Pages

Sunday, October 9, 2011

அம்மா வந்தாள்(தொடர்ச்சி)

அம்மாவுக்கு வயதாகிவந்த்துபோலவே அண்ணாவுக்கும்

வயதாகி வந்தது.அண்ணாவும்,மன்னியும் தனிப்பட்ட

சோகத்தை அநுபவித்தவர்கள்.ஒரு வர்த்தக கப்பலில்

வேலையாகச்சென்றிருந்த

அவர்களது ஒரே மகன் 23வயது கிருஷ்ணன் பயணித்த

கப்பல் ஆஸ்திரேலிய எல்லைக்கப்பால் காணேமல்

போய்விட்டது..கப்பலைப்பற்றின தகவலே கிடைக்காமல்

அதில் பணிபார்த்த வாலிபர்களின் பெற்றோர்கள் எல்லாம்

இரண்டு ஆண்டுகளில் பிள்ளைகள் திரும்பிவிடக்கூடும்

என்கிற எதிர்பார்ப்பில் இருந்தார்கள்..அந்த துக்கம் அண்ணனையும் மன்னியையும் உளரீதியாகவும்,உடல்ரீதியாகவும்பாதித்த்தில்

எதும் வியப்பில்லை அப்படிப்பட்ட நிலையினால் அம்மா அவர்களுக்கு சுமையாக மாறிவிட்டாள் என்கிற உணர்வு

என்னைத்துன்புறுத்தியது. ஆனால் அதற்கு என்ன நிவர்த்தி என்று எனக்குப்புரியவில்லை..என் இரண்டாவது அண்ணன் கமார் வெகு ஆண்டுகளாக அமெரிக்காவில் இருந்தான்.என் தம்பி சேகர் துபாயில் இருந்தான்.நான் சென்னையில் தனியாக இருந்தேன்.வேலைக்குக் காலையில் சென்றால் இரவு எப்போது வீடு திரும்புவேன் என்று சொல்ல முடியாத அலுவலகப்படி.அம்மா நிச்சயமாகத் தனியே விட முடியாத

கவனிக்கப்பட வேண்டிய கட்டத்தில் இருப்பதாகத்தோன்றியது..

(இன்னும் வரும்)

5 comments:

  1. ம்ம்ம் சுவாரசியமா சொல்ரீங்க தொடருங்க ராதா கிருஷ்னன். வழக்கம்போல நான் முதல்ல வந்தாச்சு. என் பையன் போன் நம்பர்பாத்தீங்களா (அங்க கொடுத்திருந்தேன்)

    ReplyDelete
  2. நன்றி,அம்மா.நீங்கள்ஒருவரே போதும் மிகத்
    தடுமாற்றமாகத்தான் இருக்கிறது.பையனுடன்
    பேசுகிறேன்.திடீரென்று பேசினால் தவறாக நினைப்பாரோ என்று யோசனையாக இருக்கிறது.நீங்
    கள் எதற்கும் சொல்லி வையுங்கள்.மீண்டும்
    நன்றி அம்மா.

    ReplyDelete
  3. என்ன தடுமாற்றம் ராதாகிருஷ்னன் என்பையனாக்கும் அவன் யாரையுமே தப்பாகவெல்லாம் நினைக்கவே தெரியாது சும்ம பேசுங்க. நாளை என் கணவரின் ச்ரார்த்தம் பண்ணுவதில் பிசியா இருப்பான்(11-10-11) மறு நாள் குல தெய்வம் கொவிலுக்கு போய் வருவான். நீங்க 13-தேதிக்குமேல பேசுங்க. நானும் சொல்லி வைக்கிரேன்.

    ReplyDelete
  4. அம்மா,
    தடுமாற்றம் என்றுநான் கூறியது.அது அல்ல.
    ப்ளாக் பதிவதில் பல தடுமாற்றங்கள்,பழக்கம் இல்லாத்தால்.சரி.மாமா நினைவுநாள் 2-10-
    இல்லையா,ஒ,ஸ்ரார்த்த திதி வேறாக உள்ளதோ.
    நீங்கள் கூறியபடி13ம்தேதி பேசுகிறேன்.பேஸ் புக்கில்
    சேர்த்து கொள்வீர்களா.அதில் என் பெயர் ராதாக்ருஷ்ணன் துரைசாமி,மதுரை.

    ReplyDelete
  5. ஃபேஸ்புக்கிலும் சேர்த்துக்கொள்ளலாமே. திதி வேறுதான் புரட்டாசி பௌர்னமி.

    ReplyDelete