Pages

Friday, January 6, 2012

தேவன்- மனிதரில் பலவிதம்--11

a

.

‘சந்தானம் அய்யங்கார் குடும்பத்தில் ஒவ்வொருவர் ஒவ்வொருமாதிரி இருக்கி
றார்களே? இவர்களில் யாரைத்திருப்தி செயதால் சிறிது காலமாவது இங்கே
தங்க முடியும்?. யாரை விரோதித்துக் கொண்டால் உடனே வேலை போகும்?
சந்தானம் அய்யங்கார் எப்படிப பட்டவர். குடும்பத்தை ஆட்டி வைப்பவர்
என்று தோன்றுகிறதே1இதே போல் அவனையும் ஆட்டி வைப்பாரா? இத்தனை
எஜமானர்களைச் சமாளிப்பது எப்படி? லகு என்று நினைத்து வந்த விஷயம்
சிக்கலாக அல்லவா இருக்கும் போலிருக்கிறது!


வேதாந்தத்தின் மனதை கவலை வந்து கப்பிக் கொண்டது. தலையை நிமிர்ந்த
போது, வாசற்படியண்டை நின்ற ஓர் ஆசாமியைக் கண்டான்.தோளில் அழுக்குச
சவுக்கம், இடையில் தூக்கிக் கட்டிய வேஷ்டி. எவ்வளவு நேரமாக நிறகிறானோ?


‘’மிஸ்டர்! நீர்தான் இவ்கே ட்யூஷனுக்கு வந்திருக்கிறதோ? என்று அலடசியமாக்கஃ கேட்டான்.

‘’ஆமாம்! நீங்கள் யார்?’’

‘’நான் இந்த வீட்டில் குக்—சமையல் டிபார்ட்மெண்டஃ-கீழே எல்லாருக்கும் இலை போடுகிற டைம் ஆகிவிட்டது.! சாப்பிட வருகிறதானால், சீக்கிரம் வந்து சேரும்! இந்த வீட்டு எஜமானருக்கு எப்போ எதறகுக் கோபம் வரும் என்று
சொல்வதறகில்லை.—‘’ என்றான்


வருமுன் எஊமானரின் கோபத்தைத் தூண்ட விரும்பாதவனாக, அப்படியே கடிதத்தை வைத்துப் பெட்டியை மூடிவிட்டு, ஸ்நானத்திறகு ஓடினான். திரும்பி மேலே வந்தபோது அவன் நெஞ்சம் பற்றி எறியச் செய்யும் காரியம் அங்கே
நடந்து கொண்டிருந்தது.


ராகவன் எனகிற பையன் அவன் கடித்ததை எடுத்து வைத்துக் கொண்டு, இரைந்து அபிநயங்களுடன் வார்த்தை வார்த்தையாகப் படித்துக் காணபிக்க,
சீனி, சம்பகா, ஜானகி பாபு, கண்ணன் ஆகியோர் குபீர் என்று சிரித்து ஆரவாரம்
செய்து கொண்டிருந்தார்கள்.!


சிறிது நேரம் வரையில் அறைக்கு வெளியே நெஞ்சம் துடிக்க, கை கால்கள்
பதற நிறபதை ராகவன் கவனிக்கவே இல்லை. இந்தக் காரியம் செயத்தற்கு
நியாயமாகத் தலா இரண்டு அடியாவது பளீர் பளீர் என்று கொடுத்தாக வேண்டும். அப்படிக் கொடுக்கும் நிலையில் அவன் இருந்தானா? அன்றுதான்
அங்கே வந்திருக்கிறான். சிஷ்யப் பிள்ளைகளுக்குப் பாடம் என்று இன்னும் ஒரு வார்த்தைகூடச் சொல்லித்தரவில்லை.அதறகுள் ‘சிக்ஷையில் இறங்குவதா? தவிர அவன் விதி, அந்த வீட்டிலேயே இருந்தாக வேண்டுமே!
சந்தானம் அய்யங்காரிடம் இதைப் புகாராகச் சொல்லலாமா? பலன் இருக்குமா?


