Pages

Saturday, October 15, 2011

அம்மா வந்தாள்(10)

ஒரு நாள் நான் அலுவலகத்திலிருந்து திரும்பியபோது ஒரு இளம் பெண்ணும் அவளுடைய கணவனும் என்னைப்பார்க்க வந்திருந்தார்கள்.

என் பெரியப்பாவின் (என்தந்தையின் அண்ணன்)பேத்தி என்று சொன்னாள்.அதற்கு முன் அவளை நான் பார்த்த்தில்லை.நான்

வடக்கேயே இருந்ததால் தெற்கிலிருந்த உறவினர்களுடன் அதிகத்தொடர்பு இருக்கவில்லை. ஆனால் அம்மாவுக்கு எல்லோரிடமும் நல்ல தொடர்பு இருந்த்து. எனக்கு அதில் அதிக ஆர்வமில்லை என்று எப்பவும் குறைபடுவாள். அந்த பெரியப்பாவுக்கு ஆறு பெண்கள்.பெரியப்பா வசதிஉள்ளவர் ஆனால் பழமைவாதி.யாரையும் அதிகம் படிக்க வைக்கவில்லை.தனக்குப் பிறந்த்து எல்லாம் பெண்கள் என்று பெரியம்மாவுக்கு பெரிய குறையாக இருந்தது என்பது எனக்குத் தெரியும். கடைசி பெண்ணின் பெயர் பாப்பா.

பெயருக்குத்தகுந்தாற்போல் எதும் அறியாப் பேதையாக இருப்பாள்.படிப்பும் ஏறவில்லை. பிறக்கும் போது பாத்த்தில் குறை.

(club foot). மிகச்செல்லமாக வளர்த்தார்கள்.அவளுக்குப் பதினாறு வயதான சமயத்தில் பெரியப்பாவுக்குப் புற்று நோய் வந்த்து.அதனால்

பயந்து அவசரமாக நிறைய செலவழித்து பாப்பாவுக்குத் திருமணம் செய்து வைத்து விட்டார்.சாதுவான பாப்பா, கணவன் மாமியாரிடம்

பட்ட கஷ்டத்தைப்பற்றி அம்மா என்னிடம் நிறைய சொல்லியிருக்கிறாள். என் எதிரில் உட்கார்ந்திருந்த அழகிய,சூட்டிகையான பெண்தான் பாப்பாவின் மூத்த மகள் என்றாள்

தன் தங்கையின் திருமணத்திற்கு என்னை அழைக்க வந்திருப்பதாகச்

சொன்னாள். ‘’பாப்பா எப்படி இருக்கா?’’ என்றேன் நான் தயக்கத்துடன்

‘’ரொம்ப நன்னாயிருக்கா’’ என்றாள் அவள் உற்சாகத்துடன். ‘’நீங்க

கண்டிப்பா வீட்டுக்கு வரணும். ரெண்டு வருஷம் முந்தி 22 லட்சத்துப்க்கு(10வருஷங்களுக்குமுன்) அடையாரிலே flat வாங்கி அப்பாவும்,அம்மாவும் அங்க இருக்கா’’ என்று விலாசம் கொடுத்தாள்.

எனக்கு வியப்பாக இருந்த்து.திருவல்லிக்கேணியில் ஒரு சின்ன ஒண்டுக் குடுத்தனத்தில் பாப்பாவைப் பார்த்த நினைவு எனக்கு. ‘’எல்லாத்துக்கும் மாதங்கிதான்(இரண்டாவது மகள்)காரணம்’’.என்றாள்

அந்தப்பெண் மாதங்கி பொறியியல் பட்டம் பெற்று சென்னையில் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை பார்த்தபோது நிறுவனம் அவளை அமரிக்

காவுக்கு அனுப்பியது. அங்கு பயிற்சி முடிந்ததும் அமெரிக்க நிறுவனம் ஒன்று அவளுடைய திறமையைக்கண்டு அவளுக்குப் பெரிய வேலை கொடுத்து அமர்த்திக்கொண்டது. தனது சம்பளப்பணத்தின் பெரும் பகுதிதியைப் பெற்றோருக்கு அனுப்பி வந்த்தில் வீடு,நகைநட்டும்

வாங்க முடிந்தது. இப்போது அமெரிக்காவில் அவளுடன் வேலை

பார்த்த ஒரு தமிழ் இளஞனை இங்கு சென்னையில் திருமணம்

செய்து கொள்கிறாள். அவள் சொல்லச் சொல்ல ஏதோ சினிமா கதை

போல இருந்த்து..

