Pages

Friday, October 21, 2011

பகுத்தறிவுக்கு சவால்

பகுத்தறிவு என்பது எதையும் தீர்க்கமாக ஆராய்ந்து

ஒருச்சார்புக்கு இடங்கொடாது, விஷயங்களைப் பகுத்து

ஆய்ந்து,முடிவு செய்யும் தன்மை ஆகும்.. ஆனால்

வாழ்க்கையில் அவ்வப்போது நடக்கும் சில நிகழ்வுகள்

எந்த ஆய்வுக்கும் கட்டுப்படாது,’’,பகுத்தறிவு’’ என்பதற்குப்

புறம்பாக,நேர் எதிரிடையாக நடைபெற்றால் அதை எவ்வாறு

எடுத்துக்கொள்வது?’’நம்பினால் நம்புங்கள்’’ (believe it or not)

என்பது போல் நடக்கும் நிகழ்ச்சிகள் சிலர் வாழ்வில்

தொடர்ந்து நடை மெறுகின்றன. இது பற்றி தன் சொந்த

அநுபவங்களை எனது அபிமான எழுத்தாளர் வாசந்தி

விவரிக்கிறார்.(நன்றி**நினைவில் படிந்த சுவடுகள்காலச்

சுவடு பதிப்பகம்)

தில்லியில் நான் வசித்த நாட்களில் ஒரு மதியம் தொலை

பேசியில் எனக்கு ஓர் அழைப்பு வந்த்து..’’என் பெயர் மஹாதேவன்’’

என்றது குரல். ஓர் இளைஞனின் குரல்.’’நான் தமிழ் நாட்டிலிருந்து

ஒரு அலுவல் நிமித்தம் தில்லி வந்திருக்கிறேன். நான் உங்கள் வாசகன்

உங்களைச் சந்திக்க ஆவலாயிருக்கிறேன். வரலாமா?’’

‘’ஓ,வரலாமே !’’ என்றேன் நான். ஆர்வத்துடன். நான் உங்கள் வாசகன்,உங்கள் வாசகி என்று யார் வந்து சொன்னாலும் அதை விட

மகிழ்ச்சியளிக்கும் வாசகம் ஓர் எழுத்தாளருக்கு இருக்க முடியாது என்றே

நினைக்கிறேன்.எழுத்து என்பது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதற்கே.

எழுத்தாளர் சொல்ல நினைப்பது படிப்பவரால் சரியாககஃ கிரகித்துக் கொள்

ளப் படுகிறதா என்பது வேறு விஷயம்.பேசுவதைக் கேட்க ஆள் இல்லாமல்

போனால் பேசுவதில் அர்த்தமில்லாதது போல், எழுதுவதை யாரும் படிப்ப

தற்கு இல்லை என்று ஆகிப்போனால் அதைவிட மனச்சோர்வைத் தரும்

விஷயம் எழுத்தாளருக்கு இருக்க முடியாது. தமிழ்நாட்டிற்கு வெளியில்

வாழ்ந்தபடி எழுதிவந்த நிலையில்,எனக்குத் தமிழோசையைக் கேட்டாலே

சிலிர்த்துப் போகும். எனது வாசகன் அல்லது வாசகி என்று சொல்லிக்கொண்டு

என்னைத் தேடி வருபவத்களைச் சந்திக்க ஆவலுடன் இருப்பேன்.

அந்த இளைஞன்,மஹாதேவன் குறித்த நேரத்திற்கு வந்தான்.

கதவைத் திறந்த்தும் ஒரு பிரம்மாண்ட மயிலிறகுவிசிறியை என்னிடம்

நீட்டினான். தில்லி செங்கோட்டையில் வாங்கியிருப்பான் என்று புரிந்த்து.

‘’நான் உங்களுக்கு என்ன கொடுத்தால் பொருத்தமாக இருக்கும் என்று

தெரியவில்லை மேடம் !’’ என்று தயக்கத்துடன் சொன்னான். எனக்குச்

சிரிப்பு வந்த்து.அவனது அன்பு நெகிழ்ச்சியை அளித்த்து. (இன்னும் வரும்)

2 comments:

  1. ஒரு எழுத்தாளரின் மன நிலையை அழகாகச்சொல்லி இருக்கும் பதிவு.

    ReplyDelete
  2. நீங்கள் கூறுவது சரிதான்.ஆனால் அவருக்கு
    தமிழ்நாட்டில் ஏற்பட்ட சில கசப்பான அநுபவங்களால்
    தற்போது யாரையும் நேரில் சந்திக்கவோ,கடிதம்
    மூலம் தொடர்பு கொள்ளவோ அவர் விரும்புவதில்லை எனத் தெரிகிறது. வருகைக்கும்
    கருத்துக்கும் நன்றி,அம்மா.

    ReplyDelete