்தாவில் ரம்யமானதொரு சுருதியுடன் கார் ஓடியது. பேசிக்கொண்டே கார் ஓட்டிய சுவாமி அடிக்கொருதரம் திரும்பி வேதாந்தத்தைப் பார்த்தார்.

‘சந்தானத்திற்குத் தெரிந்தால், உடனே சீட்டைக் கிழித்து விடுவார் டோய்1’’
என்று பரிகாசம் செய்தார் .
வேதாந்தம் சற்றே தைரியமாக, ‘’சார், சந்தானத்தை உங்களுக்கு முன்னாடியே தெரியுமா?’’ என்று கேட்டான்.
ஹூ! சந்தானத்தையும் தெரியும்.! அவர் அப்பாவையும் பார்த்திருக்கிறேன்..தாத்தா
வையும் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். அவர் அப்பா மூணு வேதம் படித்தவர். அசாத்திய வைதீகம்.மூணு ஏக்கரா நிலம் மட்டும் உண்டு.. பிள்ளைக்கிப் பள்ளிக்கூடப் படிப்பையும் சொல்லி வைத்தார். கூடவே வேதாத்தியானமும் பண்ணி வைத்தார். நாளைக்கும் சந்தானம் அய்யங்கார்
ஸ்வரம் தப்பாமல் பஞ்சபதி சொல்லுவாரே.! எந்த இடத்தில் வேண்டுமானாலும் பரீடசை பண்ணலாம்.’’.

‘’ஆமாம். தெரியும்.!’’

‘உம்மை அங்கு சேர்த்துக் கொண்டதுகூட அதனால்தான். அவர் கல்யாணமே ஒரு கதை திருச்சினாப் பள்ளியிலே ஒரு கல்யாணத்திற்குப் போயிருந்தார் பெரியவர். பிள்ளைக்கி சோமன், ஜோடு, பூரி தட்சிணைகள் கிடைக்கும் என்று ஆசை. கல்யாணத்தன்னிக்கு சப்தபதி ஆகவில்லை. ஒரு சம்பந்தித் தகராறு வந்துவிட்டது. பிள்ளைவீட்டுக காரன் திடீர்னு ஆகாயத்தில் எழும்பிக் குதித்தான். ‘’இது காபியா? கழுநீரா? என்றான். ‘இது இட்லியா? உங்களுக்கு வெட்கமாயில்லை? என்று கேட்டான். இன்னொரு பயல். கல்யாணம் ‘கான்சல்ட்’ ஊருக்குக் கிளம்பிவிட்டார்கள் சம்பந்திகள்!’’

நிஜமாகவா?’’ என்று கேட்டார் மைத்துனர்.

‘நான் கதை எழுதுகிறவனா? மிஸ்டர் வேதாந்ததிதுக்கு வேணுமானால் கற்பனை ஓடும். பெண்வீட்டுக்காரன் நல்ல பெரிய மனுஷன். பசையுள்ள
பேர்வழி.’.சரிதான்’ என்றான். முகூர்த்ததை தவற விடாமல்’நடத்திப் பிடறது’.
என்று தேடினான். சந்தானம் உக்கிராண உள்ளிலே இட்டிலிப் பானைக்குப்
பக்கத்திலே அப்போதுதான் இலையைப் போட்டிருக்கிறார். நாலு பேராகப் போனார்கள். கரகரன்னு இழுத்துக் கொண்டு வந்தார்கள்.தாலியைக் கட்டச் சொன்னார்கள். இருத்திரண்டரை ஏக்கர் நஞ்சை, பதினாலு ஏக்கர் புஞ்சை.
அகண்ட காவேரிப் பாய்ச்சல், மாயனூர் கிராம்மஃ. அப்சரஸ் மாதிரிப் பெண்ணு--. கசக்கிறதோ, வலிக்கிறதோ கேடகிறேன்.! அதிர்ஷ்டம் அப்படி வந்து குதித்துவிட்டது ஓய்.!’’

வேதாந்தம் சிரித்தான்.

‘’ஏன், கௌசல்யா இப்போ அழகாக இல்லை என்று சிரிக்கிறீரா? ஏழு பெணகள்,
நாலு பெண்ணைப் பெற்று, நாற்பத்திநாலு வருஷம் குடித்தனம் பண்ணினவள்
இதறகு மேல் ரதி மாதிரி இருந்து விடுவாளோ? ஏன் ஜயா!’’

‘’சந்தானத்திறகு இன்னும் அந்த சொத்து இருக்கிறதல்லவா?’’

‘’இருக்கிறதாவா? பெருக்கிப்பிட்டார் ஜயா! பையன்களைக் காலேஜூக்கு அனுப்பி , பெண்களைப் புக்ககத்திறகு அனுப்பி, மெட்ராஸிலும், கும்பகோணத்திலும் வீடு கட்டிக் குடித்தனம் நடத்துகிறதென்றால் சாமர்த்தியம்
எத்தனை வேண்டும்?’’