மறு நாள் திருமண வரவேற்புக்குச் சென்ற போது கேட்ட செய்தி

ஊர்ஜிதமானது.பாப்பா இன்னும் வெகுளியாகத்தான் இருந்தாள்.ஆனால்

பொன்னும் பட்டாடையுமாகப் புதிய பொலிவுடன் தென்பட்டாள்.பாப்பாவின் கணவர் கம்பீரமாக வளைய வந்தார். அழகும்

புத்திசாலித்தனமும் கொண்ட மாதங்கி அமெரிக்க உச்சரிப்பில் ஆங்கிலம் பேசி என்னைத் தன் கணவனுக்கு அறிமுகப்படுத்தினாள்.

பாப்பாவின் வாழ்வில் ஏற்றட்டுவிட்ட மாற்றத்தை நினைத்து நான்

உணர்ச்சிவசப்பட்டுப் போனேன்.பெரியம்மா பாப்பா பெண்ணாகப் பிறந்து

தொலைத்தாளே என்று அலுத்துக்கொண்டது நினைவுக்கு வந்தது.

பாப்பாவுக்கு அவள் வயிற்றில் பிறந்த மகளால் ஜென்ம சாபல்யம்

கிடைக்கும் என்று பெரியம்மா நிச்சயம் நினைத்திருக்க மாட்டாள். மாதங்கியின் சாதனையை அம்மா அறிந்தால் எத்தனை சந்தோஷப்

படுவாள் என்று நினைத்து எனக்கு துக்கமாக இருந்த்து.வீடு திரும்பியதும் என் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளக்கூட இயலாமல்

வெற்றுப் பார்வை பார்த்தபடி. படுத்திருந்த அம்மாவின் கைகளைப்

பிடித்துக்கொண்டு கண்ணீர் வடித்தேன். தன் வாழ்நாளிலேயை நடந்திருந்த ஓர் அற்புத மாற்றத்தை உணர்ந்து கொள்ளாமல் என்

அம்மாவின் ஆயுள் முடிந்துபோனது ஒரு சோகம்....

3 comments:

 1. தொடர் ரொம்ப நல்லா சுவாரசியமா போயிண்டு இருக்கு. ராதாகிருஷ்னன நீங்களும் நிறைய பதிவுகள் பக்கம் போயி படித்து பின்னூட்டம் போடுங்க உங்கபக்கமும் நிறைய பேரு படிக்க வர்வாங்க.

  ReplyDelete
 2. நன்றி,அம்மா.தொடர் முடிந்துவிட்டது.சகோதரி
  வாசந்தி பிரபல இந்தியா டு டே வார இதழ் தமிழ்
  பதிப்பில் 8ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியவர்
  அந்தசமயத்தில்தான் தனியாக தன்நோயுற்றதாயை
  இறுதிக்காலத்தில் கவனித்துக்கொண்டார் ,தன் வயதான கணவரின் சொல்லையும் மீறி.எவ்வளவு
  மனதிடம் பாருங்கள்.நம்குடும்பங்களில்முதிய
  வர்களின் நிலை குறித்து பெரிதும் உண்மை
  கலந்த கதைகள் எழுதியள்ளார் எழுத்தில் மட்டுமல்ல,செயலிலும் அதை செயல்படுத்தியவர்
  என்பதால்இவர் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்

  ReplyDelete
 3. வாசந்தி கதைகள் நானும் படிச்சிருக்கேன் . யதார்த்தமா இருக்கும்

  ReplyDelete