Pages

Friday, October 14, 2011

அம்மா வந்மாள்(9)

ஷீலாவுக்குப் படித்துக்காண்பிக்கிறேன் என்று தினமணியை உரத்துப் படிப்பாள். பிறகுதான் கவனித்தேன் அவளாக இட்டுக்கட்டி செய்தி சொல்கிறாள் என்பதை. அலுவலகத்திலிருந்து

ஷீலாவுக்கு

இடையிடையில் போன் செய்து விசாரிப்பேன். வியாதி என்னவென்று சொன்ன டாக்டர் அதற்கு மருந்தேஇல்லை

என்றும் மிகப்பிரியமாக,பொறுமையாகப் பார்த்துக் கொள்வது

ஒன்றே ஔஷதம் என்றும்சொன்னார். நல்ல வேளையாக எனக்குப் பொறுமை இருந்த்து. அம்மா என்னுடைய கைக்குழந்தை போலத்

தோன்றினாள். கனிவு மிகுந்த பிரியம் சுரந்த்து. சென்னைக்கு வந்ததில் அம்மா மகிழ்ச்சியாக இருப்பதாகத்தான் தோன்றியது.

ஆனால் அம்மாவைப்பார்த்துக்கொள்வது சுலபமாக இருக்க வில்லை. நிலைகொள்ளாத ஒரு தவிப்பு அவளிடம் தென்பட்டது.

விருக்கென்று எழுந்து நடப்பாள்.வேகவேகமாக எங்கோ ஓடுவாள்.

தடுமாறி விழுவாள்.படுக்கையை நனைப்பதும் ஆரம்பித்த்து.

ஞாபகசக்தி வெகுவாக்க்குறைந்து வந்த்து...என்னைக்கண்டதும்

பளீரென்று புன்னகைப்பவள் முகத்தில் புன்னகைகூட மெதுவாக

மறைய ஆரம்பித்த்து.என் கண்ணெதிரிலேயே அவளுடைய நிலை

நாளுக்குநாள் சீரழிவதை ,மூளைஇயக்கம் குன்றிவருவதைத்

தடுக்க இயலாமல் நான் பரிதவிப்புடன் கவனித்து வத்தேன்.

நான் முன்பு எழுதியஒரு கதையேநிஜ வாழ்வில் அரங்கேறி வருவது பீதியையும் துயரத்தையும் அளித்த்து.

ஷீலா மிக நல்ல பெண்ணாக அம்மாவிடம்

மிகுந்த பிரியத்துடன் நடந்து பொறுப்புடன் கவனித்துக்கொண்டது,

அம்மாவும் நானும் செய்த அதிர்ஷ்டமாகத் தோன்றியது.

அம்மா அப்படி இருந்தபோது வேலை நிமித்தமாக எனக்கு டூரும்

போக வேண்டியிருந்த்து.எழுத்து வேலைக்கும் ஓய்வு இல்லை.

இலக்கிய மலர்கள் தயாரிக்கப்பட்டன. நேர்காணல்கள்,அரசியல்

கட்டுரைகள்ஃ வாரந்தோரும் சிந்திக்க ஒரு நொடிபத்தி,அத்துடன்

அலுவலகத்தை ஒழுங்காக நடத்திச்செல்ல வேண்டிய பொருப்பு

எல்லாவற்றையும் குறைவில்லாமல் எப்படிச் செய்ய முடிந்தது

என்று இப்போது நினைத்தால் மலைப்பாக இருக்கிறது.அம்மாவின்

பேச்சு நின்றது.என்னையே அடையாளம் தெரியாமல் போனது.படுத்த படுக்கையாகிப் போனாள்.அம்மாவுடன் பேச மடிய

வில்லே என்பது எனக்கு பெரிய இழப்பாகத்தோன்றியது.

(இன்னும் வரும்)

2 comments:

 1. கண்முன்னாடியே அம்மாவின் வேதனை பார்க்க மனசு எவ்வளவு கஷ்ட்டமாஇருக்கும்?

  ReplyDelete
 2. அம்மா,
  இதை நீங்கள் 12வருடங்கள் அனுபவித்தீர்கள்.நான்
  3வருடங்களுக்கு மேல் அனுபவித்தேன்.கடவுள்
  கிருபையால் ஞாபகம் போகாததால் நமக்கு ஓரளவு
  பரவாயில்லை.ஆனால் சகோதரி வாசந்தியின்
  நிலை?தான் மிக அன்பாகபணிவிடை செய்து வரும்
  தாயாருக்கு தன்னை ஞாபகம்கூட இல்லை என்ற
  நிலை யாருக்கும் வரக்கூடாது.என் அம்மாவுக்கே
  இருமுறை எதிரே யாராரோ இருப்பது போலத் தோன்ற ஆரம்பித்து ஏதேதோ புலம்ப ஆரம்பித்தார்கள்.நான் வலிமையான தூக்க மாத்தி
  ரை கொடுத்து தூங்க வைக்க வேண்டியதாயிற்று.
  வருகைக்கு நன்றி அம்மா.

  ReplyDelete