‘எல்லாம் அந்த அம்மாள் கொண்டு வந்த சொத்து என்று சொல்லுங்கள்1’’என்று
கேட்டார் மைத்துனர்.
‘’கொண்டு வந்தால் என்ன? எத்தனை பேர் இதைவிடப் பெரிய எஸ்டேட்டுகளை அழிக்கவில்லை? இவர் சாக்ஷாத் பரமேஸ்வரன். மடியில் பார்வதியை வைத்துக் கொண்டு இருக்கிறவர் மாதிரி கௌசல்யாவை வைத்துக் கொண்டிருக்கிறார். மனுஷன் காலணா செலவழித்துவிட மாட்டார்.
வேதாந்தம் ஏழுபேருக்கு ட்யூஷனைக் கொடுக்கிறார். முப்பது ரூபாய்தான் கொடுக்கிறார் அப்படி இப்படித் திரும்பினால் வேலையைப் பிடுங்கிவிடுவேன் என்கிறார். என்ன வேதாந்தம்1 நான் சொல்கிறது சரிதானே?’’

‘’உங்களுக்கு எப்படித் தெரியும்?’’

‘’எனக்கு ஒரு மனுஷனைப் பார்த்தால் என்ன செய்வான் என்று தெரியாதா?

நீர்கூட இப்போ, , கண்ராவியே! நம்மைக் கட்டி இழுக்கிறானே’ என்றுதான்
எண்ணிக் கொண்டு வருகிறீர்!’’

வேதாந்தம் திடுக்கிட்டான். ‘’அப்படியெல்லாம் இல்லைசார்! எனக்கு மஹாபலி
புரம் பார்க்கவேண்டும் என்ற ஆசை உண்டு.’’

‘’ மஹாபலிபுரத்தைச் சும்மா வெயில் சுடுகிறதே, கால் கடுக்கிறதே என்று நினைத்துப் பார்த்தால் பிரயோசனம் இல்லை. சரித்திரக் கண் கொண்டு பார்க்க வேண்டும். அதோ, தெரிகிறதே.திருக் கழுகுன்றம். அதற்கு நாம் இன்னொரு சமயம் வரலாம்.’’

(அமரர் தேவன்- மிஸ்டர் வேதாந்தம்)

6 comments:

  1. சுவாமி நல்லவர் போலத்தான் தெரிகிரார். சந்தானத்தின் கல்யாணம் பற்றி அவர் சொல்வது வெகு சுவாரசியம்தான்.வேதாந்ததிற்கு விஷயங்கள் எப்படி எல்லாம் தெரியவருது.

    ReplyDelete
  2. கதை நல்லா இருக்குங்க..வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அதிர்ஷ்டம் என்றால் இது அதிர்ஷ்டம் என்பதா
    அல்லது பொண்ணுக்கு கொடுப்பினை அப்படி என்பதா
    நல்லவேளை நல்லவிதமாக ஈகோ ஏதும் இல்லாமல் பிழைத்ததால் போச்சு
    இல்லையே என்ன சொல்வது
    அருமையான பதிவினைத் தந்தமைக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. @லக்ஷ்மி,
    சரிதான். அம்மா. ஒருகெட்டவன் இருந்தால் ஒரு
    நல்லவரையும் படைப்பது தேவனின் வழக்கம்.
    அவர் சகலகலாவல்லவராகவும் இருப்பார்.பாஸிட்டிவ்
    அப்ரோச்தான்.
    நன்றி அம்மா

    ReplyDelete
  5. @காளிதாஸ் முருகையா,
    வருகைக்கு நன்றி சார் கதை ஆனந்த விகடன் ஆசிரி
    யராகநீண்ட காலம் இருந்தஅமரர் தேவனுடயது.பலவிதமான மனிதர்களைப் பற்றிய
    அவரது உருவாக்கம் என்னை மிகவும் கவர்ந்ததால் அவற்றில் சில பகுதிகளை இங்கே கொடுத்துள்ளேன்.
    உங்கள் தளத்தை நேற்றுதான் பார்த்தேன். அருமை
    யாககஃ கொடுத்துள்ளீர்கள். அடிக்கடி சந்திப்போம்

    ReplyDelete
  6. @ரமணி,
    நீங்கள் கவிஞர். கதை படிப்பதுண்டா?தேவன் கதைகள் படித்திருக்கிறீர்களா? அந்தக் கால கட்டத்தில் மிகவும் பிரபலமானவர்.நீண்ட காலம்,
    கலகிக்குப் பின் , விகடன் ஆசிரியராக இருந்தவர்.
    பலவிதமான மனிதர்கள் பற்றிய அவரது உருவாக்கம்
    எனக்கு மிகவும் பிடிக்கும் . எனவே இந்தப் பகுதிகள்.
    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சார்.

    ReplyDelete