Pages

Friday, October 28, 2011

பகுத்தறிவிற்கு சவால்(3)

அவனது நம்பிக்கை அசட்டுத்தனமாக இருந்தாலும் நான்

கதை கேட்கச் சித்தமானேன்.

அவன் சொல்ல ஆரம்பித்த உடனேயே அவனது

சொற்களில் அவன் என்னைக் கட்டிப் போட்டதாக

உணர்ந்தேன்.அவனுடன் அவன் கிராமத்துக்குப் பயண

மானேன்.

அவன் ஒரு ஆசாரமான அந்தணர் குடும்பத்தில்

பிறந்தவன்.தந்தை புரோகிதர்.வேத பாடசாலை நடத்துபவர்.

அவனுக்கு ஒரு அண்ணன். ஒரு தங்கை. தாய் அசாதாரண

அழகு.(அதைத் திரும்பத் திரும்பச் சொன்னான்.) கதை

நடந்த போது அவனுக்கு8வயது. தங்கைக்கு 6. அண்ணனுக்கு

14. அண்ணன் ஒரு அரைகுறை. தீனிச் சபலம். படிப்பு வர

வில்லை. எப்பவும் அம்மாவின் தலைப்பைப் பிடித்தபடி

அலைவான். அம்மாவுக்கு உதவியாகச் சமயலறையில்

வேலை செய்வான். அம்மாவை அவன் ஏதாவது சதா வம்புக்கு

இழுப்பது போல் மகாதேவனுக்கு அப்போது தோன்றும். எரிச்சல்

வரும். ஒரு பிள்ளையார் சதுர்த்தி பண்டிகையின் போது,

அண்ணன் அம்மாவுடன் உட்கார்ந்து நிறைய கொழுக்கட்டைகள்

செய்தான். பிறகு தின்னவும் செய்தான். ஆனால் அன்று மதியத்

திலிருந்து பயங்கர வாந்திபேதி வந்து இரவு இறந்து போனான்.

காலரா நோயாக இருக்கும் என்று எல்லாரும் சொன்னார்கள்.

அரைகுறை அண்ணன் இறந்தது யாருக்கும் பெரிய துக்கமாகத்

தெரியவில்லை.வாழ்க்கை சகஜ நிலைக்கு விரைவில் வந்தது.

மகாதேவனும் தங்கையும் பள்ளிக்குச் சென்றார்கள். அண்ணன்

செத்து 15நாள்தான் இருக்கும். அவர்கள் பள்ளியிலிருந்து மதியம்

திரும்பி அம்மாவை அழைத்தபடி வீடு திரும்பிய போது அம்மா

கூரையில் தூக்குப் போட்டுத் தொங்கிக் கொண்டிருந்தாள். அழகிய

முகம் விகாரமாய் நாக்கு நீண்டு தொங்கியது.

அந்த்தஃ தருணம் அவன் வாழ்விலும் அவனது தங்கையின் வாழ்விலும் உறைந்து போனது.

2 comments:

  1. கதை சுவாரசியமா படிக்கும்போதே ரெண்டு சாவு சோகம்.

    ReplyDelete
  2. குழந்தைகள் நிலை எப்படி இருந்திருக்கும்?
    நினைத்தாலே நடுக்கமாக இருக்கிறது.வருகைக்கு
    நன்றி அம்மா

    ReplyDelete