Pages

Tuesday, October 11, 2011

அம்மா வந்தாள்(6)

என் அம்மா காலை விமானத்தில் மும்பையிலிருந்து

ஒன்பதரை மணிக்கு வருகிறார் சேகருடன்.

அவர்கள் கிளம்பிவிட்டார்கள் என்று என் அண்ணனிடமிருந்து

ஃபோன் வந்த்து..டெலிஃபோனைக்கீழே வைத்த்தும் உதவிக்கு

ஆள் கிடைத்ததா என்று அண்ணா கேட்கவில்லை என்ற ஆதங்கத்தில் அதுவரை நான் உணர்ந்திராத பலவீனம் என்னை ஆட்கொண்டது.அலுவலகத்தில் நான் நேரடியாகப் பார்க்கவேண்டிய வேலைகள் பல இருந்தன.அம்மாவைத் தனியாக வீட்டில்விட்டுவிட்டு அலுவலகம் போவது ஆபத்து என்று என்

உள்உணர்வு என்னை அச்சுறுத்தியது. மிக அசட்டுத்தனமாக

உணர்ச்சிவசப்பட்டு மிகப்பெரிய பொறுப்பைநான் ஏற்றுக்கொண்டிருப்பதாக சுந்தரம் வேறு தில்லியில் என்னை எச்சரித்திருந்தார்..

அம்மாவைக்கவனித்துக்கொள்ள ஆள் கிடைக்காத நிலையில்

நான் எப்படி வேலைக்குப்போய் சமாளிப்பேன் ? மிகப்பெரிய சுயபச்சாதாபம் என்னை விழுங்க நான் உடைந்து போன

வளாய்க் கண்ணீர் விட்டபடி போனுக்கு அருகில் தலை கவித்துப் பிரார்தனை செய்தேன்.ஆண்டவனுக்கு நிச்சயம் என் குரல் கேட்டிருக்க வேண்டும். சற்று நேரத்தில் என் சினேகிதி மீரா

போன் செய்தார். ‘’வாசந்தி,உங்க அம்மாவைப் பார்த்துக்க

வீட்டோடு வேலைக்கு ஆள் வேணும் னீங்களே,ஒரு பெண்

வந்திருக்கு ,வேணுமா?என்றபோது உண்மையிலேயை அது

தெய்வத்தின் குரல் என்று தோன்றிற்று.

(இன்னும் வரும்)

2 comments:

  1. அவங்க அம்மாவை கவனிக்க ஆள் வேனும்னு அவங்க தவிப்பு நமக்கும் ஏற்படுகிரது.

    ReplyDelete
  2. ஆனால் அவர் சகோதர்ர்களுக்கு அந்தக் கவலை
    இல்லை பார்தீர்களா? இதுதான் உலகம்.
    வருகைக்கு நன்றி அம்மா?

    ReplyDelete