வேதாந்தம் இப்படியெல்லாம் மனதைப் போட்டு உளைத்துக் கொண்டிதுந்த சமயம், ராகவனும் வேதாந்தத்தை மனக்கண்ணால் எடை போட்டுக் கொண்டுதானிருந்தான். இவன் என்ன செயது விடுகிறான் பார்த்துவிடுவது! என்று காத்திருந்தான். பாட்டனாரிடம் ராகவனுக்கு திகில் உண்டு. ஆனால்
பாட்டனார்வரை இந்த ஆசாமி போவானா? அத்தனை தெம்பு இருக்கிறதா?


‘’கொடேண்டா அவர் கடுதாசியை!’’ என்றான் சீனி. அவனுடைய எண்ணம் இந்த நிலை அதிகம் நீடித்தால், அவர்களுடைய கடசி பலவீனம் ஆகி விடும் என்பதே. தவிர, பிசகு ஒன்றும் செய்து.விடவில்லை என்பது மாதிரி ஒரு துணிச்சலாக நடித்தால் ஒரு வேளை தப்பித்துக் கொள்வதும் சாத்தியமாகலாம்
அல்லவா?


‘’என் பெட்டியைத் திறந்து எடுத்து இப்படி என் கடுதாசியை வாசிக்கலாமா?’’ என்று கேட்டான் வேதாந்தம்.

‘சார் நீங்கள் இரண்டு பிசகு செய்கிறீர்கள்!’’ என்றான் ராகவன்.

‘’நானா இப்போது பிசகு செய்துவிட்டேன்?’ என்று ஆச்சரியத்துடன் வினவினான் வேதாந்தம்.

‘’ஆமாம் சார்! முதலாவது உங்கள் பெட்டியை நான் திறக்கவில்லை. பிறத்தியார் பெட்டியை நான் ஏன் திறக்கணும்?? இந்தக் கடுதாசி கீழே கிடந்தது. அப்புறம் இதை ‘என் கடுதாசி’ என்கிறீர்கள். இதுவரை இது உங்கள் கடுதாசி என்று எனக்குத் தெரியாது. ஏதோ ஒரு கதை மாதிரி இருந்தது, படித்தேன்.!’’

‘’நான்கூடக் கதை என்றுதான் இதுவரை நினைத்தேன். உங்களைப் பார்த்தபிறகுதான், உங்களுடையதென்று தெரிகிறது!’’ என்று ஒத்துப் பாடினான் சீனி, போக்கிரிப் பையன்!


‘’நான் ஞாபகமாகப் பெட்டிக்குள்தானே வைத்துவிட்டுப் போனேன்!’’

எனக்கு அது சமாச்சாரம் தெரியாது, சார்! நான் இங்கே வந்தபோது அது கீழேதான் கிடந்தது—‘’

‘’ஏன் சார் வீண் வம்பு? உங்களுக்குச் சந்தேகமானால், இனிமேல் இது மாதிரிக் கடிதங்களைப் பூட்டியே வைத்துவிடுங்கள்! அவ்வளவுதானே?’’ என்றான் சீனி, இருவருக்கும் சமாதானமாக.

‘’இன்னொன்றும் சொல்லுவேன்நான்! இது மாதிரி லெட்டர்களை வீட்டில் எழுதாமல்கூட இருக்கலாம்! தாத்தாவுக்குத் தெரிந்தால் ஆபத்து’’ என்றான் ராகவன்.

‘’லெட்டரைக் கொடுத்துவிட்டுச் சாப்பிட வா! அதறகு இப்போ அப்பாவிடம் வசவு வாங்க வேண்டாம்!’’ என்று அழைத்தான் சீனி.

இரண்டு பேரும் கீழே போனார்கள். வேதாந்தம் தன் கடித்ததை எடுத்து மறுபடி
பெட்டிக்குள் வைத்து ஒரு நீண்ட பெருமூச்சுவிட்டான். இதற்கெல்லாம் அழுவதா சிரிப்பதா என்று அவனுக்குத் தெரியவில்லை. அவனை வாயடி அடிக்கும் இந்தப்பிள்ளைகள் எப்படி அவனிடம் பாடம் கேடகப் போகிறார்கள்? சந்தானம் அய்யங்காரை அவன் எப்படி திருப்தி செய்து வைக்கப் போகிறான்?


