Pages

Monday, November 28, 2011

வயதானோர் அதிகரிக்கும் அபாயம்-3

யாரு?என்ன?பத்மாவா?ஜய்ய்ய்யோ, எப்போ? என்ன மாப்பிள்ளை இது

பெரிய இடியாப் போடரேள்?’’

அடி வயிற்றில் திக்கென்றது. நாகுப்பாட்டி பீதியுடன் பார்வதியை நிமிர்ந்து

பார்த்து அலங்க மங்க விழித்தாள்.

பார்வதி சரேலென்று அறையை விட்டு கூடத்திற்கு விரைந்தாள் ‘

என்னடி ? என்ன சமாச்சாம்?’’

காமு’’’’ வென்று ஓலமிட்டது கேட்டது.

நாகுப்பாட்டிக்கு கையும் காலும் வெலவெலத்துப் போயிற்று.

யாரு இப்ப?

’’’பத்மா இன்னிக்குக் காலமே ஷாக் அடிச்சு செத்துப் போயிட்டாளாம்மா!

ஜய்யயஃயோ! அடிப்பாவி!’’

அது என்ன அலறல்! அது என்ன ஓலம், லோகத்து துக்கமெல்லாம்

பிரளயமாப் பொங்கினாப்பலே!

நாகுப்பாட்டிக்கு துக்கத்திற்கு மேல் பீதியேற்பட்டது. இலையின் முன்

சோற்றைப் பிசையும் குத்துக் கல்லாயத் தான் உடகார்ந்திருப்பது ஏதோ

குற்றம் செய்தாற்போல் உடம்பு நடுங்கிக் கூசிற்று. மூளை மரத்து செயலிழந்து

நின்றது, வரப் போகிற தாக்குதலை எதிர்பார்த்து—

பத்திரகாளி ஸ்வரூபமாய் ஆவேசத்துடன் பார்வதி உள்ளே நுழைந்தாள்.

நாகுப்பாட்டிக்கு நெஞ்சு உறைந்து போயிற்று. சுப்புணி செத்தும், ரமேஷ்

செத்தும் ஞாபகத்துக்கு வந்த்து.

என்னை விட்டுட்றி---- என்னை----‘

பார்வதி கிடுகிடுவென்று அடுப்படிக்குச் சென்று வெண்கலப்பானையை

எடுத்து,

’’இந்தாங்கோ, கொட்டிக்கோங்கோ! என்று கர்ஜித்தபடி தலைகீழாய் நாகுப்

பாட்டியின் இலையில் பானையைக் கவிழ்த்தாள். சூடான அன்னப் பருக்கைகள்

பாட்டியின் புறங்கையில் சுறீர் என்று தெரித்தன. பாட்டி விடுக்கென்று பின்னுக்கு நகர்ந்தாள்.

விக்கித்துப் போய் பயந்த நிலையில் நா உலர்ந்து. அந்த வெண்கலப் பானையையும் ஆவி க்கஃகும் மலை போல இருந்த அன்னக் குவியலையும் மார்த்து விழித்தாள்.

எல்லாரையும் வாரி வாரி அனுப்பத்தானே இப்படி ஆணி அறைஞ்சாப்பலே

உட்கார்ந்திருக்கே.!. இன்னும் எத்தனை நாள் உனக்குக் கொட்டிக்கணும்.? உன்னை அந்த சண்டாளப்பாவி எமன் தூக்கிண்டு போக மாட்டேங்கறானே.

பிஞ்சையும் ,மொட்டையும் பறிச்சிண்டு போறானே1’’

பார்வதியின் வார்த்தைகள் எதுவும் நாகுப்பாட்டியின் செவியில் விழவில்லை.

அந்த ரௌத்திரமும் வெறுப்பும், கொலைவேறியும் மொத்த உருக்கொண்டு

விசுவரூபமாய் பயமுறுத்திற்று.

பேத்தி செத்த துக்கத்தைவிட இவளுக்கு எம்மேல் இருக்கிற வெறுப்புத்தான்

ஜாஸ்தி. அடுத்தாப்பலே அந்த அரிவாமணையை எடுத்து என் மண்டையிலே

போட்டாலும் போட்டுடுவே., போட்டுட்றீ, அப்படியாவது நான் ஒழிஞ்சு போறேன்.

