Pages

Sunday, October 30, 2011

பகுத்தறிவிற்கு சவால்(7)

அவருடைய பெற்றோருக்கு அவர் ஒரே மகள். மரபுகளில்

நம்புக்கை உள்ள தந்தை கொள்ளிவைப்பதற்காக ஒரு

ஆணைத் தத்து எடுப்பார் என்கிற கவலை அவரை

அலைக்கழிப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

பெண் கருக்கலைப்பைக் கருவாக வைத்து நான் எழுத

ஆரம்பித்த ‘’கடைசிவரை’’என்ற நாவலின் கதாநாயகி

(அவரது அநுமதியுடன்) ஆனார். அந்த டாக்டர். அந்தக்

கதை அவரைப் பற்றியது என்ற செய்தி ராசிபுரம்,சேலம்

ஆகிய இடங்களில் பரவலாகத் தெரிந்திருந்த்து. ராசிபுரம்

மக்கள் ஆவலுடன் படித்தார்கள். என்னுடைய கதையின்படி

கதாநாயகியின் தந்தை கடைசி அத்தியாயங்களில் இறக்க

வேண்டும். அதை எப்படி எழுதுவது என்று எனக்கு யோச

னையாக இருந்து. நிஜ மனிதரை ராசிபுரத்தில் நான்

சந்தித்திருக்கிறேன். ஆஜானுபாகுவாக மிக ஆரோக்கியமான

மனிதர். அந்த அத்தியாயத்தை எழுதி முடிக்க வேண்டிய

காலக்கெடு நெருங்கிவிட்டது.விடுப்பு எடுத்து எழுத

உட்கார்ந்தேன். தொலைபேசி ஒலித்தது. சேலத்திலிருந்து

ஒரு நண்பர் சொன்னார்,’’ஒரு துயரச் செய்தி, வாசந்தி,

மனோன்மணியுடைய தந்தை இன்று காலை இறந்து

விட்டார்.’’

நான் அப்போது உண்மையில் வெலவெலத்துப்

போனேன். என்னுடைய எண்ணங்களின் தீவிரமே அவரைக்

கொன்றதாகத் தோன்றிற்று.

கதையை முழுவதும் படித்த அந்த டாக்டர் சினேகிதி

என் கற்பனையில் உருவான இரண்டொரு கதைச்சம்பவங்கள்

உண்மையில் நடந்தவை என்று சொன்னார்.

லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் (Isabel allende)இசபெல்

ஜசயண்டேயின் paula மற்றும் the house of spirits படித்ததும்

அவருக்கும் நான் அநுபவித்ததைப் போன்ற அநுபவங்கள்

இருந்த்தை அறிந்து சற்று சமாதானம் ஏற்பட்டது. ஆனால்

அறிவியல் ரீதியான விளக்கம் கிடைக்கவில்லை.

கடைசியாக ஏற்பட்ட அநுபவம் என் ஆயுசுக்கும்

மறக்க முடியாதது. அதைப் பற்றி நினைக்கும் போதெல்லாம்

என்னை நிலைகுலய வைப்பது. என் சொந்த வாழ்வுடன்

அதற்கு இருந்த நெருக்கத்தின் காரணமாக இருக்கலாம்..

2 comments:

  1. உணமையில் இருப்பவர்களைப்பற்றி கதை எழுதும்போது நிறைய குழப்பங்கள் தோன்றுவதை நல்லா சொல்லி இருக்காங்க. ஆனா அவர் எழுத நினைப்பதி நிஜத்தில் நடந்துவிடுவது வினோதம் தான்.

    ReplyDelete
  2. வினோதமாக இருப்பதோடு நிகழ்வுகள் அவரை
    பயமுறுத்தவும் செய்கிறதே.அபூர்வமான செய்தியாக
    உள்ளது.கருத்துக்கு நன்றி அம்மா

    ReplyDelete