Pages

Monday, October 10, 2011

அம்மா வந்தாள் (3)

அம்மாவை மும்பையில் பார்த்துவிட்டாவது வருவது

என்று தீர்மானித்தேன்.அங்கு ஒரு வாரம் இருந்து

துபாய்க்குச் சென்று தம்பியையும் பார்க்க நினைத்து

பத்து நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.

அம்மாவை நேரில் பார்த்ததும்நெஞ்சு குலுங்கிப்போனது.

அம்மாவிடம் ஒருமாற்றம் தெரிந்தது.அம்மா மிக வசீகர

மானவள்.கண்களில் அறிவு தீட்சண்யமும் உடல்மொழியில்

சுறுசுறுப்பாகப் பளீரென்று இருப்பாள்.அப்படிப்ப.ட்டவளின் முகத்தில் அருள் செத்துவிட்டதுபோல இருந்தது..கண்களில்

ஒரு பீதி,சிறைப்பட்ட பார்வை இருந்த்து.பேச்சில் சில சமயம்

தடுமாற்றம் தெரிந்த்து.உடல் அசைவுகளில் தன்னம்பிக்கை

குறைந்திருந்த்து..அடிக்கடி விழுந்துவிடுகிறாள் என்று அண்ணா ஒன்.ரு வாக்கர் வாங்கிக் கொடுத்திருந்தான்.அதைத்தள்ளிக்கொண்டு அவள் நடப்பதைப்பார்க்க கஷ்டமாகஇருந்த்து.ஆனால் மருத்துவரீதியாக

எந்தவிதக் கோளாறும் இருக்கவில்லை.அவளது அறைக்கு நான்

சென்ற போதெல்லாம் அம்மா என் கைகளைப்பிடித்துக்கொள்வாள். என்னை மெட்ராசுக்கு அழைச்சிண்டு போயிடு என்று கெஞ்சுவாள்.எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை..;உன்னை எப்படிம்மா பார்த்துப்பேன் என்பேன்.பலவீனத்துடன். வீட்டிலெ யாருமே இல்லையே? கார்த்தாலே ஆபீசுக்குப்போனா ராத்திரிதான் வருவேன்,டூர் வேற போவேன். உன்னைத்தனியா எப்படி விடுவேன்?

அம்மாவுக்கு எதுவும் விளங்கவில்லை.’’நீ ஆபீசுக்குப்போகும்

போது வீட்டைப் பூட்டிண்டு போ’’ என்றாள் குழந்தையைப்போல.

நான் பேசாமல் இருப்பதைப் பார்த்து என் கைகளைப்பிடித்து,

‘’உனக்கும் என்னைப்பார்த்துக்க இஷ்டமில்லையா?’’ என்றாள்

(இன்னும் வரும்)

4 comments:

  1. வயசானவங்க மன நிலையே தனியே இருக்க முடியாமைதான் யாரையாவது சார்ந்திருக்கவே விரும்புராங்க. (நான் கொஞ்சம் விதி விலக்கு).
    நடைமுறை சிக்கல்கள் நம்மை கட்டிப்போடுதே.
    சிரமம்தான். எல்லாத்தையும் தாங்கிக்கதான் வேனும்.

    ReplyDelete
  2. சகோதரி,
    நீங்கள் கூறுவது சரிதான்.ஆனாலும் இந்த அம்மாவின் பய உணர்விற்கு காரணம் இருக்கிறது.
    மேலும் மிகவும் வசதியான குடும்பத்தைச்சேர்ந்த
    ஓரளவு படித்த பெண்ணாக இருந்தாலும் பழைய
    தலைமுறையைச்சேர்ந்த அவர்கள்ஆண்களைச்சார்ந்தேவாழ்ந்து விட்டதால்
    தாங்களாக வெளிவிஷயங்களில் ஏதுமே தெரிந்து
    கொள்ளாமல் இருந்துவிட்டார்கள்.அப்படி இருந்த
    நீங்களே ஒரு சூழ்நிலையில்தானே வேறுவழியில்லாமல் பலவற்றையும்(பேங்க்விஷய
    ங்கள் உள்பட)தெரிந்துகொள்ள வேண்டியதாயிற்று.
    ஆணகளை நம்பிஇருக்கிறார்கள்.கணவன்போய்விட்டால்-------வருகைக்கு நன்றி அம்மா.

    ReplyDelete
  3. அதனாலதான் யாரோட டிபண்ட்லயும் இருக்கக்கூடாதுன்னு இந்த தனி வாழ்க்கை.இதில் என் குழந்தைகள் யாருக்குமே விருப்பமில்லைதான் அம்மாவின் விருப்பத்துக்கு வேர வழி இல்லாம சம்மதிச்சிருக்கா.

    ReplyDelete
  4. உங்கள் வழியே தனீஈஈஈ வழிதான்.ஆனல் இந்த
    மனோதிடம் காலம் உங்களுக்கு வழங்கிய கொடை.
    எல்லோருக்கும் வராது.நீங்கள் பகிர்ந்து கொண்ட
    தால் நாங்களும் பயனடைந்தோம்.வருகைக்கு
    நன்றி அம்மா.

    ReplyDelete