வாசற்கதவை யாரோ பலமாகத் தட்டினார்கள் பார்வதி க்ரோத்தஃதுடன்

பாட்டியைப் பார்த்துவிட்டு ,

‘’பத்மா போயிட்டாளாம்! தளதளன்னு இருந்த இருபத்தினாலு வயசுக் குழந்தை’’ என்றாள் அடிக்குரலில்.

‘’மனசு குளிர்ந்த்தோ இல்லையோ? எல்லாத்தையும் கொட்டிக்கோ, ஒரு பருக்கை விடாமே!’’ என்று தொடர்ந்து உறுமிவிட்டு வெளியேறினாள்

திகைப்புடன் நாகுப்பாட்டி இலையைப் பார்த்தாள். நன்றாகச் சாப்பிடக் கூடியவர்கள் மூன்று பேர்கள் சாப்பிடலாம். இன்னும் ஆவி பொங்கிக் கொண்டி

ருந்த்து. இலையில் ஓரமெல்லாம் சூட்டில் பழுப்பாகப் போயிருந்தது. அதைப்

பார்க்கப் பார்க்க இனம் புரியாத அதிர் வலைகள் உடல் முழுவதும் பரவி நடுங்கின.

‘’என்னடி பண்ணுவேன் இதை? எச்சக்கலையிலே இத்தனை அன்னத்தைக்

கொட்டியிருக்கிறே.... உங்க மாமனார் இருந்தார்னா இத்தனை தைரியம்

வந்திருக்குமா உனக்கு?

‘’சிவசிவா, அவர் போயிட்டதே நல்லது. இதையெல்லாம் தாங்கிக்க நா ஒருத்தி

இருக்கறது போறாதா?’’

‘’இப்ப இதை என்ன பண்றது?’’ கூடத்திலிருந்து காமுவின் ஒப்பாரி கேட்டது.

வெண்கலப்பானை இன்னும் சுட்டது அதை சிரம்பஃ பட்டு பாட்டி நிமிர்த்தினாள்.

கொஞ்சம் கொஞ்சமாய் சோற்றுப் பருக்கைகளை அதில் போட்டாள். கை

அசந்து போயிற்று.’’ எத்தனை பேருக்கு சாப்பாடு போட்டிருப்பேன்.! ஏண்டி, இப்படி அன்னத்தை வீணாக்குவது அடுக்குமா’’ என்று முணுமணுத்துக் கொண்டாள். ஒரு வழியாக அதை நிரப்பியதும் பாட்டி எழுந்திருந்தாள். கம்பை

பிடித்துக் கொண்டு நடக்கையில் மிகவும் தள்ளாமையாக இருந்த்து.. உடம்பு கனத்து பெரிய பாரத்தை இழுப்பது போல் இருந்த்து. கொல்லைக் குழாயில் கை கழுவி, வாயைக் கொப்பளித்துவிட்டு கூடத்துப் பக்கம் செல்ல பாட்டி தயங்கி நின்றாள். அந்தக் குழந்தை காமுவை சமாதானப் படுத்த வேண்டாமோ

பாட்டி வேறு யோசனையில்லாமல் கூடத்துக்குள் காலடி வைத்தாள். கூடம்

நிரம்பிப் போயிருந்த்து. அதுக்குள் தெருப் பொம்மனாட்டிகள்ளாம் வந்துட்டாளா என்ன?’’

பாட்டியின் பார்வையில் யாரும் படவில்லை. புடவைத் தலைப்பால் முகத்தை மூடிக் கொண்டு மற்ற பெண்களின் பிடிக்கு அடங்காமல் புலம்பி

அழுதுகொண்டிருந்த காமுவை நோக்கி மெல்ல நடந்து அவளெதிரில் லேசாககஃ குனிந்து மெல்லிய நடுங்கும் குரலில் ‘’அம்மா, காமு, என்னடி

குழந்தே, இது அநியாயம்?’’ என்றாள்.