சமையல்காரக் குப்புசாமிவந்து, இலை போட்டாயிற்று என்றும், பெரியவர் காத்திருக்கிறார் என்றும் அழைத்தான். வேதாந்தம் சென்றபோது ‘டைனிங்’ ஹாலில் மாப்பிள்ளை சாரங்கன் உட்பட எல்லாரும் சாப்பாட்டிறகுத் தயாராக
உட்கார்ந்திருந்தார்கள். சீனியும் ராகவனும் கூட அடுத்தடுத்து, பரம சாதுக்கள் போல் இருந்தார்கள். பாபு, கண்ணன் இருவரில், கண்ணன் மட்டும் வேதாந்தம் வந்தவுடனே ‘களுக்’ கென்று சிரித்துத் தலையைக் கவிழ்த்துக் கொண்டான்.


‘ஏண்டா, இந்தப் பயலுக்குப் பள்ளிக் கூடத்தில் இப்படி யாராவது சிரிக்கச் சொல்லித் தருகிறானோடா?! கொஞ்சம் கூட நன்னாவே இல்லையே!நான்
நாலைந்து தடவை கவனித்துவிட்டேன்.!’’ என்றார் சந்தானம். கண்ணன்
தலையை நிமிரவே இல்லை.’’நிமிர் தலையை’’; என்று சாரங்கன் அதட்டவே கண்ணன் ஒருமுறை தலையைத் தூக்கிக் காட்டிவிட்டு,மறுபடியும் கவிழ்த்துக் கொண்டான்.

‘’ இந்தக் கெட்ட பழக்கமெல்லாம் வாத்யார்தான் பார்த்து விரட்டணும்.
என்ன வேதாந்தம்! வாத்யாருக்கே இது ஒரு பரிட்சை! என்றார் சந்தானம்.

(அமரர் தேவன்—மிஸ்டர் வேதாந்தம்)

4 comments:

 1. குழந்தைகளின் லூட்டியையும் பெரியவரின் கண்டிப்பையும் எப்படித்தான் சமாலிக்கப்போரானோ வேதாந்தம்

  ReplyDelete
 2. குழந்தைகளின் லூட்டி என்றால் இப்படியா?பெட்டியைத்திறந்து பிறர் கடித்தை எடுத்துப் படிக்கும்
  அளவுக்கு?அடாவடிதான்.இல்லாத கொடுமை இங்கு
  வந்து மாட்டிக் கொண்டான்.
  இப்படி இன்னொரு குடும்பத்தில் புதிதாகப்போய்
  மாட்டிக் கொள்வதை, புதிதாக்கஃ கல்யாணம் முடித்து
  பெரிய குடும்பத்தில் வந்து மாட்டிக் கொள்ளும் சின்னஞ் சிறிய பெண்ணின் நிலைக்கு ஒப்பிடலாமா?
  (உங்கள் நிலை வேறு--கணவன் வீட்டார் தெரிந்தவர்கள்தான் என்று கூறியிருக்கிறீர்கள்)நன்றி அம்மா

  ReplyDelete
 3. இல்லியே ராதாகிருஷ்னன் கனவன் வீட்டினர் அன்னியம்தான்.

  ReplyDelete
 4. இருந்தாலும், ஒரே ஊர்,தங்கள குடும்பத்திற்குத்தெரிந்தவர்கள் என்று நீங்கள் குறிப்பிட்டிருந்ததாக ஞாபகம். இல்லாவிட்டால்
  அப்படி தூரதேசத்திறகு செல்லும்படி கொடுப்பார்களா?நீங்கள் எப்படித்தான் மேனேஜ் பண்ணினீர்களோ?
  (அதுதான் விவரமாகப் பதிவிட்டுள்ளீர்களே)

  ReplyDelete