Pages

Sunday, October 30, 2011

பகுத்தறிவிற்கு சவால்(5)

‘’இதப்பார், எனக்கு ஜோஸ்யம் தெரியாது. அதில் நம்பிக்கை

கூட எனக்கு இல்லே. மனோத்த்துவமும் எனக்கு வராது.

நீ அநாவசியமான கற்பனையில் இருக்க்க் கூடாது.’’என்றேன்.

‘’உங்களுக்கு எப்பவாவது கடிதம் போடுகிறேன்

மேடம்’’ என்றுவிட்டு அவன் கிளம்பிச் சென்றான். ஆனால்

அதற்குப் பிறகு அவனிடமிருந்து ஒரு தகவலும் இல்லை.

அவன் என் வாழ்விலிருந்து மறைந்து போனான். அவன்

கதை மட்டும் ஆழப் புதைந்து போயிற்று. அடுத்த பத்து

ஆண்டுகளில் பல முறை அதைக் கருவாக வைத்து ஒரு

நாவல் எழுத வேண்டும் என்ற அரிப்பைக் கட்டுப் படுத்திக்

கொண்டேன்,. அவனிடமிருந்து அநுமதிவாங்க முடியாமையால்.

நான் ‘’இந்தியா டுடே’’ தமிழ்ப் பதிப்பிற்கு ஆசிரியையாகப்

பணியாற்ற சென்னை வந்த பிறகு, தில்லி தலைமைஆசிரியர்

என்னை ஒரு தொடர் நாவல் எழுதும்படி சொன்னார். என்

மனதில் மகாதேவன் கதை மட்டுமே பிடிவாதமாக அமர்ந்திருந்த்து. அவன் எங்கே இருக்கிறான் என்று தெரியவில்லை என்றாலும் நான் அதை எழுதவேண்டும் என்ற

எண்ணத்தினால்தான் அந்தக் கதையை அவன் சொல்லியிருக்க வேண்டும் என்ற சமாதானத்துடன் அதற்கு இரண்டு டிராஃப்ட்

எழுதித் திருத்தியபிறகு ‘’குற்றவாளி’’என்ற தலைப்பிட்ட நாவல்

வாராவாரம் வர ஆரம்பித்த்து. அதில் மகாதேவன், மாதவன்-மாது

என்ற முக்கிய பாத்திரமானான். அவன் அஸ்ஸாமில் கௌஹாத்

தியில் இருப்பதாக நான் எழுதியது எந்தப் பிரத்யேகக் காரணத்திற்கும் அல்ல. நான் அந்தப் பகுதிகளில் வசித்திருந்த

தால், பிரம்ம்புத்திரா ந்தியைப் பற்றியும் அஸ்ஸாம் பின்புலத்தை

யும் சேர்ப்பது வசீகரமாக இருக்கும் என்று நினைத்தேன். அவன்

மூன்றாவது அத்தியாயத்தில் வருவான். ஜந்தாம் அத்தியாயம்

வெளியாகியிருந்த்து. அலுவலக விலாசத்திற்கு எனக்கு ஒரு

இன்லாண்டு கடிதம் வந்த்து. பின்னால் மகாதேவன்,அஸ்ஸாம்

என்று விலாசம் இருந்த்து.

2 comments:

  1. இது எப்படி சாத்யம் இல்லியா உள் உணர்வுகள் தான் உள்ளது உள்ளபடி எழுத்தில் வெளி வரது.

    ReplyDelete
  2. அபூர்வமான உள்ளுணர்வாக உள்ளது. வருகைக்கு
    நன்றி அம்மா.

    ReplyDelete