காமு , முகத்திலிருந்த கையை விலக்கி சுரீரென்று பாட்டியைப் பார்த்தாள்.

துக்கத்தோட க்ரோதமும்னா தெரியறது பார்வையிலே! இவ பார்வதியா, காமுவா??

ரத்த அணுக்கள் எல்லாம் உறைந்து போயிற்று நாகுப்பாட்டிக்கு.

குபீரென்று காமு பாய்ந்து எழுந்தாள். ‘’அம்மா சொல்ரது சரிதான். நம்மளைப்

பாவியாக்குறவ இந்தக் கிழவி! இவ ஒரு சூனியக்காரி.! வீட்டிலே இருக்கிற அத்தனை பேரையும் அனுப்பிச்சுட்டுத்தான் இவ நகரப் போறா இங்கேந்து!’’

காமுவா? காமுவா இப்படிப் பேசறா? நாகுப்பாட்டிக்குக் குலை நடுங்கிற்று.

சுற்றிலும் இருந்தவர்கள் எல்லார் பார்வையும் குற்றம் சாட்டுகிறார் போல்

இருந்த்து.

என்னடி பண்ண்டஃடும்?’’ என்றாள் பலவீனமாக,’’என்னைக் கொண்டு போக

மாட்டேங்கறானே?’’

எப்படிப் போவான்?’’ என்று பார்வதி சீறினாள்.’’ இரும்புன்னா உன் மனசு, ராஜா

மாதிரி இருந்த பிள்ளை போயி, மாப்பிள்ளை போயி , பின்னாலே பொண்ணு,பேரன்,-பேத்தி இப்பக் பொள்ளுப் பேத்தி எல்லோரும் கிளம்பிப்

போறதை ஜெரிச்சிண்டு நீ உட்கார்ந்திருக்கியே, நீ மனுஷிதானா?’’

அவள் சொல்வதையெல்லாம் அங்கீகரிப்பதைப் போல ஒரு மௌனம் அங்கே

பரவியிருந்த்து.

‘’நா என்னடி பண்ண்டஃடும்?’’ என்று பார்வதி பழித்துக் காட்டினாள்.

‘’போ, குளத்திலேயோ குட்டையிலேயோ விழு.’’

‘’என்ன மாமி நீங்க! இது கண்றாவி துக்கம் தான், ஆனா கிழவி என்ன பண்ணுவா, பாவம்?’’

உனக்குத் தெரியாது சரோஜா, என் வயிறு எரியறது! என்று பார்வதி அழுகையுடன் வெடித்தாள். ‘’பொசுக்கு பொசுக்குன்னு ஒவ்வொருத்தரா போறதும், பழி வாங்கற மாதிரி இந்தக் கிழம் உட்கார்ந்திருக்கிறதும்’’.

பக பகவென்று பார்வதியிடமிருந்து அழுகை வெடித்த்து.

‘’பாட்டி, நீங்க உள்ளே போங்கோ!’’ என்றாள் எவளோ ஒருத்தி சமயாசிதமாக.

நாகுப்பாட்டி தலையைக் குனிந்தபடி நகர்ந்தாள். தன் அறை வந்த்தும் மௌனமாக நார்மடி விரிப்பு விரித்திருந்த தன் இடத்தில் அமர்ந்தாள்.

காமுவின் எப்பவும் குளிர்ந்த முகம் விகாரமாகிப்போன விந்தையும் வார்த்தை

களும் நினைவில் நின்று குழப்பின.

நீயும், வேண்டாண்டி, விட்டுட்றீ’’---

நாகுப்பாட்டி மெல்ல எழுந்தாள். பின் பக்கமாக ஓசைப் படாமல் சுவரைப் பிடித்தபடி நடந்து சமயல் அறையை அடந்தாள். இன்னும் அவளுடைய

எச்சில் இலையும், வெண்கலப் பானையும் அப்படியே இருந்தன. பாட்டி

நிதானமாக அமர்ந்து அன்னத்தை வாயில் திணிக்க ஆரம்பித்தாள்.---

கொல்லைப்பக்கம் வந்த சரோஜா அரக்கப் பரக்க கூடத்திற்கு ஓடினாள்.

