Pages

Wednesday, October 26, 2011

தமிழ்நாட்டில் சுபீட்சம்

இன்று தீபாவளிக்கு முதல் நாள். நாளைவிடிந்தால்

தீபாவளி. வரிசையாக வரும் பொது ஊழியர்கள்,

யாசகர்கள், ஆகியோருக்கு தீபாவளிப் பணம் வழங்

கிவிட்டு அமர்ந்தேன். வாசலில் திடீரென உறுமி

மேளத்தின் அபாரமான சத்தம். தாங்க முடியாமல்

வெளியே வந்து பார்த்தேன்.கையில் கிண்ணத்துடன்

மூன்று வயது பெண் குழந்தை. தலையில் ஒரு மூட்டை,

கையில் உறுமி மேளத்துடன் ஒரு பெண். மேளத்தைக்

காதைச் செவிடாக்கும் அளவு அடித்துத் துவைத்துக் கொண்டிருந்தாள். அண்மை வீடுகளில் யாரும் வெளியே

வந்து இவளைக் கவனிப்பதாகக் காணோம். எனக்குள் ஒரு யோசனை பளிச்சிட்டது. இவளுக்கு வயிறாற உணவு சமைத்

துக் கொள்ளும் அளவு அரிசி கொடுத்தால் என்ன? என்ற

அரிய தர்ம சிந்தனை உருவாயிற்று.

தலை வலிக்குமளவு சத்தத்தை உண்டாக்கிக் கொண்

டிருந்த அந்தப் பெண்ணிடம் ,அம்மா, அரிசி வாங்கிக் கொள்கி

றாயா என்று கேட்டேன். உடனே மூட்டையைப் பிரித்து அரிசி

வாங்கிக் கொள்ளச் சித்தமாக, பையை நீட்டுவாள் என்று

எதிர் பார்த்தேன். ஆனால் என்ன அதிர்ச்சி! அந்தப் பெண்

அழகிய புன்முறுவலுடன் , அரிசி நிறைய இருக்கு சாமி என்று

கூறிவிட்டாள். ஆகா, என் தர்ம சிந்தனை வீணாகிவிட்டதே

என்று நினைத்துக் கொண்டே உள்ளே சென்று சில்லறை

டப்பாவைத் துழாவி இரண்டு ரூபாய் நாணயம் ஒன்றை

எடுத்துவந்து,குழந்தை கையில் இருந்த கிண்ணத்தில்

போட்டேன். அவள் அன்புடன் அதைப் பெற்றுக் கொண்டு

புன்சிரிப்போடு,மீண்டும் மேளத்தை அடித்துத் துவைத்தவாறே

இடத்தைவிட்டு நகர்ந்தாள்.

அட்டா,யாசகர்கள், உணவுக்கு முக்கிய ஆதாரமான

அரிசியை வேண்டாம் என்று கூறுமளவிற்கு நாட்டில் சுபீட்சம்

பெருகி விட்டதே என்று பெரு மகிழ்ச்சியடைந்தேன். இனி தனி

ஒருவனுக்கு உணவில்லாமல் யாரும் ஜெகத்தினை அழிக்க

முனைய மாட்டார்கள் என்பது உறுதி. பல கதைகளில்

குழந்தைகள் பசி தாங்காமல் பழைய கஞ்சிப் பானைக்குள்

கையைவிட்டு சோற்றுப் பருக்கைகளுக்காக அளைந்து பார்த்து

இல்லாமல்,வருத்தத்தோடு,வெறும் கஞ்சித் தண்ணியைப் பருகும்

அவல நிலையைப் பார்த்து கலங்கிய எனக்கு,அதே தமிழ்நாட்டில்

இப்படிக் கிடைக்கும் அரிசியை வேண்டாமென்று கூறும் அளவிற்கு வளம் பெருகிவிட்டதே என்று மகிழ்ச்சி பெருக்

கெடுத்தது. என்னே தமிழ்நாட்டின் பொற்காலம்!

2 comments:

  1. அரிசியைவிட பணம்தான் தேவை போல இருக்குஅவங்களுக்கு.

    ReplyDelete
  2. சரியான கருத்து, அம்மா. தமிழ்நாட்டில் பெரும்
    பாலோருக்கு அரிசி இலவசமாககிடைப்பதால்தான்
    இந்தநிலை போலும்.விவசாயிக்கும் அரிசி இலவசமாக கிடைத்து விடுவதால் அவர்கள் எப்படி
    தீவிரமாக பாடுபட்டு பயிர்த் தொழில் செய்து மதிப்
    பில்லாத நெல்லை விளைவிப்பார்கள்.போதாததற்கு
    இலவச டி.வி.மற்றும் இதர எண்ணற்ற சலுகைகள்.
    எப்படி உழைக்க மனம் வரும்?எதிர்காலம் என்னவாகப் போகிறதோ?வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்மா

    ReplyDelete