Pages

Tuesday, October 11, 2011

அம்மா வந்தாள்(5)

வெளி ஊருக்குப் பணிப்பெண்களை சென்னையிலிருந்து

அனுப்பும் ஏஜென்ஸியைத்தொடர்பு கொண்டபோது

அதிர்ஷ்ட்ட வசமாக உடனடியாக ஒரு பெண் இருப்பதாகத்

தகவல் வந்தது.அலுவலக வேலையைப் பாதியில் விட்டு

அங்குசென்று அந்தப்பெண்ணை நேர்முகப்பேட்டிகண்டு

அடுத்த ரயிலில் அவளை தில்லிக்கு அனுப்ப ஏற்பாடு செய்து

அலுவலகம் திரும்பி தலைமைஅலுவலகத்திற்குத் தெரிவித்து

மறுநாள் காலை விமானத்தைப்பிடித்து தில்லி சென்றேன்.

அதற்குள் சேகர் தான் மும்பை வந்துவிட்டதாகவும் இரண்டு மூன்றுநாட்களில் துபாய் திரும்ப வேண்டியிருப்பதால் அம்மாவை

சென்னைக்கு அழைத்துச்செல்ல எல்லா ஏற்பாடும் நான்

செய்துவிட்ட சமயத்தில் நீ ஏன் தில்லிக்குப்போனாய் என்று

கடுகடுத்தான்.வேலைபார்க்கும்பெண்களுக்கு ஏற்படக்கூடிய

நெருக்கடிகளையும் அவர்களுக்கு இருக்கும் நிர்பந்தங்களையும்

கூடப்பிறந்தவர்களாக இருந்தாலும் ஆண்களால் புரிந்துகொள்ள துடியாது என்பதை நான் என் அன்னையைப்பார்த்துக்கொண்ட

அவரது கடைசி இரண்டு ஆண்டுகளில் உணர்ந்து கொண்டேன்.

தில்லிக்கு வந்துசேர்ந்த பணிப்பெண்ணுக்கு எங்கள் வீட்டுச்சமையல் மற்றும் மற்ற வேலைகளை எடுத்துச்சொல்லிவிட்டு நான் சன்னைக்குப்புறப்பட்டபோது

அம்மாவைப்பாரத்துக்கொள்ள எனக்கு இன்னும் ஆள் கிடைக்கவில்லை என்பத் பெரிய கவலையாக இருந்த்து.

என் தம்பிக்கு துபாய் திரும்ப வேண்டியிருந்த்தால் சென்னைக்குக்கிளம்பிவிட்டான். அதற்கு முந்தைய இரவுதான்

நான் சென்னைக்கு தில்லியிலிருந்து கிளம்புகிறேன்..அன்று

தில்லியிலிருந்து கிளம்பும் விமானத்தில் ஏதோ கோளாறு.மாலை

கிளம்ப வேண்டியது நடு இரவு தாண்டி ஒன்றரை மணிக்குக்

கிளம்பிற்று.. நான் சென்னைக்கு விடியற்காலை நான்கு மணிக்கு

வந்துசேர்ந்தேன்.

(இன்னும் வரும்)

2 comments:

  1. கதையை? தொடர்ந்து படிப்பதால் சுவாரசியமா இருக்கு.

    ReplyDelete
  2. நன்றி அம்மா.இது கதையில்லை.உங்களது போன்ற
    உண்மை அனுபவம்.

    ReplyDelete