‘’ஜய்ய்யஃயோ மாமி, அந்தக் கிழவிக்கு மூளை கலங்கித்தான் போச்சு.!

இழவு வீடுன்னு தெரியும். வெங்கலப் பானையோடு எடுத்து இலையிலே

வெச்சுண்டு சோத்தை அள்ளி அள்ளிப் போட்டுக்கறா, சமயற்கட்டிலே

உட்கார்ந்திண்டு---!’’

‘’இது என்ன கண்றாவி?’’

சாதாரண மனுஷி இல்லைடி அவ!

நூறு வயசுக்கிழவி எப்படி வெண்கலப் பானையைத் தூக்கினா?’’

அதான் பாரேன் அதிசயத்தை!’’

பார்வதி விருக்கென்று ஆங்காரத்துடன் எழுந்தாள்.

‘’இன்னிக்கு விடப்போரதில்லே! என் பிராணனை எடுக்கத்தான் இருக்கு கிழம்-

அவளைத் தொடர்ந்து மற்ற கெண்டளும் வேடிக்கை பார்க்கச் சென்றார்கள்

வெண்கலப்பானை உருண்ட நிலையில் கிடந்தது.இன்னம் பாதிக்குமேல் அன்னம் இருந்த்து நாகுப் பாட்டியின் வாயிலும் தொண்டையிலும் திணிக்கப்பட்ட மீதிப்பாதி அவள் மூச்சை அடைத்திருந்த்து.

சுவரில் சாய்ந்திருந்த பாட்டியின் உடலை மெல்லத் தரையில் கிடத்திய சரோஜா

‘’இது மூளைக் கலக்கம்தான் வேற ஒண்ணும் இல்லை’’ என்றாள்

**********000****************

‘’

’’

4 comments:

  1. வயசான வங்க படும் பாடு அவங்க மனசுக்குத்தான் தெரியும். அதுவும் சின்னக்குழந்தைகள் இறக்கும் கொடுமை தாங்கமுடியாததுன்னா மற்றவர்கள் அதற்கும் பெரியவர்களையே குறை கூறினால் எப்படி? அவங்களுக்கும் மனசுன்னு ஒன்னு இருக்கும்னு யாருமே ஏன் புரிஞ்சுக்கமாட்டேங்கராங்க. இவங்களுக்கும் வயசாகும் அப்போ புரியுமோ என்னமோ. அப்ப புரிஞ்சுதான் என்ன பிரயோசனம்?

    ReplyDelete
  2. சரியாகச் சொன்னீர்கள். அம்மா.காலங்கடந்தபின் புரிந்து என்ன பிரயாசனம்.?கதையில் சோகம்
    சற்று ஓவர் டோசாக உள்ளதோ? ஆனால் நடக்காததை அவர் எழுதிவிடவில்லைள். fact is
    stranger than fiction என்பார்கள். அப்படித்தான்
    இருக்கின்றது. கருத்துக்கு நன்றி அம்மா

    ReplyDelete
  3. எனக்கு
    யாருமில்லை
    நான்
    கூட..
    -நகுலன்.
    வயதான காலத்தில் அந்தப்பாட்டியை அவர்கள் குறைசொல்வது மிகவும் பாவம். மரணம் என்ன நம் கையிலா இருக்கிறது? அன்பு குறையும் போது பிழைகள் அதிகம் தெரியும் என்பது இந்தக் கதையில் பொருத்தமாக இருக்கிறது. அந்தப்பாட்டியின் தலையில் சுடுசோற்றைக் கொட்டுவது அராஜகம். வாசித்ததும் மனது வலித்தது.
    நம்முடைய சமகால வாழ்க்கைமுறை மிகவும் மோசமாகி கொண்டு வருகிறது. குழந்தைகளையும், முதியோரையும் அதிகம் கொடுமைப்படுத்துகிறார்கள். நாமும் குழந்தைகளாக ஒரு காலத்தில் இருந்தோம் என்பதையும், நமக்கும் முதுமை வரும் என்பதையும் மறந்து போகிறார்கள்.
    பகிர்விற்கு நன்றி.
    -சித்திரவீதிக்காரன்.

    ReplyDelete