Pages

Sunday, October 30, 2011

பகுத்தறிவிற்கு சவால்(6)

வியப்புடன் பிரித்தபோது ,’’உங்கள் மாது எழுதுகிறேன்.’’

என்று கடிதம் ஆரம்பித்தது. ‘’உங்கள் எழுத்தில் சத்தியம்

இருப்பதாக நான் சொன்னது சரியாகிவிட்டது.

. நான் அஸ்ஸாமில் இருப்பது

உங்களுக்கு எப்படித் தெரிந்த்து? இரண்டு வருஷங்களாக

இங்கிருக்கிறேன். ஆனால் உங்களுக்குத் தெரிவிக்கவில்லை.’’

சற்று நேரத்துக்கு அவன் வாதத்தில் எனக்கு

நம்பிக்கை எற்பட்டுவிடும்போல் மயக்கமேற்பட்டது. அவன்

அஸ்ஸாமில் தின்சுக்கியா என்ற இடத்தில் இருந்தான். சுய

பிரக்ஞை வந்ததும் கவலை கொண்டேன். அந்த நாவலின்

முடிவு அதிர்ச்சி தரக் கூடியது. நான் எழுதுவதெல்லாம்

சத்தியம் என்று அவன் நம்பினால் அவனுக்கு மிகப் பெரிய

பாதிப்பு ஏற்படும். அவiனுக்கு உடனடியாக பதில் எழுதினேன்.

‘’நான் எழுதியிருப்பது போல் நீ அஸ்ஸாமில்

இருப்பது யதேச்சையானது. நான் எழுதுவது ஒரு கற்பனைக்

கதை. உண்மை என்ற பிரமை உனக்கு ஏற்படக் கூடாது.

இல்லாவிட்டால் முடிவு உனக்குப் பெரும் அரிர்ச்சியை

ஏற்படுத்தும். என் கற்பனை போன போக்கில் கதைக்கு ஏற்றபடி

வந்த முடிவு அது. அதை நிஜமென்று நம்பிவிடாதே.’’

கதை முடிந்தபிறகு அவனிடமிருந்து கடிதம்

வந்த்து.

‘’நீங்கள் கொடுத்திருக்கும் காரணமே உண்மையாக

இருக்கலாம்..’’ என்ற அவனது வாக்கியத்தில் சோர்வோ துக்கமோ

இருந்த்து. எனக்கு அவனை நினைத்து வெகு நாட்களுக்கு வருத்தமாக இருந்த்து.

கதை அத்துடன் முடியவில்லை. நான்கு மாதங்கள் கழித்து அவனிடமிருந்து கடிதம் வந்த்து. ‘’உங்களுக்கு

நான் சொல்வது மகிழ்ச்சி அளிக்கும். எனக்குத் திருமணம் ஆகி

விட்டது என் தங்கையின் பிரச்சினை தீர்ந்துவிட்டது. உங்கள் கதையின் விளைவு இது என்று நான் நம்புகிறேன்’’

(கதையின் முடிவில் அதிர்ச்சியின் உச்சகட்டமாக அவனுடைய

தங்கை உதிரப் போக்கில் நிற்பாள்.)

மகாதேவன் விஷயத்தில் நடந்தவை எல்லாம்

யதேச்சையானவை என்று நான் நம்பப் பழகிக் கொண்டேன்.

அடுத்த நாவல் எழுதும்போதும் இதே போன்ற குழ.ப்பும் தருணம்

ஒன்றைச் சந்திக்க நேர்ந்த்து. சேலத்தில் பெண் கருக்கலைப்பு

அதிகமாகிப் போன விவரம் சேகரிக்க ராசிபுரம் போனபோது

மனோன்மணி என்ற ஒரு லேடி டாக்டரைச் சந்திக்க நேர்ந்தது.

பெண் கருக்கலைப்பைக் கண்சொடுக்காமல் செய்து வந்த அவர்

பெற்றோர்களுக்குக் கொள்ளிவைக்கும் உரிமை பெண் மக்களுக்கு

வேண்டும் என்று விசித்திரமான போராட்டம் நடத்தி வந்தார்.

2 comments:

  1. எழுத்தாளரும் குழம்பி போயிருப்பது நல்லாவே தெரியவருது.

    ReplyDelete
  2. உண்மைதான். அவர் என்ன தான் செய்வார்?
    வருகைக்கு நன்றி அம்மா

    ReplyDelete